ஒன்றா இரண்டா ஆசைகள்- சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்..- 1
பார்த்த முதல் நாளே- சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள் - 2
சுட்டும் விழிச்சுடரே- சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்- 3
விஜய் நடித்த "மதுர" படத்தில் வந்த “கண்டேன் கண்டேன்” என்ற பாடல் மெட்டுக்கு
பல்லவி :
பெண்ணே பெண்ணே
பொய்பேசும் ஊமை பெண்ணே
கண்ணே கண்ணே
கவிபாடும் காதல் கண்ணே
உன் நடைகண்டு
நதியும் நாணல் கொள்ளும்
உன் இடைகண்டு
இளமை ஏக்கம் கொல்லும்
கொஞ்சி கொஞ்சி
என் உயிரை அது
ஆண் :
உன் கண்ணில் காதல் நெருப்பு !
நான் எரிந்தால் நீதான் பொறுப்பு !
பெண் :
தொட்டால் படரும் தீயின் சிறப்பு
நீயாய் தொட்டால் நானா பொறுப்பு ?
ஆண் :
பதில்கூறி பாடிச் செல்லும் பனிபூவே
நீயின்றி போனால் நானும் தனித்தீவே ….
பெண் :
கவிபாடி காதல் செய்யும் கொள்ளைகாரா !
களவாடிபோக நானும் கடைத் தேரா..??!
ஆண் :
அடி நீயின்றி ஒரு கணம்
என்னுயிர் வாழ்வது
சாத்தியம்தானில்லை
(பல்லவி :
பெண்ணே பெண்ணே
பொய்பேசும் ஊமை பெண்ணே
………..)
சரணம் 2 :
பெண் :
நீ.. இருக்கும் வரை நான் இருப்பேன்
நீ.. இறக்கும் முன்பே இறப்பேன்
ஆண் :
நீ.. கிடைத்தால் உலகை மறப்பேன்
நீ.. மறுத்தால் வாழ்வை துறப்பேன்
பெண் :
இரவோடு கனவும் வந்து தாலாட்ட !
விடிகின்ற வேளை வரை சீராட்ட !
ஆண் :
கண்கண்ட பாகமெல்லாம் தீ..மூட்ட !
காணாத பாகமெல்லாம் நெய்யூற்ற !
என் இளமையில்
அடிக்கடி யாகங்கள் நடக்குது
வா வா எ(ன்)னை மீட்க
பெண்ணே பெண்ணே
பொய்பேசும் ஊமை பெண்ணே
………..)
பாடி பாருங்க , சரியா மெட்டோடு வரிகள் இணைந்து போனால் ஓட்டு போடுங்க (இல்லாட்டியும் ஓட்டு போடனும் அது ஜநனாயக கடமை)
மீண்டும் சந்திப்போம்
வாழ்த்துகள் வரிகள் நன்றாக இருக்கு
ReplyDeleteகலக்குறேப்பா
ReplyDeleteஎனக்கு சொல்லி கொடேன் ...
நான் இந்தப் பாட்டை கேட்டது கிடையாது. ஆனா வரிகள் எல்லாம் சினிமா பாடலுக்கு ஏத்தமாதிரி இருக்கு.
ReplyDeleteசூப்பரப்பா...
ReplyDeleteபாடல் ஆசிரியராக முயற்சி செய்யுங்கோ...
நல்லா இருக்குதுங்க பாட்டு வரிகள்... :)
ReplyDelete/////
ReplyDeleteஆ.ஞானசேகரன் said...
வாழ்த்துகள் வரிகள் நன்றாக இருக்கு
/////
நன்றி ஞானசேகரன்
/////
ReplyDeleteஆ.ஞானசேகரன் said...
வாழ்த்துகள் வரிகள் நன்றாக இருக்கு
/////
நன்றி ஞானசேகரன்
////
ReplyDeleteநட்புடன் ஜமால் said...
கலக்குறேப்பா
எனக்கு சொல்லி கொடேன் ...
////
நன்றி
உங்களுக்கா ?? நானா???
காமெடி கிமடி பன்னலயே?!?!?!?!
////
ReplyDeletekunthavai said...
நான் இந்தப் பாட்டை கேட்டது கிடையாது. ஆனா வரிகள் எல்லாம் சினிமா பாடலுக்கு ஏத்தமாதிரி இருக்கு.
/////
நன்றி
பாடல் கேட்டு பாருங்கள் இன்னும் நல்லாயிருக்கு
////
ReplyDeleteமலர்விழி said...
சூப்பரப்பா...
பாடல் ஆசிரியராக முயற்சி செய்யுங்கோ...
///
நன்றி
இப்போதைக்கு வலைச்சரத்தில் ஆசிரியர்
/////
ReplyDeleteAnand said...
நல்லா இருக்குதுங்க பாட்டு வரிகள்... :)
////
நன்றி ஆனந்
பாட்டு வரிகள் அபாரம்!
ReplyDeleteவாழ்த்துக்கள் !!
////
ReplyDeletethevanmayam said...
பாட்டு வரிகள் அபாரம்!
வாழ்த்துக்கள் !!
////
நன்றி தேவா
நல்ல முயற்சி, படைப்பும் பிரமாதம்!
ReplyDeleteஒப்பமுக்கு செலுத்த வேண்டிய இடுகை இது!!
///
ReplyDeleteபழமைபேசி said...
நல்ல முயற்சி, படைப்பும் பிரமாதம்!
ஒப்பமுக்கு செலுத்த வேண்டிய இடுகை இது!!
////
நன்றி
"ஒப்பமுக்கு " புரியலையே ?!?!?