Friday, July 23, 2010

நாளை பிறந்து இன்று வந்தவள் - மாதங்கி


நூல்: நாளை பிறந்து இன்று வந்தவள்,
45 கவிதைகள்,
ஆசிரியர் : மாதங்கி
பக்கம்- 79,
விலை ரூ.50/ -(10வெள்ளி)
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்.


ஒரு பண்டிகை நாளில்


நான் குறிப்பிட்ட அனைவருக்கும்
என் வாழ்த்துகளைத்
தொலைபேசிகளும் , கணினிகளும்
தபால் நிலையங்களும்
சுமந்து சென்றன
இதுவரை நேரில் சந்தித்திராத
மின் நண்பர்களுக்கும்கூட.


எங்சியிருந்த ஒரு வாழ்த்து
அடுத்தவீட்டுக்காரனிடம் போகட்டா
என்று கேட் டபோது
அவன் முகம் நினைவுக்கு வரவேயில்லை
எவ்வளவு யோசித்தும் கூட
***

எனக்கே தெரியாதபோது


இதே சூழ்நிலையில்
நீ என்ன செய்திருப்பாய்?
என்னை கேட்கிறாய் நீ


என்ன 
செய்வேன்
என்பதை
அந்த
வினாடிதான்
முடிவு செய்யும்


அதுவரை
யூகித்துகொண்டே இருக்கலாம்
என் மேன்மையை பற்றி

***
*போனால் போகிறதுஅண்ணி உங்க
தங்க அட்டிகையை
வரவழியிலே தொலைச்சிட்டேன்

கண்ணைக் கசக்கிய நாத்தியிடம்
போனால் போகிறது
நீ பத்திரமாக வந்தாயே என்றேன்.


புழைக்கடையில்
துணிதுவைக்கையில்
சமையலறையில்
மாமியாரின் குரல்
அவர் மகனிடம்


ஒரு ஆர்ப்பாட்டம் கூச்சல்
எதுவுமில்லை
பித்தளைக்கு மெருகு
போட்டு அவங்க வீட்டில்
கொடுத்துட்டாங்களோ


தலைமேல்
பறந்த குருவிகளை
அண்ணாந்து பார்த்தேன்
இன்னும் இருக்கிறது ஆகாயம். 

***

          இப்படி நிறைய கவிதைகள் உள்ளது இதில். பல கவிதைகள் படிக்கும் போதே ஒரு காட்சியாக நம் கண்முன்னே வருகிறது.அதிகம் சிங்கப்பூர் சூழலை வைத்தே கவிதை எழுதியுள்ளார் 

                மரபு,புது,நவின கவிதைகள் என்ற வகைகள் எல்லாம் எனக்கு தெரியாது. ஒரு கவிதை படிக்கும் போது புது அனுபவமாக இருக்கனும், புரியனும்(கொஞ்சம் சிரமம் இருக்கலாம்) , சொல்லும் விதம் படிப்பவனை கவர வேண்டும் அவ்வளவுதான் எனக்கு. இதில் அதிக கவிதைகள் தெளிவாக புரிகிறது அதனால்தான் படிப்பவனுக்கும் எழுதியவருக்கும் ஒரு நெருக்கம் வருது.அவர் எந்த தளத்தில் இருந்து சிந்தித்தாரோ அதே தளத்துக்கு நம்மையும் இட்டுச்செல்கிறது. . ஆனால் சிலரின் சில கவிதைகள் படிக்கும் போது எனக்கு புரிவதே இல்லை. பல விளக்கங்களுக்கு பின்னரே கொஞ்சம் புரியும் . படிப்பவனுக்கும் எழுதியவருக்கும் இவ்வளவு இடைவெளி தேவையா என தோன்றுவதுண்டு எனக்கு. 
               
 சிங்கப்பூர் நூலகம் 894.811 (சிங்கப்பூர் படைப்புகள் என்று தனியாக வைத்திருக்கிறார்கள்)


மேலும் இந்த நூல் பற்றி படிக்க

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60811132&format=print&edition_id=20081113


கவிஞர் மாதங்கியின் வலைபதிவு(சில கவிதைகள் அங்கே உள்ளது)

பெரிதினும் பெரிது கேள்

 

 என்றும் பிரியமுடன் பிரபு...


 

9 comments:

 1. தலைமேல்
  பறந்த குருவிகளை
  அண்ணாந்து பார்த்தேன்
  இன்னும் இருக்கிறது ஆகாயம்.

  ....அருமையான கவிதை தொகுப்பு உள்ள புத்தகம். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 2. இந்த நூல் திறப்புக்கு நானும் சென்றிருந்தேன்!

  யதார்த்தை உள்ளிருத்திய, மெல்லிய வருடலுடன் கூடிய கவிதைகளை கொண்ட நூல்!

  தேக்கா வெட்ட வெளியில் என்ற கவிதை என்னை பாதித்த கவிதை!

  வாழ்த்துகள் சகோதரி மாதங்கி!

  நன்றி பிரபு!

  ReplyDelete
 3. Blogger Chitra said...

  தலைமேல்
  பறந்த குருவிகளை
  அண்ணாந்து பார்த்தேன்
  இன்னும் இருக்கிறது ஆகாயம்.

  ....அருமையான கவிதை தொகுப்பு உள்ள புத்தகம். பகிர்வுக்கு நன்றி.
  //////////


  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 4. Blogger அத்திவெட்டி ஜோதிபாரதி said...

  இந்த நூல் திறப்புக்கு நானும் சென்றிருந்தேன்!

  யதார்த்தை உள்ளிருத்திய, மெல்லிய வருடலுடன் கூடிய கவிதைகளை கொண்ட நூல்!

  தேக்கா வெட்ட வெளியில் என்ற கவிதை என்னை பாதித்த கவிதை!

  வாழ்த்துகள் சகோதரி மாதங்கி!

  நன்றி பிரபு!

  ///


  நன்றி

  ReplyDelete
 5. //தலைமேல்
  பறந்த குருவிகளை
  அண்ணாந்து பார்த்தேன்
  இன்னும் இருக்கிறது ஆகாயம்.//
  அருமையான கவிதை

  வாழ்த்துகள் மாதங்கி!

  ReplyDelete
 6. I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

  ReplyDelete
 7. தலைப்பே சொல்லுதே பல விடயத்தை

  அடுத்த வீட்டுக்காரனின் மறந்த முகமாகட்டும்

  அன்னாந்து பார்த்த வானமாகட்டும்

  ...

  ReplyDelete
 8. நட்புடன் ஜமால் said...

  தலைப்பே சொல்லுதே பல விடயத்தை

  அடுத்த வீட்டுக்காரனின் மறந்த முகமாகட்டும்

  அன்னாந்து பார்த்த வானமாகட்டும்
  ////

  நன்றி ஜமால்

  ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...