Saturday, August 02, 2008

ஆனாலும் காதலிக்கிறோம்!பனி சொட்டும் நேரம்

காலை ரோஜாவில்

ஒட்டி கொண்டிருக்கும்

பனிதுளி போல

முத்து வியர்வையுன்

முகத்தில் பூக்க

முதன் முதலாய்

பார்த்த அந்தநொடியில்

பற்றி கொண்டு

வரவில்லையடி- ஆனாலும்

காதலிக்கின்றோம்..........


கைகுட்டையளவு காகிதத்தில்

கண்டதை கிறுக்கியுன்

கை பைக்குள்

செருகியதில்லையடி- ஆனாலும்

காதலிக்கின்றோம்..............வெட்ட வெளியில் வின்பார்த்து கிடந்து

“என்னவளை விடவா நீ அழகு” – என்று

வான்மதியை

வம்புக்கிழுத்ததில்லையடி - ஆனாலும்

காதலிக்கின்றோம்..............கண்மூடி கனவில்

“அப்படிபோடு” என்று

ஆடி பாடியதில்லை - ஆனாலும்

காதலிக்கின்றோம்..............தினசரி பேருந்துநிருத்தம்

வெள்ளி- அம்மன்கோவில்

ஞாயிறு- கம்யூட்டர் செண்டர்

நீ போக - நான்

நிழலாய் தொடர்ந்ததில்லை - ஆனாலும்

காதலிக்கின்றோம்..............கரையை கொஞ்சும்

அலையின் அழகில்

கடலை ரசித்து

கடலையை

ருசித்ததில்லை - ஆனாலும்

காதலிக்கின்றோம்..............கார் மேகங்கள்

ஒன்று கூடி

மழை பூவை தூவ

ஜோடியாய் நனைந்ததில்லை - ஆனாலும்

காதலிக்கின்றோம்..............தியேட்டர் இருட்டின்

சில்மிசம் இல்லை

ஒரே பாட்டில்

இரு ஸ்ட்ரா இல்லை

பிளாசா கார்னர்

பீசாதுண்டும் இல்லை - ஆனாலும்

காதலிக்கின்றோம்..............பத்து நிமிட

பாப்கார்ன் காதலல்ல

ஐந்து நிமிட

ஐஸ்கிரிம் காதலுமல்ல


நீ அங்கே

நான் இங்கே - ஆனாலும்

காதலிக்கின்றோம்

.....
இந்த கவிதை யூத்புல் விகடனின் இனைய இதழில் வெளிவந்துள்ளது
பார்க்க இங்கே செல்லவும்...
பிரியமுடன் பிரபு . . .
...22 comments:

 1. உண்மையான காதலுக்கு கால, தூர,பொருளாதர, சமூக அந்தஸ்து ஆகிய இடைவெளிகள் ஒரு பொருட்டே அல்ல

  ReplyDelete
 2. நன்றி கோவை விஜய்

  ReplyDelete
 3. கருப்பொருள் தேர்வும், மிக எளிய வார்த்தைப் பிரயோகமும் அழகு.. வாழ்த்துகள்..

  ReplyDelete
 4. ரொம்ப நல்லா இருக்கு..

  [pls remove this word verification]

  ReplyDelete
 5. நன்றி திரு Bee'morgan

  ReplyDelete
 6. நன்றி சரவணக்குமார்

  ReplyDelete
 7. //தியேட்டர் இருட்டின்
  சில்மிசம் இல்லை
  ஒரே பாட்டில்
  இரு ஸ்ட்ரா இல்லை
  பிளாசா கார்னர்
  பீசாதுண்டும் இல்லை - ஆனாலும்
  காதலிக்கின்றோம்..............//

  நச்!

  //பத்து நிமிட
  பாப்கார்ன் காதலல்ல
  ஐந்து நிமிட
  ஐஸ்கிரிம் காதலுமல்ல//

  வித்தியாசமான சிந்தனை! வாவ்...ரொம்ப சூப்பரா இருக்கு!:)

  ReplyDelete
 8. நன்றி Thamizhmaangani
  மீண்டும் வருக

  ReplyDelete
 9. விரசமில்லாத அழகான காதல்!!

  ரொம்ப வித்தியாசமான சிந்தினையுடன் எழுதியிருக்கிறீங்க, அற்புதம் பிரபு!!

  வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 10. விரசமில்லாத அழகான காதல்!!

  ரொம்ப வித்தியாசமான சிந்தினையுடன் எழுதியிருக்கிறீங்க, அற்புதம் பிரபு!!

  வாழ்த்துக்கள்!!/////////////
  ////////////////////////////////

  உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திவ்யப்பிரியா

  ReplyDelete
 11. Hi

  We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

  Please check your blog post link here

  If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

  Sincerely Yours

  Valaipookkal Team

  ReplyDelete
 12. இந்த கவிதை யூத்புல் விகடனின் இனைய இதழில் வெளிவந்துள்ளது
  பார்க்க இங்கே செல்லவும்

  http://youthful.vikatan.com/youth/prabhupoem170209.asp

  ReplyDelete
 13. என் அருமை நண்பா
  உன் பயணம் இனிதே தொடரட்டும்
  உன் காதல் வெற்றி பெறட்டும்

  ReplyDelete
 14. என் அருமை நண்பா
  உன் பயணம் இனிதே தொடரட்டும்
  உன் காதல் வெற்றி பெறட்டும்

  ReplyDelete
 15. ///
  என் அருமை நண்பா
  உன் பயணம் இனிதே தொடரட்டும்
  உன் காதல் வெற்றி பெறட்டும்
  ///

  நன்றி பிரகாஷ்
  எனக்கு காதலி இல்லை
  நன்பர்களையே எனக்கு சரியாக தேர்வு செய்ய தெரியாது , அப்படியிருக்க நான் எப்படி காதலியை தேர்வு செய்ய?!?!?!?

  ReplyDelete
 16. Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

  இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

  நட்புடன்
  nTamil குழுவிநர்

  ReplyDelete
 17. வாவ் உங்கள் கவிதையை நான் மிகவும் ரசித்தேன்.
  உண்மையில் அற்புதமான படைப்பு!
  உண்மையான காதல் மெய் சிலிர்க்க வைக்கின்றது
  வாழ்த்துக்கள் நண்பரே...

  ReplyDelete
 18. யாழினி said...

  வாவ் உங்கள் கவிதையை நான் மிகவும் ரசித்தேன்.
  உண்மையில் அற்புதமான படைப்பு!
  உண்மையான காதல் மெய் சிலிர்க்க வைக்கின்றது
  வாழ்த்துக்கள் நண்பரே...
  ////

  நன்றி யாழினி

  ReplyDelete
 19. ஹாய்
  பிரபு அண்ணா உங்களுடைய வலைபூ அருமையாக உள்ளது . நான் தினமும் இங்கு வருவேன் ஆனால் இன்று தான் என்னால் பின்னூட்டம் இட முடிந்தது . உங்கள் கவிதை , கதை அணைத்து அருமையாக உள்ளது. நானும் வலைபூ ஒன்று தொடங்கலாம் என்று இருக்கேன் .... சூப்பர்....!

  ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...