என்னையே கோவிலுக்குள் விடவில்லை !!!
அர்ச்சகன்- ''என்ன் வேண்டும்"
இளைஞன்- - "நான் கோவிலுக்குள் போகனும்"
அர்ச்சகன்-- "அதெல்லாம் முடியாது" -
இளைஞன்- - "ஏன்" - சற்று கோவமாக கேட்டான்
நல்ல கடின உழைப்பாளி , கட்டுமஸ்த்தான உடம்புகாரரான அந்த இளைஞனை பார்த்த அந்த அர்ச்சகனுக்கு,எங்கே ஏதாவது சொல்லி அடித்துவிடுவானோ என்று பயம் வந்தது எனவே யோசிதார் பிறகு
"ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு விதி இருக்கு , அதுபோல கோவிலுக்குள் வரனுமுன்னா சில மந்திரங்கள் தெரிந்திருக்கனும்"- என்று சொல்கிறார்
அதைகேட்ட இளைஞன் நானும் கற்றுகொள்கிறேன் என்று சொல்ல
வேறு வழியின்று வாயில் நுழையாத புரியாத மொழியில் எதையோ சொல்லி இதுதான் அந்த மந்திரம் இதை கற்றுவந்து சொல் பின்னர் கோவிலுக்குள் போகலாம்" என சொல்கிறார் அர்ச்சகன் . ஆசையாக கோவிலுக்குள் போக வந்த அந்த இளைஞன் ஏமாற்றத்துடன் திரும்பினான். அர்ச்சகனும் நிம்மதியடைந்தான்.
சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த இளைஞன் கோவிலை நோக்கி வருவதி கண்ட அர்ச்சகன் "எங்கே அந்த இளைஞன் மந்திரத்தை கற்றுகொணுவிட்டானோ??! ,அதை சொல்லி கோவிலுக்கு வருவேன் என்று சொன்னால் என்ன் சொல்லி சமாளிப்பது???!? " என்று யோசித்தார். வழக்கம் போல வாசலிலேயே இளைஞனை நிறுத்தி விசாரிதான்
"பயப்படாதிங்க நான் கோவிலுக்குள் போக வரலை" என்று அந்த இளைஞன் சொல்ல அர்ச்சகன் குழம்பினான்
"நான் இனிமே கோவிலுக்கு வரமாட்டேன் என்று சொல்லத்தான் வந்தேன்" என்றான், அர்ச்சகனுக்கு ஆச்சர்யம்
அந்த இளைஞன் தொடர்ந்தான் "அன்று கோவிலுக்குள் போக முடியலையே என்று வருத்ததோடு வீட்டுக்கு போனேன் ,மிகவும் சோகமாக இருப்பதை கண்ட கடவுள் என் எதிரே வந்தார் " ஏன் சோகம் என் கேட்டார்" , நானும் நடந்ததை சொன்னேன் அதற்க்கு கடவுள் சிரித்துகொண்டே சொன்னார் " இதற்க்கா வருத்த படுகிறாய் ,அவர்கள் என்னையே கோவிலுக்குள் விடுவதில்லை உன்னை எப்படி விடுவார்கள் ,நானே வருத்த படவில்லை நீ ஏன் வருத்த படுகிறாய்?? " என்று கேட்டார் , அதனால் தான் அவர்(கடவுள்) இல்லாத இந்த இடத்துக்கு இனி நான் வரமாட்டேன்னு சொல்லவந்தேன் என்று சொல்லிவிட்டு அந்த இளைஞன் திரும்பிசென்றான்
(எங்கேயோ படித்த கதை)
.....
பிரியமுடம் பிரபு : தாத்தா அந்த இளைஞன் "ஆத்திகனா?" "நாத்திகனா?"
கொள்ளுதாத்தா : தெரியலயே பேரான்டி
........
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறார் ,
அவர் கருனையுள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறார்
.......
கண்கள் இரண்டால் ..(2)

"காதலுக்கு கண் இல்லையென்று"?!?!?
என் காதலுக்கு கண்கள் மட்டுமே உண்டு

மருத்துவரிடம் சென்றேன்
சோதித்தும் எதுவும் புரியாததால்
"உனக்கொன்றும் இல்லை" என் கூறி
அனுப்பிவைத்தார்
கண்களால் சுட்டு
காய்ச்சல் உண்டாக்கிய நீ !!
கைகளால் தொட்டு குணப்படுத்துவாயா ?!!
கண்கள் காட்டி கொடுத்துவிடும்
உனக்கும் எனக்குமான காதலை
எல்லோரும் "கண்பட்டுவிடுமோ" என்று பயப்படுவார்கள் - ஆனால்
உன் கண்கள் படவேண்டும்
என்றே காத்திருக்கிறேன் நான்

இமை மூடிய விழிகள்
உன் தோட்டத்து ரோஜாவில் ஒன்றைமட்டும் நீ சூடிக்கொள்ள
மற்றவை காதல் தோல்வியில்
தற்கொலை செய்துகொண்டது
உனக்கு தெரியுமா?!?!
ஆண் பொம்மைகளுக்கு
அருகே அதிக நேரம் நிற்க்காதே !!
உயிர் வந்துவிட போகிறது !!
பின்குறிப்பு
அக் 14 முதல் நவம்பர் 17 வரை இந்தியாவில் இருப்பேன்
தொடர்புக்கு
priyamudan_prabu@yahoo.com.sg
பிரியமுடன் பிரபு ...
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!
ஒருமுறை இராமரும் சீதையும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள் .அப்போது அவ்வழியே வந்த இந்திரனின் மகன் சீதையின் மீது ஆசைகொண்டு (அப்பனுக்கு தப்பாம பிறந்திருக்கான்) காகம் போல வேடமெடுத்து பறந்து வந்து சீதையின் மார்பில் கொத்திவிட்டு பறந்தான் . அதை பார்த்து கோபம் கொண்ட ராமர் தன் அருகில் இருந்த ஒரு தர்ப்பைபுல்லை பிடுங்கி மந்திரம் ஓதி அதை பிரம்மாஸ்திரமாக்கி காக்கையின் மீது ஏவினார் . பயம் கொண்ட இந்திரன் மகன் ராமரிடம் வந்து மன்னிப்பு கேட்க , மனமிறங்கிய ராமன் காக்கையின் ஒரு கண்ணை மட்டும் குருடாக்கிவிட்டு மன்னித்தார் . --- இது ராமயண கதையில் வரும் காட்சி
இதைத்தான் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்கிறார்களோ ??!?!?!?
இதே தலைப்பில்
பழமைபேசி மலர்கள் வலைப்பூவில் இட்டுள்ள ஒரு யூ-ட்யுப் காணோளி
யூட்யூப் ல்
http://www.youtube.com/watch?v=fOvUe-JNQHE&feature=player_எம்பீத்தீத்
.
.
என்றென்றும்
பிரியமுடன் பிரபு . . .
திருமண வாழத்து
வாழ்க வாழ்கவே வாழ்க என்றும்
வானம் உள்ளவரை வாழ்க என்றும்
வாழ்க வாழ்கவே வானம்
வாழும் வரை வாழ்கவே
எங்கள் நெஞ்சில் வாழும் நண்பா
வானம் போல வாழனும் நண்பா
நீயும்... (கலைவாணி
இன்பம் வந்து உங்களை சூழ....
(வாழ்க வாழ்கவே வாழ்க என்றும்)
கண்களாலே காதல் பேசி
வார்த்தையாலே வர்ணம் பூசி
பாசம் என்னும் கவிதையெழுதி......
நேசத்தோடு வாழனும் நண்பா .....
(வாழ்க வாழ்கவே வாழ்க என்றும்)
இதயத்திற்கு இதயம் மாற்றி
இன்பதுன்பம் இரண்டும் போற்றி
செல்வம், புகழ், நலம்
பதினாறும் பெற்று .....
(வாழ்க வாழ்கவே வாழ்க என்றும்)
ஆசை அறுபது நாட்கள் என்றும்
மோகம் முப்பது நாட்கள் என்றும்
பெரியவர் பேச்சை பொய்யாக்கி
வாழ்க்கை முழுவதும் வசந்த்தோட
(வாழ்க வாழ்கவே வாழ்க என்றும்)
ஜீனை அடுத்து ஜீலை பிறக்கும்
சூனியரும் சேர்ந்து பிறப்பான்
மலர் போன்ற பாதம் கொண்டு
மார்பில்தானே வந்து மிதிப்பான்
(வாழ்க வாழ்கவே வாழ்க என்றும்)
சமிபத்தில் திருமணம் செய்துகொண்ட நண்பன்
(காதல் வைரஸ் பட்த்தில் வரும் “வாழ்க வாழ்கவே வாழ்க என்றும் வானம் உள்ளவரை வாழ்க என்றும்” எனும் பாடல் மெட்டும் , பல்லவியும் – சரணம் மட்டும் நான் எழுதியது)
என்றும்
பிரியமுடன் பிரபு ....
நிர்வாணம்
நிர்வாணமே நிஜம்
நிஜமென்பது நிர்வாணம்
நாம் தொலைத்துவிட்ட நிர்வாணம்
ஆதமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்து
மாயக்கனியை உண்ணும் வரை
அனுபவித்த அம்மணம்
இப்போது எங்கே அது?!?!?
நிர்வாணமாய்த்தானே பிறந்தோம்
இப்போது எங்கே அது?!?!?
காலத்திற்கு ஏற்ப ....
கலாசாரத்திற்கு ஏற்ப ....
வயதிற்கு
வசதிக்கு ஏற்ப ....
படிப்பிற்கு
பதவிக்கு ஏற்ப ....
இப்படி பல ஆடைகள் போட்டு
மறைத்து வைத்தயென்
நிர்வாண முகத்தைத் தேடினேன்
ஆடைகளே தோலாய் மாறியிருந்தது !!!!!!
குருதிகசிய குருதிகசிய
கிழித்தெறிந்தேன் ..
ஆகா...!
அழகான் என் நிர்வாணம்
என் கண்களுக்கு தெரிகிறது
என் முகமே எனக்கு அந்நியமாய் !!!
******************************
இருவரும் விலக்கப்பட்ட கனியை உண்டு முடித்தனர். தன்னுடைய திட்டம் நிறைவேறியதை அருகிலிருந்து பார்த்த சந்தோசத்தில் பாம்பு வடிவிலிருந்த சாத்தான் சிரித்துக் கொண்டே ஓடி மறைந்தான். கனியை உண்டு முடித்ததும் ஆதாமும், ஏவாளும் தாங்கள் நிர்வாணிகளாய் இருப்பதை முதன் முறையாக உணர்ந்தார்கள்.
( கி. மு - விவிலியக் கதைகள் நூலில் இருந்து)
*************************
இன்றோடு (02-08-09) நான் வலைப்பூ துவங்கி ஒரு வருடமாகிவிட்டது
என் பதிவுகளை படித்து , பின்னுட்டமிட்டு , பாராட்டி , திருத்தி, ஆதரவு தந்த அனைவருக்கும் என் நன்றிகள் .
பிரியமுடன் பிரபு ...
கண்கள் இரண்டால் .............
கண்களால் திருடும் ராட்சசி
கடலின் ஆழமோ உன்பசி?
காகிதத்தில் பட்டதும்
கசிந்துருகும் பேனா
மை போல – உன்
கண்களில் பட்டதும்
மெல்ல மெல்ல
உருகுது என் உயிர்
கவிதையாய் …..
காதலாய் ……..
அப்படி பாக்காதே
உன் பார்வையை விட
கொடிய ஆயுதம் இதுவரை
கண்டுபிடிக்கபடவில்லை
கொலையுண்டவனே விரும்பும்
ஆயுதம் அது !!
கண்கள் இரண்டிலும்
கத்தியை வைத்துக்கொண்டு
“கரப்பான் பூச்சிக்கு பயப்படுவேன்”
என்று நீ சொல்வதை
எப்படி நம்புவது ?!
கிடைக்காத காதல் - உன்
கடைக்கண்ணில் கிடைத்தது
மறக்காம ஓட்டு போடுங்க
நல்லா கேக்குறாய்கப்பா டீட்டெய்லு...
--என் வலைபூவில் ஏற்ப்பட்ட பிரச்சனையால் அதை திறந்து பார்க்க கூட முடியாமல் இருந்த போது அமெரிக்காவில் இருந்து அன்புகரம் நீட்டி பிரச்சனையை தீர்வு செய்து உதவிய பழமைபேசி அண்ணனுக்கு நன்றி--
தொடர் பதிவு எழுத அன்போடு அழைத்தவர் குந்தவை அக்கா
அவரின் அன்பு அழைப்புக்காக இந்த பதிவு . அன்பினால் பதிவிடுகிறேனே தவிர ஆட்டோ அனுப்பிவிடுவார் என்ற பயத்தினால் அல்ல என்பதை இங்கே கூற கடமைபட்டிருக்கிறேன்
1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
என் பெற்றோர்தான் பதில் சொல்லனும்
எனக்கு பிடிச்சிருக்கு , சும்மாவா பிரபு - ன்னா a master, a prince, nobleman
இப்படி பட்டியல் போகுதே
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
ஞாபகம் இல்லை
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
நல்ல மூடுல எழுதுனா ஓரளவிற்க்கு இருக்கும்
4.பிடித்த மதிய உணவு என்ன?
சாம்பார் சாதம்,ரசம் , காய்கறி கூட்டு
அசைவத்துல ஆட்டு குடல் ,தலைக்கறி(என் அம்மா சமையல்)
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நல்ல பழகுவேன். ஆனால் அப்புறம் அவங்க பழக்கத்தை பொறுத்து நட்பு தொடரும்.(குந்தவை அக்கா பதிலு)
6.கடலில் குளிக்க பிடிக்குமா….அருவியில் குளிக்க பிடிக்குமா?
நமக்கு கடல், அருவி இரண்டும் ரொமப தூரம்
நான் காவேரி கரை மைந்தன் எனவே காவேரி ஆற்றில் குளிக்கவே பிடிக்கும்
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
சிரிப்பு, கண்கள்.
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்த விஷயம் எந்த முக்கியமான செயலை செய்யும் முன்பும் அதை பற்றி அறிந்தவர்களிடமும் , என் வீட்டு பெரியவர்களிடமும் நிறைய ஆலோசிப்பத்து
பிடிக்காதது - அடுத்தவர் மீது வைக்கும் அதீத நம்பிக்கை
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
சரிபாதின்னா???? ஓ மனைவியா??? இதெல்லாம் பெரியாவாகிட்ட கேட்கவேண்டிய கேள்வி . அவுட் ஆப் சிலபஸ் சோ நோ கமேண்ட்ஸ்
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் ஊர் மற்றும் உறவுகள்
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
கருப்பு நிற கைலி, சிகப்பு மேலாடை
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
என்னங்க இது, பிரவுசரைப் பார்த்துக் கொண்டு தான் இதை எழுதுகிறேன். படிக்கும் போதும் , எழுதும் போதும் பாட்டு கேட்பதில்லை
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு
14.பிடித்த மணம் ?
மண் வாசனை , வெற்றிலை கொடிக்காலுக்குள் நுலைந்ததும் வரும் ஒருவித மணம்
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
எல்லோரும் எழுதிட்டாங்க , அதனால யாரையும் அழைக்க வில்லை
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
அவுக வீட்டுகாரரை பற்றி எழுதுவது எனக்கு ரொம்ப பிடிக்கும்(பாவம் அந்த மனுசன்)
17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட் - கொஞ்சம் நல்லா விளையாட தெரிந்தது(கிரிக்கெட் பிடிக்கவே பிடிக்காது -குந்தவை)
அப்புறம் என் கணினியோடு மட்டும் சதுரங்கம் விளையாடுவது பிடிக்கும்(அப்பத்தான் தோற்ப்பது போல இருந்தால் ஆட்டத்தை கலைத்து புதிதாக தொடங்கலாம் ஹி ஹி ஹி)
18.கண்ணாடி அணிபவரா?
ஆம் ,ஆறு மாதமாக
மைனஸ் 0.5 பவர்
வயது 25
கன்னி ராசி
சித்திரை நட்சத்திரம் (பொண்னு பாக்கத்தானே கேட்டிக???)
நல்லா கேக்குறாய்கப்பா டீட்டெய்லு
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?


