Saturday, September 13, 2008

இதே நாள், இதே மண்டபம் - ஒரு காதல்(லின்) கதை ..பல வருடம் கழித்து இப்பொதுதான் என் சொந்த ஊருக்கு வருகிறேன்.அதுவும் என் உயிர்த்தோழன் வீட்டு திருமணத்திர்க்காக. மண்டபத்தை பார்க்கும் போதே வசந்தகாலத்தைபோல மனசு இதமாய் பூத்தது

"வாடா வா,இதுதான் வர்ர நேரமா? பத்திரிக்கை கொடுக்கும்போதே சொல்லிக் கொடுத்தேன் அப்ப சரின்னு சொன்ன,நேற்று உன் வீட்டில் இருப்பவர்களை அனுப்பிவிட்டு நீ இப்பத்தான்வர்ர...." - என்று சற்று கோபித்துக் கொண்டே வர்வேற்றான் என் நன்பன் . குளிப்பதற்க்காக அறைக்குச் சென்றேன், வழியில்தான் அவளை பார்த்தேன் . முதலில் ஏதோ சிலைதானோ என்று தோன்றியது அருகில் வரவரவே அது பெண்ணென்று புரிந்தது

சிகப்புநிற பட்டுபுடவையில் தேவதை போல வந்தாள்.அப்போதுதான் குளித்திருப்பாள் என்று நினைக்கிறேன் அந்த ஈரக்கூந்தலை மின்விசிறி தாலாட்டிக் கொண்டே இருந்தது. அருகில் வந்தவள் ஒரு துண்டை என்னிடம் கொடுத்து "அந்த அறையில் சென்று குளித்துவிட்டு சீக்கிரம வாங்க" என்று கூறினாள்.பேசினாளா? பூவெடுத்து வீசினாளா?நிரம்பிய கோப்பையில் மேலும் நீரூற்ற வழிந்தோடும் நீரைப்போல வழியெங்கும் வழிந்தோடுகிறது அவள் அழகு.
அவள் மெல்ல நடக்கிறாள்.இது என்ன வகையான நடை? முதன் முதலில் நடக்க துவங்கும் குழந்தை இருபக்கமும் கைகளையும் நீட்டி பேலன்ஸ் செய்தபடி தத்திதத்தி வரும் போது தெரியுமே ஒரு அழகு அதுவும் உடல் தளர்ந்து சுருங்கிய சருமத்துடன் பாட்டியோ தத்தாவோ நடந்து வரும்போது தெரியுமே ஒரு அழகு அதையும் சேர்த்த அழகு.நடக்க நடக்க பூமி தன் கைகளையேந்தி அவள் பாதத்தை பதியம் போட்டு கொண்ட்து.நாளை அங்கே பூக்கள் முளைத்திருக்ககூடும்குளித்து முடித்து கூடத்திற்க்கு வந்தேன்.பலவருடமாய் பாராத நன்பர்கள் ஒவ்வொருவராய் நலம் விசாரித்து பேசிக்கொண்டே இருந்தார்கள் என் கண்கள் மட்டும் அவளையே தேடியது. அதோ ! அங்கே நிற்க்கிறாள்,யாருடனோ கையைப்பிடித்து பேசிக்கொண்டிருக்கிறாள் அது அவளின் தோழியாக இருக்கவேண்டும்.சிரித்து சிரித்து பேசுகிறாள் புன்னகைப் பூ அடிக்கடி மலர்ந்தது நிமிடத்திற்க்கு நிமிடம் பூ பூக்கும் அதிசய செடிதான் அவள் முகமோ?..

மணநேரம் நெருங்க மணமக்கள் மணவறையில் அமர்ந்திருந்தனர், மணமக்களின் உறவுமுறை கூட்டம் அதிகம் இருந்ததாலோ என்னவோ அவள் மணமேடையில் சற்றே தள்ளித்தான் நின்றாள்.ஆனால் எனக்கோ "எங்கே தன் அழகில் மயங்கி மணமகன் தன் கழுத்தில் தாலி கட்டிவிடுவானோ "என்று எண்ணி தள்ளி நிற்ப்பது போல தோன்றியது
ஐயர் மந்திரம் சொல்ல மேளம் முழங்க கல்யாணம் முடிந்தது.அனைவரும் அர்ச்சதை தூவினார்கள் முதல் வரிசையில் இருந்ததால் என்மீதும்,மேடையில் இருந்ததால் அவள்மீதும் சிலபல விழுந்தன
அடுத்து என்ன கூட்டம் மெல்ல மெல்ல சாப்பாட்டு அறை பக்கம் சென்றது.நான் என் நன்பருடன் பேசிக்கொண்டிருந்தேன் அவனை யாரோ அழைக்க அவனும் எழுந்து சென்றான்.அப்பொது அவள் அருகில் வந்தாள் "வாங்க சாப்பிட போகலாம்" என்றாள் அரசன் உத்தரவுக்கு அடிபணியும் பணியாளனைப் போல எழுந்து அவளுடன் சென்றேன்
இரண்டடி தூரத்தில் அவள் நடக்க நான் பின்தொடர்ந்தேன். திடீரென நின்ற அவள் என் பக்கம் திரும்பி "அந்த மணவறையை பார்த்தா உங்களுக்கு என்ன தோனுது?" என்று கேட்டாள்,ஒருமுறை மணவறையை பார்த்தேன் பின் அவள் கண்களை உற்று பார்த்து சொன்னேன் " 40 வருசத்துக்கு முன்னாடி இதே நாள், இதே மண்டபம்,அதோ அந்த மணவறையில நான் உனக்கு தாலிகட்டினேனெ " அதுதான் ஞாபகம் வருதுன்னு நான் சொல்ல 'சீ போங்க" என்று கூறி ஓடினாள் 60 வயதை கடந்த என் ஆசை மனைவி.


குறிப்பு : (ஏதுக்கு நடிகை பாவணா படம் போட்டேன்னு கேட்க கூடாது)


19 comments:

 1. மலர்விழிSeptember 15, 2008 10:35 AM

  //சிகப்புநிற பட்டுபுடவையில் தேவதை போல வந்தாள்.அப்போதுதான் குளித்திருப்பாள் என்று நினைக்கிறேன் அந்த ஈரக்கூந்தலை மின்விசிறி தாலாட்டிக் கொண்டே இருந்தது.//

  சூப்பருங்க...

  //சிரித்து சிரித்து பேசுகிறாள் புன்னகைப் பூ அடிக்கடி மலர்ந்தது நிமிடத்திற்க்கு நிமிடம் பூ பூக்கும் அதிசய செடிதான் அவள் முகமோ?..//

  என்னமா பெண்களை வர்ணிக்கிறீங்க!


  //'சீ போங்க" என்று கூறி ஓடினாள் 60 வயதை கடந்த என் ஆசை மனைவி.//

  ஐய்யோ...அநியாயத்துக்கு ஏமாந்து போனேன் போங்க.

  சிறப்பா இருக்கு பிரபு..கதையின் வேகமும் சொல் விளையாடலும் மிக பொருத்தம். இரசிக்கும் வண்ணம் அமையப்பெற்றுள்ளது..

  நன்று, தங்கள் எழுத்துப் பணியைத் தொடர்க:) (*படிக்க நான் ரெடி)

  ReplyDelete
 2. //////
  என்னமா பெண்களை வர்ணிக்கிறீங்க!
  /////////

  நன்றி மலர்

  //////
  ஐய்யோ...அநியாயத்துக்கு ஏமாந்து போனேன் போங்க.
  ////////

  அதுதானே எதிர்பார்த்தேன்


  /////////
  நன்று, தங்கள் எழுத்துப் பணியைத் தொடர்க:) (*படிக்க நான் ரெடி)
  /////////

  நன்றி...ஊக்கம் தரும் வார்த்தைகள்..

  ReplyDelete
 3. மலர்விழிSeptember 16, 2008 9:37 PM

  //ஐய்யோ...அநியாயத்துக்கு ஏமாந்து போனேன் போங்க.//
  //அதுதானே எதிர்பார்த்தேன்//

  பிறரை ஏமாற்றி இரசிப்பதில் எத்தனை சுகமய்யா உமக்கு!


  //நன்றி...ஊக்கம் தரும் வார்த்தைகள்..//

  ஆமாங்களா??? அப்படினா அடுத்த பதிவை விரைவில் பதிவு செய்துவிடுங்க...சரியா???
  :)))

  ReplyDelete
 4. ///////
  பிறரை ஏமாற்றி இரசிப்பதில் எத்தனை சுகமய்யா உமக்கு!
  ///////////


  நிச்சயமாக அந்த எமாற்றத்தில் உங்களுக்கு ஒரு சுகம் இருந்ததல்லவா?/??

  அதுபோல ஏமாற்றியதிலும் எனக்கு சுகம்

  கிவ் அண்ட் டேக் மாதிறி

  ReplyDelete
 5. நல்லா எழுதுறிங்க...

  ReplyDelete
 6. \
  அதோ அந்த மணவறையில நான் உனக்கு தாலிகட்டினேனெ " அதுதான் ஞாபகம் வருதுன்னு நான் சொல்ல 'சீ போங்க" என்று கூறி ஓடினாள் 60 வயதை கடந்த என் ஆசை மனைவி.
  \

  அவ்வ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 7. //////////////////
  \
  அதோ அந்த மணவறையில நான் உனக்கு தாலிகட்டினேனெ " அதுதான் ஞாபகம் வருதுன்னு நான் சொல்ல 'சீ போங்க" என்று கூறி ஓடினாள் 60 வயதை கடந்த என் ஆசை மனைவி.
  \

  அவ்வ்வ்வ்வ்வ்வ்...////////////
  ///////////////


  thank u tamilzhan

  ReplyDelete
 8. //
  அதோ அந்த மணவறையில நான் உனக்கு தாலிகட்டினேனெ " அதுதான் ஞாபகம் வருதுன்னு நான் சொல்ல 'சீ போங்க" என்று கூறி ஓடினாள் 60 வயதை கடந்த என் ஆசை மனைவி.
  \

  அவ்வ்வ்வ்வ்வ்வ்...
  //

  repeattttttttttuuuuuuuuu....

  ReplyDelete
 9. ரிபீட்டு போட்ட சின்னப்பையனுக்கு
  நன்றி

  ReplyDelete
 10. நச்சுன்னு இருக்கு........

  எழுத்து நடை ரொம்ப சுவாரஸியமா இருக்கு:)))

  இப்படி ஒரு முடிவு நிச்சயமா எதிர்பார்க்கவில்லை:))))

  சூப்பர்ப்!!

  ReplyDelete
 11. என்னமா வர்ணிச்சி இப்படி ரூட்ட மாத்திட்டீங்களே.
  ரெம்ப நல்லாயிருந்திச்சு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. நன்றி குந்தவி


  ///
  என்னமா வர்ணிச்சி இப்படி ரூட்ட மாத்திட்டீங்களே.
  ///

  நன்றி

  ReplyDelete
 13. நச்சுன்னு இருக்கு........

  எழுத்து நடை ரொம்ப சுவாரஸியமா இருக்கு:)))

  இப்படி ஒரு முடிவு நிச்சயமா எதிர்பார்க்கவில்லை:))))

  சூப்பர்ப்!!
  //////////////////

  நன்றி திவ்யா

  ReplyDelete
 14. Hi

  We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

  Please check your blog post link here

  If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

  Sincerely Yours

  Valaipookkal Team

  ReplyDelete
 15. அந்த பொண்ணு உண்மையில அழகா நடந்துச்சா இல்லையானு கேக்கணும்னு நெனச்சேன். இப்படி ஒரு முடிவு எழுதி எனக்கு பல்பு கொடுத்துட்டீங்க... சூப்பர் கதை

  ReplyDelete
 16. ////
  reena கூறியது...
  அந்த பொண்ணு உண்மையில அழகா நடந்துச்சா இல்லையானு கேக்கணும்னு நெனச்சேன். இப்படி ஒரு முடிவு எழுதி எனக்கு பல்பு கொடுத்துட்டீங்க... சூப்பர் கதை
  ///


  நன்றி ரீனா

  ReplyDelete
 17. அன்பின் பிரபு - அருமையான வர்ணனை - எதிர்பாரா முடிவு - நச்சுன்னு இருக்கு - சூப்பர் கதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 18. cheena (சீனா) said...
  அன்பின் பிரபு - அருமையான வர்ணனை - எதிர்பாரா முடிவு - நச்சுன்னு இருக்கு - சூப்பர் கதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா


  ////////
  நன்றி அய்யா

  ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...