Saturday, October 23, 2010

கடவுளும் சாத்தானும் -கலில் ஜிப்ரான்



Poetry is not an opinion expressed. It is a song that rises from a bleeding wound or a smiling mouth.
கவிதை என்பது கருத்தல்ல , அது குருதி வழியும் காயத்திலிருந்தோ புன்னகை புரியும் உதடுகளிலிருந்தோ உதயமாகிறது . 
-கலில் ஜிப்ரான்

              கலில் ஜிப்ரானின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.தனிமையில அவற்றை வாய்விட்டு சத்தமாக படிப்பதில் ஒரு மகிழ்ச்சி. . சில கவிதைகள்

என் பழைய மொழி-


நான் பிறந்து
மூன்று நாட்கள் ஆகியிருந்தன..
நான் தொட்டிலில் இருந்தபடி
என் புதிய உலகத்தை
ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன்
பார்த்துக் கொண்டிருந்தேன்.. 

என் அம்மா,
செவிலித் தாயிடம் கேட்டாள்..
"எப்படி இருக்கிறான் என் மகன்..??"


அவள் சொன்னாள்..
"ரொம்ப நன்றாக இருக்கிறான்..
நான் இதுவரை மூன்று முறை பாலூட்டி விட்டேன்..
இவ்வளவு மகிழ்ச்சியான ஒரு குழந்தையை நான்
இதுவரை கண்டதேயில்லை.."


எனக்குக் கோபம் வந்தது..
நான் கத்தினேன்..
"அம்மா.. அது உண்மையில்லை..
என் தொட்டில் மிகவும் கடினமாக உள்ளது..
நான் குடித்த பால் கசப்பாக இருந்தது..
அவள் மார்பகங்களின் வாசம் கூட
எனக்குப் பிடிக்கவேயில்லை..
நான் மகிழ்ச்சியாய் இல்லை..
மிகுந்த துன்பத்தில் இருக்கிறேன்..!!"


ஆனால் என் அம்மாவுக்கோ,
என் செவிலித்தாய்க்கோ
நான் சொல்லியது எதுவும் புரியவில்லை..
ஏனென்றால் நான் பேசிய மொழி,
நான் எங்கிருந்து வந்தேனோ, அந்த உலகத்தில் பேசுவது..
இந்தப் புதிய உலகத்தில்
அந்த மொழியை யாருமே பேசுவதில்லை..


இருபத்தியோரு நாட்கள் கடந்ததும்
எனக்குப் பெயர் சூட்டப்பட்டது..
பெயர் சூட்டி ஆசீர்வதித்த பூசாரி
என் தாயிடம்,
"நீ மிக்க மகிழ்ச்சி அடைய வேண்டும் பெண்ணே..
ஏனென்றால் உன் மகன் ஒரு கிறித்துவனாகப் பிறந்துள்ளான்.."
என்றார்.. 

நான் ஆச்சர்யத்துடன் அவரிடம்,

"அப்படியென்றால்
சொர்க்கத்தில் இருக்கும் உங்கள் தாய்
துக்கப்பட வேண்டுமே..
ஏனென்றால் நீங்கள் கிறித்துவராகப் பிறக்கவில்லையே..!!" என்றேன்..
ஆனால், அவருக்கும் என் மொழி புரியவில்லை..


ஏழு மாதங்கள் ஆன பிறகு,
ஒரு ஜோசியக்காரன் எங்கள் வீட்டுக்கு வந்து
என்னைப் பார்த்து என் தாயிடம்,

"உங்கள் மகன்
ஒரு சிறந்த தலைவனாய் வருவான்..
அதற்குறிய சமிக்ஞைகள் தெரிகின்றன.." என்றான்..


நான் கோபத்துடன்,


"தலைவனெல்லாம் க முடியாது..
நான் ஒரு சிறந்த இசைக் கலைஞனாவேன்..
வேறு எதுவும் ஆக மாட்டேன்.." என்று கூக்குரலிட்டேன்..


ஆனால், அந்த வயதிலும்
என் மொழி யாருக்கும் புரியவில்லை..


இன்று முப்பத்தி மூன்று ஆண்டுகள்
கழிந்த பிறகு
என் அம்மா, செவிலித்தாய், பூசாரி
எல்லோரும் இறந்து போய் விட்டனர்..


ஜோசியக்காரன் மட்டும் உயிருடன் இருக்கிறான்..


ஆலய வாசலில் அவனைப் பார்த்தேன்..
என்னோடு பேசிக் கொண்டிருந்த போது
அவன் சொன்னான்..
"நீ ஒரு சிறந்த இசைக் கலைஞனாய் வருவாய் என்று
எனக்கு அப்போதே தெரியும்..
நீ குழந்தையாய் இருந்த போதே
நான் கணித்துச் சொன்னேன்.."
என்றான்..


நான் அவன் சொன்னதை நம்பினேன்..
ஏனென்றால்,
இப்போது
என் பழைய மொழியை
நானே மறந்து போயிருந்தேன்..!!


(மொழிபெயர்ப்பு மீனாட்சி சங்கர்)
..............................


நரியின் பசி


நரி ஒன்று
காலை வேளையில்
தன் நிழலைக் கண்டது..

"இன்று நான்
ஒரு ஒட்டகத்தைத் தின்பேன்.."
என்று எண்ணிக் கொண்டது..

பகல் முழுவதும்
ஒட்டகத்தைத் தேடி அலைந்தது..
நண்பகலில்
தன் நிழலை மீண்டும் கண்டது..
"ஒரு எலி போதும் எனக்கு.."
என்ற முடிவுக்கு வந்தது..!!
..........


கடவுளும் சாத்தானும் 

ஒரு நாள்
மலையுச்சியில் சந்தித்தனர்.


கடவுள் சொன்னார்,
"சகோதரா,
உனது நாள்
நன்றானதாக அமையட்டும்..!"


சாத்தான்
மறுமொழி ஏதும் கூறவில்லை.

கடவுள் தொடர்ந்தார்,
"ஏதேது,
நீ இன்று
மிகவும் கோபமாக இருக்கிறாய்
போலிருக்கிறதே..!"


சாத்தான் சொன்னது,
"எல்லாம்
இந்த முட்டாள் மனிதர்களால் தான்.
இப்போதெல்லாம் சில காலமாக
அவர்கள் என்னை நீயென்று
நினைத்துக் கொள்கிறார்கள்.
உன் பேர் சொல்லி என்னை அழைப்பது,
உன்னைப் போல் என்னை நடத்துவது,

சீச்சீ,

எதுவும் எனக்குப் பிடிப்பதில்லை..!"


கடவுள் புன்னகைத்துச் சொன்னார்,
"அதனாலென்ன சகோதரா,
சில நேரங்களில்
இந்த மனிதர்கள்என்னைக் கூடத்தான்
நீயென்று நினைத்துக் கொள்கிறார்கள்,
உன் பேர் சொல்லி என்னை அழைத்து
சபிக்கிறார்கள்,


அதனாலெல்லாம் நான் வருந்துவதில்லை..!"


சாத்தான் சமாதானமடையாமல்
மனிதர்களின் முட்டாள்தனத்தை
நொந்து கொண்டபடி நடந்து சென்றது. 



பிரியமுடன் பிரபு … 

.

Saturday, October 09, 2010

சிங்கப்பூர் - யை சுற்றி பார்க்கலாம் வாங்க ...(அரிய வாய்ப்பு)






















 

அப்படியே இந்த பாடல்களையும் பாருங்க


மேலேயுள்ள புகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். இது குறைவு , இன்னும் நிறைய இருக்கு ,என்னடா வெறும் புகைப்படம் மட்டுமா?? என்று  நீங்கள் எண்ணலாம் , இது போன்ற இடத்திற்கு ஒரு முறையாவது சென்று வந்தால் நல்லது என்ற எண்ணங்கள் இருக்கலாம். கவலைவிடுங்கள் அதற்கான வாய்ப்பு உங்களை தேடி வந்துள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்...... ஆழ்ந்து சிந்தித்து கருத்தாய்வு செய்தவையை எழுதி அனுப்பினால் போதும்.

அட ஆமாங்க ...........

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி

சென்ற ஆண்டை போன்று இந்த ஆண்டும் “மணற்கேணி- 2010” சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அதற்காண தலைப்புகள் மற்றும் விதிமுறைகளை பார்க்க கீழ்யுள்ள நிரலியை சுட்டுங்கள். தலைப்புகள் மூன்று பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவர் என மூவருக்கு சிங்கப்பூர் சென்று வர வாய்ப்புகள் உள்ளது. நிரலியை சுட்டுங்கள் தட்டி செல்லுங்கள் அரிய வாய்ப்பை..........

மணற்கேணி குழுவின் அனைத்து தகவல்களுக்கான இணைய தளம்

போட்டியில் இணைந்து பங்காற்றும் தமிழ்வெளி

மணற்கேணி குழுவின் வலைப்பூ

அனைத்து விதிமுறைகளை அறிய நிரலியை தட்டுங்கள்

Photobucket

....
நன்றி ஆ.ஞானசேகரன்

(மேலே உள்ள படங்களில் நல்லாயிருக்கும் படங்கள் எல்லாம் அவருடையதே ,,)
....



பிரியமுடன் பிரபு ...

.

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...