Saturday, April 17, 2010

தூரத்தில் நானும் நீயும்......


அழகிய ரோஜாவை
அனுப்ப ஆசைப்பட்டேன்
அது உன் முகத்தழகைக்
கண்டவுடன் வாடிவிடும்
ஆதலால் அனுப்பவில்லை
கவிதையை மட்டும்
ஏன் அனுப்பினாய்
என்று நீ கேட்பாய் !
உன் வாயால் ஒருமுறை
இதை வாசித்துக்காட்டு
இந்த கவிதைகள் மோட்சம்
பெற்றுவிட்டுப் போகட்டும்..





எனக்கும் ஆசைதான்
பூ அரும்புவதை போல நீ
புன்னகைப்பதை காண.....
மெல்லிய வீணையதிர்வாய் நீ
சிரிப்பதை பார்க்க......
என் கோபங்களையெல்லாம்
நீரிலிட்ட உப்பாய்
கறைக்குமுன் கண்களை காண
ஆனாலும் காத்திருக்கிறேன் !
தூரத்து சூரியனின் ஒளிகொண்டு
பூமி விடிவதைபோல
தூரத்தில் இருக்கும் உங்கள்
நினைவில் வாழ்கிறேன்





நீ அழுதால் நானும் அழுவேன்
நீ சிரித்தால் நானும் சிரிப்பேன்
சிரித்துகொண்டே இரு 
என்னை சிரிக்க வைப்பதற்காகவேணும்


என்றும் பிரியமுடன் பிரபு ...
.
.

18 comments:

  1. அன்பின் பிரபு

    இட்ட மறுமொழி வெள்ளைக் காக்காய் கொத்திக் கொண்டு போய் விட்டது

    எனவே - டெம்ப்ளேட் மறுமொழி

    கவிதை கள் அருமை - நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  2. cheena (சீனா) said...

    அன்பின் பிரபு

    இட்ட மறுமொழி வெள்ளைக் காக்காய் கொத்திக் கொண்டு போய் விட்டது

    எனவே - டெம்ப்ளேட் மறுமொழி

    கவிதை கள் அருமை - நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    //////////

    நன்றி அய்யா

    ReplyDelete
  3. உனக்காகவே சிரிக்கின்றேன்
    உன் சிரிப்புக்காக

    :)

    ReplyDelete
  4. நல்லாயிருக்கு கவிதை.
    //அழகிய ரோஜாவை
    அனுப்ப ஆசைப்பட்டேன்
    அது உன் முகத்தழகைக்
    கண்டவுடன் வாடிவிடும்
    ஆதலால் அனுப்பவில்லை

    இப்படி பேசி பேசியே காலத்தை கடத்திவிடலாம் என்று நினைக்காதீங்க தம்பி.

    //நீ சிரித்தால் நானும் சிரிப்பேன்
    சிரித்துகொண்டே இரு
    அழகான வரிகள்.

    ReplyDelete
  5. //பூ அரும்புவதை போல நீ
    புன்னகைப்பதை காண.....
    மெல்லிய வீணையதிர்வாய் நீ
    சிரிப்பதை பார்க்க......
    என் கோபங்களையெல்லாம்
    நீரிலிட்ட உப்பாய்
    கறைக்குமுன் கண்களை காண
    ஆனாலும் காத்திருக்கிறேன் !//

    அழகான வார்த்தைளோடு நல்லதொரு கவிதை.

    ReplyDelete
  6. நட்புடன் ஜமால் said...

    உனக்காகவே சிரிக்கின்றேன்
    உன் சிரிப்புக்காக

    :)
    //////////

    நன்றி

    ReplyDelete
  7. ஆ.ஞானசேகரன் said...

    அருமை, அழகு
    /////

    நன்றி

    ReplyDelete
  8. குந்தவை said...

    நல்லாயிருக்கு கவிதை.
    //அழகிய ரோஜாவை
    அனுப்ப ஆசைப்பட்டேன்
    அது உன் முகத்தழகைக்
    கண்டவுடன் வாடிவிடும்
    ஆதலால் அனுப்பவில்லை

    இப்படி பேசி பேசியே காலத்தை கடத்திவிடலாம் என்று நினைக்காதீங்க தம்பி.
    //////////////

    ஹீ ஹீ ஹி

    ReplyDelete
  9. ஹேமா said...

    //பூ அரும்புவதை போல நீ
    புன்னகைப்பதை காண.....
    மெல்லிய வீணையதிர்வாய் நீ
    சிரிப்பதை பார்க்க......
    என் கோபங்களையெல்லாம்
    நீரிலிட்ட உப்பாய்
    கறைக்குமுன் கண்களை காண
    ஆனாலும் காத்திருக்கிறேன் !//

    அழகான வார்த்தைளோடு நல்லதொரு கவிதை.
    /////////////

    நன்றி

    ReplyDelete
  10. Nice poems. If some of the spelling mistakes can be avoided it will be very good.
    Thanks for sharing.

    ReplyDelete
  11. என்னப்பா அடிக்கடி காணாம போயிடுறீங்க. ரெம்ப பிசியோ? .

    ReplyDelete
  12. அருமையான கவிதைகள். இன்றுதான் படித்தேன் ரோஜா வாங்க காசில்லாமல் ஒரு கவிதை எழுதி இருக்கீங்க பாருங்க. கலக்கல்.

    ReplyDelete
  13. அன்புடன் அருணா said...

    அட!பூங்கொத்து!

    //////////


    நன்றிங்க அருணா

    ReplyDelete
  14. Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்) said...

    Nice poems. If some of the spelling mistakes can be avoided it will be very good.
    Thanks for sharing.
    ////////


    நன்றி

    ReplyDelete
  15. kunthavai said...

    என்னப்பா அடிக்கடி காணாம போயிடுறீங்க. ரெம்ப பிசியோ? .
    ///

    நன்றி

    ReplyDelete
  16. Karthick Chidambaram said...

    அருமையான கவிதைகள். இன்றுதான் படித்தேன் ரோஜா வாங்க காசில்லாமல் ஒரு கவிதை எழுதி இருக்கீங்க பாருங்க. கலக்கல்.
    ////////

    காசில்லாமலா?
    எம்பா இப்படியா உண்மைய சொல்வது?!?!

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...