Sunday, August 10, 2008

விகடன் விமர்சனம் - குசேலன்

(நன்றி - ஆனந்த விகடன்)

பால்ய நண்பனைப் பார்க்கத் தவிக்கும் குசேல - கிருஷ்ணனின் கதை!

சவரத் தொழிலாளியான ஏழை பசுபதியும், புகழின் உச்சியில் ஊஞ்சலாடும் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினியும் பால்யகால நண்பர்கள். தன் ஊருக்கே படப்பிடிப்புக்காக வருகை தரும் ரஜினியை, வறுமையினாலும் தாழ்வு மனப்பான்மையாலும் சந்திக்கத் தயங்குகிறார் பசுபதி. ரஜினியைச் சந்தித்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலைகள் அவரை நெருக்க, அதற்கான முயற்சிகள் ஃப்ளாப் ஆகின்றன. சந்தித்தாரா என்பதே நட்பில் நனைத்தெடுத்த க்ளைமாக்ஸ்!மலையாளத்தில் வந்த 'கத பறயும் போள்' கதையை கமர்ஷியல் கைகளால் ஆரத் தழுவியிருக்கிறார் பி.வாசு. அசோக்குமார் என்ற சூப்பர் ஸ்டாராகவே ரஜினி வருகிறார் என்பதுதான் படத்தின் மெகா ஹைலைட். சூட்டிங்கில் அவரைப் பார்க்கத் திரள்கிற கூட்டம் செய்கிற ரகளையில் ஆரம்பித்து, ஒரிஜினலான ரஜினியின் கேரக்டரைப்பற்றி அவரை விட்டே பேசவைத்தது வரை ஐடியாக்கள் ஓ.கே-தான். 'தலைவா... நயன்தாராவையே பார்க்காத... எங்களையும் பாரு தலைவா' என ரசிகர்கள் கத்த, படு ஸ்டைலாகத் திரும்பி ரஜினி செய்கிற நெளிசலான மேனரிஸங்கள் ஸ்டார் அப்ளாஸ். திரையில் இத்தனை அமைதியான ரஜினியைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு!வறுமையில் வாடும் பசுபதி எதற்கெடுத்தாலும் பயந்து குறுகி ஓடுகிற காட்சிகள் கதைக்கான டச்சிங். பள்ளிக்கூட மேடைக் காட்சி மட்டுமே படத்தின் பெரிய ப்ளஸ். இழந்த நட்பின் வலியை ரஜினி குரல் உடைந்து, கண்ணீர் வழியச் சொல்லும்போது தியேட்டரே கலங்குகிறது!ஆனால், சூப்பர் ஸ்டாராக ரஜினியே கிடைத் திருக்கிறார் என்கிற தைரியத்திலேயே பி.வாசு குஷியாகி முழு திருப்தி அடைந்துவிட்டார் போலும்! எக்கச்சக்க லாஜிக் மிஸ்ஸிங். படம் முழுக்க 'குசேலன்' பட யூனிட் என்கிற பெயர் தென்படுகிறது. ஆனால் ஒரு ஸீனில், 'அண்ணாமலை பார்ட் 2', கொஞ்ச நேரம் கழித்து, 'சந்திரமுகி பார்ட் 2' என ரீலுக்கு ரீல் ஓட்டுகிறார்கள் ஜிகினா ஃபிலிம்.ரியல் சூப்பர் ஸ்டாராக வரும் ரஜினி, ஓஷோ புக் படிக்கிறார், ஜப்பான் ரசிகர்களைச் சந்தித்துப் பேசுகிறார், தூங்கவிடாமல் டார்ச்சர் செய்ததற்காகவே, நரிக்குறவர்களைக் கூப்பிட் டுப் பேசுகிறார். மற்றபடி சாதாரண ரசிகர்களுக்கு டாட்டா காட்டுவதற்கே யோசிக்கிறார். ரசிகர் களிடம் இருந்து அந்நியப்பட்டவராக அவரைக் காட்டியிருப்பதில் ஆரம்பிக்கிறது மைனஸ். இது போதாதென்று ரஜினியின் இமேஜைக் கண்ட மேனிக்குப் பொலி போட்டுப் பொங்கல் வைத்திருக்கிறார்கள். ஆர்.சுந்தர்ராஜன் பர்சனலாக வீசும் கேள்விகளுக்கு ரஜினி சொல்லும் பதில்கள், 'வெண்டைக்காய் பந்தலில் வேப்பெண்ணெய் மழை பெய்த' மாதிரி சூப்பர் மழுப்பல்... சுத்த சொதப்பல்!'அதெல்லாம் வசனகர்த்தா எழுதிக் கொடுத்தது. டைரக்டர்ஸ் உருவாக்கினது. அதை நான் பேசினதா நினைச்சா, அது உங்க தப்பு!' என்று இதுவரை தான் அடித்த வரலாற்றுப் புகழ் 'பன்ச்'கள் பற்றி விளக்கம் சொல்லி, ரசிகர்களுக்கு ஞானோதயம் ஏற்படுத்தியதற்காக ரஜினியைப் பாராட்டலாம்!பசுபதிக்கும் ரஜினிக்கும் இடையேயான நட்பின் அழுத்தத்தைப் புரியவைக்க... படத்தில் க்ளைமாக்ஸ் வரையில் ஒரு சாம்பிள்கூட இல்லாததால், ஊர் மக்களோடு சேர்ந்து நமக்கும், பசுபதி புருடா விடுகிறாரோ எனத் தோன்றுகிறது. பசுபதியின் வறுமையையும் இயல்பாகச் சொல்லாததால், கதையோடு நம்மால் ஒன்ற முடியவில்லை. ஏழை பசுபதியின் மனைவி மீனா, அபார்ட்மென்ட் ஆன்ட்டி மாதிரி இருக்கிறார். குழந்தைகளும், சர்ச் பார்க்கில் படிக்கிற தோரணையில் இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ஆர்வத்தில் கன்னியாஸ்திரீகள் சீரியல் வில்லிகள் மாதிரி நடந்துகொள்வது, பக்கத்து வீட்டு முஸ்லிம் குடும்பம் மட்டன் பிரியாணி தந்து ஐஸ் வைப்பது என்பது மாதிரி நிறைய இடங்கள், அமெச்சூர் டிராமா! அல்லது, பாத்திரப் படைப்புகள் காமெடியா சீரியஸா என்று புரியவைப்பதில் ஏற்பட்ட சறுக்கல்.படத்தின் நிஜமான ஹீரோ பசுபதி. அந்த பாவமான பார்வை காரணமாக 'வெயில்' பசுபதி இடைஇடையே ஞாபகத்துக்கு வந்தாலும், தாழ்வு மனப்பான்மையோடு குழந்தைகளைக்கூட எதிர்கொள்ள முடியாமல் தவிப்பதிலும், க்ளைமாக்ஸில் மேடையில் பேசும் ரஜினிக்கு நிகரான உணர்ச்சிக் கொந்தளிப்போடு உருகுவதிலும் அத்தனை நெகிழ்ச்சி.நயனுக்கு ஸோலோ சாங் வைக்கப் பிடிச்சாங்களே ஒரு சிச்சுவேஷன்... சும்மா கணக்கு காட்டத்தான் உதவி இருக்கிறது.ரஜினியைப் பார்த்து ஆனந்த அதிர்ச்சியில் அரற்றும் லெவலில், வடிவேலுவின் காமெடி ஏரியா கச்சிதம். ஒளிந்து நயன்தாராவை ரசிக்கும் காட்சியில், கேமராவின் கோணம் காமெடி ரசத்தை காமரசமாக்குவதுதான் உறுத்தல். லிவிங்ஸ்டன் குரூப், சந்தானம் அடிக்கிற லூட்டிகளில் ஆங்காங்கே கிச்சுகிச்சு.பசுபதியின் வீட்டில் தொடங்கி ரஜினியின் கெஸ்ட் ஹவுஸ் வரை படம் முழுக்க செயற்கை செட்டுகள்... பத்தாக்குறைக்கு லிவிங்ஸ்டன் குரூப்பில் ஆரம்பித்து பல பாத்திரங்களில் எக்கச்சக்க செயற்கை.'ஓம் சாரிரே...', 'செல்லம்' பாடல்களில் ஜி.வி.ப்ரகாஷ்குமார் ஹாய் சொல்கிறார். பின்னணி இசையில் அவர் தேற்றிக்கொள்ள நிறைய இருக்கிறது. பசுபதியின் வறுமையைக் காட்டுவதிலும், ரஜினியின் செழுமையைக் காட்டுவதிலும் அரவிந்த் கிருஷ்ணாவின் கேமரா அத்தனை அழகு. அதுவும் அவுட்டோர் இடங்களில் கலர் மேஜிக் செய்திருக்கிறார்.ரஜினியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்கிற குழப்பத்தில் கதையின் இயல்பைத் தொலைத்து விட்டார்கள். அதனால் படம்,கம்பீர மான யானையைக் கடைவீதிக்கு அழைத்துச் சென்ற கதையாகி விட்டது!

மதிப்பெண்

39/100

8 comments:

 1. அப்படியே இந்த படம் வருவதற்கு முன் விகடன் ஏற்படுத்திய பில்டப்புகள் என்னென்ன, அதற்கும் படத்திற்கும் ஏன் எந்த சம்பந்தமும் இல்லை என்று விகடன் விளக்கியிருந்தால், அந்த பத்திரிக்கையின் மீது ஒரு மரியாதை வந்திருக்கும்.

  நியூஸ் கெடச்சிது, போடுறோம் என்று கூட அவர்கள் சொல்ல முடியாது. ஏனெனில் மியாவ், கழுகு, ஆந்தை இன்ன பிற விலங்குகள் (கேஸ் போடாதுங்கல்ல!) பெயரில் இவர்களே எழுதிய செய்திகளே அதிகம்.

  குறிப்பாக சில வாரங்களுக்கு முன் வந்த பீ.வாசுவின் பேட்டி. அவர் சொல்லியிருப்பது அல்லது சொன்னதாக இவர்களே கொடுத்த தலையங்கம், "குசேலன் பாத்து ஷங்கர் டென்ஷன் ஆகனும்".

  உண்மையில், பீ.வாசு‍ ரஜினி கூட்டணி மீண்டும் சாதித்திருக்கிறது. படத்தை பார்த்து ஷங்கர் மட்டுமல்ல, மற்றும் பல லட்சம் பேருக்கு டென்ஷன்! குறிப்பாக 100% ரஜினி படம் என்று பில்டப்பை நம்பி படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களும், டிக்கட் வாங்கி படம் பார்த்த பொது ஜனமும்! ஷங்கரும் கூட உச்ச பட்ச டென்ஷனில் இருப்பதாக கோலிவுட் குருவிகள் சொல்கின்றன.

  ரஜினி கன்னட மக்களிடம் மன்னிப்பு ச்சீச்சீ வருத்தம் கேட்ட பிறகு, அவரது மீதான மதிப்பு தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்துவிட்டதாக(!!) தெரிகிறது. இந்த ரீதியில் போனால, ரோபோ விளம்பர செலவை(யாவது) வசூல் செய்யுமா என்று ஷங்கர் பீதியில் இருப்பதாக அவரது அல்லக்கைகள் தெரிவிக்கிறார்கள்.

  ReplyDelete
 2. இடை இடையே கலர் அடிச்சிருக்கீங்களே அது எதுக்கு??? ஆனா //கம்பீர மான யானையைக் கடைவீதிக்கு அழைத்துச் சென்ற கதையாகி விட்டது!// - பிச்சையெடுக்க..என்பது நூறு சதம் உண்மை..

  ReplyDelete
 3. சீக்கிரம் வந்து ஜோதில ஐக்கியம் ஆகுங்க
  புதுகைச் சாரல்
  http://mohideen44.blogspot.com

  ReplyDelete
 4. /////////////
  அப்படியே இந்த படம் வருவதற்கு முன் விகடன் ஏற்படுத்திய பில்டப்புகள் என்னென்ன, அதற்கும் படத்திற்கும் ஏன் எந்த சம்பந்தமும் இல்லை என்று விகடன் விளக்கியிருந்தால், அந்த பத்திரிக்கையின் மீது ஒரு மரியாதை வந்திருக்கும். //////////////////////
  பத்திரிக்கை நடத்துவதே வயிற்று பிழைப்புக்குத்தான்.கவர்ச்சி படம் போட்டு வியபாரம் செய்யும் அவர்கள் யாரையும் விமர்சிக்க தகுதியற்றவர்கள்

  ReplyDelete
 5. வங்துட்டே.......................ன்

  (அதுசரி மற்றும் சின்னவெங்காயம்(?) உங்கள் வெருகைக்கு நன்றி

  ReplyDelete
 6. ///////////
  சீக்கிரம் வந்து ஜோதில ஐக்கியம் ஆகுங்க
  புதுகைச் சாரல்
  /////////////////////
  வங்துட்டே.......................ன்

  (அதுசரி மற்றும் சின்னவெங்காயம்(?) உங்கள் வெருகைக்கு நன்றி

  ReplyDelete
 7. ////////////
  இடை இடையே கலர் அடிச்சிருக்கீங்களே அது எதுக்கு??? /////////////

  சும்மா
  உங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...