Tuesday, December 22, 2009

இது மரணம் சம்பவித்த வீடு ...







இது மரணம் சம்பவித்த வீடு
சுற்றமும் சூழமும்
சோகத்தோடு நிற்க
அழுதுகொண்டிருக்கிறார்கள் - என்
அன்பு மனைவியும் மகளும்
கலங்கி நிற்கிறான் மகன்
அள்ளி அணைத்து
ஆறுதல் மொழி சொன்னேன்
வாழநாளெல்லாம் காட்டாத அன்பை
காட்ட முயன்றேன் - ஆனால்
என் மொழி புரியவில்லை அவர்கட்கு
வேறு என்ன செய்ய முடியும்
கண்ணாடி பெட்டிக்குள் கிடக்கும் என்னால் ?!?!?




(என்னவோ எழுதியிருக்கேன் , மீதிய நீங்களே சொல்லுங்க)
என்றென்றும் பிரியமுடன் பிரபு ..

http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=6927


 http://www.tamilauthors.com/03/116.html

..

Saturday, December 12, 2009

காணவில்லை ...




காணவில்லை காணவில்லை
என்னுள் என்னை காணவில்லை

தேகம் தீண்டிய
தென்றலே திருடினாயா?
மோகம் கொண்ட
மேகமே திருடினாயா?

பட்டாம்பூச்சியே - நீ
திருடினாயா?
பாவேந்தர் பாட்டே - நீ
திருடினாயா?

அன்னை முந்தானையில்
முகம் மறைத்த
குழந்தை போல-மேகத்தினுள்
முகம்மறைத்த நிலவே - நீ
திருடினாயா?

வயதுக்கு வந்த
பெண்னை போல
செழித்து நிற்க்கும்
வயல் வெளியே - நீ
திருடினாயா?

Friday, December 04, 2009

என்னையே கோவிலுக்குள் விடவில்லை !!!

ஒரு ஊர்ல (புரிஞ்சிருக்குமே நான் கதை சொல்ல பேறேன்னு) ஒரு இளைஞன் இருந்தான் , ஒரு நாள் அவன் கோவிலுக்கு செல்ல ஆசைப்பட்டு புறப்பட்டான். ஒரு கீழ்சதிகாரன்(மநுதர்மபடி) கோவிலை நோக்கி வருவதை கண்ட அந்த கோவில் அர்ச்சகன் அவனை வாசலிலேயே தடுத்து நிறுத்தினார்.

அர்ச்சகன்- ''என்ன் வேண்டும்"

இளைஞன்- - "நான் கோவிலுக்குள் போகனும்"

அர்ச்சகன்-- "அதெல்லாம் முடியாது" -

இளைஞன்- - "ஏன்" - சற்று கோவமாக கேட்டான்

நல்ல கடின உழைப்பாளி , கட்டுமஸ்த்தான உடம்புகாரரான அந்த இளைஞனை பார்த்த அந்த அர்ச்சகனுக்கு,எங்கே ஏதாவது சொல்லி அடித்துவிடுவானோ என்று பயம் வந்தது எனவே யோசிதார் பிறகு
"ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு விதி இருக்கு , அதுபோல கோவிலுக்குள் வரனுமுன்னா சில மந்திரங்கள் தெரிந்திருக்கனும்"- என்று சொல்கிறார்
அதைகேட்ட இளைஞன் நானும் கற்றுகொள்கிறேன் என்று சொல்ல
வேறு வழியின்று வாயில் நுழையாத புரியாத மொழியில் எதையோ சொல்லி இதுதான் அந்த மந்திரம் இதை கற்றுவந்து சொல் பின்னர் கோவிலுக்குள் போகலாம்" என சொல்கிறார் அர்ச்சகன் . ஆசையாக கோவிலுக்குள் போக வந்த அந்த இளைஞன் ஏமாற்றத்துடன் திரும்பினான். அர்ச்சகனும் நிம்மதியடைந்தான்.

சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த இளைஞன் கோவிலை நோக்கி வருவதி கண்ட அர்ச்சகன் "எங்கே அந்த இளைஞன் மந்திரத்தை கற்றுகொணுவிட்டானோ??! ,அதை சொல்லி கோவிலுக்கு வருவேன் என்று சொன்னால் என்ன் சொல்லி சமாளிப்பது???!? " என்று யோசித்தார். வழக்கம் போல வாசலிலேயே இளைஞனை நிறுத்தி விசாரிதான்

"பயப்படாதிங்க நான் கோவிலுக்குள் போக வரலை" என்று அந்த இளைஞன் சொல்ல அர்ச்சகன் குழம்பினான்

"நான் இனிமே கோவிலுக்கு வரமாட்டேன் என்று சொல்லத்தான் வந்தேன்" என்றான், அர்ச்சகனுக்கு ஆச்சர்யம்

அந்த இளைஞன் தொடர்ந்தான் "அன்று கோவிலுக்குள் போக முடியலையே என்று வருத்ததோடு வீட்டுக்கு போனேன் ,மிகவும் சோகமாக இருப்பதை கண்ட கடவுள் என் எதிரே வந்தார் " ஏன் சோகம் என் கேட்டார்" , நானும் நடந்ததை சொன்னேன் அதற்க்கு கடவுள் சிரித்துகொண்டே சொன்னார் " இதற்க்கா வருத்த படுகிறாய் ,அவர்கள் என்னையே கோவிலுக்குள் விடுவதில்லை உன்னை எப்படி விடுவார்கள் ,நானே வருத்த படவில்லை நீ ஏன் வருத்த படுகிறாய்?? " என்று கேட்டார் , அதனால் தான் அவர்(கடவுள்) இல்லாத இந்த இடத்துக்கு இனி நான் வரமாட்டேன்னு சொல்லவந்தேன் என்று சொல்லிவிட்டு அந்த இளைஞன் திரும்பிசென்றான்
(எங்கேயோ படித்த கதை)

.....

பிரியமுடம் பிரபு : தாத்தா அந்த இளைஞன் "ஆத்திகனா?" "நாத்திகனா?"
கொள்ளுதாத்தா : தெரியலயே பேரான்டி

........
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறார் ,
அவர் கருனையுள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறார்
.......


Hi priyamudanprabu,

Congrats!

Your story titled 'என்னையே கோவிலுக்குள் விடுவதில்லை' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 5th December 2009 10:24:01 AM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/148105

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

////

ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி
.
.
.

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...