Tuesday, June 09, 2009

எது சரியான கலாச்சாரம்????


பொழுது போகாதபோதெல்லாம் “இக்கால இளைஞர்கள் கலாச்சாரத்தை கெடுக்கிறார்கள்” என்று புலம்பும் பெரியவர்களுக்கு என் வணக்கம். முதலில் எது நம்/என்/உங்கள் கலாச்சாரம் என்பதை நீங்கள் விளக்கி சொல்லுங்கள் , பிறகு அதை “கெடுத்தது” யார் என்று ஆய்வு செய்யலாம்


இந்த கால இளைஞர்கள் பின்பற்றும் கலாச்சாரம் சரியில்லை என்றால் எது சரியான கலாச்சாரம்????,*நீங்கள் பின்பற்றிய கலாச்சாரமா??? , * உங்கள் பெற்றோர் அல்லது அவர்களின் பெற்றோர்கள் பின்பற்றிய கலாச்சாரமா ?? எது நம் கலாச்சாரம் ?? ஏன் கேட்கிறேன் என்றால் ஒருபயலும் தன் பெற்றோர்கள் பின்பற்றிய கலாச்சாரத்தை முழுதாக (100 %) பின்பற்றியது இல்லை . அவரவர் அவரவர் வசதிக்கும் , வாழும் சூழலுக்கும் ஏற்ப தங்கள் கலாச்சாரத்தை மாற்றி அமைத்து வாழ்ந்தார்கள் . ஆனால் வயதான காலத்தில் வளரும் இளைஞர்களை குறை சொல்லி வாழ்வதே வேலையாய் போச்சு . நின்னா குத்தம் , நடந்தா குத்தம்,ஆடுனா,பாடினா போதும் “அந்த காலத்துல நாங்களேல்லாம்ம்ம்ம்ம்” என்று ஆரம்பித்து விடுவது . அந்த காலத்துல நீங்க என்ன கிழிச்சீங்கனும் உங்கள பெத்தவங்கள கேட்டால் நாறிவிடும் சேதி


சினிமா நாயகி ஆடைகுறைப்பு செய்தால் கலாச்சார சீரழிவாம் ,அதுவும் இப்பத்தான் இப்படியெல்லாம் நடக்குதாம். என்ன கொடுமை ??? ,சினிமா ஆரம்பித்த காலமுதலே ஆடை குறைந்து கொண்டே வந்துள்ளது என்பதுதான் உண்மை. உங்க காலத்து நாயகி “ஸ்லிவ் லஸ்” போட்டு வந்தபோது பார்த்து நீங்கள் ஜொல்ளு விட்டது சரி , ஆனா நயந்தாரா “டூ பீஸ்ல” வந்தா குத்தமா ????


அந்த காலத்து கருப்பு வெள்ளை படம் ஒன்றில் நாயகன் இளம் “ஜெமினி கனேசன்” தான் ஒரு வேற்று ஜாதி பெண்ணை காதலிப்பதாக சொல்ல அப்போது அவரின் தந்தை கோவப்பட , உடனே ஜெமினி சொல்வார் “உலகம் எங்கேயோ போய்கிட்டு இருக்கு இந்த காலத்துல போய் ஜாதி வித்தியாசமெல்லாம் பார்க்கலாமா ???” என்று கேட்பார் , அதே ஜெமினிகனேசன் “உன்னால்முடியும் தம்பி” படத்தில் இளம் கமலஹாசனுக்கு தந்தையாக(வயதான) வேடத்தில் நடித்திருப்பார்.கமல் சேரி பெண்ணான சீதாவை காதலிப்பதாக சொல்ல “சேரி பெண்ணை தொடுவதே தீட்டு நீ காதலிக்கிறாயா???” என்று எதிர்ப்பு தெரிவிப்பார். பாருங்க மக்களே , இங்கே மாறியது எது ?? கலாச்சாரமா ? இளைஞனா?? வயதானவுடன் தாங்கள் தான் ஏதோ கலாச்சார காவலர்கள் என்பது போல காட்டிக்கொள்ள முயர்ச்சி செய்கிறார்கள் அவ்வளவே


கலாச்சார மாற்றம் ஒரே இரவில் நடப்பது அல்ல , மெல்ல மெல்ல மாறிகொண்டே வருவது . மாற்றம் என்ற சொல்லை தவிர எல்லாமே மாற்றம் அடைய கூடியவை என்பதே உண்மை இதில் கலாச்சாரம் மட்டும் விதிவிலக்கு அல்ல. எனவே முடிந்த அளவிற்க்கு அவர்களின் கலாச்சாரத்தோடு கலந்து வாழ பழகுங்கள் , இல்லையேல் அவர்களுக்கு அவர்கள் கலாச்சாரம் , உங்களுக்கு உங்கள் கலாச்சாரம் என்று இருந்து விடுங்கள்

இதை ஏன் இப்ப சொல்கிறேன் என்றால் என் போன்ற குழந்தைகள் வளர்ந்து இளைஞர்களாக மாறும் போது யாரும் குறை சொல்லிவிட கூடாது அல்லவா அதுக்குத்தான்……


இப்படிக்கு
வருத்தபடாத “வருங்கால வாலிபர்” சங்கம் , சிங்கப்பூர்

(கண்டிப்பாக வருங்கால வாலிபர்கள் மட்டுமே சங்கத்தில் சேர்த்து கொள்ள படுவார்கள், தொடர்புக்கு சங்க தலைவரை ( நான்தான் நான்தான்) அனுகவும்)



22 comments:

  1. பொறுத்தது போதுமுன்னு

    பொங்கிட்டியலோ!

    ReplyDelete
  2. \\என் போன்ற குழந்தைகள் வளர்ந்து இளைஞர்களாக மாறும் போது யாரும் குறை சொல்லிவிட கூடாது அல்லவா அதுக்குத்தான்……\\

    குழந்தைகள் கலாச்சாரமுன்னு நான் ஒரு பதிவு போடனுமோ!

    ஏன் ஜொள்றேன்னா ... சரி விடுங்க

    ReplyDelete
  3. //“ஸ்லிவ் லஸ்” போட்டு வந்தபோது பார்த்து நீங்கள் ஜொல்ளு விட்டது சரி , ஆனா நயந்தாரா “டூ பீஸ்ல” வந்தா குத்தமா ????//

    சாட்டையடிக் கேள்விகள். தம்பி ! நான் உன் கட்சி !

    ReplyDelete
  4. ////நட்புடன் ஜமால் said...
    பொறுத்தது போதுமுன்னு

    பொங்கிட்டியலோ!
    //////

    மனோகரா?!?!?!?!?

    (எங்கே ஆன்லைனில் காணவில்லை)

    ReplyDelete
  5. ////
    //“ஸ்லிவ் லஸ்” போட்டு வந்தபோது பார்த்து நீங்கள் ஜொல்ளு விட்டது சரி , ஆனா நயந்தாரா “டூ பீஸ்ல” வந்தா குத்தமா ????//

    சாட்டையடிக் கேள்விகள். தம்பி ! நான் உன் கட்சி !////
    /////


    இது ஒரு கொள்கை கூட்டணி
    (நயந்தாரா பெயரை கேட்டது கட்சியில சேர்ந்துடியளோ???)

    ReplyDelete
  6. //இது ஒரு கொள்கை கூட்டணி
    (நயந்தாரா பெயரை கேட்டது கட்சியில சேர்ந்துடியளோ???)//

    ஆமாம் ஆமாம் பேத்திப் பெயரைப் போட்டு இருக்கிகளே, சங்கத்துல சேராமல் இருப்போமா ?

    //இப்படிக்கு
    வருத்தபடாத “வருங்கால வாலிபர்” சங்கம் , சிங்கப்பூர்//

    நிகழ்காலத்துல வாலிபர் இல்லையா ?

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  7. நயந்தாரா பெயரை சொன்னதால் உங்களுக்கு கலாச்சார காவலர்களிடம் இருந்து பொது மன்னிப்பு கிடைக்கும். கவலை வேண்டாம் :-))

    ReplyDelete
  8. உண்மைத்தான்.....

    இப்ப எல்லாவற்றையும் தாங்கும் பக்குவம் இருக்கு எதையும் நல்லா ஆராய்ந்து முடிவு எடுக்கும் தைரியம் இருக்கு தன்னிச்சையா இயங்கும் துணிச்சலும் இருக்கு.....ஊரோடு சேர்ந்து வாழனும் என்னும் போது என்ன செய்வது அதுக்குத் தான் இந்த கலாச்சாரப்பாட்டு...மத்தபடி இப்ப பெரிசா மாறி இருப்பது பெரியவர்கள் தான்...அவர்களின் மாற்றம் தான் நம்மை இந்த அளவு மாறவும் அனுமதித்து இருக்கு என்பது மறுக்கமுடியாது..

    ReplyDelete
  9. என்ன நண்பரே கொஞ்சநாளா ஆளை காணவில்லை

    ReplyDelete
  10. //தன் பெற்றோர்கள் பின்பற்றிய கலாச்சாரத்தை முழுதாக (100 %) பின்பற்றியது இல்லை . அவரவர் அவரவர் வசதிக்கும் , வாழும் சூழலுக்கும் ஏற்ப தங்கள் கலாச்சாரத்தை மாற்றி அமைத்து வாழ்ந்தார்கள் //

    சரியான அலசல்தான் நண்பா

    ReplyDelete
  11. //அவரவர் அவரவர் வசதிக்கும் , வாழும் சூழலுக்கும் ஏற்ப தங்கள் கலாச்சாரத்தை மாற்றி அமைத்து வாழ்ந்தார்கள் . ஆனால் வயதான காலத்தில் வளரும் இளைஞர்களை குறை சொல்லி வாழ்வதே வேலையாய் போச்சு .

    அப்ப நீங்களும் வயசான பிறகு இந்த பாட்டை பாடப்போறீங்க.

    //ஆனா நயந்தாரா “டூ பீஸ்ல” வந்தா குத்தமா ????

    ஆனா அதை காரணமா வச்சிட்டு, வேண்டாத எண்ணங்கள் உருவாகுது பாருங்க அப்போதான் அது தப்பாக படுகிறது.

    //இதை ஏன் இப்ப சொல்கிறேன் என்றால் என் போன்ற குழந்தைகள் வளர்ந்து இளைஞர்களாக மாறும் போது யாரும் குறை சொல்லிவிட கூடாது அல்லவா அதுக்குத்தான்……

    உங்களை யாரு சொல்லுவா தம்பி. நீங்கயெல்லாம் சமத்து குழந்தை தானே.
    (ஒங்களுக்கு மாத்திரம் தான் பொய் சொல்ல தெரியுமோ?)

    ReplyDelete
  12. //////
    ஆமாம் ஆமாம் பேத்திப் பெயரைப் போட்டு இருக்கிகளே, சங்கத்துல சேராமல் இருப்போமா ?
    ////

    ஒப்புகொண்டால் சரி (நயனை உங்கள் பேத்தி என்று



    //இப்படிக்கு
    வருத்தபடாத “வருங்கால வாலிபர்” சங்கம் , சிங்கப்பூர்//

    நிகழ்காலத்துல வாலிபர் இல்லையா ?

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    //////


    நாங்களெல்லாம் எப்போதுமே குழந்தைகள்(வருங்கால வாலிபர்கள்)

    ReplyDelete
  13. ////
    ’டொன்’ லீ said...
    நயந்தாரா பெயரை சொன்னதால் உங்களுக்கு கலாச்சார காவலர்களிடம் இருந்து பொது மன்னிப்பு கிடைக்கும். கவலை வேண்டாம் :-))
    ////

    அப்படியே ஆகட்டும்

    ReplyDelete
  14. ////
    தமிழரசி said...
    உண்மைத்தான்.....

    இப்ப எல்லாவற்றையும் தாங்கும் பக்குவம் இருக்கு எதையும் நல்லா ஆராய்ந்து முடிவு எடுக்கும் தைரியம் இருக்கு தன்னிச்சையா இயங்கும் துணிச்சலும் இருக்கு.....ஊரோடு சேர்ந்து வாழனும் என்னும் போது என்ன செய்வது அதுக்குத் தான் இந்த கலாச்சாரப்பாட்டு...மத்தபடி இப்ப பெரிசா மாறி இருப்பது பெரியவர்கள் தான்...அவர்களின் மாற்றம் தான் நம்மை இந்த அளவு மாறவும் அனுமதித்து இருக்கு என்பது மறுக்கமுடியாது..
    ////

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  15. வாங்க அக்கா வாங்க


    ////
    அப்ப நீங்களும் வயசான பிறகு இந்த பாட்டை பாடப்போறீங்க.
    ////

    கண்டிப்பாக மாட்டேன்
    என் வாழ்நாள் நிகழ்வுகள் எடையும் மறக்க விரும்பாதவன் நான்
    நான் குழந்தையாக இருந்த போது என் மனம் எப்படி இருந்தது என்பதை உணர்ந்து அந்த கோணத்தில்தான் மற்ற குழந்தைகளை பார்ப்பேன்

    ReplyDelete
  16. ////
    //ஆனா நயந்தாரா “டூ பீஸ்ல” வந்தா குத்தமா ????

    ஆனா அதை காரணமா வச்சிட்டு, வேண்டாத எண்ணங்கள் உருவாகுது பாருங்க அப்போதான் அது தப்பாக படுகிறது.///

    நயன் ஒரு உதாரணம் மட்டுமே
    கலாச்சார மாற்றம் என்பது உடனே நிகழாது , அதற்க்கு குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் காரணம் என்று சொல்ல முடியாது , அதில் எல்லோருக்கும் பங்கு உண்டு என்பதே நான் சொல்லவந்தது

    ReplyDelete
  17. ///
    ஆ.ஞானசேகரன் said...
    என்ன நண்பரே கொஞ்சநாளா ஆளை காணவில்லை
    ////

    சும்மா உல்லுலாய்
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  18. / நட்புடன் ஜமால் said...

    பொறுத்தது போதுமுன்னு

    பொங்கிட்டியலோ!/


    repeattuuuuuu!

    ReplyDelete
  19. ////
    நிஜமா நல்லவன் said...
    / நட்புடன் ஜமால் said...

    பொறுத்தது போதுமுன்னு

    பொங்கிட்டியலோ!/


    repeattuuuuuu!
    ////

    வாங்க நல்லவன்

    ReplyDelete
  20. நன்றி தமிழர்ஸ்

    ReplyDelete
  21. // என் போன்ற குழந்தைகள் //

    ;-)

    ReplyDelete
  22. கிரி said...
    // என் போன்ற குழந்தைகள் //

    ;-)
    /////////


    சீரியசா பேசுரப்போ என்ன் சிரிப்பு???

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...