முதலில் "காக்க காக்க" படத்தில் இருந்து "ஒன்றா இரண்டா ஆசைகள்" என்ற பாடலின் வரிகளூக்கு பதிலாக
மழை நீராய் நான் மாற
உன் ஈரக்கூந்தலை நீ துடைத்திட
வசந்தத்தின் பூப்போல வழியெங்கும்
குறிப்பு: சூர்யா,ஒரு மழை நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் ஜோதிகாவை பார்த்ததை(சரணம்1) திருமணம் முடிந்தபிறகு ஒருநாள் மழையில் நனைந்து வீட்டுக்கு வரும்போது நினைத்துப்பார்த்தல்(சரணம்2)
பல்லவி:
கனவா? நினைவா? என்றுதான்
எண்ணம் தோன்றுதே......
ஏனோ தெரியல..
அன்பே.. உன்னை கண்டபின்
அன்பே.. உன்னை கண்டபின்
உலகம் மறந்ததே
எதுவும் புரியல.......
என்னருகில் ...............
நீயிருந்தால் ...................
நரகம்தான் சொர்க்கமாகுமே............
நீயின்றி ........
நான்வாழ்ந்தால் .........
சொர்க்கம்தான் நரகமாகுமே..........
(கனவா...?)
சரணம் 1:
மேகங்கள் ஒன்று கூடியே
மழை பூவைதூவியே வாழ்த்திட
பனிக்கால பூக்களை போலவே
உன் தேக அங்கங்கள் நனைந்திட
மழை நீராய் நான் மாற
வரம் கேட்டு மனுபோட்டேன்
மழைத்துளியாய் நான்தங்க-உன்
மார்புக்கூட்டில் இடம்கேட்டேன்
மரக்கிளையில் தங்கிய ஒருதுளி - அது
தரையில் விழுந்து சிரிக்குதே
மழை நின்றதும்.....
நீயும் சென்றதும்....
நீயும் சென்றதும்....
தனிமை கொன்..றதும்....
(கனவா......)
சரணம் 2:
உன் ஈரக்கூந்தலை நீ துடைத்திட
என் மனமும் மழையினில் நனையுதே..
நீ ஓரப் பார்வைகள் பார்த்திட
ஒரு கோடி மின்னலும் மின்னுதே......
வசந்தத்தின் பூப்போல வழியெங்கும்
உன்வாசம் - நீ
வாய் பேசா தருணாங்களில்
உன்வளையல்கள் அதுபேசும்
ஒருநாள் கண்ட வானவில்லை
மறுநாள் தேடி காத்திருந்தேன்
வழியில் வந்ததும்......
வணக்கம் சொன்னதும்.....
வயதை தின்றதும்......(கனவா?......)
***ஏன் இந்த கொலை வெறி என்று கேட்கிறீர்களா??? சும்மாதாங்க வேலை (ஓவர் டைம்) அதிகம் இல்ல,அதுதான் காரணம்****
...
பிரியமுடன் பிரபு...
...
...
பிரியமுடன் பிரபு...
...
வாங்க வாங்க....வாழ்த்துக்கள்
ReplyDeleteநானும் புதிய பதிவர்தான்....
உங்கள் வருகைக்கு நன்றி திரு மகேஸ்
ReplyDeleteநல்லா எழுதி இருக்கீங்க. புது ராகத்துக்கு எழுதுவது கொஞ்சம் சுலபம் தான். நீங்க கேட்டு பழகிய பாட்டுக்கு புது வரிகள் போட்டு அந்த பழைய சாயல் இல்லாமல் அழகா வந்திருக்கு. வாழ்த்துக்கள் இன்னும் நிறைய எழுதுங்கள்.
ReplyDeleteவருகைக்கு நன்றி ஸ்ரீ
ReplyDeleteஉங்க remake பாடல் ரொம்பவே நல்லாருக்கு...கலக்கல் பாட்டு!
ReplyDeleteதிருப்பி கொண்டு போய் ஹாரிஸ் ஜெயராஜ்கிட்ட கொடுங்க...நல்லா டியூன் போட்டு தருவாரு.
ஆனா கண்டிப்பா...bombay ஜெய்ஸ்ரீ தான் பாடனும். ஓகேயா?:))
/////////////////
ReplyDeleteதிருப்பி கொண்டு போய் ஹாரிஸ் ஜெயராஜ்கிட்ட கொடுங்க...நல்லா டியூன் போட்டு தருவாரு.
ஆனா கண்டிப்பா...bombay ஜெய்ஸ்ரீ தான் பாடனும். ஓகேயா?:))
//////////////////////
ஹாரிஸ் ஜெயராஜிடம் நெருங்க முடியுமா??
பாம்பே ஜெய்ஸ்ரீயின் குரலுக்கு நான் அடிமை
நல்லா பாட்டு எழுதறீங்க பிரபு!
ReplyDeleteநல்ல எதிர்காலம் இருக்கு!
நன்றி நாமக்கல் சிபி
ReplyDeleteHi
ReplyDeleteWe have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.
Please check your blog post link here
If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.
Sincerely Yours
Valaipookkal Team
thanks to Valaipookkal Team
ReplyDeleteமெட்டுக்கு பொருந்தும் அளவுக்கு அழகாக எழுதி இருக்கிறீர்கள்
ReplyDeleteபத்மாவதி said...
ReplyDeleteமெட்டுக்கு பொருந்தும் அளவுக்கு அழகாக எழுதி இருக்கிறீர்கள்
//
thank you..