Saturday, April 17, 2010

தூரத்தில் நானும் நீயும்......


அழகிய ரோஜாவை
அனுப்ப ஆசைப்பட்டேன்
அது உன் முகத்தழகைக்
கண்டவுடன் வாடிவிடும்
ஆதலால் அனுப்பவில்லை
கவிதையை மட்டும்
ஏன் அனுப்பினாய்
என்று நீ கேட்பாய் !
உன் வாயால் ஒருமுறை
இதை வாசித்துக்காட்டு
இந்த கவிதைகள் மோட்சம்
பெற்றுவிட்டுப் போகட்டும்..





எனக்கும் ஆசைதான்
பூ அரும்புவதை போல நீ
புன்னகைப்பதை காண.....
மெல்லிய வீணையதிர்வாய் நீ
சிரிப்பதை பார்க்க......
என் கோபங்களையெல்லாம்
நீரிலிட்ட உப்பாய்
கறைக்குமுன் கண்களை காண
ஆனாலும் காத்திருக்கிறேன் !
தூரத்து சூரியனின் ஒளிகொண்டு
பூமி விடிவதைபோல
தூரத்தில் இருக்கும் உங்கள்
நினைவில் வாழ்கிறேன்





நீ அழுதால் நானும் அழுவேன்
நீ சிரித்தால் நானும் சிரிப்பேன்
சிரித்துகொண்டே இரு 
என்னை சிரிக்க வைப்பதற்காகவேணும்


என்றும் பிரியமுடன் பிரபு ...
.
.

Friday, April 02, 2010

வெற்றி உனக்கே!




பெண்ணே
நாம் பிரிந்தபோதே
காதல் இறந்துவிட்டது
என்றிருந்தேன்-ஆனால்......

ஆண்டு பலகழிந்து - இன்று
ரேசன் க்யூவில் பார்த்த போது
மூளையின் உச்சியில்
புதிதாய் ஒரு பூ பூத்தது!
அப்போது-உணர்ந்தேன்
நம் காதலுக்கு உயிருண்டு..........
 
ஆயிரம் வாட்ஸ்
அனல் மின்சாரமாய்
தாக்கும் - கண்ணழகு
மாறிவிட்டது........

தினமும் புதிதுபுதியதாய்
பூ பூக்கும்
உன் புன்னகை
மாறிவிட்டது........

கன்னத்தில் குழிமாறி
குழியில் கன்னம் -
என்றாகிவிட்டது........

பட்டு மேனியது - இன்று
பட்டு போய்விட்டது......

எல்லாம் மாறிவிட்டது
ஒன்றை தவிர ! 

உனக்கு நினைவிருக்கா ?
ஒருமுறை இருவரும்
ஓட்ட பந்தயத்தில் ஓடினோம்
எனக்குமுன் ஓடி
வென்றாய் நீ..........

தொலைந்த கொலுசை
தேடினோம் -
எனக்குமுன் எடுத்து
வென்றாய் நீ..........

கல்யாணம் என்ற
பந்தயத்திலும் -
எனக்குமுன் செய்து
வென்றாய் நீ..........

ஆயிரம் மாற்றங்கள்
வந்தபிறகும் - இன்று
இந்த ரேஹன் க்யூவிலும்
எனக்குமுன்
வெற்றி உனக்கே..........

(வயதானவர்களுக்கு)


.பிரியமுடன் பிரபு...
.
.


You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...