Saturday, March 20, 2010

ஜெயமோகனின் ஏழாம் உலகமும் கோவில் கருவறையும்..!!!!!

 நூல் : ஏழாம் உலகம்
ஆசிரியர் : ஜெய மோகன்
விலை : (Rs: 170)
வெளியீடு: தமிழினி


ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலை தழுவி வந்த "நான் கடவுள்" படம் பார்த்த பிறகு அந்த நாவலை படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது , இணையத்திலும் சிலர் இந்த நாவல் பற்றி எழுதியிருந்தார்கள் , சென்ற வருடம் ஊருக்கு போனபோது வாங்கி வந்தேன் சமிபத்தில்தான் படித்தேன்.
                                    அதிகம் வட்டார வழக்கிலேயே எழுதப்பட்டு இருந்த்து . வட்டார வழக்கை சரளமாக கையாண்டிருக்கிறார். புரிந்துகொள்ள ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருந்த்து பிறகு பழகிவிட்டது. இப்படியான் உடல்  குறையுள்ள பிச்சைகாரர்கள் பற்றி எழுதத்துணிந்ததே பெரிய விடயம் . அதற்க்கே  ஜெமோ-வை பாராட்டலாம் . இது யாரும் அவ்வளவாக அறியாத களம் இன்னும் சொல்லபோனால் அறிய விரும்பாத களம் . முகம் சுளிக்க கூடிய இடங்களைகூட அப்படியே எழுத்தாக்கியுள்ளார்
                      "நான் கடவுள்" படத்தில் வந்த கதாபாத்திரங்கள் பல இந்த நாவலில் இருந்து முழுதாக எடுக்கபட்டுள்ளது . படத்தில் வரும் ஆர்யா,பூஜா வை தவிர . ஆனால் நாவலின் பயணம் வேறு பக்கம் ,அந்த படத்தின் பயணம் வேறு பக்கம். நாவலை முழுவதும் படித்து முடித்ததும் ஏதோ புது உலகுக்குள் சென்றுவந்த உணர்வு.
                     சரி தலைப்புக்கு வருவோம் . இந்த நாவலில் ஒரு இடம் 

...........................................................................................................

"நடை அடைக்கனும்" என்றார் போத்தி , கையில் ஒரு குடம் தண்ணீர்

'இப்பம் என்னத்துக்க அபிஷேகம்?" -பண்டாரம்

"அபிஷேகம் இல்லடே , உள்ள குறெ வெத்தில துப்பல் கெடக்கு .வெள்ளம் ஊத்திவிட்டா அலம்பிக்கிட்டு போவும்" என்றபடி உள்ளே போனார்

"உள்ளேயா துப்புவீக?" என்றார் பண்டாரம்.

"பின்ன துப்பாம ? வாயில வெத்தில இல்லாம எம்பிடு நேரம் இருக்கமுடியும்? அதுக்காக பத்து நிமிஷத்துக்கு ஒருக்கா துப்பதுக்கு வெளியே வரமுடியுமா? நீ திருவந்தரத்தில் பாக்கணும்.வைகுண்ட ஏதாதசிக்கு எட்டு போத்திமாராக்கும் உள்ள .ராத்திரி பகலுண்ணு இல்ல.பத்து நிமிஷம் வெளியே போனா பத்து முந்நூறு ரூபா கைவிட்டு போயிடும்.உள்ள சாமிக்க காலடியில வெத்திலச் சண்டி மலை மாதிரி குமிஞ்சு கிடக்கும் பாத்துக்கோ.."
"தோஷம் இல்லியோ?"

"என்னடே தோஷம்?இத்தாம் பெரிய கோவிலு.துப்பதுக்கு ஒரு என்முண்டா?மூத்திரம் போவ எடமுண்டா?சொல்லு.வாறவனுக அடக்கிகிட்டு வெளியே போவானுக.இங்க கிடந்து சாவுதவனுக? மடப்பள்ளியிலதான் பாதிப் பேரு ஒண்ணுக்கு இருக்கது.இல்லாம திருவிழா நாளில இதுகாட்டும் எறங்கி ஏழுதெரு தாண்டி வீட்டுக்கா ஓட முடியும்?"என்னடே பண்டாரம் மொகம் சடஞ்சு கிடக்கு?"
"ஒண்ணுமில்லை"

"சொல்லணுமானா சொல்லு.நான் ஒருத்தனையும் ஏமாத்தினது இல்ல .அதனால் இன்னைக்குவரை சாமி கும்பிட்டதும் இல்லை"

"முருகனை?" என்றார் பண்டாரம்

"ஆரு நம்ம கோனாரு முருகனா? நான் கண்டிட்டுள்ள முருகன் அவன்தான்"

பண்டாரத்துக்கு சிரிப்பு வந்தது

" இங்க பாருடே பண்டாரம்,இது ஆறடிக் கல்லு.பத்து நானூறு வரிசமாட்டு பலரும் கழுவி சந்தனம் போட்டு பூ போட்டு கும்பிடுதானுக.நமக்கு இது தொளிலு .உனக்கு முத்தம்மை,எனக்கு இது.அது சதை இது கல்லு.அது அளியும்,இது இன்னும் ஆயிரம் வருசம் இருக்கும்

...........................................................................
இதுதான் நான் சொல்ல வந்த இடம்.இதை ஜெமொ எதற்க்காக சுட்டியுள்ளாரோ எனக்கு தெரியாது. 

                                      என் பள்ளி விடுமுறை நாட்களில் வர்ணம்பூசும் வேலைக்கு செல்வது உண்டு . அப்படி ஒருமுறை எங்கள் பெயிண்டரிடம் ஒரு கோவில் சுத்தம் செய்யும் பணி கிடைத்தது. நானும் சென்று வேலை செய்தேன்.ஒருநாள் கருவறையை சுத்தம் செய்ய சொன்னார்கள்.நானும் சென்றேன்.மிக சிறிய அறை அது. நான்கு மூலைகளிலும் சிவப்பு சிவப்பாக திட்டு திட்டாக இருந்தது . அருகில் பார்த்தபோதுதான் தெரிந்த்து அது வெற்றிலை துப்பல் என்று.பூசை செய்பவரின் வாயில் எப்போதும் சிவப்பாக இருக்கும் அது வெற்றிலையா?பொன்பராக்கா? எனக்கு தெரியாது.அதை இங்கேதான் துப்பியுள்ளார் . மேலும் சிலைக்கு பின்புறம் ஒரு தவளை இறந்து கிடந்தது , மாலையில் இருந்து உதிர்ந்த பூ மற்றும் இன்ன பிற வஸ்துக்கள் காய்ந்து அழுகி கிடந்தன. கொஞ்ச நேரத்துக்கு மேல் அதற்க்குள் இருக்க முடியவில்லை. வேகமாக சுத்தம் செய்துவிட்டு வெளியே வந்தேன் . அப்பாடா என்று இருந்தது .  திரும்பி சிலையை பார்தேன். "உன்னால் மட்டும்தான் இங்கே இருக்கமுடியும் உன்மையிலேயே நீ கடவுள்தான்" என்று  என் மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்

                                           நடந்து 8 வருடத்துக்கு மேல் இருக்கும் . இன்னும் என் ஞாபகத்தில் உள்ளது . பலரும் புனிதமாக கருதும் இடம் , அதிலும் வேறு சாதிக்காரன் நுழைந்தாலே(?!!?) தீட்டு பட்டுவிடுமாம்,அப்படி பட்ட இடம் இப்படி இருக்கு.

                                             எல்லாம் சுத்தம் எதிலும் சுத்தம் என்று சொல்லும் அவர்களுக்கு அந்த இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள ஏன் தெரியவில்லை??,அல்லது விருப்பம் இல்லையா?

                                            போத்தி சொன்னது போல அது வெறும் கல்லு , பூசை செய்வது அவர் தொழில்.அதை அவர் உணர்ந்துள்ளார்.சமிபத்திய தேவனாதனும் அதை நன்கு உணர்ந்துள்ளார். இல்லாவிட்டால் அங்கே சில்மிசங்கள் செய்திருக்க மாட்டார். ஆக வேதம் படித்து கருவறை சென்று மந்திரம் ஓதும் இவர்களுக்கு தெளிவாக புரிந்தது மற்றவர்களுக்கு புரிவதெப்போ??
**********************
மேலும் இந்த நாவல் பற்றி சிலர்
ஜெமோவின் ஏழாம் உலகம் ! 

http://govikannan.blogspot.com/2009/09/blog-post_14.html 
  

http://koottanchoru.wordpress.com/2009/02/18/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/





***********************

ஐபிஎல் கோப்பை யாருக்கு??

அப்படியே ஓட்டு போட்டிருங்க......

**********************


நன்றி

என்றும்
பிரியமுடன் பிரபு...
.

Saturday, March 06, 2010

யாருக்காச்சும் தெரியுமா??

 


அதிகாலை எழுந்து
குளித்து  முடித்து
கூட்டிப் பெருக்கிக்
கோலம் போட்டு..

கன்னிப்  பெண்னையும் 
அம்மான்னு கூப்பிடும்
கறவ மாட்டுக்குத்  தீனி போட்டு...
அப்பனுக்கும் ஆத்தாளுக்கும்
அனுசரனையா இருந்து.....

ம்ம்ம் இப்படி 
அழகாத்தானே இருந்துச்சு எ(ன்) வாழ்க்கை!?!?

இப்ப என்னாச்சு ?!?
யாருக்காச்சும் தெரியுமா??!?

பத்து குட(ம்)முன்னாலும்
பதறாம தூக்குவே(ன்) - இப்ப
ஒத்த காலிகுடம்
கனக்குதய்யா எனக்கு!!

நா(ன்)  புள்ளி வச்சு கோலம் போட்டா..
வழியில போறவுகயெல்லாம்
வாய் பிளந்து பா(ர்)ப்பாக - ஆனா இப்ப
கோலம் ஒருபக்கம் இருக்க
புள்ளி மட்டும் நிக்குதய்யா  ஒத்தையில
என்ன போல

கலியாணம் கட்டி 
அஞ்சு நாளுதானே ஆச்சு ?!?!
வேல பாக்குற ஊருக்கு போக
கட்டின என்னையும் 
கைபிடிச்சு கூப்புட்டீக..

"புது குடிதனத்துக்கு இது
ஆகாத மாசமடா -
அம்பது நாள் போனபின்னே
அழைச்சுகிட்டுப்  போகலாம் " - என உன்

ஆத்தாகாரி  சொல்ல கேட்டு

பிடிச்ச கையை விட்டுப் புட்டு
வண்டியேறி போனிகளே!!

வண்டி சக்கரத்துல மாட்டின
கோழி குஞ்சா -என் மனசு
நசுங்கி போன சேதி
யாருக்காச்சும் தெரியுமா??

இன்னும் அம்பது நாள் இருக்கே?!?!?

வாரம் ஒருக்கா
வண்டி புடிச்சு வருவீக - ஆனாலும்
ஆச ராசாவின் அழகு முகத்த
ஆச தீர பார்க்கும் முன்னே
அடுத்த நாள் வந்திடுதே !!?
இந்த கட்டைல போற 
கடிகாரத்த நிறுத்திவைக்க 
யாருக்காச்சும் தெரியுமா??!?!

**************************************************
நேற்று ஒரு சகோதரியிடம் தொலைபேசியில் பேசினேன் . சென்ற 19ஆம் தேதிதான் திருமணம் ஆச்சு. கணவர் கோவையில் வேலை செய்கிறார். திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் அவர் மட்டும் கோவை சென்று விட்டார். இந்த மாதத்தில் புது குடித்தனம் வேண்டாம் என கணவர் வீட்டார் சொல்லிவிட்டதால் இன்னும் 2 மாதம் பிறகே சகோதரியும் கோவை செல்ல முடியும். அதுவரை வாரா வாரம் அவர் கோவையில் இருந்து ஞாயிறு ஒருநாள் மட்டும் வந்து செல்வார் . இந்த காலத்திலும் நல்ல மாதம் கெட்ட மாதம் என பார்த்து புது தம்பதியரை இப்படி பிரித்து வைக்கனுமா?? 

நேற்று பேசி முடித்த உடன் எழுதியது இந்த கவிதை(?) , பிழைகள் இருந்தா பின்னூட்டதில் சொல்லவும்
தலைப்பு வேற வைக்கலாமா?? இதைவிட சிறப்பான தலைப்பு "யாருக்காச்சும் தெரியுமா??"


பிரியமுடன் பிரபு....


.

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...