Monday, August 04, 2008

காதல் கதை

அதிகாலை 3 மணி ஊரே தூங்கிக்கொண்டிருக்கிறது.தன் அறை கதவை மெல்ல திறந்து வெளியே வந்தாள் ரேவதி,பக்கத்து அறையில் தன் பெற்றோர் நன்கு தூங்குவதை உறுதிசெய்தபின், தான் ஏற்க்கனவே தயாராக வைத்திருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.

மெல்லிய நிலா ஒளி வீசுகிறது, மயாணத்தை கடக்கும் வழிபோக்கனை போல் பயந்தபடியே நடந்து தெருமுனையை அடைந்தாள். அங்கு அவளுக்காக காத்திருந்தான் ரமேஷ். இருவரும் காரில் ஏற கார் வேகமாக புறப்பட்டது

5 மணி, தூங்கிக்கொண்டிருந்த பார்வதி பால்காரன் சப்தம்கேட்டு எழுந்தார். பாலை வாங்கி அடுக்களையில் வைத்துவிட்டு தன் காலை பணிகளை துவக்கினார்

6 மணி , தங்களின் திட்டப்படி இருவரும் கோவிலை
வந்தடைந்தனர்.அங்கு அவர்களின் வருகைக்காக காத்திருந்த நன்பர்கள் குழு அவர்களை வரவேற்றது.

“ஏண்ட மாப்ளே லேட்டு”
“ரேவதி வர்ரத்துக்கு லேட்டாயிடுச்சு”
“சரிசரி அங்கபோய் குளிச்சிட்டு அதுல இருக்கிற புதுத்துணிய போட்டுக்கிட்டு சீக்கிரமா ரெடியாகுங்க , ம்ம் சீக்கிரம்.”

பாலை காய்ச்சி வைத்துவிட்டு தன் மகளை எழுப்புவதற்க்காக
அவள் அறைக்கு செல்கிறார். மகள் அங்கு இல்லாதது கண்டு மொட்டை மாடியில் சென்று பார்த்தார், வீடு முழுதும் தேடியும் தன் மகள் இல்லாததால் பதற்றமாகி தன் கனவர் கேசவனை எழுப்புகிறார்.
“என்னங்க ரேவதிய காணலங்க”
“நல்லா தேடிப்பரு தோட்டத்து பக்கம் உட்காந்து படிச்சுகிட்டிருப்பா”
“எல்லா பக்கமும் தேடிட்டேங்க , எங்கேயும் காண்ல”
“என்ன சொல்ற நல்லா பாத்தியா?”- என்று கேட்டுக்கொண்டே எழுந்து தன் மகளின் அறைக்கு வருகிரார்.அங்கே அவள் இல்லை
கட்டிலின் மேல் ஒரு கடிதம் இருக்கிறது. வீட்டைவிட்டு ஓடிபோகும் எல்லோரும் எழுதிவைக்கும் அதே கடிதம். பிரபு..
“ என் மகளா இப்படிபண்ணீட்டா?” - என்று தன் நெஞ்சில் கைவைத்துதபடி தரையில் சாய்ந்தார்.

இருவரும் உடை மாற்றிக்கொண்டு வந்தார்கள். “ மாப்ள இப்பத்தாண்ட நீ நிஜமாவே மாப்ள” - என்று ஒரு நன்பன் கிண்டல் செய்ய அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி வெள்ளம்.

கேசவன் கீழே விழுந்ததும் பார்வதியிட்ட சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். கேசவனின் நிலையையும் கையில் இருக்கும் கடிதத்தையும் பார்த்ததும் அவர்கள் விவரம் புரிந்துகொண்டார்கள். “எல்லாரும் இப்படி பாத்துக்கிட்டெ இருந்தா எப்படி, யாராச்சும் டாக்டருக்கு போன் பண்னுங்க” என்றதும் ஒருவர் போன் செய்ய சென்றார்.

“ ம்ம்ம்ம் ஸ்கூல்ல வாத்தியார இருந்தவரு,வயசு பொண்ணுக்கு படிப்பென்னத்துக்குனு சொந்தகாரவுக சொன்னதயேல்லா கேக்காம “யேம் புள்ளய பெரியபடிப்பு படிக்க வைப்பேன்னு” சொல்லி காலேசு அனுப்பிவச்சாரு ,அது என்னடான அப்படி பண்ணிபுடுச்சு.ம்ம்ம்ம் எல்லா தலையேழுத்து” - என்று கூட்டத்திலிருந்த ஒருவரின் பேச்சு அரைமயக்கத்திலிருந்த கேசவனின் காதில் விழ, அவர் கண்களில் இருந்து இறுதியாய் கண்ணீர் கசிந்தது.

“மாப்ள உறவுக்காறங்க இல்லேனு வருத்தப்படத எல்லாத்துக்கும் சேத்து நாங்க இருக்கொ(ம்), மேளதாளம்,ஐயர் எல்லாம் ரெடி நீ தாலி கட்டவேண்டியதுதான் பாக்கி “ என்றான் ஒருவன்.ஐயர் மந்திரங்கள் ஓத துவங்கினார்

டாக்டரின் வாகனம் வந்து வாசலில் நின்றது.உள்ளே வந்த டாக்டர் கேசவனை பரிசோதித்தார்.சிறிது மௌனத்திற்க்கு பிறகு
“சாரி சார் உயிர் போயி ரொம்பநேரமாயிடிச்சு..” என்றார்.

மேளதாளங்கள் முழங்க ரேவதியின் கலுத்தில் தாலிகட்டினான் ரமேஷ்.தங்கள் கனவு நினைவான மகிழ்ச்சியில் ரமேஷ்,ரேவதியின் முகத்தில் கோடி புன்னகைகள்
மார்பிலும் வயிற்றிலும் அடித்துஅழுதுகொண்டிருக்கிறாள் பார்வதி..


 

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...