Wednesday, December 24, 2008

அடியே கண்ணம்மா.................24/12/2008

.



அடியே கண்ணம்மா
தூக்கத்த விட்டுப்புட்டு
துள்ளி எழுந்து படிபுள்ள..........


“ஆ(ண்)ம்புள்ளை பெத்திருந்தா
அரவணைச்சு பாத்துக்குவா(ன்)
பொட்டைய பெத்துட்டியே......
போதாத காலம்தான் இனி உனக்கு” - என்று
பேசிய வாய்க்கெல்லம்
டார்ச் அடிச்சு பாக்கவேணும்
டாக்டராகி நீயும் வா!

பெத்தவ(ன்) போயிட்டான்
சாமியின்னு ஆயிட்டான்
ஒத்தையில் நாநின்னு
ஒருவேல சோறுதின்னு

ஒவ்வொண்னா சேத்துவச்சே(ன்)
மெத்த வீடுவேண்டாம்
மேணிகொழுக்கதீணி வேண்டாம்-இந்த
கட்ட வேகுமுன்னே-நீ
டாக்டராகி காட்டிபுடு.....
பக்கத்துவீட்டு பார்வதியின்
சொத்த பல்லுக்கும்
மூலவீட்டு மாலதியின்
மாலகண்ணூக்கும்
நீதான்டீ காவலு
கண்விழிச்சு எழுந்துவா.......

கான்மெண்டே பாக்காத
காட்டுபய ஊருக்குள்ளே
காலேஜு போறபுள்ள
மாட்ட மேய்க்கிற மனுசனுக்கும்
மனுசன எய்க்கிற மாட்டுக்கும்
மருத்துவச்சி நீதான்டீ
மணியாச்சு எழுந்துவா.............


...................................................................
படிச்சீங்களா...........
அப்படியே ஓட்டுபோட்டுட்டு போங்க
...................................................................


http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=1531



Monday, December 15, 2008

சுட்டும் விழிச்சுடரே- பாட்டு மெட்டுக்கு என் வரிகள்---- 14/12/2008

..............................

கஜினி படப்பாடலான "சுட்டும் விழிச்சுடரே" பாடலின் மெட்டுக்கு என் வரிகள்
.............................


பல்லவி :


சிட்டு சிட்டு குருவி
நெஞ்சில் கொட்டும் அருவி
காணாவிட்டால் அவன் துறவி
இவளை
காணாவிட்டால் அவன் துறவி
உண் கண்ட நேரம்
கல்லுக்குள்ளும் ஈரம்
எந்தன் நெஞ்சில்
மழைவந்ததே - உன்னாலே
பாதையெங்கும்
பூவும் பூத்ததே........ (உன்னாலே ......)


(சிட்டு..............)






சரணம் 1 :

வெண்ணிலா ஓடக்கண்டேன்
என் விழி தேடக்கண்டேன்
இதுபோல
இன்பம் எங்குகொண்டேன்........

இருவிழி இமைக்கக் கண்டேன்
இருதயம் வெடிக்கக் கண்டேன்
இமையின்றி
வாழக் கற்றுக்கொண்டேன்........

தேர்போகும் தெருவோரம்
பக்தனைப் போல் காத்திருந்தேன்
பாவை பார்வைப் பட
பூத்திருந்தேன்......... (பாவை.......)

(சிட்டு சிட்டு குருவி..)



சரணம் 2 :

கடற்க்கரை ஈரக்காற்றே
கதைபேசும் தென்னங்கீற்றே
முதல்முறை
உன்னிடத்தில் தோற்றேன்......

பூப்போல் தேகம் கண்டேன்
புயல் போல வேகம் கொண்டேன்
பூகம்பத்தில்
நானும்மாட்டிக் கொண்டேன்........

அணைமீறும் நீரைபோல
என் மனமும் என்னை மீறுதே
கேட்க
யாருமின்றிசுற்றி திரியுதே!! ( கேட்க.......)
(சிட்டு சிட்டு...)
........................................................










Sunday, December 07, 2008

கூவமும் குளியலறை நீரும்


பெண்ணே
உன் குளியலறையிலிருந்து
வெளிவரும் நீரை
கூவத்தில் கலந்துவிடு
இனிமேலாவது
கூவம் கொஞ்சம் மணக்கட்டும்
................................................................................................................
சிங்கார சென்னை பெண்களே கொஞ்சம் மனசு வையுங்கோ
.................................................................................................................

http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=1530 

 

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...