
காணவில்லை காணவில்லை
என்னுள் என்னை காணவில்லை
தேகம் தீண்டிய
தென்றலே திருடினாயா?
மோகம் கொண்ட
மேகமே திருடினாயா?
பட்டாம்பூச்சியே - நீ
திருடினாயா?
பாவேந்தர் பாட்டே - நீ
திருடினாயா?
அன்னை முந்தானையில்
முகம் மறைத்த
குழந்தை போல-மேகத்தினுள்
முகம்மறைத்த நிலவே - நீ
திருடினாயா?
வயதுக்கு வந்த
பெண்னை போல
செழித்து நிற்க்கும்
வயல் வெளியே - நீ
திருடினாயா?
பச்சை புல்வெளியில்
படுத்து தூங்கிய
தூக்கத்தில்
தொலைத்தேனோ?
பாவாடை சட்டைக்காரி
பார்த்து சென்ற
ஏக்கத்தில்
தொலைத்தேனோ?
வாடை காற்று
வந்து
வழிப்பறி செய்ததோ?
காளை மாட்டு
கழுத்து மணியோசை
களவாடி சென்றதோ?
ஆற்று மணலை
அள்ளி பார்த்தேன்
ஆகாயத்தை கொஞ்சம்
கிள்ளி பார்த்தேன்
எவ்விடம் தேடியும்
கிடைக்காத என்னை
உன்னிடம் தேடினால்
கிடைக்குமோ?-என்
காதலியே............
..
பிரியமுடன் பிரபு..
..
கவிதை அழகு....
ReplyDelete/வயதுக்கு வந்த
ReplyDeleteபெண்னை போல
செழித்து நிற்க்கும்
வயல் வெளியே - நீ
திருடினாயா? //
அருமையான வரிகள்
//காணவில்லை காணவில்லை
ReplyDeleteஎன்னுள் என்னை காணவில்லை//
இது தான் காதல் என்பதா?
அதே அதே அதே தான்..
நல்லாருக்கு பிரபு.
ReplyDelete/ஆகயத்தை /
ஆகாயத்தை.
//எவ்விடம் தேடியும்
ReplyDeleteகிடைக்காத என்னை
உன்னிடம் தேடினால்
கிடைக்குமோ?//
உணர்வை சொல்லும் கவிதை.நல்லா இருக்கு.
அருமையான கவிதை சார். நல்லா புரியுது.
ReplyDeleteக.பாலாசி said...
ReplyDeleteகவிதை அழகு....
////
நன்றி பாலாசி
...
ReplyDeleteஅத்திரி said...
/வயதுக்கு வந்த
பெண்னை போல
செழித்து நிற்க்கும்
வயல் வெளியே - நீ
திருடினாயா? //
அருமையான வரிகள்
////
நன்றி அத்திரி
தமிழரசி said...
ReplyDelete//காணவில்லை காணவில்லை
என்னுள் என்னை காணவில்லை//
இது தான் காதல் என்பதா?
அதே அதே அதே தான்.
///
நன்றி தமிழரசி
வானம்பாடிகள் said...
ReplyDeleteநல்லாருக்கு பிரபு.
/ஆகயத்தை /
ஆகாயத்தை.
///
நன்றி தட்டச்சு பிழையை மாற்றியாச்சு
மிகவும் அழகான வரிகளில் மிளிகிறது
ReplyDeleteகவிதை..
பூங்குன்றன்.வே said...
ReplyDelete//எவ்விடம் தேடியும்
கிடைக்காத என்னை
உன்னிடம் தேடினால்
கிடைக்குமோ?//
உணர்வை சொல்லும் கவிதை.நல்லா இருக்கு.
////
நன்றிங்க பூங்குன்றன்.வே
அக்பர் said...
ReplyDeleteஅருமையான கவிதை சார். நல்லா புரியுது.
////
நன்றிங்க அக்பர்
///
நல்லா புரியுது.
////
ஒரு மார்க்கமா சொல்லியிருக்கீங்களே@@@@@
//எவ்விடம் தேடியும்
ReplyDeleteகிடைக்காத என்னை
உன்னிடம் தேடினால்
கிடைக்குமோ?-என்
காதலியே...//
அருமை நல்லாயிருக்கு பிரபு
அருமையான கவிதை வரிகள் பிரபு.
ReplyDeleteகற்பனையா அல்லது சொந்த அனுபவமா :-)
அன்னை முந்தானையில்
ReplyDeleteமுகம் மறைத்த
குழந்தை போல-மேகத்தினுள்
முகம்மறைத்த நிலவே - நீ
திருடினாயா?]]
கவிதை அழகு.
ஆ.ஞானசேகரன் said...
ReplyDelete//எவ்விடம் தேடியும்
கிடைக்காத என்னை
உன்னிடம் தேடினால்
கிடைக்குமோ?-என்
காதலியே...//
அருமை நல்லாயிருக்கு பிரபு
////
வாங்க நண்பா நன்றி
///
ReplyDeleteசிங்கக்குட்டி said...
அருமையான கவிதை வரிகள் பிரபு.
///
வாங்க சிங்கக்குட்டி நன்றி
////
கற்பனையா அல்லது சொந்த அனுபவமா ///
அப்படியெல்லாம் இல்லை ,நான் ஒரு குழந்தை
///
ReplyDeleteநட்புடன் ஜமால் said...
அன்னை முந்தானையில்
முகம் மறைத்த
குழந்தை போல-மேகத்தினுள்
முகம்மறைத்த நிலவே - நீ
திருடினாயா?]]
கவிதை அழகு.
///
நலமா நண்பா
வருகைக்கு நன்றி
//எவ்விடம் தேடியும்
ReplyDeleteகிடைக்காத என்னை
உன்னிடம் தேடினால்
கிடைக்குமோ?//
அண்ணே... அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள்.
இப்போவாவது கிடைச்சுதா?!!
ReplyDeleteகவிதை நல்லாயிருக்கு பிரபு.
ReplyDeleteஇப்படி அடிக்கடி உங்களை தொலச்சிட்டு இருக்கக்கூடாது... சரியா?
///
ReplyDeleteசே.குமார் said...
//எவ்விடம் தேடியும்
கிடைக்காத என்னை
உன்னிடம் தேடினால்
கிடைக்குமோ?//
அண்ணே... அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள்.
///
நன்றிங்கோ
ஊர்சுற்றி said...
ReplyDeleteஇப்போவாவது கிடைச்சுதா?!!
///
அவ்வளவுதான்
போனது போனதுதான்
அது ஒரு வழி பாதை
குந்தவை said...
ReplyDeleteகவிதை நல்லாயிருக்கு பிரபு.
இப்படி அடிக்கடி உங்களை தொலச்சிட்டு இருக்கக்கூடாது... சரியா?
///
வாங்க அக்கா
நானாவா தொலைசேன்
எல்லாம் தானா நடக்குது
//எவ்விடம் தேடியும்
ReplyDeleteகிடைக்காத என்னை
உன்னிடம் தேடினால்
கிடைக்குமோ?-என்
காதலியே............ //
உங்களை எங்கேயாவது விற்று இருந்தால் ...... எங்கே தேடுவீர் ?
:)
////
ReplyDeleteகோவி.கண்ணன் said...
//எவ்விடம் தேடியும்
கிடைக்காத என்னை
உன்னிடம் தேடினால்
கிடைக்குமோ?-என்
காதலியே............ //
உங்களை எங்கேயாவது விற்று இருந்தால் ...... எங்கே தேடுவீர் ?
:)
////
காதலில் பேரம் பேசுவது விற்பது எல்லாம் இல்லை
நான் விற்பனைக்கு இல்லை
நல்லாருக்கு நண்பரே
ReplyDeleteகமலேஷ் said...
ReplyDeleteமிகவும் அழகான வரிகளில் மிளிகிறது
கவிதை..
////
நன்றிங்க
" உழவன் " " Uzhavan " said...
ReplyDeleteநல்லாருக்கு நண்பரே
...
வங்க