Wednesday, February 17, 2010

காதல் மழை.......காதல் கதை

 


 " சீ சீ இந்த மழை விடாது போல் இருக்கே "


 " மழை ஒரு லட்சியவாதி , அதன் லட்சியம் நிறைவேறும் வரை பொழிந்து கொண்டேதான் இருக்கும் "


" ம்ம்... அப்படியென்ன லட்சியம் ? "


" உன்னை தொட்டு பார்ப்பதுதான்...!! "


" ம்ம்.. ஏற்க்கனவே ரொம்ப குளிரா இருக்கு , இதுல இந்த ஐஸ் வேறயா ? " - சிரிக்கிறாள்

" நிஜம்தான் உன்னை தொட்டுபார்க்கும் ஆசையிலத்தான் வானத்துல இருந்து பூமிய நோக்கி நெடும் பயணம் செய்யுது இந்த மழை.ஆனா அதை புரிஞ்சுக்காமா நீதான் கருப்பு குடை புடிக்கிற ,அதனால துக்கம் தாங்காம தொடர்ந்து அழுகிறது ஆனாலும் தரையில விழுந்ததும் சிரிக்கிறது ஏன் தெரியுமா?? , உன் பாதத்தையாவது தொட்டு விட்ட சந்தோசத்துலத்தான். "

" அதுக்காக என்னை மழையில நனைய சொல்லுறியா?? ஜலதோசம் பிடுச்சுக்காதா? "


" நீ நனைந்தால் உனக்கு மட்டும்தான் ஜலதோசம் பிடிக்கும் நனையாவிட்டால் ஜலத்துக்கெல்லாம் தோசம் பிடிச்சுக்காதா?? "


" ஆகா !!! ஆரம்பிச்சுட்டியா ?? இதுக்கு இந்த மழையே தேவல " - என்று கூறி குடையை தூக்கியெறிந்து விட்டு நடக்கிறாய் , குஷியில் கொட்டித்தீர்த்தது மழை


..
இது ஏற்கனவே பதிவிட்டதுதான்
இப்போ காதலர்தினத்துக்காக மீண்டும்

மேலும் சில 

இதே நாள், இதே மண்டபம்

கண்கள் இரண்டால் 

காதல் மனைவியும் காலண்டர் முருகரும்

ஆனாலும் காதலிக்கிறோம்!

என் காதலியே என் காதலியே

..........

பிரியமுடன் பிரபு ..

Friday, February 12, 2010

பிரச்சனைக்கு பின் என் தம்பி சிங்கப்பூர் வந்தாச்சு ........



                            

      கடந்த 4ம் தேதி சுற்றுலா விசா மூலம் சிங்கை வர இருந்த என் தம்பியை சென்னை விமான நிலையத்தில் “நீ வேலைக்குதான் செல்கிறாய்” என கூறி பயணம் செய்ய அனுமதிக்க வில்லை
முதல் பதிவை படிக்காதவர்கள்
http://priyamudan-prabu.blogspot.com/2010/02/blog-post.html
அங்கே சென்று படிக்கவும்

                                  நிறைய நண்பர்கள் கருத்துகளும் ஆலோசனைகளும் கூறி பின்னூட்டம் இட்டுள்ளார்கள் , அனைவருக்கும் நன்றி . நட்புடன் ஜமால் என் பதிவை ஈரோட்டில் இருக்கும் வழக்கறிஞர் எஸ்ரா இராஐசேகரன் . (அவரும் பதிவரே) http://gandhicongress.blogspot.com/ அவர்களிடம் காட்டியுள்ளார் . அவர் என்னை மின்ன்ஞ்சலில் தொடர்புகொண்டு விபரங்கள் கேட்டார் , தந்துள்ளேன்.

                                               இதற்க்கிடையில் 4ம் தேதி பயணம் தடைபட்டதும் , புதிதாக 8000 ரூபாய் செலவில் விமானசீட்டு எடுத்து 6ம் தேதி காலை 11.40 க்கு திருச்சியில் இருந்து புறப்படும் ஏர்-இண்டியன் எக்ஸ்பிரசில் பயணம் செய்து இரவு 8.30க்கு(வழக்கம் போல 40 நிமிடம் தாமதம்) வந்தார் . 

திருச்சி விமான நிலையத்திலும் வேலைக்கு செல்கிறாயா? என சந்தேக கேள்வி கேட்டுள்ளார்கள் , அங்கே எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் அதிகாரியாக பணிசெய்கிறார் , அவர் வந்து “இவர்(என் தம்பி) சுற்றுலாதான் செல்கிறார் , கண்டிப்பாக 17ம் தேதி இந்தியா திரும்புவார் அதற்க்கு நான் பொருப்பு” என உறுதி கூறிய பிறகே என் தம்பி விமானம் ஏற அனுமதிக்க பட்டார் .

                                                 சிங்கையிலும் எல்லா சுற்றுலா பயணிகளையும் விசாரித்தார்கள் , அவரிடம் எல்லாம்(விசா,கடவுச்சீட்டு, என் அடையாள அட்டை நகல்) சரியாக இருந்ததால் உள்ளே விட்டார்கள் , எல்லம் சரி என தெரிந்தும் சிங்கையில் உள்ளே விட்டு விட்டார்கள் , ஆனால் எல்லம் சரியாக இருந்தும் சென்னையில் பயணம் செய்ய விடாமல் தடுத்தது ஏன்?

                                     இந்த பிரச்சனையில் அதிக மன உளைச்சல் , தேவையில்லாமல் சென்னையில் இருந்து அவசரமாக திருச்சி பயணம், மேலும் 8000 ரூபாய் விமானசீட்டு செலவு என நாங்கள் அதிகம் பாதிக்க பட்டுள்ளோம் . நாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை , போலிவிசாவோ ,கடவுசீட்டோ(பாஸ்போர்ட்) எங்களிடம் இல்லை , அல்லது பொய்சொல்லி வேலை செய்யவும் வரவில்லை , அப்படியிருந்தும் இது ஏன்?

Friday, February 05, 2010

விமான நிலைய குழப்பம் , சிங்கப்பூர் விசா , வேலை? சுற்றுலா?



நேற்று (4ம் தேதி) இரவு 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டைகர் விமானம் மூலம் என் தம்பி சிங்கை வருவதற்காக விமானசீட்டு , விசா எல்லாம் எடுத்து தயாரக இருந்தோம் , சரியாக 3 மணிநேரத்துக்கு முன்பு (7 மணிக்கு) என் தம்பி விமானநிலையம் சென்றார்


சென்னை விமான நிலையத்தில்
செக்கின் செய்யும் வரை எல்லாம் சரியாக நடந்தது . அடுத்து இமிகிரேசன் சென்றார் . அங்கிருந்த அதிகாரி என் தம்பியின் கடவுசீட்டு,விசா,விமானசீட்டு எல்லாம் சோதித்துவிட்டு நீ எதற்காக சிங்கப்பூர் செல்கிறாய் என கேட்க ,சுற்றுலா செல்வதாக என தம்பி சொன்னார் . ஆனால் அந்த அதிகாரி “நீ வேலைக்கு செல்கிறாய்’ என்று கூறியுள்ளார் .என் தம்பி தன்னிடம் உள்ள சுற்றுலாவுக்கான விசா , மற்றும் என்னுடையா சிங்கப்பூர் நிரந்தரவாசி அடையாள அட்டையின் நகல் மற்றும் திரும்பி வருவதற்கான் விமான சீட்டு எல்லாம் கட்டி “நான் சுற்றுலாவுக்குதான் செல்கிறேன்” என்று கூறியுள்ளார். அதை அந்த அதிகாரி ஏற்க்கவில்லை . என் தம்பியின் கடவுசீட்டில் மலேசியாவுக்கான விசாவும் பதிந்து இருந்தது . அதைகாட்டி சிங்கப்பூர் சென்று அங்கிருந்து மலேசியாவுக்கு வேலைக்கு செல்வதாகவும் அந்த அதிகாரி கூற என் தம்பி குழம்பிபோனார் .
5 ம் வகுப்பு மட்டுமே படித்த என் தம்பிக்கு இது போன்ற விசயங்கள் புரியவில்லை எனவே என்னிடம் கைபேசியில் பேசினார் . நான் அதிகாரியிடம் பேச விரும்பினேன்.அவரோ பேச மறுத்துவிட்டார் . விமான நிலையத்துக்குள் செல்ல 60 ரூபாய் கட்டணம் செலுத்தி என் மாமா உள்ளே சென்றிருந்தார் . அவரும் என் தம்பியின் சார்பாக பேச முயற்சித்தார் அதற்கும் அவர்கள் அனுமதிக்கவில்லை.



அவரின் பெயர் என்ன என்று கேட்க சொன்னேன் அதற்க்கு அந்த அதிகாரி “ என்ன கேசு போட போகிறாயா , உன்னால் முடிந்த்தை செய் , இனிமே இங்க வந்தா உள்ள உட்கார வைத்து விடுவேன்” என்று மிரட்டியுள்ளார்
என்னதான் செய்யவேண்டும் என நான் என் தம்பியிடம் கேட்டபோது அவன் சுற்றுலாதான் செல்கிறான் என்பதற்காக ஒரு கடிதம் வாங்கி வா என்று அவர்கள் சொன்னதாக சொன்னான்
என்ன கடிதம் என கேட்டேன் அதை என் தம்பிக்கு சொல்ல தெரியவில்லை, அது எதோ ஆங்கில வார்த்தை அதனால் எனக்கு புரியவில்லை என்று என் தம்பி சொன்னான் . அதனால் தான் அந்த அதிகாரியிடம் நானோ , என் மாமாவோ பேச விரும்பினோம் ஆனால் அவர் அனுமதிக்க வில்லை
கடைசியாக பயணம் மறுக்க பட்டு திருப்பி அனுப்ப பட்டார்
பயணச்சிட்டுக்கு கட்டிய பணம் வீண்
எனக்கு சில சந்தேகங்கள்
சரியான முறையில் சிங்கையில் இருந்து விசா , விமானசீட்டு எல்லாம் வாங்கி , முறைப்படி பயணம் செய்ய சரியான நேரத்துக்கு விமானநிலையம் வந்தும் எங்கள் பயணம் ஏன் தடைப்பட்டது??????
சிங்ப்ப்பூரில் சுற்றி பார்த்துவிட்டு வரும் 14,15,16 தேதிகளில் மலேசியாவுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்து அதற்கான விசாவை எடுத்து இருந்தது குற்றமா??
சிங்கப்பூர் வரும் நபர் சுற்றுலாவுக்குதான் வருகிறார் என்பதை அவர் நிருபிக்க என்ன செய்யனும்??
அப்படியே ஒருவர் வேலைக்காக சுற்றுலா விசாவில் வந்தலும் அதை பற்றிய யார் கவலைபட வேண்டும்?? , சிங்கப்பூர் அரசா இல்லை இந்திய அரசா??
அப்படியே ஒருவர் வேலைக்காக சுற்றுலா விசாவில் வந்தலும் அதை சிங்கப்பூர் எப்படி ஏற்றுகொள்ளும் , சிங்கப்பூர் அதிகாரிகள் என்ன முட்டாள்களா?? இந்திய அதிகாரிகள் அறிவாளிகளா??
நேற்று இரவு 11 மணிமுதல் அதிகாலை 2 மணிவரை தொலைபேசியில் பேசிகொண்டே இருந்தேன் எந்த பயனும் இல்ல
15 ஆயிரம் ரூபாய் செலவில் பயணசீட்டு எடுத்து பயணம் ரத்து செய்யபட்டதால் எனக்கு பணம் இழப்பு ,பொருளாதார பிரச்சனையால் அதிகம் வேலை இல்லை, ஒவ்வொரு வெள்ளியையும் பார்த்து பார்த்து செலவு செய்கிறேன் எனக்கு இது பெரிய இழப்பு.
நான் இதற்க்கு என்ன செய்யலாம் ? சட்டபடியான நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பு உள்ளதா?
இரு குடிநுழைவு (இமிகிரேசன்)அதிகாரி கூடாது என்று சொல்லிவிட்டால் பயணம் செய்ய முடியாதா?
அவ்வளவு அதிகாரம் உண்டா அவர்களுக்கு?
எனக்கு குடிநுழைவு சட்டம் பற்றி அதிகம் தெரியாது , அதைபற்றி தெரிந்தவர்கள் உங்கள் கருத்தை எனக்கு பின்னூட்டம் இடுங்கள்
அதீதகோபத்தில் உள்ளதால் அதிகம் எழுத விரும்பவில்லை
மீண்டும் சந்திப்போம்
பிரியமுடன் பிரபு ........

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...