Saturday, December 12, 2009

காணவில்லை ...




காணவில்லை காணவில்லை
என்னுள் என்னை காணவில்லை

தேகம் தீண்டிய
தென்றலே திருடினாயா?
மோகம் கொண்ட
மேகமே திருடினாயா?

பட்டாம்பூச்சியே - நீ
திருடினாயா?
பாவேந்தர் பாட்டே - நீ
திருடினாயா?

அன்னை முந்தானையில்
முகம் மறைத்த
குழந்தை போல-மேகத்தினுள்
முகம்மறைத்த நிலவே - நீ
திருடினாயா?

வயதுக்கு வந்த
பெண்னை போல
செழித்து நிற்க்கும்
வயல் வெளியே - நீ
திருடினாயா?



பச்சை புல்வெளியில்
படுத்து தூங்கிய
தூக்கத்தில்
தொலைத்தேனோ?

பாவாடை சட்டைக்காரி
பார்த்து சென்ற
ஏக்கத்தில்
தொலைத்தேனோ?

வாடை காற்று
வந்து
வழிப்பறி செய்ததோ?
காளை மாட்டு
கழுத்து மணியோசை
களவாடி சென்றதோ?

ஆற்று மணலை
அள்ளி பார்த்தேன்
ஆகாயத்தை கொஞ்சம்
கிள்ளி பார்த்தேன்

எவ்விடம் தேடியும்
கிடைக்காத என்னை
உன்னிடம் தேடினால்
கிடைக்குமோ?-என்
காதலியே............


..
பிரியமுடன் பிரபு..
..

30 comments:

  1. /வயதுக்கு வந்த
    பெண்னை போல
    செழித்து நிற்க்கும்
    வயல் வெளியே - நீ
    திருடினாயா? //


    அருமையான வரிகள்

    ReplyDelete
  2. //காணவில்லை காணவில்லை
    என்னுள் என்னை காணவில்லை//

    இது தான் காதல் என்பதா?

    அதே அதே அதே தான்..

    ReplyDelete
  3. நல்லாருக்கு பிரபு.

    /ஆகயத்தை /

    ஆகாயத்தை.

    ReplyDelete
  4. //எவ்விடம் தேடியும்
    கிடைக்காத என்னை
    உன்னிடம் தேடினால்
    கிடைக்குமோ?//

    உணர்வை சொல்லும் கவிதை.நல்லா இருக்கு.

    ReplyDelete
  5. அருமையான கவிதை சார். நல்லா புரியுது.

    ReplyDelete
  6. க.பாலாசி said...

    கவிதை அழகு....
    ////

    நன்றி பாலாசி

    ReplyDelete
  7. ...
    அத்திரி said...

    /வயதுக்கு வந்த
    பெண்னை போல
    செழித்து நிற்க்கும்
    வயல் வெளியே - நீ
    திருடினாயா? //


    அருமையான வரிகள்
    ////

    நன்றி அத்திரி

    ReplyDelete
  8. தமிழரசி said...

    //காணவில்லை காணவில்லை
    என்னுள் என்னை காணவில்லை//

    இது தான் காதல் என்பதா?

    அதே அதே அதே தான்.
    ///

    நன்றி தமிழரசி

    ReplyDelete
  9. வானம்பாடிகள் said...

    நல்லாருக்கு பிரபு.

    /ஆகயத்தை /

    ஆகாயத்தை.

    ///
    நன்றி தட்டச்சு பிழையை மாற்றியாச்சு

    ReplyDelete
  10. மிகவும் அழகான வரிகளில் மிளிகிறது
    கவிதை..

    ReplyDelete
  11. பூங்குன்றன்.வே said...

    //எவ்விடம் தேடியும்
    கிடைக்காத என்னை
    உன்னிடம் தேடினால்
    கிடைக்குமோ?//

    உணர்வை சொல்லும் கவிதை.நல்லா இருக்கு.
    ////


    நன்றிங்க பூங்குன்றன்.வே

    ReplyDelete
  12. அக்பர் said...

    அருமையான கவிதை சார். நல்லா புரியுது.

    ////


    நன்றிங்க அக்பர்

    ///
    நல்லா புரியுது.
    ////

    ஒரு மார்க்கமா சொல்லியிருக்கீங்களே@@@@@

    ReplyDelete
  13. //எவ்விடம் தேடியும்
    கிடைக்காத என்னை
    உன்னிடம் தேடினால்
    கிடைக்குமோ?-என்
    காதலியே...//

    அருமை நல்லாயிருக்கு பிரபு

    ReplyDelete
  14. அருமையான கவிதை வரிகள் பிரபு.

    கற்பனையா அல்லது சொந்த அனுபவமா :-)

    ReplyDelete
  15. அன்னை முந்தானையில்
    முகம் மறைத்த
    குழந்தை போல-மேகத்தினுள்
    முகம்மறைத்த நிலவே - நீ
    திருடினாயா?]]

    கவிதை அழகு.

    ReplyDelete
  16. ஆ.ஞானசேகரன் said...

    //எவ்விடம் தேடியும்
    கிடைக்காத என்னை
    உன்னிடம் தேடினால்
    கிடைக்குமோ?-என்
    காதலியே...//

    அருமை நல்லாயிருக்கு பிரபு


    ////

    வாங்க நண்பா நன்றி

    ReplyDelete
  17. ///
    சிங்கக்குட்டி said...

    அருமையான கவிதை வரிகள் பிரபு.


    ///

    வாங்க சிங்கக்குட்டி நன்றி





    ////
    கற்பனையா அல்லது சொந்த அனுபவமா ///

    அப்படியெல்லாம் இல்லை ,நான் ஒரு குழந்தை

    ReplyDelete
  18. ///
    நட்புடன் ஜமால் said...

    அன்னை முந்தானையில்
    முகம் மறைத்த
    குழந்தை போல-மேகத்தினுள்
    முகம்மறைத்த நிலவே - நீ
    திருடினாயா?]]

    கவிதை அழகு.
    ///

    நலமா நண்பா
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  19. //எவ்விடம் தேடியும்
    கிடைக்காத என்னை
    உன்னிடம் தேடினால்
    கிடைக்குமோ?//


    அண்ணே... அருமையான வரிகள்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. இப்போவாவது கிடைச்சுதா?!!

    ReplyDelete
  21. கவிதை நல்லாயிருக்கு பிரபு.

    இப்படி அடிக்கடி உங்களை தொலச்சிட்டு இருக்கக்கூடாது... சரியா?

    ReplyDelete
  22. ///
    சே.குமார் said...

    //எவ்விடம் தேடியும்
    கிடைக்காத என்னை
    உன்னிடம் தேடினால்
    கிடைக்குமோ?//


    அண்ணே... அருமையான வரிகள்.

    வாழ்த்துக்கள்.
    ///

    நன்றிங்கோ

    ReplyDelete
  23. ஊர்சுற்றி said...

    இப்போவாவது கிடைச்சுதா?!!
    ///

    அவ்வளவுதான்

    போனது போனதுதான்
    அது ஒரு வழி பாதை

    ReplyDelete
  24. குந்தவை said...

    கவிதை நல்லாயிருக்கு பிரபு.

    இப்படி அடிக்கடி உங்களை தொலச்சிட்டு இருக்கக்கூடாது... சரியா?
    ///
    வாங்க அக்கா


    நானாவா தொலைசேன்
    எல்லாம் தானா நடக்குது

    ReplyDelete
  25. //எவ்விடம் தேடியும்
    கிடைக்காத என்னை
    உன்னிடம் தேடினால்
    கிடைக்குமோ?-என்
    காதலியே............ //

    உங்களை எங்கேயாவது விற்று இருந்தால் ...... எங்கே தேடுவீர் ?

    :)

    ReplyDelete
  26. ////
    கோவி.கண்ணன் said...

    //எவ்விடம் தேடியும்
    கிடைக்காத என்னை
    உன்னிடம் தேடினால்
    கிடைக்குமோ?-என்
    காதலியே............ //

    உங்களை எங்கேயாவது விற்று இருந்தால் ...... எங்கே தேடுவீர் ?

    :)
    ////



    காதலில் பேரம் பேசுவது விற்பது எல்லாம் இல்லை

    நான் விற்பனைக்கு இல்லை

    ReplyDelete
  27. நல்லாருக்கு நண்பரே

    ReplyDelete
  28. கமலேஷ் said...

    மிகவும் அழகான வரிகளில் மிளிகிறது
    கவிதை..
    ////

    நன்றிங்க

    ReplyDelete
  29. " உழவன் " " Uzhavan " said...

    நல்லாருக்கு நண்பரே
    ...

    வங்க

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...