Monday, September 26, 2011

ஸ்வீட் எடு கொண்டாடு...(புகைப்படங்கள்..)






***

தனிமை என்னை வாட்டுது வாடி ...
எழுதி முடித்த கவிதைகள் கோடி..
இனியும்.. தாமதம்... ஏனடி ....
http://priyamudan-prabu.blogspot.com/2011/09/blog-post_19.html  -

இப்படி ஒரு பதிவிட்டால் எல்லோரும் துக்கம் விசாரிக்கிறாங்க... இல்லாட்டி மனைவி ஊர்ல இல்லையான்னு கேட்குறாங்க...அதுக்குத்தான் இப்ப ஸ்வீட் எடு கொண்டாடு... ( டோன்ட் வொரி பி ஹாப்பி ...)

என்றென்றும்
பிரியமுடன் பிரபு ... :)

Monday, September 19, 2011

தனிமை...(புகைப்படம்)



தனிமை என்னை வாட்டுது வாடி ...
எழுதி முடித்த கவிதைகள் கோடி..
இனியும்.. தாமதம்... ஏனடி ....



என்றென்றும்
பிரியமுடன் பிரபு.. --

Tuesday, September 13, 2011

பாசமான பாட்டிக்கு...(படித்ததில் பிடித்தது)

பாசமான பாட்டிக்கு...

(Thanks to Naufal http://www.flickr.com/photos/mqnaufal/3880951092/ )



ஆசையா வளர்த்தவளே
மூனாங்கிளாசு படிக்கையில
முன்னாடியே கட்டிக்கொடுத்தா
மிச்சம் கிச்சம் வச்சுபுடுவேன்னு
மூணுவேள சோறும் ஊட்டிவிட வருவ


வெட்கம் விட்டு
சொல்லுறேன்
வத்தக் குழம்பு சாப்பிட்டு
வருஷக்கணக்காகுது
மணத்தக்காளி சாப்பிட்டு
மாசக்கணக்கு ஆகுது
நல்ல காப்பி குடிச்சே
நாலு நாளு ஆகுது


உலையில அரிசிபோட கத்துக்கோ
ஒத்தாசையா இருக்கும்னு
சொன்னதா ஞாபகம்
ஒரு நாளு பசியில
உலையில சோறு வைக்க
வந்த சாதம்
வேகாத கதை சொல்லவா
வெந்து போன
விரலோட வினையச் சொல்லவா
வகையா வந்த கஞ்சிய
குடிச்ச விஷயம் சொல்லவா


பத்து மணி ரயிலுக்கு
ஆறு மணிக்கே நீ வருவ
பத்து நிமிஷம் தாமதம்னா
பதறிப்போவ
விமானத்துல போறேன்
வெளிநாடு போறேன்
விடிய விடிய நானும்தான்
வேலைக்கும் போறேன்
விடிஞ்சு வரும் போது
விழுந்ததும்
நான் துடிச்சதும்
ரெத்தம் வழிஞ்சதும்
தண்டவாளதுக்கு
மட்டுந்தான் தெரியும்


அஞ்சு மணிக்கு
எழுந்தரிச்சு
அரக்க பறக்க சமைச்சு
அக்கா தங்கச்சி
சண்டையெல்லாம்
சமாளிச்சு
என்
ஆறடி முடிய
சிக்கெடுத்து சீவி
அரைமுழ
ரிப்பன் கட்டி
அனுப்பிவச்ச

ஆறடி முடி இப்ப
அரையடி ஆச்சு
அதை சீவாம
இருப்பதே
பேஷனா
போச்சு

சொர்கத்து பாட்டிக்கு
சொப்பனத்துலேயே
கடுதாசி எழுதற
இந்த பேத்திக்கு
இன்னும்
ஒரே ஒரு ஆசை பாக்கி

முழுகாம இருக்கறேன்
மூணு மாசம் ஆச்சி
கத்திரி போட்டு கிழிச்சாலும்
கத்தி வலிச்சு பிரசவிச்சாலும்
ரெத்தின வாக்கு
மாறாம
முத்து முத்தா
என் வயித்துல
வந்து
புறந்திடு தாயி
-
-கவிஞர் வே.பத்மாவதி


..

Tuesday, September 06, 2011

எல்லைச் சாமி ....




எல்லைச் சாமி .... 


ஊர் எல்லை
புளியமரம் கடக்கும் முன்
மறைவில் இருந்து வந்த அவன்
கத்தியை காட்டி மிரட்டையில
"அப்பே ..ஆத்தா.." - ன்னு
அவ கத்தின குரலு
அடுத்த ஊருக்கே கேட்டுச்சே .....
அங்கனயே அரிவாளோடு நிக்கும்
உனக்கு ஏனோ கேட்கலையே...



.
பிரியமுடன் பிரபு......

Friday, September 02, 2011

ஒண்டிக்கட்டையின் "கொழுக்கட்டை புலம்பல்கள்"



விநாயகர் சதுர்த்திக்கு எல்லோரும் கொழுக்கட்டை சாப்பிடுகிறார்களாம் அங்கே ...ம்ம்ம்ம் சாப்பிட்டு 10 வருஷம் ஆச்சு ...





என் புலம்பல்கள் கீழே

***
இனிமேல் கொழுக்கட்டை பற்றி பஸ் விடுபவர்கள் எங்களை போன்ற ஒண்டிக்கட்டைகளுக்கு கொழுக்கட்டை யை அனுப்பி வைக்கவும்....
# கடுப்பேத்துறாங்க மைலார்ட் ...

***
கைபேசியில் ஊட்டி விட்டால் கொழுக்கட்டை ருசியும் தெரியாது என் பசியும் ஆராது...

# இதையெல்லாம் காதலி(கள்) புரிந்துகொள்(ல்)வதேப்போது ?
# என்னமோ போ விநாயகா ...
 ...

****

விநாயகர் சதுர்த்தியை புறக்கணிக்கிறோம் ....

இப்படிக்கு
கொலுக்கட்டை கிடைக்காதோர் சங்கம்
சிங்கப்பூர் கிளை

...

from friends

 வைகை வி - Buzz -
ஊரு உலகத்துல பத்து பதினஞ்சு கொழுக்கட்ட தின்கிறவனுங்க எல்லோரும் சந்தோசமா திங்கிறாங்க... ஆனா ஒரு கொழுக்கட்டய ஓசில திங்கிறதுக்குள்ள நான் பட்ற பாடு இருக்கே... அய்அய்அய்ய்ய்ய்ய்ய்ய்​யோ.... # இன்னும் ஒண்ணுகூட கிடைக்கல யுவர் ஹானர் :((

****

கந்ததாசன் ப்ளஸ் - Buzz -

கொழுக்கட்டையே கொழுக்கட்டையே ஏ(ன்) வேகல?
மழயும் பேஞ்சிச்சு நா வேகல
மழயே மழயே ஏம் பேஞ்சிங்க?
புல்லு மொளைக்க நாம் பேஞ்சேன்
புல்லே புல்லே ஏம் மொளச்சிங்க?
மாடு திங்க நா மொளச்சேன்
மாடே மாடே ஏந் தின்னீங்க?
பாலு கறக்க நாந் தின்னேன்.
பாலே பாலே ஏங் கறந்தீங்க?
பால்காரர் கறந்தார் நா கறந்தேன்.
பால்கார்ரே பால்கார்ரே ஏங் கறந்தீங்க?
அம்மா சொன்னாங்க நாங் கறந்தேன்.
அம்மா அம்மா ஏஞ் சொன்னீங்க?
பாப்பா அழுதுச்சு நாஞ் சொன்னேன்.
பாப்பா பாப்பா ஏ அழுதீங்க?
எறும்பு கடிச்சுச்சு நா அழுதேன்.
எறும்பே எறும்பே ஏங் கடிச்சீங்க?
எங்க புத்துக்குள்ள கைய வுட்டா சும்மாருப்பமோ?

..

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...