.
காய்கறி வெட்டும் போது
கையில் காயம் பட்டதால்
காய்கறி வெட்டும் போது
கையில் காயம் பட்டதால்
கத்தியின் மீது கோபம் அவளுக்கு
வேண்டாம் பெண்ணே
"வெண்டைக்காய்க்கும் உன்
விரலுக்கும்
வித்தியாசம் தெரியாததால்
நடந்த விபத்து இது" என்றேன்
"காயம்பட்டு கஸ்டப்படுறேன்
கவிதையா உமக்கு?
நீயே சமையல் செய்யும்"-என்று சொன்னாள்
என் அழகிய ராட்சசி
அட கடவுளே?!!
பேச்சுலராய் இருந்தபோது
கற்ற வித்தை
பெண்டாட்டி வந்த பின்னும்
தொடருதே முருகா?
பெண்பார்க்கும் படலத்தில்
"பிடிச்சிருக்கா?" - என்ற கேள்விக்கு
பெண்டுலம் போல் தலையாட்டியபோதே
அவசரமாய் சொல்லியிருக்கவேண்டும்
"அலார்ட்டாய் இரு" என்று....
நிச்சயதார்த்த தினத்தில்
நீலநிற புடவையில் பார்த்து
நிலைமறந்து போனபோதே
நிருத்தி சொல்லியிருக்க வேண்டும்
"நிதானமாய் இரு"- என்று
திருமண நாளில்
தலைகுனிந்த தரிசனம் கண்டு(தாலிகட்டும் போது)
தடு
க்கி விழுந்தபோதே
க்கி விழுந்தபோதே
தட்டி எழுப்பி சொல்லியிருக்கவேண்டும்
"தயாராய் இரு" - என்று
முதல்நாள் இரவில்
முக்கால் இருட்டில்
முகம் பார்த்து மூர்ச்சையானபோதாவது
முணுமுணுத்து சொல்லியிருக்கவேண்டும்
"முழிச்சுக்கோ" - என்று
அப்போதெல்லாம் விட்டுவிட்டு
காய்கறி வெட்டும்போது
காலண்டரில் தொங்கியபடி
"நானிருக்க பயமேன்"என்று சொல்லி
என்ன பயன் முருகா????
:::::
என்றும்
பிரியமுடன் பிரபு......
.
கவிதை செம அருமை ..
ReplyDeleteஎப்படி செய்வதெல்லாம் நீங்கள் பிறகு முருகா சொல்லவில்லை என்று கூறுகிறிர்கள் ..
பாவம் அவரே ரெண்டு மனைவியிடம் சிக்கி விழி பிதுங்கிருப்பர் ..
super ya
ReplyDeletenejama chance illa
ReplyDeletearumai
அரசன் said...
ReplyDeleteகவிதை செம அருமை ..
எப்படி செய்வதெல்லாம் நீங்கள் பிறகு முருகா சொல்லவில்லை என்று கூறுகிறிர்கள் ..
பாவம் அவரே ரெண்டு மனைவியிடம் சிக்கி விழி பிதுங்கிருப்பர் ..
///\
பாவம்தான் முருகன்..:)
வருகிக்கு நன்றி
பாவா ஷரீப் said...
ReplyDeletenejama chance illa
arumai
///
நன்றி
கடைசியில்தான் சொல்லி விட்டாரல்லவா 'நான் இருக்க பயமேன்' என்று. தைரியமாக செய்யுங்கள் சமையல்
ReplyDeletepirapu neenga seiyara samaiyalai porumaiyaka sappidukinrarkale athukku innamum rendu paun nakai neenga vangi podunam.
ReplyDeleteimm nadaththunga nadathunga. ammma ippadithan veneer vaipangala?.
muruka muruka enravudan appavi muruku than smaikka aarampichutarnu ninaithen. athhuvum unmai.
ReplyDelete