Thursday, November 17, 2011

காதல் மனைவியும் காலண்டர் முருகரும்(ஒரு மீள் பதிவு )

.
காய்கறி வெட்டும் போது
கையில் காயம் பட்டதால்
கத்தியின் மீது கோபம் அவளுக்கு

வேண்டாம் பெண்ணே
"வெண்டைக்காய்க்கும் உன்
விரலுக்கும்
வித்தியாசம் தெரியாததால்
நடந்த விபத்து இது" என்றேன்

"காயம்பட்டு கஸ்டப்படுறேன்
கவிதையா உமக்கு?
நீயே சமையல் செய்யும்"-என்று சொன்னாள்
என் அழகிய ராட்சசி

அட கடவுளே?!!
பேச்சுலராய் இருந்தபோது
கற்ற வித்தை
பெண்டாட்டி வந்த பின்னும்
தொடருதே முருகா?

பெண்பார்க்கும் படலத்தில்
"பிடிச்சிருக்கா?" - என்ற கேள்விக்கு
பெண்டுலம் போல் தலையாட்டியபோதே
அவசரமாய் சொல்லியிருக்கவேண்டும்
"அலார்ட்டாய் இரு" என்று....
நிச்சயதார்த்த தினத்தில்
நீலநிற புடவையில் பார்த்து
நிலைமறந்து போனபோதே
நிருத்தி சொல்லியிருக்க வேண்டும்
"நிதானமாய் இரு"- என்று

திருமண நாளில்
தலைகுனிந்த தரிசனம் கண்டு(தாலிகட்டும் போது)
தடு
க்கி விழுந்தபோதே
தட்டி எழுப்பி சொல்லியிருக்கவேண்டும்
"தயாராய் இரு" - என்று

முதல்நாள் இரவில்
முக்கால் இருட்டில்
முகம் பார்த்து மூர்ச்சையானபோதாவது
முணுமுணுத்து சொல்லியிருக்கவேண்டும்
"முழிச்சுக்கோ" - என்று

அப்போதெல்லாம் விட்டுவிட்டு
காய்கறி வெட்டும்போது
காலண்டரில் தொங்கியபடி
"நானிருக்க பயமேன்"என்று சொல்லி
என்ன பயன் முருகா????
:::::

இது ஒரு மீள் பதிவு
இதுக்கும்  படத்துக்கும் தொடர்புகள் கிடையாது..

என்றும்
பிரியமுடன் பிரபு......
.

Thursday, October 20, 2011

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

நண்பர்களே,
        உங்களுக்கு இலக்கியத்தில் (இலக்கியம்னு பார்த்ததும் ஓடிராதிங்க, நகைச்சுவை, சமையல் ஆர்வமா) ஆர்வமா? உங்களிடம் நிறைய படைப்பு திறமை இருக்கிறதா? உங்கள் திறமையை காட்ட போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா? அதற்கான போட்டிகள் எங்கே நடக்கிறது என தேடிக் கொண்டிருக்கிறீர்களா? இதோ இங்கே நடக்கிறது.
    தமிழ்த்தோட்டம் என்ற குழும தளத்தில் உங்களுக்கான போட்டிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
    அந்த தளத்தில் உறுப்பினரானால் மட்டுமே இந்த போட்டியில் பங்கு கொள்ள முடியும். இன்றே உறுப்பினர் ஆகுங்கள். சுமார் பத்து பதிவுகளை உங்கள் பெயரில் வெளிட்டாலே போதும். போட்டியில் பங்குபெற நீங்கள் தகுதி ஆனவராவிர். 

போட்டியின் விவரங்கள்: 

1. கவிதைப் போட்டி

2. கதைப் போட்டி

3. கட்டுரைப் போட்டி
 
4. நகைச்சுவைப் போட்டி
 5. அனுபவங்களைப் பகிரும் போட்டி

6. ஹைக்கூ போட்டி

7.புகைப்படப் போட்டி

8. பின்னூட்டங்களால் படைப்புகளுக்கு மகுடம் சூட்டும் போட்டி 

9. சமையல் போட்டி 

10. அதிக பதிவுகளால் தோட்டம் சிறக்கவைத்தவர் போட்டி 


போட்டி நிபந்தனைகள்:
          1.  நமது தமிழ்த்தோட்டத்தில் 10 பதிவிற்கு மேல் பதிவிட்ட எல்லா உறுப்பினர்களும் போட்டியில் கலந்துகொள்ளலாம்.

          2.படைப்புகளின் தலைப்பு அவரவர் விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்யலாம்.

          3.மொத்தப்படைப்புக்களிலிருந்து 'கவிதை’ 'கட்டுரை’ 'கதைப்’ பிரிவில் மூன்று பேரும், இதர பிரிவுகளில் ஒருவர் மட்டுமே பரிசீலனை செய்யப்படுவர்.

          4.தேர்வு செய்பவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்த்தும் சான்றிதழும் வழங்கப்படும்.

         5.தேர்வு முடிவுகள் தமிழ்த்தோட்டத்தின் நிர்வாகப் பொறுப்பிற்கு உட்பட்டது. நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.

        6.படைப்புகள் புதியவனவாகவும் வேறு தளங்களில் வெளியிடாததாகவும் இருத்தல் சிறப்பு.

        7.படைப்புகள் சுயமாக படைக்கப்பட்டிருக்க வேண்டும். பிறர் படைப்புகளை அனுப்புவதெனில் அதே படைப்பாளியின் பெயரில் அனுப்பலாம். சான்றிதழ் அவர் பெயருக்கே அனுப்பிவைக்கப்படும்.

          8.எல்லோரும் எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம், ஒரே தலைப்பைச் சார்ந்து எத்தனை படைப்புகளை வேண்டுமோ யார் வேண்டுமாயினும் அனுப்பலாம், எத்தனைப் படைப்புகளை அனுப்பினாலும் அந்தந்த துறை சார்ந்து ஒருவரின் ஒரு படைப்பே தேர்ந்தெடுக்கப்படும்.

         9.படைப்பினை அனுப்புகையில் அவரின் முழுப் பெயரும், உடன் "தமிழ்த்தோட்டத்து உறுப்பினர் பெயரும் மற்றும் பதிவு எண்ணிக்கையும் நிச்சயம் குறிப்பிட்டிருத்தல்
வேண்டும். அங்ஙனம் இல்லாதார் படைப்புகள் மற்றும் குறைந்தது பத்து பதிவேனும் நம் தளத்தில் இட்டிருக்காதோர் படைப்புக்கள் எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி போட்டியிலிருந்து நீக்கப்படும். 

          10.படைப்புக்களை மின்னஞ்சல் மட்டுமே செய்தல் வேண்டும். போட்டிக் காலம் முடிந்ததும் அனைத்துப் படைப்புகளும் நம் தமிழ்த்தோட்டத்தில் வெளியிடப் படும். படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி tamilthottampottigal@gmail.com

         11.படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் :30-11-2011

         12.போட்டி முடிவுகள் 15.12.2011- ற்குள்ளாக அறிவிக்கப்படும்.

மேலதிக தகவல்கள் வேண்டுவோர் கீழே உள்ள லிங்க் பார்க்கவும்.
தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011



இது நம்மை நாமே வளர்த்துக் கொள்ளும் முயற்சியன்றி வேறில்லை...
ஒத்துழைப்பு நல்கும் அனைவருக்கும் நன்றி!!!





Monday, September 26, 2011

ஸ்வீட் எடு கொண்டாடு...(புகைப்படங்கள்..)






***

தனிமை என்னை வாட்டுது வாடி ...
எழுதி முடித்த கவிதைகள் கோடி..
இனியும்.. தாமதம்... ஏனடி ....
http://priyamudan-prabu.blogspot.com/2011/09/blog-post_19.html  -

இப்படி ஒரு பதிவிட்டால் எல்லோரும் துக்கம் விசாரிக்கிறாங்க... இல்லாட்டி மனைவி ஊர்ல இல்லையான்னு கேட்குறாங்க...அதுக்குத்தான் இப்ப ஸ்வீட் எடு கொண்டாடு... ( டோன்ட் வொரி பி ஹாப்பி ...)

என்றென்றும்
பிரியமுடன் பிரபு ... :)

Monday, September 19, 2011

தனிமை...(புகைப்படம்)



தனிமை என்னை வாட்டுது வாடி ...
எழுதி முடித்த கவிதைகள் கோடி..
இனியும்.. தாமதம்... ஏனடி ....



என்றென்றும்
பிரியமுடன் பிரபு.. --

Tuesday, September 13, 2011

பாசமான பாட்டிக்கு...(படித்ததில் பிடித்தது)

பாசமான பாட்டிக்கு...

(Thanks to Naufal http://www.flickr.com/photos/mqnaufal/3880951092/ )



ஆசையா வளர்த்தவளே
மூனாங்கிளாசு படிக்கையில
முன்னாடியே கட்டிக்கொடுத்தா
மிச்சம் கிச்சம் வச்சுபுடுவேன்னு
மூணுவேள சோறும் ஊட்டிவிட வருவ


வெட்கம் விட்டு
சொல்லுறேன்
வத்தக் குழம்பு சாப்பிட்டு
வருஷக்கணக்காகுது
மணத்தக்காளி சாப்பிட்டு
மாசக்கணக்கு ஆகுது
நல்ல காப்பி குடிச்சே
நாலு நாளு ஆகுது


உலையில அரிசிபோட கத்துக்கோ
ஒத்தாசையா இருக்கும்னு
சொன்னதா ஞாபகம்
ஒரு நாளு பசியில
உலையில சோறு வைக்க
வந்த சாதம்
வேகாத கதை சொல்லவா
வெந்து போன
விரலோட வினையச் சொல்லவா
வகையா வந்த கஞ்சிய
குடிச்ச விஷயம் சொல்லவா


பத்து மணி ரயிலுக்கு
ஆறு மணிக்கே நீ வருவ
பத்து நிமிஷம் தாமதம்னா
பதறிப்போவ
விமானத்துல போறேன்
வெளிநாடு போறேன்
விடிய விடிய நானும்தான்
வேலைக்கும் போறேன்
விடிஞ்சு வரும் போது
விழுந்ததும்
நான் துடிச்சதும்
ரெத்தம் வழிஞ்சதும்
தண்டவாளதுக்கு
மட்டுந்தான் தெரியும்


அஞ்சு மணிக்கு
எழுந்தரிச்சு
அரக்க பறக்க சமைச்சு
அக்கா தங்கச்சி
சண்டையெல்லாம்
சமாளிச்சு
என்
ஆறடி முடிய
சிக்கெடுத்து சீவி
அரைமுழ
ரிப்பன் கட்டி
அனுப்பிவச்ச

ஆறடி முடி இப்ப
அரையடி ஆச்சு
அதை சீவாம
இருப்பதே
பேஷனா
போச்சு

சொர்கத்து பாட்டிக்கு
சொப்பனத்துலேயே
கடுதாசி எழுதற
இந்த பேத்திக்கு
இன்னும்
ஒரே ஒரு ஆசை பாக்கி

முழுகாம இருக்கறேன்
மூணு மாசம் ஆச்சி
கத்திரி போட்டு கிழிச்சாலும்
கத்தி வலிச்சு பிரசவிச்சாலும்
ரெத்தின வாக்கு
மாறாம
முத்து முத்தா
என் வயித்துல
வந்து
புறந்திடு தாயி
-
-கவிஞர் வே.பத்மாவதி


..

Tuesday, September 06, 2011

எல்லைச் சாமி ....




எல்லைச் சாமி .... 


ஊர் எல்லை
புளியமரம் கடக்கும் முன்
மறைவில் இருந்து வந்த அவன்
கத்தியை காட்டி மிரட்டையில
"அப்பே ..ஆத்தா.." - ன்னு
அவ கத்தின குரலு
அடுத்த ஊருக்கே கேட்டுச்சே .....
அங்கனயே அரிவாளோடு நிக்கும்
உனக்கு ஏனோ கேட்கலையே...



.
பிரியமுடன் பிரபு......

Friday, September 02, 2011

ஒண்டிக்கட்டையின் "கொழுக்கட்டை புலம்பல்கள்"



விநாயகர் சதுர்த்திக்கு எல்லோரும் கொழுக்கட்டை சாப்பிடுகிறார்களாம் அங்கே ...ம்ம்ம்ம் சாப்பிட்டு 10 வருஷம் ஆச்சு ...





என் புலம்பல்கள் கீழே

***
இனிமேல் கொழுக்கட்டை பற்றி பஸ் விடுபவர்கள் எங்களை போன்ற ஒண்டிக்கட்டைகளுக்கு கொழுக்கட்டை யை அனுப்பி வைக்கவும்....
# கடுப்பேத்துறாங்க மைலார்ட் ...

***
கைபேசியில் ஊட்டி விட்டால் கொழுக்கட்டை ருசியும் தெரியாது என் பசியும் ஆராது...

# இதையெல்லாம் காதலி(கள்) புரிந்துகொள்(ல்)வதேப்போது ?
# என்னமோ போ விநாயகா ...
 ...

****

விநாயகர் சதுர்த்தியை புறக்கணிக்கிறோம் ....

இப்படிக்கு
கொலுக்கட்டை கிடைக்காதோர் சங்கம்
சிங்கப்பூர் கிளை

...

from friends

 வைகை வி - Buzz -
ஊரு உலகத்துல பத்து பதினஞ்சு கொழுக்கட்ட தின்கிறவனுங்க எல்லோரும் சந்தோசமா திங்கிறாங்க... ஆனா ஒரு கொழுக்கட்டய ஓசில திங்கிறதுக்குள்ள நான் பட்ற பாடு இருக்கே... அய்அய்அய்ய்ய்ய்ய்ய்ய்​யோ.... # இன்னும் ஒண்ணுகூட கிடைக்கல யுவர் ஹானர் :((

****

கந்ததாசன் ப்ளஸ் - Buzz -

கொழுக்கட்டையே கொழுக்கட்டையே ஏ(ன்) வேகல?
மழயும் பேஞ்சிச்சு நா வேகல
மழயே மழயே ஏம் பேஞ்சிங்க?
புல்லு மொளைக்க நாம் பேஞ்சேன்
புல்லே புல்லே ஏம் மொளச்சிங்க?
மாடு திங்க நா மொளச்சேன்
மாடே மாடே ஏந் தின்னீங்க?
பாலு கறக்க நாந் தின்னேன்.
பாலே பாலே ஏங் கறந்தீங்க?
பால்காரர் கறந்தார் நா கறந்தேன்.
பால்கார்ரே பால்கார்ரே ஏங் கறந்தீங்க?
அம்மா சொன்னாங்க நாங் கறந்தேன்.
அம்மா அம்மா ஏஞ் சொன்னீங்க?
பாப்பா அழுதுச்சு நாஞ் சொன்னேன்.
பாப்பா பாப்பா ஏ அழுதீங்க?
எறும்பு கடிச்சுச்சு நா அழுதேன்.
எறும்பே எறும்பே ஏங் கடிச்சீங்க?
எங்க புத்துக்குள்ள கைய வுட்டா சும்மாருப்பமோ?

..

Monday, August 29, 2011

மணற்கேணி - 2010 வெற்றியாளர்கள் சிங்கப்பூரில் ...



          மணற்கேணி 2010 - ன் வெற்றியாளர்கள்  திரு லதானந்த்,செல்வன் ஜெ லியோ ப்ராங்களின், செல்வி வே.பத்மாவதி ஆகிய மூவரும் கடந்த சனி கிழமை (27 /08/2011) காலை சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்கள் . கடந்த முன்று நாட்களாக அவர்கள் சிங்கப்பூரில் பல  இடங்களை  சுற்றி பார்த்து மகிழ்ந்தார்கள் .இவற்றின் இடையே ஞாயிறு அன்று மாலை சிங்கை அன்-மோ-கியோ நுலகத்தில் உள்ள தக்காளி அறையில் (tomoto room ) "வாசகர் வட்டம்" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் . அங்கு வெற்றியாளர்களுக்கு சான்று ஆவணம் வழங்கி, வெற்றியாளர்களின் கட்டுரைகள் விமர்சனம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிங்கை எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் கலந்து கொண்டார்கள் .பின்  காலங்க் சமூக மன்றத்தில்  நடைபெற்ற  கவிமாலை நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டார்கள்.


புகைப்படங்கள்

















அன்புடன்
மணற்கேணி 2010 குழுமம்
 

Friday, August 26, 2011

மணற்கேணி 2010 வெற்றியாளர்கள் சிங்கப்பூர் வருகை



மணற்கேணி 2010 முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டும் வரும் 27 ஆகஸ்ட் 2011 முதல் 3 செப் 2011 வரை சிங்கப்பூர் சுற்றுலா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வர இருக்கின்றன.

வெற்றியாளர்கள்

தமிழ் அறிவியல் பிரிவு : திரு லதானந்த்
அரசியல் / சமூகம் : செல்வன் ஜெ லியோ ப்ராங்களின்
தமிழ்மொழி இலக்கியம் : செல்வி வே.பத்மாவதி

வெற்றியாளர்களுக்கான நிகழ்ச்சிகள்:

நாள் : 28/ஆகஸ்ட்/2011 ; நேரம் : மாலை 3 மணி முதல் 5 மணி வரை
இடம் : அங்க்மோக்யோ நூலகம்
நிகழ்ச்சி : வாசகர் வட்டம்
வெற்றியாளர்களுக்கு சான்று ஆவணம் வழங்கி, வெற்றியாளர்களின் கட்டுரைகள் விமர்சனம் செய்யப்படும். இந்நிகழ்ச்சியில் சிங்கை எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.

வெற்றியாளர்களை அறிமுகம் செய்து, பதிவர்கள்
குழலி - நாட்டுப்புறப் பாடல்கள்
ஜோசப் பால்ராஜ் - மரபுசாரா ஆற்றல் வளம் மற்றும்
சமச்சீர் கல்வி - ரோஸ்விக் ஆகியோர் விமர்சனம் செய்கிறார்கள். விழாவில் தேனீர் மற்றும் சிற்றுண்டி அங்மோகியோ நூலக பொறுப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
*

நாள் : 28/ஆகஸ்ட்/2011 ; நேரம் : மாலை 7:00 முதல் 9:00 வரை
இடம் : காலங்க் சமூக மன்றம்
நிகழ்ச்சி : கவிமாலை
இந்நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொள்வர்
*

நாள் : 30/ஆகஸ்ட்/2011 செவ்வாய் கிழமை, நேரம் : மாலை 5 மணி - 8 மணி வரை
இடம் : சாங்கி கடற்கரை பூங்கா
நிகழ்ச்சி : வெற்றியாளர்களுடன் வெந்தழல் உணவு (BBQ)
          பதிவர்கள் வாசகர்கள் கலந்து கொண்டு வெந்தழலில் சுட்டு உண்டு, கலந்து பேசும் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது.  அன்று ஹரிராயா (ரம்ஜான்) விடுமுறை ஆதலால் சிங்கப்பூர் வாசகர்கள், மற்றும் பதிவர்கள் மற்றும் அவரது நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள்
நிகழ்ச்சிகள் அனைத்தும் விடுமுறை நாட்களில் நடப்பதால் சிங்கைப் பதிவர்களும் வாசகர்களும், தவறாது கலந்து கொள்ள அழைக்கப்பட்டு, வெற்றியாளர்களை சிறப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இந்நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு அளித்தவர்கள், சிங்கப்பூர் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரை வழங்கியவர்கள், தமிழ்பதிவர்கள் மற்றும் வாசகர்கள் ஆகியோர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்

அன்புடன்
மணற்கேணி 2010 குழுமம்


.

Monday, August 22, 2011

கன்னம் சிவந்த கிளி



"வீட்டில் கிளி வளர்க்கலாம் என்றால்
வேண்டாம் என்கிறார் அப்பா" -என்று  
வருத்தப்பட்ட  அவளிடம்..

"ஒரு வீட்டில் இரண்டு கிளிகள் எதற்கு
என எண்ணியிருப்பார் அவர் "- என்றேன் நான்..
கிளிக்கு கன்னங்கள்  சிவந்தது
வெட்கத்தில்...



******************************
பிரியமுடன் பிரபு......

Monday, July 04, 2011

காதல் பரிதவிப்பு




பச்சமண்ண பாதகத்தி
பத்தவச்சுட்டு போயிட்ட ..

உச்சிசாம வேளையில
உசிரு பத்தி எரியுதடி ..

ஊரும் தூங்குதடி..
உறவும் தூங்குதடி..
காக்கா குருவி கூட
கூடடஞ்சு போனதடி...
*கவர்மெண்டு* கரண்டு கூட
கட்டாகி போனதடி ...

இந்த
பாவிபய மனசுமட்டும்
பரிதவிச்சு நிக்குதடி..



(* - தமிழகத்தில் இருந்தபோது எழுதியது ..)

-
பிரியமுடன் பிரபு...
-



.

Friday, July 01, 2011

அரசு அலுவலகமும் இடைத்தரகர்களும்

***
திருமணத்திற்கு வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி ..நன்றி ..நன்றி ..

***
          என் திருமணத்தை பதிவுசெய்து சான்று பெற பதிவாளர் அலுவலகம் சென்றேன்.முன்தினமே அங்கு பணியில் இருக்கும் ஒருவரிடம் என் அப்பா விபரங்கள் கேட்டார். அதன்படி என் புகைப்படம், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்,மாற்று சான்றிதழ் (டிசி),ரேசன் கார்ட், வாக்காளர் அடையாள அட்டை எல்லாம் கேட்டார்கள். அதுவும் ஒரிஜினலையும் காண்பிக்கவேண்டும். பெண்ணின் பெற்றோரும் நேரில் வரணுமாம் மேலும் முன்று சாட்சிகள் அவர்களின் அடையாள அட்டை,புகைப்படம். அதில் பத்தாம் வகுப்பு மார்க் சிட் மாற்று சான்றிதழ்(டிசி)  எல்லாம் சிங்கபுரிலேயே உள்ளது. ஆகையால் நகல் மட்டும் கொடுத்தேன் (கடவுச்சீட்டு ஒரிஜினல்) அவர்கள் ஏற்றுகொள்ளவில்லை. அவர்களுக்கு வேண்டியது

1 . திருமணம் நடந்ததற்கான சாட்சி
2 . என் வயதுக்கான சான்று
3 . என் இருப்பிடச் சான்று

பதிவுத்துறை இணையபக்கத்தில் விபரம் உள்ளது
(BUZZ -ல் பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி)

1 . MARRIAGE:

Wedding Invitation (or) Temple Marriage Receipts (or) Any proof of marriage solemnization

2. RESIDENCE:

Employee ID Card (or) Ration Card (or) Driving License (or) Passport or Visa

3. AGE

Birth Certificate (or) School/College Certificate (or) Passport / Visa

http://www.tnreginet.net/english/tel02.asp

இதன் படி என் திருமண அழைப்பிதழ் மற்றும் என் கடவுச்சீட்டு ஆகியவை மட்டுமே போதும் ஆனாலும் அந்த அதிகாரி பத்தாம் வகுப்பு மார்க் சிட்,மாற்று சான்றிதழ் (டிசி), என்றே ஒப்புவித்தார். என் படிப்புக்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பு என கேட்டால் "என் தொடர்பு இல்லையா.. உலகம் எங்கேயோ போய்கிடு இருக்கு இப்படி கேக்குறிங்க " என்று என்னவோ பேசினார் .சரி இனி பேசி பயனில்லை என்று அடுத்தநாள் அட்ரஸ்டேட் காப்பி கொடுத்து விண்ணப்பித்தேன்

Birth Certificate (or) School/College Certificate (or )Passport / விசா என்று இருக்க இவர்களோ 3 யும் கேட்கிறார்கள். நாயை பிடித்து கட்டிவைத்திவிட்டு புரோகிதம் செய்யும் புரோகிதர் நினைவு வந்தது எனக்கு. மேலும் மணமகளின் பெற்றோரும் வரவேண்டும் என சொன்னதால் முதல் நாள் சென்றபோது வெட்டியாக அவர்களும் வந்தார்கள் .அடுத்தநாள் கேட்டால் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் . வேறு பதிவாளர் அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பரிடம் விசாரித்தால் அவர் வேறு மாதிரி சொல்கிறார் .இப்படி அவர்கள் குழப்புவதாலும் , முகம்கொடுத்தே சரியாக பேசாததாலும் இடையில் இடைத்தரகர்கள் நல்ல கொண்டாட்டம் .

விண்ணப்பித்துவிட்டு வந்தபின் ஊருக்கு வரும் வரை நான் அதைப்பற்றி கவனிக்கவில்லை. பிறகுதான் ஏன் தப்பியிடம் கேட்டேன் ரூபாய் 1700 கொடுத்ததாக சொன்னான் . பதிவுசெய்ய வெறும் 200 ரூபாய் மட்டுமே அப்படியிருக்க எதற்கு 1700 அந்த இடைத்தரகர்கள் வாங்கினார்கள்?. சில படிவங்களை நகல் எடுத்தார்கள், விண்ணப்பங்களை நிரப்பிக்கொடுத்தார்கள், இரண்டு நாட்களும் சேர்த்தே சில மணிநேரங்கள் வேலை செய்திருக்கலாம் அதக்கு 1500 என்பது அநியாயம் அல்லவா?. உண்மையில் இது முழுவதும் இடைத்தரகர்களுக்குத்தானா ? அல்லது அதிகரிகளுக்குமா?, இங்குதான் என்றில்லை இதுபோல் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க போகிறவர்களிடமும் இன்னும் பல அரசு அலுவலகங்களில் படித்தவர்கள் தாங்களே படிவங்களை நிரப்பிக்கொண்டு சென்றாலும் அங்கேயும் இப்படித்தான் அதை வாங்காமல் அங்கேயே இருக்கு ஒரு நபரிடம் கொடுத்து அதை நிரப்ப சொல்கிறார்கள்.. அதற்க்கு தனியாக பணம் கொடுக்க வேண்டும் .. :-((

** பிரியமுடன் பிரபு **

Thursday, June 30, 2011

திருமண அழைப்பிதழ் (marriage invitation)

அன்பு நண்பர்களுக்கு ,


எனது திருமணம் வரும் 22 ஆம் தேதி(மே மாதம்) எனது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் பொத்தனூரில் நடைபெறவுள்ளது . அதற்கான அழைப்பிதழை இத்தோடு இணைத்துள்ளேன் . உங்கள் வருகையையும் வாழ்த்தையும் எதிர்பார்த்து..

நாள்     :  மே 22 , 2011 ,(7 .30 am - 9 am)
இடம் :  ஆர்.கே திருமண மண்டபம் , மெயின்ரோடு ,பொத்தனூர்



வழி :  கரூர்-நாமக்கல் வழித்தடத்தில் உள்ள பரமத்தி வேலூரில் இருந்து ஜேடர்பாளையம் ,பாண்டமங்கலம் செல்லும் வழியில் பொத்தனூர் உள்ளது



தொடர்புக்கு : priyamudan.prabu83@gmail.com  , priyamudan_prabu@yahoo.com.sg
 
 
என்றென்றும் 
பிரியமுடன் பிரபு..
 
 


Monday, April 25, 2011

போதிமரம்


**
மனிதனையெல்லாம்
புத்தனாக்க எண்ணிய  கடவுள்
வழிநெடுக போதிமரங்களை
நட்டு வைத்தான்

மரங்களையெல்லாம்
வெட்டி வெட்டி - ஒரு கைதேர்ந்த
மரம்வெட்டியானான் மனிதன்

***

     அனுபவம்தான் சிறந்த ஆசான்.அது கற்றுத்தரும் பாடத்தை வேறு எந்த பள்ளியும் கற்றுத்தராது

மகளே.. என் செல்வ மகளே..!  என்ற பதிவின் கடைசி வரிகள் இங்கே  

"ஒரு கணவனாய் விளங்க வைக்க முடியாத விசயங்களை காலம் ஒரு பெண்ணின் தகப்பனாய் குறைவில்லாமல் போதித்துக் கொடுக்கிறது என்பது முக்காலமும் உண்மை."

     தினமும் நம்மைச் சுற்றி எத்தனையோ விசயங்கள் நடக்கின்றன,ஆனால் அவற்றை எல்லாம் உற்று கவனித்து அதில் இருந்து பாடம் கற்றுக்கொள்கிறோமா ? என்றால் இல்லை என்பதே பதிலாய் வரும் பல நேரங்களில்

(பெயர் மாற்றப்பட்டுள்ளது)
   
     என் உறவினரின் மகள் ஹேமாவுக்கு திருமணமாகி சிலவருடங்கள் மகிழ்ச்சியாகவே கடந்தது. பின்னர் அவள் கணவன் அடிக்கடி குடித்துவிட்டு வருவதும்,வீட்டில் இருக்கும் நகை ,பணம்  இவற்றை தெரியாமல் எடுத்து சென்று விடுவதும் என மாறினார்.ஒரு கட்டத்தில் குடித்துவிட்டு வந்து அடிஉதை என நிலமை மோசமானபோதுதான் எங்கள் உறவினருக்கே விசயம் வந்தது. எனக்கு அக்கா என்றாலும் ஒரு நண்பர்கள் போல பழகியாதால் தனி பாசம். என்னிடம் ஏன் இதையெல்லாம் முன்பே சொல்லவில்லை என நான் கேட்டபோது "கேட்டால் உன் மனசு வருத்தபடுமுன்னு சொல்லவில்லை" என்று சொன்னாr.

     பல கனவுகளோடு வரும் பெண்ணை பெரிதாக மகிழ்விக்க தெரியாவிட்டாலும் அவளை சக மனுசியகவாவது மதிக்கலாமே.. திருமணமான சில வருடங்களிலே வாழ்வையே வெறுக்கும்  அளவுக்கு நடந்துகொள்ளாமல் இருக்கலாமே ..அவருக்கும் ஒரு சகோதரி உண்டு ,திருமணமாகிய  அவரின் சகோதரியிடம்  அவள் கணவன் இப்படி நடந்துகொண்டால் இவன் என்ன செய்வான்? கோவம் வருமா?  இதேபோல தன மனைவிக்கும் அவளை நேசிக்கும் அண்ணனோ தம்பியோ அப்பவோ அம்மாவோ இருப்பாங்கனு யோசிப்பானா ?
இதையெல்லாம் சிந்திக்கும் திறன் இருந்திருந்தால் நல்லபடியாக  வாழ்ந்திருப்பனே .. இதுபோன்ற ஜென்மங்கள் என் திருமணம் செய்கிறது? பொம்பளை உடம்புதான் வேணுமுன்னா விபசரிகிட்ட போங்கடா... அதுக்கு எதுக்கு திருமணம் ??..
ஒரு பெண்ணிடம் எப்படி நடந்துகொள்ள கூடதுனு இங்க கற்றுகொண்டேன்

******
    
பதின்ம  வயது :

இந்த வயதுகளில்  சிறு சிறு பிரச்சனைகள் கண்டிப்பாக வரும், ஆனாலும் பெரியதாக பாதிப்பில்லாமல் அதை கடந்து வருவதே பெரிய விஷயம்.

என்னாங்கடா உங்க காதல்..-1 (18-)

 இந்த பதிவில் தீபா தனக்கு திருமணம் ஆனதை முகம் முழுக்க மிக மகிழ்சியுடன் சொல்வாள் . 18  வருடம் தன பெற்றோர் காட்டிய அன்பை விட சில வருடங்கள் கல்லூரியில் உடன் படித்தவனின் காதல் பெரிது என முடிவு செய்து போனவள் இன்று மோசமான  நிலைமையில் உள்ளார்.அன்று அந்த வயதில் தான் எடுத்த முடிவை இன்று நினைத்து தன்னை தானே திட்டிகொள்வார்.

     "சாப்பட்டைகீழ போடாதே, பின்னாளில் அது இல்லாமல் கஷ்டப்படுவாய்" என்று எங்கள் வீட்டில் சொல்வார்கள், அப்படித்தான் அன்பும். ஒரு தோழன் போல பழகியவர்கள் அறிவுரை சொன்னால் கூட கோவம் வருகிறது அவர்களுக்கு. (என் வயது 27  தான்) இத்தனை வருடம் தன்னை நேசித்தவர்கள் ஒரு விசயத்தில் நம்மை கண்டித்தால் அதுவும் மிக முக்கியமான முடிவுகளில் கண்டித்தால் அதில் எதோ பிரச்சனை என ஏன் சிந்திப்பதில்லை?.

     அந்த வயதுவுடைய,நான் நேசித்த ஒருவருக்கு அப்படி காதல் என்று பிரச்சனை வந்த பொது ஒரு தோழனாய் அதில் உள்ள நல்லது/ கெட்டதுகளை சொன்னபோது அது அவர்களுக்கு பிடிக்கவில்லை, என்னுடைய அந்த வயதில் எனக்கு கிடைக்காதது எல்லாம் அவனுக்கு/ அவளுக்கு கிடைக்கணும் என்று எண்ணியவன் நான், இப்படி அவர்களின் மீது அதீத அன்பு கொண்டிருந்த நான் அவர்களுக்கு கெடுதல் செய்வேன் அல்லது தவறான அறிவுரை சொல்வேன் என்று எப்படி நினைகிறார்கள்? என் அன்பை அல்லவா சந்தேகிக்கிறார்கள் ... எனக்கே அவமானமாக இருக்கிறது ...

"யார் மீதும் அதீத அன்பு வைக்க கூடாது, அது ஒரு பாவச்செயல், ஆனாலும் தொடர்ந்து அதையே செய்து நம்மை நாமே வேதனை படுத்திகொள்கிறோம்"

****

Tuesday, April 12, 2011

திமுக கூட்டணியை வீழ்த்துங்கள் !

Thanks to Govi kannan

http://govikannan.blogspot.com/2011/04/blog-post_12.html

இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி தேற்க்கடிக்கப்பட வேண்டியதற்கான காரணங்கள் வெளிப்படையானவை.




1. த.கிருஷ்ணன் கொலை வழக்கில் குற்றவாளிகள் இதுவரையில் பிடிபடாமல் இருக்க ஆளும் அரசு காட்டிவரும் அலட்சியம்.

2. மதுரை தினகரன் மூன்று ஊழியர்கள் கொலையில் குற்றவாளிகள் இதுவரை அடையாளம் காண அரசு முயற்சிக்காதது. கொல்லப்பட்டவர்கள் குடும்பம் இழப்பை மறக்கும் முன்பே 'இதயம் இனித்தது கண்கள் பணித்தன" மிகக் கொடுரமான தன்னல டயலாக். 5 முறை முதல்வராக இருந்த ஒருவர் சுயநல, குடும்பநல அரசியலை தோல் உறித்துக்காட்டிய டயலாக். சீ......இந்தப்பழம் எப்போதுமே புளித்தப் பழம் தான், பழத்தின் தோலைப் பார்த்து ஏமாந்துவிட்டதாக நடுநிலை அரசியல் ஆதரவாளர்கள் முகம் சுளித்த டயலாக்

3. தமிழர்களின் தனி நாடாக ஈழம் மலர்வதைத் தடுத்ததுடன், ஆயிரக்கணக்கில் ஈழத்தமிழர்களைக் கொன்றும், லட்சக்கணக்கானவர்களின் உடமைகளைப் பறித்த இராஜபக்சேவுக்கு பக்கத் துணையாகவும் இருந்து, இராணுவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித்தந்த காங்கிரசின் கைக்கூலியாக மந்திரிப்பதவிகளைப் பெற்றுக் கொண்டு இனத் துரோகம் செய்ததற்காக

4. பரபரப்புக்காகவும், அரசியல் வெற்றுப் புகழ்ச்சிக்காகவும் வெறும் மூன்றே மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து ஈழத்தமிழர்கள் நல்வாழ்வு பெற்றுவிட்டார்கள், போர் நிறுத்தம் செய்யப்பட்டுவிட்டது என்று பச்சைப் பொய்யை அவிழ்த்துவிட்டதற்காக

5. உலக தமிழ் மாநாடு வழிகாட்டுதல்களை மீறி, தனக்கு வரலாறு படைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அரசு பணத்தை செலவு செய்து 'முதல் செம்மொழி மாநாடு' என்ற பெயரில் மொத்த தன் குடும்பத்தையும் அழைத்து மாபெரும் குடும்பவிழாவை அரசு விழாவாகக் காட்டியது.

6. ஒருலட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடி ஊழலை ஒரு தமிழன் தான் செய்திருக்கிறான், செய்வதற்குக் காரணமாக இருந்திருக்கிறான் என்று ஒட்டு மொத்த பிற இந்தியர்களுக்கிடையே தமிழர்களுக்கு அவமானம் ஏற்படுத்தியதற்காக.

7. திரையுலகத்தை அக்டோபஸ் கைகளால் இறுக்கிப் பிடித்து இருப்பதற்காக

8. இலவச தொலைகாட்சிகளை கொடுப்பதன் மூலம் கேபிள் கட்டணம் அவசியம் ஏழைகள் செலுத்தியாகவேண்டும் என்ற கட்டாயத்தை மறைமுகமாக ஏற்படுத்தி இருப்பதால் குடும்பத்திற்கு அரசு செலவில் பெரிய வருமானம் ஈட்டிய செயலுக்காக, அதாவது ஒரு கோடி (இலவச) தொலைகாட்சி (கொடுக்கப்பட்டு இருந்தால்) கேபிள் இணைப்பு X 12 மாதம் x 75 ரூபாய் கட்டணம் = ஆண்டுக்கு 900 கோடி - இது தலைவரின் குடும்பத்தின் ஒரு ஆண்டின் கேபிள் வருமானம்)

9. சீமான் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்களை காங்கிரசை குஷிப்படுத்த கைது செய்து சிறையில் அடைத்து ரசித்தது

10. மொத்தக் கட்சியின் முக்கிய பதவிகளை குடும்ப உறுப்பினர்களுக்கே கொடுத்தது மற்றும் கட்சியில் குடும்பத்தினரின் கட்டுப்பாடு மற்றும் ஆதிக்கம்.



இவையெல்லாம் வெளிப்படையாகத் தெரிந்த காரணங்கள், மீடியாவை வைத்துக் கொண்டு ஈழப் போரின் போது பொதுமக்களுக்கு செய்திகளே போய் சேராமல் தடுத்தார்கள்.



இவையெல்லாம் தெரிந்தும் தமிழகத்தின் சிறுபான்மை மதப்பிரிவினர் கிறித்துவர் மற்றும் இஸ்லாமியர்கள் ஏன் திமுக கூட்டணியை ஆதரிக்கிறார்கள் என்றால் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு (இனிமேல்) கிடைக்குமாம். கிறித்துவர்கள் சார்பில் சொல்லுகிறார்கள் ஜெ கட்டாய மதமாற்றம் தடைச் சட்டம் கொண்டு வந்தார். திமுக சிறுபான்மை காவலனாக இருப்பது இப்படித்தான். ஐந்து முறை முதல்வராக இருந்தவர் இனிமேல் தான் இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பாராம். அந்தம்மாவே போட்டு அந்தம்மாவே தூக்கிய கட்டாய மதமாற்றச் சட்டம் இன்னும் கிறித்துவர்களை பயமுறுத்துகிறதாம், அப்படி என்றால் இராமேஷ்வரம் கிறித்துவ மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் கட்டுப்படுத்துவதும், காயப்படுத்துவதும், சுட்டுப்போடுவதும் காங்கிரஸ் கூட்டணியின் அங்கமாக இருக்கும் திமுகவை ஆதரிப்பதால் சரி ஆகிவிடுமா ?





திமுக கூட்டணிக்கு அரசு ஊழியர்களின் ஆதரவாம். ஏன் என்றால் அந்தம்மா ஒரே கையெழுத்தில் ஒன்றரை லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்பியது. என் போன்றோர் கை தட்டி வரவேற்றோம். காரணம் தாம் மக்கள் ஊழியர்கள் என்ற நினைப்பே இல்லாமல் உதவிக்கு விண்ணப்பிக்க வரும் பொது மக்களை நாயிலும் கேவலமாக நடத்தியவர்கள் அரசு ஊழியர்கள். அரசு ஊழியர்கள் வீட்டுக்கு அணுப்பிய போது பொதுமக்கள் பெரிதாக எதுவும் போராடவில்லை என்பது குறிப்பிடத்தக்கத்து. அரசு வேலை நிரந்தரமானது அல்ல, தவறு செய்தால் வீட்டுக்கு அனுப்பப்படுவோம் என்கிற நினைப்பை ஜெ அரசு ஊழியர்களுக்கு ஏற்படுத்தினார், பொதுமக்களால் வரவேற்கத்தக்கது தானே.



சிறுபான்மை காவல் என்ற போர்வையில் ஒரு கட்சியை ஆதரிக்கும் நிலையை சிறுபான்மையினர் எடுப்பது, நாளை பெரும்பான்மை மதத்தினர் நாமும் ஏன் மத அடிப்படையிலேயே கட்சி ஆதரவு நிலையை எடுக்கக் கூடாது என்ற முடிவுக்குத் தள்ளிவிடும். அந்த வாய்ப்புகளுக்காகத்தான் இந்து மதவாத சக்திகளும் கூடக் காத்திருக்கின்றன.



திமுக அரசியல் மூலமாக சம்பாதித்து போதும், அந்தம்மா ஜெ தான் தற்போது பரம ஏழை :). தமிழக அரசியலில் மாற்று சக்திகள் தலையெடுக்காதவரை ஒரே கருமாந்திரத்தை தொடர்ந்து உட்காரவைப்பதைவிட கருமாந்திரத்திற்கு மாற்றான மற்றொரு கருமாந்திரத்தைத் சட்டசபைத் தலைமைக்கு அனுப்புவதன் மூலம் தொடர் கொள்ளையில் ஒரே குடும்பம் ஈடுபடுவதையாவது, சர்வாதிகரிகளாக ஆவதைத் தடுக்கமுடியும் என்கிற காரணமும் நம்பிக்கையும் வெளிப்படையானது. தற்போதைய சூழலில் திமுக கூட்டணியை வீழ்த்த அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்பதே அறிவார்ந்த மற்றும் தமிழகத்திற்கு ஓரளவு நன்மையாக அமையாவிட்டாலும் கொடுதல்களை ஓரளவு தடை போட முடியும்.



இந்தத் தேர்தலில் என்னுடைய திமுக கூட்டணிக்கான எதிர்ப்பையும், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான காரணங்களையும் நான் இங்கே பதியவைத்துவிட்டேன்.



சமூக மற்றும் தமிழுணர்வாளர்களின் நல் உணர்வுகள் இந்தத் தேர்தலில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.


****
KULALI
திமுக கூட்டணியை வீழ்த்த தேவையான டாப் 10 காரணங்கள்


http://kuzhali.blogspot.com/2011/04/10.html
 
 
 
**



Thursday, March 03, 2011

சிங்கையில் மாபெரும் பதிவர் மாநாடு -அலைகடலென திரண்டு வாரீர்!

சிங்கையில் மாபெரும் பதிவர் மாநாடு -அலைகடலென திரண்டு வாரீர்!

      முறையா முழுசா பதிவர் மாநாடு நடத்தி ரொம்ப நாள் ஆச்சு  (கொஞ்சம் கேப்  விட்டா ஆளாளுக்கு மாநாடு நடத்துறாய்க ....) , நீண்ட நாட்களுக்குப்  பின் சிங்கையில் பதிவர் மாநாடு நடைபெற உள்ளது .

நாள் : 05 மார்ச் 2011 , சனிக்கிழமை
நேரம் : மாலை 4.30 மணி
இடம் : கிழக்கு கடற்கரைப் பூங்கா - (கோமளவிலாஸ் உணவகம் பின்புறம் உள்ள கடற்கரைப் பகுதி)(கடற்கரை பகுதிதான் கூட்டத்துக்கு சரியா  இருக்கும்)

பேருந்து எண் 401 - பெடோக் பேருந்து நிலையம்


தொடர்புக்கு
 
பிரபு :0065 -91301177
 
கோவிகண்ணன் : 0065 -98767586
 
சோசப் பால்ராஜ் :  0065 -93372775

****

இடையிடையே சில சந்திப்புகள் நடந்தாலும் எல்லோரும் கலந்துகொண்ட சந்திப்பு நடந்து ரொம்ப நாள் ஆச்சு எனவே நீண்ட   நாட்களுக்கு பின் பதிவர்கள் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு ..  so..
பதிவர்கள் , வாசகர்கள், ரசிகர்கள் எல்லோரும் வாங்க ...வாங்க ... வாங்க ...


முன்னோட்டம் 


(முதல்வர் கருணாநிதி : அரசியல்வதிபோல சிரிக்கிறாங்களே ....திமுக கிட்ட ஆட்சில பங்கு கேட்பாங்களோ ..)


 (இந்த பூனையும் பால் குடிக்குமா ??)

முந்தய சந்திப்புகளில் எடுத்த புகைப்படங்கள் சில 





 ( ஹரி ,முகவை ராம் , கோவியார் )

சந்திப்பு முடிந்த பின் முடிந்ததும் மற்றவை ......


பின்குறிப்பு :
மாநாட்டுல பிரியாணி எல்லாம் கிடையாது

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...