Sunday, March 08, 2009

நாய்களைக் கண்டால் பயம் எங்களுக்கு




அழகான இரவொன்றின்
அமைதி குலையும்படி
எங்கள் குடியிருப்பின்
வடக்குப் பகுதியிலிருந்து - சில
தெரு நாய்கள் குரைத்தது

எல்லா நாய்களைப் போல
லொல் லொள் என்றில்லாமல்
மதம் மதம் என்று அது குரைத்தது

" இது நாய்களிலே ஒரு
பைத்தியக்கார  நாய் " - என்று
எண்ணினோம் நாங்கள்

நாட்கள் நகர நகர
நாய்களின் எண்ணிக்கை
அதிகமானது - ஆம்
பக்கத்து குடியிருப்பில் இருக்கும்
பக்குவமில்லாத மனிதர்கள் சிலரும்
நாயாக மாறியிருந்தார்கள்


ஆம்
இந்த நாய்களின்
மதம் மதம் என்ற மந்திர சப்ததிற்க்கு
அப்படியொரு சக்தி


காதுகொடுத்துக் கேட்போரையெல்லாம்
மயக்க நிலைக்குத் தள்ளி
நாய்களாய் மாற்றிவிடும்


இப்போ
மதம் மதம் எனற சப்தம்
சற்று அதிகமகவே கேட்கிறது


நாக்கை தொங்கவிட்டபடி
கூர்பற்களை காட்டும் அந்த
நாய்களை கண்டு

மனிதர்களாகிய எங்களுக்கு பயம்
அவற்றை அடித்து விரட்ட
ஆசைதான் - ஆனால் எங்களையும்
கடித்து விடுமோ என்ற பயம்


மதம் மதம் என்று
குரைத்துக்கொண்டே தங்களுக்குள்ளாக

அவைகள் அடித்து கொள்கின்றன


தெருவில் நடக்கவே
பயமாக உள்ளது எங்களுக்கு



இன்னும்
மதம் மதம் என்ற சப்தம்
கேட்டுகொண்டே இருக்கிறது
மிக அருகில் , மிக அதிகமாக கேட்கிறது


பயம் அதிகமாக உள்ளது
பக்குவப்பட்டவர்கள் குறைவாக உள்ளனரோ ?!?- என்று
பயம் அதிகமாகவே உள்ளது


சப்தம் கேட்டுகொண்டே இருக்கு
மதம்.. மதம்.. மதம்..
.


http://www.vaarppu.com/view/1740/


என்றும்
பிரியமுடன் பிரபு......


 

50 comments:

  1. நாய்`குட்டி` கவிதையா???

    ReplyDelete
  2. நல்லா இருக்கு

    ReplyDelete
  3. வாக்கு முக்கியம்! உடனே, உங்களுக்கு தமிலீசு வாக்கும், தமிழ்மண வாக்கும், இந்தியத் தேர்தல் வாக்குந்தான் ஞாவகத்துக்கு வருமா?

    கொடுத்த வாக்கும், வாங்கின தாக்கும் மறக்கப் படாது!

    தாக்கு = உத்தரவு
    தாக்கீது = உத்தரவுச் சான்று

    ReplyDelete
  4. //எல்லா நாய்களை போல
    லொல் லொள் என்றில்லாமல்
    மதம் மதம் என்று அது குரைத்தது//


    மதம் பிடித்தவர்களின் மனநிலையை என்னவென்று சொல்வது பிரபு ?

    ReplyDelete
  5. அருமையான விதத்தில் சொல்லியிருக்கின்றீர்கள்

    உண்மையில் நீங்கள் சொல்லிய வித்தத்தை மிகவும் இரசித்தேன் ...

    மதம் என்பது விலகவே விலகாது

    அது சரியா தவறா என்ற விவாதத்திற்குள் நான் வரவில்லை, ஆனால் அது இறுக்கும்(நம்மையும்).

    குலைக்கும் நாய்கள் கடிக்காமல் இருந்தால் போதும், நாய்கள் குலைக்கத்தான் வேண்டும், அவைகளின் பயம் அவைகளுக்கு

    ரொம்ப நல்லாயிருக்கு பிரபு

    --- பிரியமுடன் ஜமால்.

    ReplyDelete
  6. நல்லா இருக்கு

    ReplyDelete
  7. நல்ல இருக்கு பிரபு!
    வித்தியாசமா யோசிச்சி எழுதி இருக்கீங்க...!

    ReplyDelete
  8. குலைக்கிற நாய் கடிக்காது...வெறிகொண்ட நாய் கடிக்காமல் விடாது....எது எப்படியோ நாயை குளிப்பாட்டு நடு வீட்டில் வைக்ககூடாது....

    நான் நாயை பற்றி மட்டும் சொல்லேலை...:-))

    அருமையான படைப்பு பிரபு :-)

    ReplyDelete
  9. உங்களையும் ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருகிறேன்,எனது பதிவினை பார்கவும்.முடிந்தால் எழுதுமாறும்,முடியாவிட்டாலும் எழுதுமாறும் உரிமையுடன் அழைக்கிறேன்

    நண்பன் கவின்

    ReplyDelete
  10. பிரபு நல்லா இருந்திச்சு உங்க எழுத்து
    நாய் குட்டி கவிதை ச்சோ ஸ்வீட் !!!

    ReplyDelete
  11. //
    ’டொன்’ லீ கூறியது...
    குலைக்கிற நாய் கடிக்காது...வெறிகொண்ட நாய் கடிக்காமல் விடாது....எது எப்படியோ நாயை குளிப்பாட்டு நடு வீட்டில் வைக்ககூடாது....

    நான் நாயை பற்றி மட்டும் சொல்லேலை...:-))

    அருமையான படைப்பு பிரபு :-)

    //


    REPEEEEEEEEEEEEETAI

    ReplyDelete
  12. //எல்லா நாய்களை போல
    லொல் லொள் என்றில்லாமல்
    மதம் மதம் என்று அது குரைத்தது
    //

    வித்தியாமான கோணத்தில் சிந்த்தித்து இருக்கின்றீர்கள்
    மேன்மேலும் உங்கள் எழுத்து சிறக்க இந்தச்
    சகோதரியின் வாழ்த்துக்கள் தம்பு


    ஆமா உங்க மற்றொரு பதிவுலே ஒரு கமெண்ட் படிச்சேன்.

    அது நிஜமா, செக் பண்ணினீங்களா??

    சரி நான் பார்க்கறேன் !!

    ReplyDelete
  13. ////
    கவின் கூறியது...
    நாய்`குட்டி` கவிதையா???
    ///

    ஆமாம்

    ////
    கவின் கூறியது...
    நல்லா இருக்கு
    ///

    நன்றி கவின்

    ReplyDelete
  14. //
    தாக்கு = உத்தரவு
    தாக்கீது = உத்தரவுச் சான்று//

    வருகைக்கு நன்றி பழமைபேசி

    ReplyDelete
  15. ///
    மதம் பிடித்தவர்களின் மனநிலையை என்னவென்று சொல்வது பிரபு ?
    /////

    சொன்னாலும் புரியாது
    நன்றி சாந்தி

    ReplyDelete
  16. ///
    நட்புடன் ஜமால் கூறியது...
    அருமையான விதத்தில் சொல்லியிருக்கின்றீர்கள்

    ///

    நன்றி ஜமால்

    ReplyDelete
  17. ///
    நசரேயன் கூறியது...
    நல்லா இருக்கு

    ///

    நன்றி நசரேயன்

    ReplyDelete
  18. //
    நிஜமா நல்லவன் கூறியது...
    நல்ல இருக்கு பிரபு!
    வித்தியாசமா யோசிச்சி எழுதி இருக்கீங்க...!
    //
    நன்றி நல்லவன்

    ReplyDelete
  19. ///
    ஜோதிபாரதி கூறியது...
    நல்ல சிந்தனை!
    ////

    நன்றி ஜோதி பாரதி

    ReplyDelete
  20. ///
    நான் நாயை பற்றி மட்டும் சொல்லேலை...:-))
    ////

    நானும் நாயை பற்றி மட்டும் சொல்லலை

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  21. ///
    உங்களையும் ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருகிறேன்,எனது பதிவினை பார்கவும்.முடிந்தால் எழுதுமாறும்,முடியாவிட்டாலும் எழுதுமாறும் உரிமையுடன் அழைக்கிறேன்
    ///

    கண்டிப்பா எழுதுகிறேன் கவின்

    ReplyDelete
  22. ///
    RAMYA கூறியது...
    பிரபு நல்லா இருந்திச்சு உங்க எழுத்து
    நாய் குட்டி கவிதை ச்சோ ஸ்வீட் !!!

    ////

    நன்றி ரம்யா

    ReplyDelete
  23. ////
    ஆமா உங்க மற்றொரு பதிவுலே ஒரு கமெண்ட் படிச்சேன்.

    அது நிஜமா, செக் பண்ணினீங்களா??

    சரி நான் பார்க்கறேன் !!
    ////

    எதை பற்றி சொல்கிரீர்கள்
    எனக்கு புரியவில்லை

    ReplyDelete
  24. நல்லா இருந்திச்சு பிரபு, வாழ்த்துக்கள் .
    மனசாட்சிக்கு விரோதமாக நடக்காமல் இருந்தாலே போதும், எந்த மதமும் தேவை இல்லை.
    .

    ReplyDelete
  25. ////
    kunthavai கூறியது...
    நல்லா இருந்திச்சு பிரபு, வாழ்த்துக்கள் .
    //////
    நன்றி அக்கா


    /////
    மனசாட்சிக்கு விரோதமாக நடக்காமல் இருந்தாலே போதும், எந்த மதமும் தேவை இல்லை.

    //////


    அதே அதே

    ReplyDelete
  26. அருமையான கவிதை நண்பரே.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. ///
    கார்த்திகைப் பாண்டியன் கூறியது...
    அருமையான கவிதை நண்பரே.. வாழ்த்துக்கள்.

    ////


    நன்றி கார்த்தீகை பாண்டியன்

    ReplyDelete
  28. மதம் என்பது கோவிலைப் போன்றது.

    மனிதர்கள் செருப்பைக் கழற்றி வைத்துவிட்ட்டுத்தான் உள்ளே செல்லவேண்டும். செருப்புடன் செல்பவர்களுக்கு பக்தர்கள் என்று பெயரில்லை.... நீங்கள் குறிப்பிட்ட பெயர்தான்..

    நாய்கள் நன்றியுடையவை... அவற்றை மதவெறியர்களோடு ஒப்பிட்டு நாய்களைக் கேவலப்படுத்தாதீர்கள்...

    கவிதை மிக அருமை!!! வாழ்த்துக்கள் பிரபு

    ReplyDelete
  29. நல்லா இருக்கு பிரபு, நான் 'ஜாதி' நாய்கள் பற்றி எழுதி இருக்கிறேன். நீங்கள் மத நாய்கள் பற்றி சொல்லி இருக்கிங்க. அருமை

    ReplyDelete
  30. ////
    கோவி.கண்ணன் கூறியது...
    நல்லா இருக்கு பிரபு, நான் 'ஜாதி' நாய்கள் பற்றி எழுதி இருக்கிறேன். நீங்கள் மத நாய்கள் பற்றி சொல்லி இருக்கிங்க. அருமை
    /////



    மதத்தின் பிள்ளைதானே ஜாதி

    ReplyDelete
  31. இன்றுதன் உங்கள் பக்கம் வருகின்றேன்... நல்லா இருக்கு பிரபு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  32. எனக்கும் இந்த மதம் நாய்கள் மேல் ஒரு பயம் வந்துகொண்டே இருக்கும்...

    ReplyDelete
  33. ///
    ஆ.ஞானசேகரன் கூறியது...
    இன்றுதன் உங்கள் பக்கம் வருகின்றேன்... நல்லா இருக்கு பிரபு வாழ்த்துக்கள்...

    ./////


    நன்றி ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  34. நல்லா இருக்கு

    ReplyDelete
  35. ARUMAYAANA VARIGAL... KAVIGNARE....
    KARUTHAALAMUM THAAN..

    VAAZHTHUKKAL :))))


    EN VALAIPOO PAKKAM ETTIPPAARTHU...
    KARUTHTHURAI PARISU THANTHAMAIKKUM NANDRI NADRI NADRI....

    PRIYAMUDAN
    DYENA

    ReplyDelete
  36. நன்றி காயத்ரி

    ReplyDelete
  37. ///
    Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் கூறியது...
    ARUMAYAANA VARIGAL... KAVIGNARE....
    KARUTHAALAMUM THAAN..

    VAAZHTHUKKAL :))))


    EN VALAIPOO PAKKAM ETTIPPAARTHU...
    KARUTHTHURAI PARISU THANTHAMAIKKUM NANDRI NADRI NADRI....

    PRIYAMUDAN
    DYENA
    ////

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டயானா

    ReplyDelete
  38. ரொம்ப நல்லா இருக்கு பிரப்து...உங்கள் பதிவுக்கு தாமதமாக வந்தமைக்கு வருந்துகிறேன்..இனிமே தவறாமல் வருவேன்..

    ReplyDelete
  39. ///
    நிலாவும் அம்மாவும் கூறியது...
    ரொம்ப நல்லா இருக்கு பிரப்து...உங்கள் பதிவுக்கு தாமதமாக வந்தமைக்கு வருந்துகிறேன்..இனிமே தவறாமல் வருவேன்..

    //////


    நிலாவும் அம்மாவும் வருகைதந்ததற்க்கு நன்றி

    ReplyDelete
  40. //
    எல்லா நாய்களை போல
    லொல் லொள் என்றில்லாமல்
    மதம் மதம் என்று அது குரைத்தது
    //

    இதைதான் களைய வேண்டும் பிரபு
    எதனை பதிவுகள் போட்டால்
    இந்நிலை மாறும்??

    ReplyDelete
  41. குரைக்கிற நாய் கடிக்காது
    ஆனால் தன்னை ஏதாவது
    சேது விடுவார்களுன்னு தான்
    குறைக்க ஆரம்பிக்குது.

    ரொம்ப அருமையா எழுதி இருக்கிறீங்க
    flow ரொம்ப நல்லா வந்திருக்கு
    வாழ்த்துக்கள் பிரபு.

    ReplyDelete
  42. ///
    RAMYA said...
    //
    எல்லா நாய்களை போல
    லொல் லொள் என்றில்லாமல்
    மதம் மதம் என்று அது குரைத்தது
    //

    இதைதான் களைய வேண்டும் பிரபு
    எதனை பதிவுகள் போட்டால்
    இந்நிலை மாறும்??
    ///


    அவர்கள் மனதில் பதியும் வரை, எத்தனை பதிவு போட்டாலும் ம்ம்ம்ம்ம்ம்ம்க்ம்

    ReplyDelete
  43. ////
    RAMYA said...
    குரைக்கிற நாய் கடிக்காது
    ஆனால் தன்னை ஏதாவது
    சேது விடுவார்களுன்னு தான்
    குறைக்க ஆரம்பிக்குது.

    ரொம்ப அருமையா எழுதி இருக்கிறீங்க
    flow ரொம்ப நல்லா வந்திருக்கு
    வாழ்த்துக்கள் பிரபு.
    ////

    நன்றி ரம்யா

    ReplyDelete
  44. மதம் பிடித்த யானைகள் பார்த்திருக்கிறோம். ஆனால் மதம் பிடித்த நாய்களை இப்போதுதான் பார்க்கிறோம் :-)
    நன்று!

    ReplyDelete
  45. ...
    உருப்புடாதது_அணிமா said...

    நல்லா இருக்கு
    ///

    நன்றிங்கோ

    ReplyDelete
  46. " உழவன் " " Uzhavan " said...

    மதம் பிடித்த யானைகள் பார்த்திருக்கிறோம். ஆனால் மதம் பிடித்த நாய்களை இப்போதுதான் பார்க்கிறோம் :-)
    நன்று!
    ////


    நன்றிங்கோ

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...