புத்தகம் : ஒண்டிக்கட்டை உலகம்
ஆசிரியர் : சிபி கே. சாலமன்
பதிப்பு : கிழக்கு பதிப்பகம்
பக்கம்: 144
குடும்பம் என்கிற சிறிய வட்டத்துக்குள் இருந்து வெளியே வந்து வாழ்கிற போது வாழ்க்கை புதிதாக மாறும். பொதுவாக படித்து முடிக்கும் வரை குடும்பத்தோடு இருந்துவிட்டு பின் வேலைக்காக பல இடங்களில் வாழவேண்டியுள்ளது.அப்படி குடும்பத்தைவிட்டு வந்து அறிமுகம் இல்லதவர்களோடு தங்கி வாழும் ஒண்டிக்கட்டை வாழ்வை பற்றிய புத்தகம்தான் இது.
அதிகம் வெளி உலகம் அறியாமலேயே படிப்பை முடித்துவிடுகிறோம் (அல்லது முடித்துவிட்டேன்) .ஒரு பயிற்சிக்காக அறந்தாங்கியில் சில மாதம் பின் வேலைக்காக பெங்களூருவில் ஒரு வருடம் அதன் பின் செங்கப்பூரில் 6 வருடம் என கிட்டதட்ட கடந்த 9 ஆண்டுகள் நானும் ஒரு ஒண்டிக்கட்டைதான். நினைத்து பார்த்தாலே வியப்பா இருக்கு. வேலையிட மாற்றம் காரணமாகவோ அல்லது வெறு சில காரணங்களுக்காகவோ தங்கும் இடம் மாறிக்கொண்டே வருகிறது. பெரும்பாலும் இடம் மாறும் போது அதற்க்கு முன் பழகியவர்களை விட்டு விட்டு புதிதான நபர்களுடன் பழகவேண்டி வரும் இப்படியாக 9 வருடத்தில் பல இடம் மாறி பல முகம் பார்த்தாச்சு.முதன்முதலில் அறந்தாங்கியில் தங்கியிருந்தபோது அங்கு உடன் இருக்கும் நபர்களுடன் பழகுவதில்/பகிர்ந்துகொள்வதில் எனக்கு நிறைய சிக்கல்கள் ஆனால் காலம் செல்ல செல்ல அனுபவம் நிறைய மாற்றத்தை என்னுள் ஏற்படுத்திவிட்டது .. காலம் கடந்து என் கையில் இந்த புத்தகம் கிடைத்ததாக உணர்கிறேன்.
ஒண்டிக்கட்டை வாழ்வு பிரச்சனைகள்,அறை நண்பர்களோடு பிரச்சனை இன்றி பழகுதல் உள்ளிட்ட பலவற்றை அலசி எழுதியுள்ளார்.இந்த புத்தகத்தில் உள்ளவற்றில் அதிகம் நான் நேரிலே பார்த்து/அனுபவித்து இருக்கிறேன்.பள்ளி/கல்லூரி படித்து முடித்து புதிதாக இந்த வாழ்வுக்குள் வருபவர்களுக்கு இந்த புத்தகம் A COMPLETE GUIDE FOR BACHELORS -என்று அவர்கள் அட்டையில் உள்ள வாசகம் போலவே உதவியா இருக்கும்
பிரச்சனை என்பது இடத்துக்கு இடம் ஆளுக்கு ஆள் மாறுபடும் ஆனாலும் அதற்க்கு சில பொதுவான காரணிகள் இருக்கு , அவற்றை தனியாக வரிசைபடுத்தி அலசியுள்ளார் ஆசிரியர்.இது புத்தக விமர்சன பதிவு அல்ல.படித்தவுடனு என்னுள் தோன்றியவற்றை எழுதுயுள்ளேன்.புத்தகத்தின் அட்டைபடத்தை இணையத்தில் தேடிய போது கிடைத்த சில விமர்சனங்கள் கிழே
சிங்கப்பூரில் இருப்பவர்கள்
சிங்கப்பூர் நூலகம் சூ சொ காங்-306.8152-இல் எடுத்து படிக்கலாம்
புத்தகத்தில் இருந்து
பேச்சிலர் ரூம் வாழ்க்கை என்பது ஒருவிதமான பயிற்ச்சி. வெவ்வேறு விதமான மனிதர்களோடு வாழ்வதற்குக் கிடைத்த களம். நம்முடைய ரசனைக்கு, குணத்துக்கு கொஞ்சம்கூட ஒத்துப்போகதவர்களோடு சேர்ந்து வாழ விதிக்கப்பட்ட வாழ்க்கை. இப்படி பட்ட சூழ்நிலையில் , அந்த நபர்களோடு சகித்துக் கொண்டோ பொருத்துக்கொண்டோ வாழ்ந்துவிட்டோம் என்றால் நம் வாழ்வின் மிகபெரிய வெற்றிக்கான முக்கிய பாடத்தில் தேர்ச்சி பெற்றுவிட்டோம் என்று அர்த்தம்
(டெம்ப்ளேட் மாற்றியுள்ளேன் , நல்லாயிருக்கா? , மேலும் பக்கம் திறப்பதில் தாமதம் வருதா என சொல்லவும்)
என்றும்
பிரியமுடன் பிரபு..
அன்பின் பிரபு
ReplyDeleteநல்லதொரு விமர்சனம் - கொடுத்திருந்த சுட்டிகளும் பார்த்தேன் -நல்ல விமர்சனங்கள் - ஆனால் ஆன்லைனில் வாங்கக் கொடுத்திருந்த சுட்டி வேலை செய்ய வில்லை.
நன்று நன்று நல்வாழ்த்துகள் பிரபு
நட்புடன் சீனா
cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் பிரபு
நல்லதொரு விமர்சனம் - கொடுத்திருந்த சுட்டிகளும் பார்த்தேன் -நல்ல விமர்சனங்கள் - ஆனால் ஆன்லைனில் வாங்கக் கொடுத்திருந்த சுட்டி வேலை செய்ய வில்லை.
நன்று நன்று நல்வாழ்த்துகள் பிரபு
நட்புடன் சீனா
/////////
நன்றிங்க அய்யா
சரியான சுட்டியை தேடி பார்க்கிறேன்
புத்தகத்தின் பொருளே வித்தியாசமாதான் இருக்கு...உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி தோழரே..
ReplyDeleteபுதியவர்களுக்கும் மாணவர்களுக்கும் அவ்சியம்!!
ReplyDeleteஅந்த நபர்களோடு சகித்துக் கொண்டோ பொருத்துக்கொண்டோ வாழ்ந்துவிட்டோம் என்றால் நம் வாழ்வின் மிகபெரிய வெற்றிக்கான முக்கிய பாடத்தில் தேர்ச்சி பெற்றுவிட்டோம் என்று அர்த்தம்
ReplyDelete//
நல்ல பகிர்வு!!
கடைசி பத்தி மிக அருமை.
ReplyDeleteஉலகம் அறியாமலேயே படிப்பை முடித்துவிடுகிறோம் (அல்லது முடித்துவிட்டேன்)]]
இதுவும் தான் ...
படிச்சிடுவோம்
ReplyDeleteஇப்படிக்கு
முன்னாள் ஒண்டிக்கட்டை
கமலேஷ் said...
ReplyDeleteபுத்தகத்தின் பொருளே வித்தியாசமாதான் இருக்கு...உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி தோழரே..
///////////
வருகைக்கு நன்றி தோழரே..
தேவன் மாயம் said...
ReplyDeleteபுதியவர்களுக்கும் மாணவர்களுக்கும் அவ்சியம்!!
//////
நன்றி மருத்துவரே
நட்புடன் ஜமால் said...
ReplyDeleteகடைசி பத்தி மிக அருமை.
உலகம் அறியாமலேயே படிப்பை முடித்துவிடுகிறோம் (அல்லது முடித்துவிட்டேன்)]]
இதுவும் தான் ...
.....////////////
நன்றி ஜமால்
யாசவி said...
ReplyDeleteபடிச்சிடுவோம்
இப்படிக்கு
முன்னாள் ஒண்டிக்கட்டை
///////
படிச்சிட்டு வந்து சொல்லுங்க
interesting ..... :-)
ReplyDeleteபடிக்கணுமே...
ReplyDeleteChitra said...
ReplyDeleteinteresting ..... :-)
//////
படிச்சு பாருங்க
அமுதா கிருஷ்ணா said...
ReplyDeleteபடிக்கணுமே...
////////////
படிச்சு பாருங்க
பகிர்வுக்கு நன்றி பிரபு
ReplyDeleteநல்ல விமர்சனம். ஒண்டிக்கட்டை வாழ்க்கையில் குடி.. குட்டின்னு கெட்டுப் போவோர்களும் உண்டு.
ReplyDeleteதாங்க்ஸ் பிரபு!!
ReplyDeleteஆ.ஞானசேகரன் said...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி பிரபு
///////
படிச்சிட்டு வந்து சொல்லுங்க
நன்றி
பரிசல்காரன் said...
ReplyDeleteதாங்க்ஸ் பிரபு!!
////
நன்றி
கோவி.கண்ணன் said...
ReplyDeleteநல்ல விமர்சனம். ஒண்டிக்கட்டை வாழ்க்கையில் குடி.. குட்டின்னு கெட்டுப் போவோர்களும் உண்டு.
///////
அதுக்கும் ஒரு பதிவு போட்டிருக்கேன்
மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே......
http://priyamudan-prabu.blogspot.com/2009/02/blog-post_23.html
ஒண்டிக்கட்டை வாழ்க்கை ...பெரும்பாலோருக்கு வாய்க்கும் ...
ReplyDeleteஆனால் ஒவ்வொரு ஆளிடமும் ஒரு சுவாரஸ்ய கதை இருக்கும் ...
கே.ஆர்.பி.செந்தில் said...
ReplyDeleteஒண்டிக்கட்டை வாழ்க்கை ...பெரும்பாலோருக்கு வாய்க்கும் ...
ஆனால் ஒவ்வொரு ஆளிடமும் ஒரு சுவாரஸ்ய கதை இருக்கும் .
/
//////
ஆமாம்
கொஞ்சம் இடைவெளிக்கு பிறகு உங்கள் பக்கத்திற்கு வருகிறேன்.
ReplyDeleteநல்ல எழுத்துக்கள். இந்த புத்தகம் பற்றிய அறிமுகம் அருமை.
Karthick Chidambaram said...
ReplyDeleteகொஞ்சம் இடைவெளிக்கு பிறகு உங்கள் பக்கத்திற்கு வருகிறேன்.
நல்ல எழுத்துக்கள். இந்த புத்தகம் பற்றிய அறிமுகம் அருமை.
//////
நன்றிங்க