Friday, February 12, 2010

பிரச்சனைக்கு பின் என் தம்பி சிங்கப்பூர் வந்தாச்சு ........                            

      கடந்த 4ம் தேதி சுற்றுலா விசா மூலம் சிங்கை வர இருந்த என் தம்பியை சென்னை விமான நிலையத்தில் “நீ வேலைக்குதான் செல்கிறாய்” என கூறி பயணம் செய்ய அனுமதிக்க வில்லை
முதல் பதிவை படிக்காதவர்கள்
http://priyamudan-prabu.blogspot.com/2010/02/blog-post.html
அங்கே சென்று படிக்கவும்

                                  நிறைய நண்பர்கள் கருத்துகளும் ஆலோசனைகளும் கூறி பின்னூட்டம் இட்டுள்ளார்கள் , அனைவருக்கும் நன்றி . நட்புடன் ஜமால் என் பதிவை ஈரோட்டில் இருக்கும் வழக்கறிஞர் எஸ்ரா இராஐசேகரன் . (அவரும் பதிவரே) http://gandhicongress.blogspot.com/ அவர்களிடம் காட்டியுள்ளார் . அவர் என்னை மின்ன்ஞ்சலில் தொடர்புகொண்டு விபரங்கள் கேட்டார் , தந்துள்ளேன்.

                                               இதற்க்கிடையில் 4ம் தேதி பயணம் தடைபட்டதும் , புதிதாக 8000 ரூபாய் செலவில் விமானசீட்டு எடுத்து 6ம் தேதி காலை 11.40 க்கு திருச்சியில் இருந்து புறப்படும் ஏர்-இண்டியன் எக்ஸ்பிரசில் பயணம் செய்து இரவு 8.30க்கு(வழக்கம் போல 40 நிமிடம் தாமதம்) வந்தார் . 

திருச்சி விமான நிலையத்திலும் வேலைக்கு செல்கிறாயா? என சந்தேக கேள்வி கேட்டுள்ளார்கள் , அங்கே எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் அதிகாரியாக பணிசெய்கிறார் , அவர் வந்து “இவர்(என் தம்பி) சுற்றுலாதான் செல்கிறார் , கண்டிப்பாக 17ம் தேதி இந்தியா திரும்புவார் அதற்க்கு நான் பொருப்பு” என உறுதி கூறிய பிறகே என் தம்பி விமானம் ஏற அனுமதிக்க பட்டார் .

                                                 சிங்கையிலும் எல்லா சுற்றுலா பயணிகளையும் விசாரித்தார்கள் , அவரிடம் எல்லாம்(விசா,கடவுச்சீட்டு, என் அடையாள அட்டை நகல்) சரியாக இருந்ததால் உள்ளே விட்டார்கள் , எல்லம் சரி என தெரிந்தும் சிங்கையில் உள்ளே விட்டு விட்டார்கள் , ஆனால் எல்லம் சரியாக இருந்தும் சென்னையில் பயணம் செய்ய விடாமல் தடுத்தது ஏன்?

                                     இந்த பிரச்சனையில் அதிக மன உளைச்சல் , தேவையில்லாமல் சென்னையில் இருந்து அவசரமாக திருச்சி பயணம், மேலும் 8000 ரூபாய் விமானசீட்டு செலவு என நாங்கள் அதிகம் பாதிக்க பட்டுள்ளோம் . நாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை , போலிவிசாவோ ,கடவுசீட்டோ(பாஸ்போர்ட்) எங்களிடம் இல்லை , அல்லது பொய்சொல்லி வேலை செய்யவும் வரவில்லை , அப்படியிருந்தும் இது ஏன்?

                                         நான் சிங்கையில் கிட்டதட்ட 6 வருடமாக இருக்கிறேன் ,என் தம்பியும் சிங்கையை சுற்றி பார்க்கட்டும் எனும் ஆசையில் அழைத்து வர செய்தேன் அதில்தான் இத்தனை பிரச்சனைகள்

                                       குடிநுழைவு அதுகாரிகள் தங்கள் கடமையை செய்ததாக சிலர் சொல்கிறார்கள் , அதை ஏற்க முடியாது , சுற்றுலா விசா கையில் இருக்கும் போது “நீ வேலைக்குதான் செல்கிறாய்” என்ற அந்த அதிகாரியின் குருட்டுதனமன சந்தேகத்தை மட்டும் வைத்து ஒருவனை திருப்பி அனுப்ப அவருக்கு அதிகாரம் உண்டா??

                                    “ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு நிரபராதி தண்டிக்க பட கூடாது”- இதுதானே நம் வழிமுறை , ஆனால் இங்கே “ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கிறார்கள் தண்டிக்க படும் ஒருசிலரும் நிரபராதியாகவே உள்ளார்கள்

                             சுற்றுலாவுக்கான விசாவில் வெளிநாடு (சிங்கை,மலேசியா)  சென்று  அங்கேயே தங்கிவிடும் நபர்களை தடுக்க அரசு சரியான திட்டம் கொண்டுவரவேண்டும் , சந்தேகத்துக்கு இடமானவர்களுக்கு விசா கொடுக்காமல் மறுத்து இருக்கலாம் , அல்லது  இந்திய அரசே   “24 வயதுடன் ,படிக்காத கிராமத்து இந்தியன் எவனாவது வந்து விசா கேட்டார் தராதிக,” என்று ஒரு அன்பு மடலை பணிவுடன் எழுதி வெளிநாட்டு அரசுகளிடம் தந்துவிட்டால் , அவர்களும் விசாவை தராமல் விட்டிருப்பார்கள் , நானும் விசா இருக்கும் நம்பிக்கையில் பணம் கட்டி விமானசீட்டு வாங்கியிருக்க மாட்டேன் ,விமானசீட்டு இருக்கும் நம்பிக்கையில் விமான நிலையம் வரை வந்திருக்க , அந்த அதிகாரியிடம் அவமான பட்டிருக்க மாட்டேன். அதை விட்டுவிட்டு எல்லாம் முடிந்து பயணம் செய்ய போகும் கடைசி நேரத்தில் தடுதால் எப்படி??? வாயில நல்லா வருது...............

                               இதுதான் ஒரு ஜனநாயக நாட்டின் சட்டமா???? ரொம்ப கேவலமா மொக்கையா இருக்கு. இப்படி இருக்காது என்ற நம்பிக்கையில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன் . என் தம்பி 17ம் தேதி தமிழகம் சென்றது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க படும்.

                              நான் சிங்கை நிரந்தரவாசி, வரும் காலத்தில் என் அம்மா அப்பா, என வரும் கால மனைவி மற்றும் அவள் உறவுகள் என என்னை நம்பி சிங்கப்பூர் வருவோர் பட்டியல் நீள வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு முறையும் எல்லா ஏற்பாடும் செய்துவிட்டுகுடிநுழைவு அதிகாரியின் தயவுக்காக காத்திருக்க முடியாது . இப்போதே இதை பற்றி தெளிவாக முடிவு எடுக்கனும்

                           என் குடுப்பத்தாரும் என் உறவில் சிலரும் கூட வழக்கெல்லாம் எதுக்கு , அதுதான் சிங்கப்பூர் வந்தாச்சே , பிறகு வழக்கு எதற்க்கு வீண் அலைச்சல் , வீண் செலவு என்று பயப்படுகிறார்கள் . ஆனால் எனக்கு விட மனசு இல்லை . 


பிரியமுடன் பிரபு ...

.

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...