Sunday, August 03, 2008

காதல் மனைவியும் காலண்டர் முருகரும்


காய்கறி வெட்டும் போது
கையில் காயம் பட்டதால்
கத்தியின் மீது கோபம் அவளுக்கு

வேண்டாம் பெண்ணே
"வெண்டைக்காய்க்கும் உன்
விரலுக்கும்
வித்தியாசம் தெரியாததால்
நடந்த விபத்து இது" என்றேன்

"காயம்பட்டு கஸ்டப்படுறேன்
கவிதையா உமக்கு?
நீயே சமையல் செய்யும்"-என்று சொன்னாள்
என் அழகிய ராட்சசி

அட கடவுளே?!!
பேச்சுலராய் இருந்தபோது
கற்ற வித்தை
பெண்டாட்டி வந்த பின்னும்
தொடருதே முருகா?

பெண்பார்க்கும் படலத்தில்
"பிடிச்சிருக்கா?" - என்ற கேள்விக்கு
பெண்டுலம் போல் தலையாட்டியபோதே
அவசரமாய் சொல்லியிருக்கவேண்டும்
"அலார்ட்டாய் இரு" என்று....
நிச்சயதார்த்த தினத்தில்
நீலநிற புடவையில் பார்த்து
நிலைமறந்து போனபோதே
நிருத்தி சொல்லியிருக்க வேண்டும்
"நிதானமாய் இரு"- என்று

திருமண நாளில்
தலைகுனிந்த தரிசனம் கண்டு(தாலிகட்டும் போது)
தடு
க்கி விழுந்தபோதே
தட்டி எழுப்பி சொல்லியிருக்கவேண்டும்
"தயாராய் இரு" - என்று

முதல்நாள் இரவில்
முக்கால் இருட்டில்
முகம் பார்த்து மூர்ச்சையானபோதாவது
முணுமுணுத்து சொல்லியிருக்கவேண்டும்
"முழிச்சுக்கோ" - என்று

அப்போதெல்லாம் விட்டுவிட்டு
காய்கறி வெட்டும்போது
காலண்டரில் தொங்கியபடி
"நானிருக்க பயமேன்"என்று சொல்லி
என்ன பயன் முருகா????


http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=944

17 comments:

  1. வணக்கம் பிரபு, உங்கள் கவிதை நல்லாயிருக்கு! தொடர்ந்து எழுதுங்கள்! வாழ்த்துகள்....

    http://aammaappa.blogspot.com/

    ReplyDelete
  2. ஆ.ஞானசேகர்ன் அவர்களுக்கு
    என் நன்றி
    http://priyamudan-prabu.blogspot.com/

    ReplyDelete
  3. கல்யாணத்தில் இவ்ளோ பிரச்சனை இருக்கா??

    கவிதை நல்லாயிருக்கு..

    ReplyDelete
  4. //////////////கல்யாணத்தில் இவ்ளோ பிரச்சனை இருக்கா??///////////

    நான் குழந்தைங்க
    எனக்கு ஒன்னும் தெரியாது
    உங்கள் நிலவரம் எப்படி????????

    ReplyDelete
  5. ரசிக்கும்படி இருந்தது

    ReplyDelete
  6. நல்லா இருக்கே..........!

    ReplyDelete
  7. ////
    ரசிக்கும்படி இருந்தது
    ////
    உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி பாபு

    ReplyDelete
  8. ///
    நல்லா இருக்கே..........!
    ///////

    உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி ராஜ்

    ReplyDelete
  9. கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி

    http://www.tamilish.com/
    இந்த இனையதளத்தில் இருந்து எனக்கு வந்த மின்னஞ்சல் உங்கள் பார்வைக்கு

    ...........
    Hi priyamudanprabu,

    Congrats!

    Your story titled 'காதல் மனைவியும் காலண்டர் முருகரும்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 18th December 2008 06:26:01 AM GMT
    ...............


    மிக்க மகிழ்ச்சி
    படித்து பாராட்டி வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி

    ReplyDelete
  10. //அப்போதெல்லாம் விட்டுவிட்டு
    காய்கறி வெட்டும்போது
    காலண்டரில் தொங்கியபடி
    "நானிருக்க பயமேன்"என்று சொல்லி
    என்ன பயன் முருகா????

    ஆகா...... என்ன ஒரு கலக்கலான கவிதை. நான் ரெம்ப லேட்டா படிச்சிருக்கேன்.
    சரி கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த போடு போடுறீங்களே, என்ன தான் 'எதற்கும் தயார்' நிலையில் இருந்தாலும் , எதிர்பாக்காத திசையில் இருந்து வரும் தாக்குதல்களை சமாளிப்பதில் தான் வாழ்க்கையில் கிக்கே இருக்கின்றது.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. //
    ஆகா...... என்ன ஒரு கலக்கலான கவிதை. நான் ரெம்ப லேட்டா படிச்சிருக்கேன்.
    //

    நன்றி குந்தவி
    லேட்டா படிச்சாலும் அழகான கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  12. ///
    என்ன தான் 'எதற்கும் தயார்' நிலையில் இருந்தாலும் , எதிர்பாக்காத திசையில் இருந்து வரும் தாக்குதல்களை சமாளிப்பதில் தான் வாழ்க்கையில் கிக்கே இருக்கின்றது.
    ///

    இதுவேரய்யா?????????

    வாழ்த்துறிங்களா........? இல்லை
    பயமூட்டுரிங்களா....?

    நாங்கெல்லாம் அசரமாட்டோம் ஆமா

    (சீரியசா பேசுரப்போ யாரப்பா அங்கே சிரிக்கிறது)

    ReplyDelete
  13. //அப்போதெல்லாம் விட்டுவிட்டு
    காய்கறி வெட்டும்போது
    காலண்டரில் தொங்கியபடி
    "நானிருக்க பயமேன்"என்று சொல்லி
    என்ன பயன் முருகா????//

    ஹை சூப்பர்...! கலக்கலா எழுதியிருக்கீங்க...! வாழ்த்துக்கள்...!!!

    ReplyDelete
  14. :) அடப்பாவி கல்யாணம் ஆகி உனக்கும் கடவுள் நம்பிக்கை வந்துட்டா

    ReplyDelete
  15. கோவி.கண்ணன் said...
    :) அடப்பாவி கல்யாணம் ஆகி உனக்கும் கடவுள் நம்பிக்கை வந்துட்டா

    ;;;;

    கவிதைக்கு பொய் அழகு
    சும்மா கற்பனைதானே...

    ReplyDelete
  16. கவிக்காதலன்... said...
    //அப்போதெல்லாம் விட்டுவிட்டு
    காய்கறி வெட்டும்போது
    காலண்டரில் தொங்கியபடி
    "நானிருக்க பயமேன்"என்று சொல்லி
    என்ன பயன் முருகா????//

    ஹை சூப்பர்...! கலக்கலா எழுதியிருக்கீங்க...! வாழ்த்துக்கள்...!!!


    ///

    நன்றி

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...