Friday, July 03, 2009

நல்லா கேக்குறாய்கப்பா டீட்டெய்லு...

--என் வலைபூவில் ஏற்ப்பட்ட பிரச்சனையால் அதை திறந்து பார்க்க கூட முடியாமல் இருந்த போது அமெரிக்காவில் இருந்து அன்புகரம் நீட்டி பிரச்சனையை தீர்வு செய்து உதவிய பழமைபேசி அண்ணனுக்கு நன்றி--



தொடர் பதிவு எழுத அன்போடு அழைத்தவர் குந்தவை அக்கா
அவரின் அன்பு அழைப்புக்காக இந்த பதிவு . அன்பினால் பதிவிடுகிறேனே தவிர ஆட்டோ அனுப்பிவிடுவார் என்ற பயத்தினால் அல்ல என்பதை இங்கே கூற கடமைபட்டிருக்கிறேன்



1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
என் பெற்றோர்தான் பதில் சொல்லனும்
எனக்கு பிடிச்சிருக்கு , சும்மாவா பிரபு - ன்னா a master, a prince, nobleman
இப்படி பட்டியல் போகுதே


2. கடைசியாக அழுதது எப்பொழுது?
ஞாபகம் இல்லை


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
நல்ல மூடுல எழுதுனா ஓரளவிற்க்கு இருக்கும்



4.பிடித்த மதிய உணவு என்ன?
சாம்பார் சாதம்,ரசம் , காய்கறி கூட்டு
அசைவத்துல ஆட்டு குடல் ,தலைக்கறி(என் அம்மா சமையல்)



5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நல்ல பழகுவேன். ஆனால் அப்புறம் அவங்க பழக்கத்தை பொறுத்து நட்பு தொடரும்.(குந்தவை அக்கா பதிலு)



6.கடலில் குளிக்க பிடிக்குமா….அருவியில் குளிக்க பிடிக்குமா?
நமக்கு கடல், அருவி இரண்டும் ரொமப தூரம்
நான் காவேரி கரை மைந்தன் எனவே காவேரி ஆற்றில் குளிக்கவே பிடிக்கும்


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
சிரிப்பு, கண்கள்.



8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்த விஷயம் எந்த முக்கியமான செயலை செய்யும் முன்பும் அதை பற்றி அறிந்தவர்களிடமும் , என் வீட்டு பெரியவர்களிடமும் நிறைய ஆலோசிப்பத்து
பிடிக்காதது - அடுத்தவர் மீது வைக்கும் அதீத நம்பிக்கை


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
சரிபாதின்னா???? ஓ மனைவியா??? இதெல்லாம் பெரியாவாகிட்ட கேட்கவேண்டிய கேள்வி . அவுட் ஆப் சிலபஸ் சோ நோ கமேண்ட்ஸ்



10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் ஊர் மற்றும் உறவுகள்


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
கருப்பு நிற கைலி, சிகப்பு மேலாடை


12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
என்னங்க இது, பிரவுசரைப் பார்த்துக் கொண்டு தான் இதை எழுதுகிறேன். படிக்கும் போதும் , எழுதும் போதும் பாட்டு கேட்பதில்லை



13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு


14.பிடித்த மணம் ?
மண் வாசனை , வெற்றிலை கொடிக்காலுக்குள் நுலைந்ததும் வரும் ஒருவித மணம்

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
எல்லோரும் எழுதிட்டாங்க , அதனால யாரையும் அழைக்க வில்லை



16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
அவுக வீட்டுகாரரை பற்றி எழுதுவது எனக்கு ரொம்ப பிடிக்கும்(பாவம் அந்த மனுசன்)
17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட் - கொஞ்சம் நல்லா விளையாட தெரிந்தது(கிரிக்கெட் பிடிக்கவே பிடிக்காது -குந்தவை)
அப்புறம் என் கணினியோடு மட்டும் சதுரங்கம் விளையாடுவது பிடிக்கும்(அப்பத்தான் தோற்ப்பது போல இருந்தால் ஆட்டத்தை கலைத்து புதிதாக தொடங்கலாம் ஹி ஹி ஹி)


18.கண்ணாடி அணிபவரா?
ஆம் ,ஆறு மாதமாக

மைனஸ் 0.5 பவர்
வயது 25
கன்னி ராசி
சித்திரை நட்சத்திரம் (பொண்னு பாக்கத்தானே கேட்டிக???)
நல்லா கேக்குறாய்கப்பா டீட்டெய்லு



19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
23 புலிகேசி மாதிரி நகைச்சுவைப் படங்கள் ரொம்ப பிடிக்கும்.அன்பே சிவம் மாதிரி கருத்துள்ள படங்கள் பிடிக்கும் , தசாவதாரம் மாதிரி புதிய முயற்சிகள் பிடிக்கும் , மொத்ததுல ஓப்பனிங் சாங் , குத்துபாட்டு , சண்டை ,தன் புகழை பரப்புவதற்க்கு எடுக்கபடும் மசால நாயகர்களின் படங்கள் பிடிக்காது


20.கடைசியாகப் பார்த்த படம்?
பசங்க


21.பிடித்த பருவ காலம் எது?
வசந்த காலம்.


22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
கி.மு விவிலியக் கதைகள் - சேவியர்


23.உங்கள் டெஸ்க்டொப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
இதுக்கெல்லாம் ஜோசியமா பாப்பாய்க ,, நல்ல படம் கிடைத்தால்................


24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது – குழந்தையின் சிரிப்பு சத்தம்.
பிடிக்காதது – அழுகை சத்தம்


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
சிங்கை


26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......... எதையும் கற்றுகொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கை


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நன்பன் என்ற பெயரில் ஏமாற்றுபவர்கள் (நம்பிக்கை துரோகி)


28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
முன்பு கோபம் , இப்போ அந்த சாத்தான் அண்டர் கண்ரோல்



29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
என் சொந்த ஊருக்கே சுற்றுலா மாதிரி போய் வருகிறேன்...


30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்போது போல், எப்பவும் சந்தோஷமா இருக்கணும்ன்னு தான் ஆசை.



31.கணவன் செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
அவுட் ஆப் சிலபஸ் சோ நோ கமேண்ட்ஸ்



32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
அனுபவி ராஜா அனுபவி


...........


எக்கோவ் .... பள்ளிகூடத்துல கூட யாரும் என்னய இம்புட்டு கேள்வி கேட்டதில்ல............................
கவனுச்சுக்கிறேன்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்




பிரியமுடன் பிரபு ...

Tuesday, June 09, 2009

எது சரியான கலாச்சாரம்????


பொழுது போகாதபோதெல்லாம் “இக்கால இளைஞர்கள் கலாச்சாரத்தை கெடுக்கிறார்கள்” என்று புலம்பும் பெரியவர்களுக்கு என் வணக்கம். முதலில் எது நம்/என்/உங்கள் கலாச்சாரம் என்பதை நீங்கள் விளக்கி சொல்லுங்கள் , பிறகு அதை “கெடுத்தது” யார் என்று ஆய்வு செய்யலாம்


இந்த கால இளைஞர்கள் பின்பற்றும் கலாச்சாரம் சரியில்லை என்றால் எது சரியான கலாச்சாரம்????,*நீங்கள் பின்பற்றிய கலாச்சாரமா??? , * உங்கள் பெற்றோர் அல்லது அவர்களின் பெற்றோர்கள் பின்பற்றிய கலாச்சாரமா ?? எது நம் கலாச்சாரம் ?? ஏன் கேட்கிறேன் என்றால் ஒருபயலும் தன் பெற்றோர்கள் பின்பற்றிய கலாச்சாரத்தை முழுதாக (100 %) பின்பற்றியது இல்லை . அவரவர் அவரவர் வசதிக்கும் , வாழும் சூழலுக்கும் ஏற்ப தங்கள் கலாச்சாரத்தை மாற்றி அமைத்து வாழ்ந்தார்கள் . ஆனால் வயதான காலத்தில் வளரும் இளைஞர்களை குறை சொல்லி வாழ்வதே வேலையாய் போச்சு . நின்னா குத்தம் , நடந்தா குத்தம்,ஆடுனா,பாடினா போதும் “அந்த காலத்துல நாங்களேல்லாம்ம்ம்ம்ம்” என்று ஆரம்பித்து விடுவது . அந்த காலத்துல நீங்க என்ன கிழிச்சீங்கனும் உங்கள பெத்தவங்கள கேட்டால் நாறிவிடும் சேதி


சினிமா நாயகி ஆடைகுறைப்பு செய்தால் கலாச்சார சீரழிவாம் ,அதுவும் இப்பத்தான் இப்படியெல்லாம் நடக்குதாம். என்ன கொடுமை ??? ,சினிமா ஆரம்பித்த காலமுதலே ஆடை குறைந்து கொண்டே வந்துள்ளது என்பதுதான் உண்மை. உங்க காலத்து நாயகி “ஸ்லிவ் லஸ்” போட்டு வந்தபோது பார்த்து நீங்கள் ஜொல்ளு விட்டது சரி , ஆனா நயந்தாரா “டூ பீஸ்ல” வந்தா குத்தமா ????


அந்த காலத்து கருப்பு வெள்ளை படம் ஒன்றில் நாயகன் இளம் “ஜெமினி கனேசன்” தான் ஒரு வேற்று ஜாதி பெண்ணை காதலிப்பதாக சொல்ல அப்போது அவரின் தந்தை கோவப்பட , உடனே ஜெமினி சொல்வார் “உலகம் எங்கேயோ போய்கிட்டு இருக்கு இந்த காலத்துல போய் ஜாதி வித்தியாசமெல்லாம் பார்க்கலாமா ???” என்று கேட்பார் , அதே ஜெமினிகனேசன் “உன்னால்முடியும் தம்பி” படத்தில் இளம் கமலஹாசனுக்கு தந்தையாக(வயதான) வேடத்தில் நடித்திருப்பார்.கமல் சேரி பெண்ணான சீதாவை காதலிப்பதாக சொல்ல “சேரி பெண்ணை தொடுவதே தீட்டு நீ காதலிக்கிறாயா???” என்று எதிர்ப்பு தெரிவிப்பார். பாருங்க மக்களே , இங்கே மாறியது எது ?? கலாச்சாரமா ? இளைஞனா?? வயதானவுடன் தாங்கள் தான் ஏதோ கலாச்சார காவலர்கள் என்பது போல காட்டிக்கொள்ள முயர்ச்சி செய்கிறார்கள் அவ்வளவே


கலாச்சார மாற்றம் ஒரே இரவில் நடப்பது அல்ல , மெல்ல மெல்ல மாறிகொண்டே வருவது . மாற்றம் என்ற சொல்லை தவிர எல்லாமே மாற்றம் அடைய கூடியவை என்பதே உண்மை இதில் கலாச்சாரம் மட்டும் விதிவிலக்கு அல்ல. எனவே முடிந்த அளவிற்க்கு அவர்களின் கலாச்சாரத்தோடு கலந்து வாழ பழகுங்கள் , இல்லையேல் அவர்களுக்கு அவர்கள் கலாச்சாரம் , உங்களுக்கு உங்கள் கலாச்சாரம் என்று இருந்து விடுங்கள்

இதை ஏன் இப்ப சொல்கிறேன் என்றால் என் போன்ற குழந்தைகள் வளர்ந்து இளைஞர்களாக மாறும் போது யாரும் குறை சொல்லிவிட கூடாது அல்லவா அதுக்குத்தான்……


இப்படிக்கு
வருத்தபடாத “வருங்கால வாலிபர்” சங்கம் , சிங்கப்பூர்

(கண்டிப்பாக வருங்கால வாலிபர்கள் மட்டுமே சங்கத்தில் சேர்த்து கொள்ள படுவார்கள், தொடர்புக்கு சங்க தலைவரை ( நான்தான் நான்தான்) அனுகவும்)



Monday, April 20, 2009

வலைச்சரத்தில் நான்

இந்த வாரம் வலைச்சரத்தில் ஆசிரியர் பணியை எனக்கு அளித்துள்ளார்கள்

வலைச்சரம் முகவரி
http://blogintamil.blogspot.com/

படித்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள்

நன்றி

Tuesday, April 14, 2009

சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள் - 4



மீண்டும் “சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்”
இது நான்காவது , மற்றவை



பல்லவி :


பெண்ணே பெண்ணே
பொய்பேசும் ஊமை பெண்ணே
கண்ணே கண்ணே
கவிபாடும் காதல் கண்ணே


உன் நடைகண்டு
நதியும் நாணல் கொள்ளும்
உன் இடைகண்டு
இளமை ஏக்கம் கொல்லும்
கொஞ்சி கொஞ்சி
என் உயிரை அது
தின்னும்

சரணம் 1 :


ஆண் :
உன் கண்ணில் காதல் நெருப்பு !

நான் எரிந்தால் நீதான் பொறுப்பு !


பெண் :
தொட்டால் படரும் தீயின் சிறப்பு

நீயாய் தொட்டால் நானா பொறுப்பு ?


ஆண் :
பதில்கூறி பாடிச் செல்லும் பனிபூவே

நீயின்றி போனால் நானும் தனித்தீவே ….


பெண் :
கவிபாடி காதல் செய்யும் கொள்ளைகாரா !
களவாடிபோக நானும் கடைத் தேரா..??!


ஆண் :
அடி நீயின்றி ஒரு கணம்
என்னுயிர் வாழ்வது
சாத்தியம்தானில்லை


(பல்லவி :
பெண்ணே பெண்ணே
பொய்பேசும் ஊமை பெண்ணே
………..)


சரணம் 2 :


பெண் :
நீ.. இருக்கும் வரை நான் இருப்பேன்
நீ.. இறக்கும் முன்பே இறப்பேன்


ஆண் :
நீ.. கிடைத்தால் உலகை மறப்பேன்

நீ.. மறுத்தால் வாழ்வை துறப்பேன்


பெண் :
இரவோடு கனவும் வந்து தாலாட்ட !
விடிகின்ற வேளை வரை சீராட்ட !


ஆண் :
கண்கண்ட பாகமெல்லாம் தீ..மூட்ட !
காணாத பாகமெல்லாம் நெய்யூற்ற !


என் இளமையில்
அடிக்கடி யாகங்கள் நடக்குது
வா வா எ(ன்)னை மீட்க

(பல்லவி :
பெண்ணே பெண்ணே
பொய்பேசும் ஊமை பெண்ணே
………..)


பாடி பாருங்க , சரியா மெட்டோடு வரிகள் இணைந்து போனால் ஓட்டு போடுங்க (இல்லாட்டியும் ஓட்டு போடனும் அது ஜநனாயக கடமை)




மீண்டும் சந்திப்போம்








Friday, April 10, 2009

வட்டத்துக்குள் பெண்!?


பெண்ணை சுற்றி வட்டம்
இது யார் போட்ட சட்டம் ? !
உற்று கவனி தோழி
சுற்றிய சுவர்களேல்லாம்
இப்போ தரைமட்டம்
.
பெண்விடுதலை பெண்விடுதலை
பேச்செதற்கு
உன் விடுதலை உன் கையில்
கோழியல்ல பருந்து நீ !
சிறைக்கதவுகள் சிதறி
சில காலம் ஆச்சு
சிறகுகள் விரித்து பறந்து வா .... .....
.
.தாயாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் பெண் குழந்தைக்கு நல்ல படிப்பும் உலக அறிவும் கிடைக்க செய்ய வேண்டும் . அவர்களால் முடியும் , புடைவைக்கும் நகைக்கும் போராட நேரம் ஒதுக்கும் பெண்கள் இதற்க்கும் நேரம் ஒதுக்கலாம் .பெண்களுக்கு அதிக படிப்பெதற்கு என்று சொல்லும் அம்மாக்களையும் நான் பார்த்துள்ளேன்
.
கழுகு ஒன்றை கோழி போல வளர்த்தால் அது தனக்கு பறக்க தெரியும் என்பதையே மறந்துவிடும் , இங்கே வளர்ப்பு ரொம்ப முக்கியம் . பெண்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும் । கல்வி பெற்று , பொருளாதார ரீதியில் மற்றவர்கள் சார்பு இல்லாமல் இருந்தால் அங்கே சுதந்திரம் இருக்கும் . பெண்ககல்வி பல பிரச்சனைகளை தீர்க்கும் என்பது என் நம்பிக்கை
.
சில பெண்கள் ஆண்களை போல உடையணிவது , சிகையழங்காரம் செய்வது ,ஆண்களை கண்டாலே எதிர்ப்பது (தன் தனிபட்ட காயங்கள் காரணமாக), இவைகள்தான் பெண்ணியம் என்று எண்ணுவது சரியல்ல என்பதே என்கருத்து .பெண் பெண்ணாகவும் ஆண் ஆணாகவும் இருந்து சமஉரிமையோடு ,சுயமரியாதையோடும் வாழ்வதே இனிய இல்லறம் , இனிய சமுகம் ,இனிய வாழ்வு
.
.கவிதை தொடர் சங்கிலி பதிவுக்கு அழைத்த நான் தகுதியானவனா?- க்கு நன்றியை தெரிவிக்கும் வேளையில், சங்கிலி கோர்த்தவர்கள் பட்டியலும்,
.
முதல் வட்டம் - ஷைலஜா அக்கா
இரண்டாம் வளையம் கோர்த்தவர் - எம்.எம்.அப்துல்லா
மூன்றாம் வளையம் கோர்த்தவர் - Mahesh
நான்காம் வளையம் கோர்த்தவர் - பழமைபேசி
ஐந்தாம் வளையம் கோர்த்தவர் - அப்பாவி முரு,
ஆறாம் வளையம் கோர்த்தவர்- நான் தகுதியானவனா?
ஏழாம் வளையம் கோர்த்தவர் - பிரியமுடன் பிரபு
அடுத்து கவின் - யை அழைக்கிறேன்

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...