Friday, July 23, 2010

நாளை பிறந்து இன்று வந்தவள் - மாதங்கி


நூல்: நாளை பிறந்து இன்று வந்தவள்,
45 கவிதைகள்,
ஆசிரியர் : மாதங்கி
பக்கம்- 79,
விலை ரூ.50/ -(10வெள்ளி)
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்.


ஒரு பண்டிகை நாளில்


நான் குறிப்பிட்ட அனைவருக்கும்
என் வாழ்த்துகளைத்
தொலைபேசிகளும் , கணினிகளும்
தபால் நிலையங்களும்
சுமந்து சென்றன
இதுவரை நேரில் சந்தித்திராத
மின் நண்பர்களுக்கும்கூட.


எங்சியிருந்த ஒரு வாழ்த்து
அடுத்தவீட்டுக்காரனிடம் போகட்டா
என்று கேட் டபோது
அவன் முகம் நினைவுக்கு வரவேயில்லை
எவ்வளவு யோசித்தும் கூட




***

எனக்கே தெரியாதபோது


இதே சூழ்நிலையில்
நீ என்ன செய்திருப்பாய்?
என்னை கேட்கிறாய் நீ


என்ன 
செய்வேன்
என்பதை
அந்த
வினாடிதான்
முடிவு செய்யும்


அதுவரை
யூகித்துகொண்டே இருக்கலாம்
என் மேன்மையை பற்றி

***
*போனால் போகிறது



அண்ணி உங்க
தங்க அட்டிகையை
வரவழியிலே தொலைச்சிட்டேன்

கண்ணைக் கசக்கிய நாத்தியிடம்
போனால் போகிறது
நீ பத்திரமாக வந்தாயே என்றேன்.


புழைக்கடையில்
துணிதுவைக்கையில்
சமையலறையில்
மாமியாரின் குரல்
அவர் மகனிடம்


ஒரு ஆர்ப்பாட்டம் கூச்சல்
எதுவுமில்லை
பித்தளைக்கு மெருகு
போட்டு அவங்க வீட்டில்
கொடுத்துட்டாங்களோ


தலைமேல்
பறந்த குருவிகளை
அண்ணாந்து பார்த்தேன்
இன்னும் இருக்கிறது ஆகாயம். 

***

          இப்படி நிறைய கவிதைகள் உள்ளது இதில். பல கவிதைகள் படிக்கும் போதே ஒரு காட்சியாக நம் கண்முன்னே வருகிறது.அதிகம் சிங்கப்பூர் சூழலை வைத்தே கவிதை எழுதியுள்ளார் 

                மரபு,புது,நவின கவிதைகள் என்ற வகைகள் எல்லாம் எனக்கு தெரியாது. ஒரு கவிதை படிக்கும் போது புது அனுபவமாக இருக்கனும், புரியனும்(கொஞ்சம் சிரமம் இருக்கலாம்) , சொல்லும் விதம் படிப்பவனை கவர வேண்டும் அவ்வளவுதான் எனக்கு. இதில் அதிக கவிதைகள் தெளிவாக புரிகிறது அதனால்தான் படிப்பவனுக்கும் எழுதியவருக்கும் ஒரு நெருக்கம் வருது.அவர் எந்த தளத்தில் இருந்து சிந்தித்தாரோ அதே தளத்துக்கு நம்மையும் இட்டுச்செல்கிறது. . ஆனால் சிலரின் சில கவிதைகள் படிக்கும் போது எனக்கு புரிவதே இல்லை. பல விளக்கங்களுக்கு பின்னரே கொஞ்சம் புரியும் . படிப்பவனுக்கும் எழுதியவருக்கும் இவ்வளவு இடைவெளி தேவையா என தோன்றுவதுண்டு எனக்கு. 
               
 சிங்கப்பூர் நூலகம் 894.811 (சிங்கப்பூர் படைப்புகள் என்று தனியாக வைத்திருக்கிறார்கள்)


மேலும் இந்த நூல் பற்றி படிக்க

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60811132&format=print&edition_id=20081113


கவிஞர் மாதங்கியின் வலைபதிவு(சில கவிதைகள் அங்கே உள்ளது)

பெரிதினும் பெரிது கேள்

 

 என்றும் பிரியமுடன் பிரபு...


 

Saturday, July 10, 2010

வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ



புகைப்படம் http://www.flickr.com/photos/mrkclicks/  நன்றி

                         
உழுதவன் கணக்குப் பார்த்தா
வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்ல
 
கொங்கைகள் குலுங்க
குதிச்சிட்டு போனா
குட்ட பாவாடகாரி

மனசு நெறஞ்ச மவராசன்
மனை எழுதி தாராக

கொசுக்கடியிலும்
கோவணத்தோடப்  படுதிருக்கேன்
கொள்ளிகட்டையா வேகுது வயிறு
எங்க உசிரெல்லாம் அவிகளுக்கு மசுரு


http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=35509   இதுக்கு அதுக்கும் ம்நீங்க முடிச்சு போட்டு பார்த்த அதுக்கு நான் பொருப்பல்ல    பிரியமுடன் பிரபு .....

Sunday, June 27, 2010

காவல்காரனாய் நிலா !!




பொங்கலுக்கு முந்தைய இரவு
தெருவெல்லாம் கோலம் போட்டார்கள்
விடிய விடிய

நீயும் கோலம் போட வந்தாய்
ஊரே அதிசயமாய் பார்த்தார்கள்!!!!
தேரொன்று தெருவில் வந்து
குனிந்து நிமிர்ந்து
கோலம் போட்டால் அதிசயம்தானே!!!

பத்தடி அகலத்தெரு முழுவதும்
பரந்து விரிந்ததுன் கோலம்

புள்ளிகளெல்லாம் தேவதைகளாகிக்
கோடுகளை வளைத்து எடுத்து
இடுப்பில் மாட்டி ஆட்டம் போட்டன
வீட்டுச் சாளரத்தின் வழியே
பார்த்துக்கொண்டே இருக்கிறேன் நான்
வெகுநேரமாகியும்

"நல்ல வேளை யாரும் பார்கல"-என்று 
நான் எண்ணிய நேரம்
நிலா என்னை கவனிப்பதை உணர்ந்தேன்
சிரித்த படியே உறங்கச் சென்றேன்

யாரும் இல்லாத இரவில்
உன் கோலத்துக்குக் காவல் நிற்கிறது நிலா!!





என்றும்
பிரியமுடன் பிரபு..


.

Thursday, June 17, 2010

ஒண்டிக்கட்டை உலகம்-புத்தகம்(A COMPLETE GUIDE FOR BACHELORS)

புத்தகம் : ஒண்டிக்கட்டை உலகம்
ஆசிரியர் : சிபி கே. சாலமன்
பதிப்பு : கிழக்கு பதிப்பகம்
பக்கம்: 144
விலை: ரூ.70

             
           குடும்பம் என்கிற சிறிய வட்டத்துக்குள் இருந்து வெளியே வந்து வாழ்கிற போது வாழ்க்கை  புதிதாக மாறும். பொதுவாக படித்து முடிக்கும் வரை குடும்பத்தோடு இருந்துவிட்டு பின் வேலைக்காக பல இடங்களில் வாழவேண்டியுள்ளது.அப்படி குடும்பத்தைவிட்டு வந்து அறிமுகம் இல்லதவர்களோடு தங்கி வாழும் ஒண்டிக்கட்டை வாழ்வை பற்றிய புத்தகம்தான் இது.


          அதிகம் வெளி உலகம் அறியாமலேயே படிப்பை முடித்துவிடுகிறோம் (அல்லது முடித்துவிட்டேன்) .ஒரு பயிற்சிக்காக அறந்தாங்கியில் சில மாதம் பின்  வேலைக்காக பெங்களூருவில் ஒரு வருடம் அதன் பின் செங்கப்பூரில் 6 வருடம் என கிட்டதட்ட கடந்த 9 ஆண்டுகள் நானும் ஒரு ஒண்டிக்கட்டைதான். நினைத்து பார்த்தாலே வியப்பா இருக்கு. வேலையிட மாற்றம் காரணமாகவோ அல்லது வெறு சில காரணங்களுக்காகவோ  தங்கும் இடம் மாறிக்கொண்டே வருகிறது. பெரும்பாலும் இடம் மாறும் போது  அதற்க்கு முன் பழகியவர்களை விட்டு விட்டு புதிதான நபர்களுடன் பழகவேண்டி வரும் இப்படியாக 9 வருடத்தில் பல இடம் மாறி பல முகம் பார்த்தாச்சு.முதன்முதலில் அறந்தாங்கியில் தங்கியிருந்தபோது  அங்கு உடன் இருக்கும் நபர்களுடன் பழகுவதில்/பகிர்ந்துகொள்வதில் எனக்கு நிறைய சிக்கல்கள் ஆனால் காலம் செல்ல செல்ல அனுபவம் நிறைய மாற்றத்தை என்னுள் ஏற்படுத்திவிட்டது .. காலம் கடந்து என் கையில் இந்த புத்தகம் கிடைத்ததாக உணர்கிறேன்.
                                           
          ஒண்டிக்கட்டை வாழ்வு பிரச்சனைகள்,அறை நண்பர்களோடு பிரச்சனை இன்றி பழகுதல் உள்ளிட்ட பலவற்றை அலசி எழுதியுள்ளார்.இந்த புத்தகத்தில் உள்ளவற்றில் அதிகம் நான் நேரிலே பார்த்து/அனுபவித்து இருக்கிறேன்.பள்ளி/கல்லூரி படித்து முடித்து புதிதாக இந்த வாழ்வுக்குள் வருபவர்களுக்கு இந்த புத்தகம் A COMPLETE GUIDE FOR BACHELORS -என்று அவர்கள் அட்டையில் உள்ள வாசகம் போலவே உதவியா இருக்கும்                     
                    
          பிரச்சனை என்பது இடத்துக்கு இடம் ஆளுக்கு ஆள் மாறுபடும் ஆனாலும் அதற்க்கு சில பொதுவான காரணிகள் இருக்கு , அவற்றை தனியாக வரிசைபடுத்தி அலசியுள்ளார் ஆசிரியர்.இது புத்தக விமர்சன பதிவு அல்ல.படித்தவுடனு என்னுள் தோன்றியவற்றை எழுதுயுள்ளேன்.புத்தகத்தின் அட்டைபடத்தை இணையத்தில் தேடிய போது கிடைத்த சில விமர்சனங்கள் கிழே


சிங்கப்பூரில் இருப்பவர்கள்

சிங்கப்பூர் நூலகம் சூ சொ காங்-306.8152-இல் எடுத்து படிக்கலாம்

புத்தகத்தில் இருந்து

          பேச்சிலர் ரூம் வாழ்க்கை என்பது ஒருவிதமான பயிற்ச்சி. வெவ்வேறு விதமான மனிதர்களோடு வாழ்வதற்குக் கிடைத்த களம். நம்முடைய ரசனைக்கு, குணத்துக்கு கொஞ்சம்கூட ஒத்துப்போகதவர்களோடு சேர்ந்து வாழ விதிக்கப்பட்ட வாழ்க்கை. இப்படி பட்ட சூழ்நிலையில் , அந்த நபர்களோடு சகித்துக் கொண்டோ  பொருத்துக்கொண்டோ வாழ்ந்துவிட்டோம் என்றால் நம் வாழ்வின் மிகபெரிய வெற்றிக்கான முக்கிய பாடத்தில் தேர்ச்சி பெற்றுவிட்டோம் என்று அர்த்தம்




(டெம்ப்ளேட் மாற்றியுள்ளேன் ,  நல்லாயிருக்கா? , மேலும் பக்கம் திறப்பதில் தாமதம் வருதா என சொல்லவும்)



என்றும் 
பிரியமுடன் பிரபு..



Sunday, May 16, 2010

காதலினால் ..............


பூவை கிள்ளிப் பறித்தேன்
அழாமல் சிரித்தது
பூ உன் கூந்தலுக்கு !!

    



என் கவிதைக்கான
பரிசு பணம் - முகவரி மாறி
சரியாக உன் வீட்டில்
      


என்னவளே நீ பவணி வரும்
எல்லாத் தெருவுமே
தேரடித் தெருதான் !
       

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...