Sunday, August 02, 2009

நிர்வாணம்




நிர்வாணமே நிஜம்
நிஜமென்பது நிர்வாணம்
நாம் தொலைத்துவிட்ட நிர்வாணம்
ஆதமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்து
மாயக்கனியை உண்ணும் வரை
அனுபவித்த அம்மணம்


இப்போது எங்கே அது?!?!?
நிர்வாணமாய்த்தானே பிறந்தோம்
இப்போது எங்கே அது?!?!?


காலத்திற்கு ஏற்ப ....
கலாசாரத்திற்கு ஏற்ப ....
வயதிற்கு ஏற்ப ....
வசதிக்கு ஏற்ப ....
படிப்பிற்கு ஏற்ப ....
பதவிக்கு ஏற்ப ....
இப்படி பல ஆடைகள் போட்டு
மறைத்து வைத்தயென்
நிர்வாண முகத்தைத் தேடினேன்


ஆடைகளே தோலாய் மாறியிருந்தது !!!!!!
குருதிகசிய குருதிகசிய
கிழித்தெறிந்தேன் ..


ஆகா...!
அழகான் என் நிர்வாணம்
என் கண்களுக்கு தெரிகிறது
என் முகமே எனக்கு அந்நியமாய் !!!


http://www.tamilauthors.com/03/111.html

 

******************************
ருவரும் விலக்கப்பட்ட கனியை உண்டு முடித்தனர். தன்னுடைய திட்டம் நிறைவேறியதை அருகிலிருந்து பார்த்த சந்தோசத்தில் பாம்பு வடிவிலிருந்த சாத்தான் சிரித்துக் கொண்டே ஓடி மறைந்தான். கனியை உண்டு முடித்ததும் ஆதாமும், ஏவாளும் தாங்கள் நிர்வாணிகளாய் இருப்பதை முதன் முறையாக உணர்ந்தார்கள்.அதுவரை அவர்களுக்குள் திறக்கப் படாமல் இருந்த அறிவுக் கண் திறந்தது. இருவரும் வெட்கப் பட்டார்கள். ஓடிச் சென்று அத்தி இலைகளைக் கோத்து ஆடையாய் அணிந்து கொண்டார்கள். நன்மை தீமை அறியும் மரம் என்று கடவுள் காட்டிய மரம் அவர்களின் """மழலைத் தன்மையை அழித்துவிட்டது."""
*************************

இன்றோடு (02-08-09) நான் வலைப்பூ துவங்கி ஒரு வருடமாகிவிட்டது
என் பதிவுகளை படித்து , பின்னுட்டமிட்டு , பாராட்டி , திருத்தி, ஆதரவு தந்த அனைவருக்கும் என் நன்றிகள் .


பிரியமுடன் பிரபு ...


You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...