Monday, April 25, 2011

போதிமரம்


**
மனிதனையெல்லாம்
புத்தனாக்க எண்ணிய  கடவுள்
வழிநெடுக போதிமரங்களை
நட்டு வைத்தான்

மரங்களையெல்லாம்
வெட்டி வெட்டி - ஒரு கைதேர்ந்த
மரம்வெட்டியானான் மனிதன்

***

     அனுபவம்தான் சிறந்த ஆசான்.அது கற்றுத்தரும் பாடத்தை வேறு எந்த பள்ளியும் கற்றுத்தராது

மகளே.. என் செல்வ மகளே..!  என்ற பதிவின் கடைசி வரிகள் இங்கே  

"ஒரு கணவனாய் விளங்க வைக்க முடியாத விசயங்களை காலம் ஒரு பெண்ணின் தகப்பனாய் குறைவில்லாமல் போதித்துக் கொடுக்கிறது என்பது முக்காலமும் உண்மை."

     தினமும் நம்மைச் சுற்றி எத்தனையோ விசயங்கள் நடக்கின்றன,ஆனால் அவற்றை எல்லாம் உற்று கவனித்து அதில் இருந்து பாடம் கற்றுக்கொள்கிறோமா ? என்றால் இல்லை என்பதே பதிலாய் வரும் பல நேரங்களில்

(பெயர் மாற்றப்பட்டுள்ளது)
   
     என் உறவினரின் மகள் ஹேமாவுக்கு திருமணமாகி சிலவருடங்கள் மகிழ்ச்சியாகவே கடந்தது. பின்னர் அவள் கணவன் அடிக்கடி குடித்துவிட்டு வருவதும்,வீட்டில் இருக்கும் நகை ,பணம்  இவற்றை தெரியாமல் எடுத்து சென்று விடுவதும் என மாறினார்.ஒரு கட்டத்தில் குடித்துவிட்டு வந்து அடிஉதை என நிலமை மோசமானபோதுதான் எங்கள் உறவினருக்கே விசயம் வந்தது. எனக்கு அக்கா என்றாலும் ஒரு நண்பர்கள் போல பழகியாதால் தனி பாசம். என்னிடம் ஏன் இதையெல்லாம் முன்பே சொல்லவில்லை என நான் கேட்டபோது "கேட்டால் உன் மனசு வருத்தபடுமுன்னு சொல்லவில்லை" என்று சொன்னாr.

     பல கனவுகளோடு வரும் பெண்ணை பெரிதாக மகிழ்விக்க தெரியாவிட்டாலும் அவளை சக மனுசியகவாவது மதிக்கலாமே.. திருமணமான சில வருடங்களிலே வாழ்வையே வெறுக்கும்  அளவுக்கு நடந்துகொள்ளாமல் இருக்கலாமே ..அவருக்கும் ஒரு சகோதரி உண்டு ,திருமணமாகிய  அவரின் சகோதரியிடம்  அவள் கணவன் இப்படி நடந்துகொண்டால் இவன் என்ன செய்வான்? கோவம் வருமா?  இதேபோல தன மனைவிக்கும் அவளை நேசிக்கும் அண்ணனோ தம்பியோ அப்பவோ அம்மாவோ இருப்பாங்கனு யோசிப்பானா ?
இதையெல்லாம் சிந்திக்கும் திறன் இருந்திருந்தால் நல்லபடியாக  வாழ்ந்திருப்பனே .. இதுபோன்ற ஜென்மங்கள் என் திருமணம் செய்கிறது? பொம்பளை உடம்புதான் வேணுமுன்னா விபசரிகிட்ட போங்கடா... அதுக்கு எதுக்கு திருமணம் ??..
ஒரு பெண்ணிடம் எப்படி நடந்துகொள்ள கூடதுனு இங்க கற்றுகொண்டேன்

******
    
பதின்ம  வயது :

இந்த வயதுகளில்  சிறு சிறு பிரச்சனைகள் கண்டிப்பாக வரும், ஆனாலும் பெரியதாக பாதிப்பில்லாமல் அதை கடந்து வருவதே பெரிய விஷயம்.

என்னாங்கடா உங்க காதல்..-1 (18-)

 இந்த பதிவில் தீபா தனக்கு திருமணம் ஆனதை முகம் முழுக்க மிக மகிழ்சியுடன் சொல்வாள் . 18  வருடம் தன பெற்றோர் காட்டிய அன்பை விட சில வருடங்கள் கல்லூரியில் உடன் படித்தவனின் காதல் பெரிது என முடிவு செய்து போனவள் இன்று மோசமான  நிலைமையில் உள்ளார்.அன்று அந்த வயதில் தான் எடுத்த முடிவை இன்று நினைத்து தன்னை தானே திட்டிகொள்வார்.

     "சாப்பட்டைகீழ போடாதே, பின்னாளில் அது இல்லாமல் கஷ்டப்படுவாய்" என்று எங்கள் வீட்டில் சொல்வார்கள், அப்படித்தான் அன்பும். ஒரு தோழன் போல பழகியவர்கள் அறிவுரை சொன்னால் கூட கோவம் வருகிறது அவர்களுக்கு. (என் வயது 27  தான்) இத்தனை வருடம் தன்னை நேசித்தவர்கள் ஒரு விசயத்தில் நம்மை கண்டித்தால் அதுவும் மிக முக்கியமான முடிவுகளில் கண்டித்தால் அதில் எதோ பிரச்சனை என ஏன் சிந்திப்பதில்லை?.

     அந்த வயதுவுடைய,நான் நேசித்த ஒருவருக்கு அப்படி காதல் என்று பிரச்சனை வந்த பொது ஒரு தோழனாய் அதில் உள்ள நல்லது/ கெட்டதுகளை சொன்னபோது அது அவர்களுக்கு பிடிக்கவில்லை, என்னுடைய அந்த வயதில் எனக்கு கிடைக்காதது எல்லாம் அவனுக்கு/ அவளுக்கு கிடைக்கணும் என்று எண்ணியவன் நான், இப்படி அவர்களின் மீது அதீத அன்பு கொண்டிருந்த நான் அவர்களுக்கு கெடுதல் செய்வேன் அல்லது தவறான அறிவுரை சொல்வேன் என்று எப்படி நினைகிறார்கள்? என் அன்பை அல்லவா சந்தேகிக்கிறார்கள் ... எனக்கே அவமானமாக இருக்கிறது ...

"யார் மீதும் அதீத அன்பு வைக்க கூடாது, அது ஒரு பாவச்செயல், ஆனாலும் தொடர்ந்து அதையே செய்து நம்மை நாமே வேதனை படுத்திகொள்கிறோம்"

****

Tuesday, April 12, 2011

திமுக கூட்டணியை வீழ்த்துங்கள் !

Thanks to Govi kannan

http://govikannan.blogspot.com/2011/04/blog-post_12.html

இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி தேற்க்கடிக்கப்பட வேண்டியதற்கான காரணங்கள் வெளிப்படையானவை.




1. த.கிருஷ்ணன் கொலை வழக்கில் குற்றவாளிகள் இதுவரையில் பிடிபடாமல் இருக்க ஆளும் அரசு காட்டிவரும் அலட்சியம்.

2. மதுரை தினகரன் மூன்று ஊழியர்கள் கொலையில் குற்றவாளிகள் இதுவரை அடையாளம் காண அரசு முயற்சிக்காதது. கொல்லப்பட்டவர்கள் குடும்பம் இழப்பை மறக்கும் முன்பே 'இதயம் இனித்தது கண்கள் பணித்தன" மிகக் கொடுரமான தன்னல டயலாக். 5 முறை முதல்வராக இருந்த ஒருவர் சுயநல, குடும்பநல அரசியலை தோல் உறித்துக்காட்டிய டயலாக். சீ......இந்தப்பழம் எப்போதுமே புளித்தப் பழம் தான், பழத்தின் தோலைப் பார்த்து ஏமாந்துவிட்டதாக நடுநிலை அரசியல் ஆதரவாளர்கள் முகம் சுளித்த டயலாக்

3. தமிழர்களின் தனி நாடாக ஈழம் மலர்வதைத் தடுத்ததுடன், ஆயிரக்கணக்கில் ஈழத்தமிழர்களைக் கொன்றும், லட்சக்கணக்கானவர்களின் உடமைகளைப் பறித்த இராஜபக்சேவுக்கு பக்கத் துணையாகவும் இருந்து, இராணுவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித்தந்த காங்கிரசின் கைக்கூலியாக மந்திரிப்பதவிகளைப் பெற்றுக் கொண்டு இனத் துரோகம் செய்ததற்காக

4. பரபரப்புக்காகவும், அரசியல் வெற்றுப் புகழ்ச்சிக்காகவும் வெறும் மூன்றே மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து ஈழத்தமிழர்கள் நல்வாழ்வு பெற்றுவிட்டார்கள், போர் நிறுத்தம் செய்யப்பட்டுவிட்டது என்று பச்சைப் பொய்யை அவிழ்த்துவிட்டதற்காக

5. உலக தமிழ் மாநாடு வழிகாட்டுதல்களை மீறி, தனக்கு வரலாறு படைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அரசு பணத்தை செலவு செய்து 'முதல் செம்மொழி மாநாடு' என்ற பெயரில் மொத்த தன் குடும்பத்தையும் அழைத்து மாபெரும் குடும்பவிழாவை அரசு விழாவாகக் காட்டியது.

6. ஒருலட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடி ஊழலை ஒரு தமிழன் தான் செய்திருக்கிறான், செய்வதற்குக் காரணமாக இருந்திருக்கிறான் என்று ஒட்டு மொத்த பிற இந்தியர்களுக்கிடையே தமிழர்களுக்கு அவமானம் ஏற்படுத்தியதற்காக.

7. திரையுலகத்தை அக்டோபஸ் கைகளால் இறுக்கிப் பிடித்து இருப்பதற்காக

8. இலவச தொலைகாட்சிகளை கொடுப்பதன் மூலம் கேபிள் கட்டணம் அவசியம் ஏழைகள் செலுத்தியாகவேண்டும் என்ற கட்டாயத்தை மறைமுகமாக ஏற்படுத்தி இருப்பதால் குடும்பத்திற்கு அரசு செலவில் பெரிய வருமானம் ஈட்டிய செயலுக்காக, அதாவது ஒரு கோடி (இலவச) தொலைகாட்சி (கொடுக்கப்பட்டு இருந்தால்) கேபிள் இணைப்பு X 12 மாதம் x 75 ரூபாய் கட்டணம் = ஆண்டுக்கு 900 கோடி - இது தலைவரின் குடும்பத்தின் ஒரு ஆண்டின் கேபிள் வருமானம்)

9. சீமான் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்களை காங்கிரசை குஷிப்படுத்த கைது செய்து சிறையில் அடைத்து ரசித்தது

10. மொத்தக் கட்சியின் முக்கிய பதவிகளை குடும்ப உறுப்பினர்களுக்கே கொடுத்தது மற்றும் கட்சியில் குடும்பத்தினரின் கட்டுப்பாடு மற்றும் ஆதிக்கம்.



இவையெல்லாம் வெளிப்படையாகத் தெரிந்த காரணங்கள், மீடியாவை வைத்துக் கொண்டு ஈழப் போரின் போது பொதுமக்களுக்கு செய்திகளே போய் சேராமல் தடுத்தார்கள்.



இவையெல்லாம் தெரிந்தும் தமிழகத்தின் சிறுபான்மை மதப்பிரிவினர் கிறித்துவர் மற்றும் இஸ்லாமியர்கள் ஏன் திமுக கூட்டணியை ஆதரிக்கிறார்கள் என்றால் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு (இனிமேல்) கிடைக்குமாம். கிறித்துவர்கள் சார்பில் சொல்லுகிறார்கள் ஜெ கட்டாய மதமாற்றம் தடைச் சட்டம் கொண்டு வந்தார். திமுக சிறுபான்மை காவலனாக இருப்பது இப்படித்தான். ஐந்து முறை முதல்வராக இருந்தவர் இனிமேல் தான் இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பாராம். அந்தம்மாவே போட்டு அந்தம்மாவே தூக்கிய கட்டாய மதமாற்றச் சட்டம் இன்னும் கிறித்துவர்களை பயமுறுத்துகிறதாம், அப்படி என்றால் இராமேஷ்வரம் கிறித்துவ மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் கட்டுப்படுத்துவதும், காயப்படுத்துவதும், சுட்டுப்போடுவதும் காங்கிரஸ் கூட்டணியின் அங்கமாக இருக்கும் திமுகவை ஆதரிப்பதால் சரி ஆகிவிடுமா ?





திமுக கூட்டணிக்கு அரசு ஊழியர்களின் ஆதரவாம். ஏன் என்றால் அந்தம்மா ஒரே கையெழுத்தில் ஒன்றரை லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்பியது. என் போன்றோர் கை தட்டி வரவேற்றோம். காரணம் தாம் மக்கள் ஊழியர்கள் என்ற நினைப்பே இல்லாமல் உதவிக்கு விண்ணப்பிக்க வரும் பொது மக்களை நாயிலும் கேவலமாக நடத்தியவர்கள் அரசு ஊழியர்கள். அரசு ஊழியர்கள் வீட்டுக்கு அணுப்பிய போது பொதுமக்கள் பெரிதாக எதுவும் போராடவில்லை என்பது குறிப்பிடத்தக்கத்து. அரசு வேலை நிரந்தரமானது அல்ல, தவறு செய்தால் வீட்டுக்கு அனுப்பப்படுவோம் என்கிற நினைப்பை ஜெ அரசு ஊழியர்களுக்கு ஏற்படுத்தினார், பொதுமக்களால் வரவேற்கத்தக்கது தானே.



சிறுபான்மை காவல் என்ற போர்வையில் ஒரு கட்சியை ஆதரிக்கும் நிலையை சிறுபான்மையினர் எடுப்பது, நாளை பெரும்பான்மை மதத்தினர் நாமும் ஏன் மத அடிப்படையிலேயே கட்சி ஆதரவு நிலையை எடுக்கக் கூடாது என்ற முடிவுக்குத் தள்ளிவிடும். அந்த வாய்ப்புகளுக்காகத்தான் இந்து மதவாத சக்திகளும் கூடக் காத்திருக்கின்றன.



திமுக அரசியல் மூலமாக சம்பாதித்து போதும், அந்தம்மா ஜெ தான் தற்போது பரம ஏழை :). தமிழக அரசியலில் மாற்று சக்திகள் தலையெடுக்காதவரை ஒரே கருமாந்திரத்தை தொடர்ந்து உட்காரவைப்பதைவிட கருமாந்திரத்திற்கு மாற்றான மற்றொரு கருமாந்திரத்தைத் சட்டசபைத் தலைமைக்கு அனுப்புவதன் மூலம் தொடர் கொள்ளையில் ஒரே குடும்பம் ஈடுபடுவதையாவது, சர்வாதிகரிகளாக ஆவதைத் தடுக்கமுடியும் என்கிற காரணமும் நம்பிக்கையும் வெளிப்படையானது. தற்போதைய சூழலில் திமுக கூட்டணியை வீழ்த்த அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்பதே அறிவார்ந்த மற்றும் தமிழகத்திற்கு ஓரளவு நன்மையாக அமையாவிட்டாலும் கொடுதல்களை ஓரளவு தடை போட முடியும்.



இந்தத் தேர்தலில் என்னுடைய திமுக கூட்டணிக்கான எதிர்ப்பையும், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான காரணங்களையும் நான் இங்கே பதியவைத்துவிட்டேன்.



சமூக மற்றும் தமிழுணர்வாளர்களின் நல் உணர்வுகள் இந்தத் தேர்தலில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.


****
KULALI
திமுக கூட்டணியை வீழ்த்த தேவையான டாப் 10 காரணங்கள்


http://kuzhali.blogspot.com/2011/04/10.html
 
 
 
**



You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...