Friday, April 10, 2009

வட்டத்துக்குள் பெண்!?


பெண்ணை சுற்றி வட்டம்
இது யார் போட்ட சட்டம் ? !
உற்று கவனி தோழி
சுற்றிய சுவர்களேல்லாம்
இப்போ தரைமட்டம்
.
பெண்விடுதலை பெண்விடுதலை
பேச்செதற்கு
உன் விடுதலை உன் கையில்
கோழியல்ல பருந்து நீ !
சிறைக்கதவுகள் சிதறி
சில காலம் ஆச்சு
சிறகுகள் விரித்து பறந்து வா .... .....
.
.தாயாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் பெண் குழந்தைக்கு நல்ல படிப்பும் உலக அறிவும் கிடைக்க செய்ய வேண்டும் . அவர்களால் முடியும் , புடைவைக்கும் நகைக்கும் போராட நேரம் ஒதுக்கும் பெண்கள் இதற்க்கும் நேரம் ஒதுக்கலாம் .பெண்களுக்கு அதிக படிப்பெதற்கு என்று சொல்லும் அம்மாக்களையும் நான் பார்த்துள்ளேன்
.
கழுகு ஒன்றை கோழி போல வளர்த்தால் அது தனக்கு பறக்க தெரியும் என்பதையே மறந்துவிடும் , இங்கே வளர்ப்பு ரொம்ப முக்கியம் . பெண்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும் । கல்வி பெற்று , பொருளாதார ரீதியில் மற்றவர்கள் சார்பு இல்லாமல் இருந்தால் அங்கே சுதந்திரம் இருக்கும் . பெண்ககல்வி பல பிரச்சனைகளை தீர்க்கும் என்பது என் நம்பிக்கை
.
சில பெண்கள் ஆண்களை போல உடையணிவது , சிகையழங்காரம் செய்வது ,ஆண்களை கண்டாலே எதிர்ப்பது (தன் தனிபட்ட காயங்கள் காரணமாக), இவைகள்தான் பெண்ணியம் என்று எண்ணுவது சரியல்ல என்பதே என்கருத்து .பெண் பெண்ணாகவும் ஆண் ஆணாகவும் இருந்து சமஉரிமையோடு ,சுயமரியாதையோடும் வாழ்வதே இனிய இல்லறம் , இனிய சமுகம் ,இனிய வாழ்வு
.
.கவிதை தொடர் சங்கிலி பதிவுக்கு அழைத்த நான் தகுதியானவனா?- க்கு நன்றியை தெரிவிக்கும் வேளையில், சங்கிலி கோர்த்தவர்கள் பட்டியலும்,
.
முதல் வட்டம் - ஷைலஜா அக்கா
இரண்டாம் வளையம் கோர்த்தவர் - எம்.எம்.அப்துல்லா
மூன்றாம் வளையம் கோர்த்தவர் - Mahesh
நான்காம் வளையம் கோர்த்தவர் - பழமைபேசி
ஐந்தாம் வளையம் கோர்த்தவர் - அப்பாவி முரு,
ஆறாம் வளையம் கோர்த்தவர்- நான் தகுதியானவனா?
ஏழாம் வளையம் கோர்த்தவர் - பிரியமுடன் பிரபு
அடுத்து கவின் - யை அழைக்கிறேன்

19 comments:

  1. வட்டம் போட்டாச்சா!

    ReplyDelete
  2. வாழ்த்துகள்!


    //பேச்செதற்க்கு
    உன் விடுதாலை உன் கையில்//

    பேச்செதற்கு
    விடுதலை

    ReplyDelete
  3. ///
    நட்புடன் ஜமால் said...
    வட்டம் போட்டாச்சா!
    ////


    போட்டாச்சு போட்டாச்சு

    ReplyDelete
  4. ////
    பழமைபேசி said...
    வாழ்த்துகள்!
    /////
    நன்றி பழமைபேசி அண்ணா



    //பேச்செதற்க்கு
    உன் விடுதாலை உன் கையில்//

    பேச்செதற்கு
    விடுதலை
    /////

    மிக்க நன்றி , அவற்றை திருத்திவிட்டேன்

    ReplyDelete
  5. படமும் பதிவும் நன்று

    ReplyDelete
  6. நன்றி பிரேம்

    ReplyDelete
  7. நல்லா இருக்கு,... ரொம்ப நாளா ஆளே காணாம் பிரபு... ஊருக்கு சென்று இருந்தீரா?

    ReplyDelete
  8. //உற்று கவனி தோழி
    சுற்றிய சுவர்களேல்லாம்
    இப்போ தரைமட்டம்//

    பிரபு., தரைமட்டமாகி பல நாளாச்சு தானே.

    இதை நமது பெண்கள் ஒத்துக்கொள்வார்களா???

    ReplyDelete
  9. \\உன் விடுதாலை உன் கையில்//

    ரசித்தேன் நண்பா..

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. //உன் விடுதலை உன் கையில்
    கோழியல்ல பருந்து நீ !
    சிறைக்கதவுகள் சிதறி
    சில காலம் ஆச்சு
    சிறகுகள் விரித்து பறந்து வா ....

    அருமையான வரிகள். வாழ்த்துக்கள் பிரபு. எங்க ரெம்ப நாளாக் காணோம். பேசாமல் செய்தி தாளில் அறிவிப்பு கொடுத்திடலாமோ என்று கூட நினைத்தேன்.

    ReplyDelete
  11. //உன் விடுதலை உன் கையில்
    கோழியல்ல பருந்து நீ !
    சிறைக்கதவுகள் சிதறி
    சில காலம் ஆச்சு
    சிறகுகள் விரித்து பறந்து வா ....

    அருமையான வரிகள். வாழ்த்துக்கள் பிரபு. எங்க ரெம்ப நாளாக் காணோம். பேசாமல் செய்தி தாளில் அறிவிப்பு கொடுத்திடலாமோ என்று கூட நினைத்தேன்.

    ReplyDelete
  12. ///
    ஆ.ஞானசேகரன் said...
    நல்லா இருக்கு,...
    ////

    நன்றி

    ///
    ரொம்ப நாளா ஆளே காணாம் பிரபு... ஊருக்கு சென்று இருந்தீரா?
    ///

    இல்லை புதிய வீடு மாற்றம் அதனால் இணையவசதி 2 வாரமாக இல்லை . இப்போது வந்தாச்சு

    ReplyDelete
  13. ////
    அப்பாவி முரு said...
    //உற்று கவனி தோழி
    சுற்றிய சுவர்களேல்லாம்
    இப்போ தரைமட்டம்//

    பிரபு., தரைமட்டமாகி பல நாளாச்சு தானே.

    இதை நமது பெண்கள் ஒத்துக்கொள்வார்களா???
    ////

    கருத்துக்கு நன்றி

    உண்மைய்யை ஒப்புகொள்ளத்தானே வேண்டும்!?!??

    ReplyDelete
  14. ///
    டக்ளஸ்....... said...
    \\உன் விடுதாலை உன் கையில்//

    ரசித்தேன் நண்பா..

    வாழ்த்துகள்!

    /////

    நன்றி டக்ளஸ்

    ReplyDelete
  15. ////
    kunthavai said...
    //உன் விடுதலை உன் கையில்
    கோழியல்ல பருந்து நீ !
    சிறைக்கதவுகள் சிதறி
    சில காலம் ஆச்சு
    சிறகுகள் விரித்து பறந்து வா ....

    அருமையான வரிகள். வாழ்த்துக்கள் பிரபு.

    ////

    நன்றி அக்கா



    ////
    எங்க ரெம்ப நாளாக் காணோம். பேசாமல் செய்தி தாளில் அறிவிப்பு கொடுத்திடலாமோ என்று கூட நினைத்தேன்.
    ///

    "சிபிஐ எங்கே தேடச்சொல்லு கொஞ்சம்
    ஒரூ இளம்குழந்தையின் இதயம் காணவில்லை " - - இப்படி எதாவாது கொடுங்க

    புதிய வீடு மாற்றம் அதனால் இணையவசதி 2 வாரமாக இல்லை . இப்போது வந்தாச்சு

    ReplyDelete
  16. "கோழியல்ல பருந்து நீ !சிறைக்கதவுகள் சிதறி சில காலம் ஆச்சுசிறகுகள் விரித்து பறந்து வா .... ....." அருமையான வரிகள்.

    ReplyDelete
  17. ///
    டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...
    "கோழியல்ல பருந்து நீ !சிறைக்கதவுகள் சிதறி சில காலம் ஆச்சுசிறகுகள் விரித்து பறந்து வா .... ....." அருமையான வரிகள்.
    ////

    மிக்க நன்றி

    ReplyDelete
  18. /பெண்ணை சுற்றி வட்டம்
    இது யார் போட்ட சட்டம் ? !
    உற்று கவனி தோழி
    சுற்றிய சுவர்களேல்லாம்
    இப்போ தரைமட்டம்/

    அருமையான வரிகள்
    வாழ்த்துகள்

    ReplyDelete
  19. வலைச்சரத்தில் எழுத்தாளரும் கவிஞருமான மாதங்கி உங்களை குறித்து எழுதியது மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துக்கள் பிரியமுடன் பிரபு. தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...