
பெண்ணை சுற்றி வட்டம்
இது யார் போட்ட சட்டம் ? !
உற்று கவனி தோழி
சுற்றிய சுவர்களேல்லாம்
இப்போ தரைமட்டம்
.
பெண்விடுதலை பெண்விடுதலை
பேச்செதற்கு
உன் விடுதலை உன் கையில்
கோழியல்ல பருந்து நீ !
சிறைக்கதவுகள் சிதறி
சில காலம் ஆச்சு
சிறகுகள் விரித்து பறந்து வா .... .....
.
.தாயாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் பெண் குழந்தைக்கு நல்ல படிப்பும் உலக அறிவும் கிடைக்க செய்ய வேண்டும் . அவர்களால் முடியும் , புடைவைக்கும் நகைக்கும் போராட நேரம் ஒதுக்கும் பெண்கள் இதற்க்கும் நேரம் ஒதுக்கலாம் .பெண்களுக்கு அதிக படிப்பெதற்கு என்று சொல்லும் அம்மாக்களையும் நான் பார்த்துள்ளேன்
.
கழுகு ஒன்றை கோழி போல வளர்த்தால் அது தனக்கு பறக்க தெரியும் என்பதையே மறந்துவிடும் , இங்கே வளர்ப்பு ரொம்ப முக்கியம் . பெண்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும் । கல்வி பெற்று , பொருளாதார ரீதியில் மற்றவர்கள் சார்பு இல்லாமல் இருந்தால் அங்கே சுதந்திரம் இருக்கும் . பெண்ககல்வி பல பிரச்சனைகளை தீர்க்கும் என்பது என் நம்பிக்கை
.
சில பெண்கள் ஆண்களை போல உடையணிவது , சிகையழங்காரம் செய்வது ,ஆண்களை கண்டாலே எதிர்ப்பது (தன் தனிபட்ட காயங்கள் காரணமாக), இவைகள்தான் பெண்ணியம் என்று எண்ணுவது சரியல்ல என்பதே என்கருத்து .பெண் பெண்ணாகவும் ஆண் ஆணாகவும் இருந்து சமஉரிமையோடு ,சுயமரியாதையோடும் வாழ்வதே இனிய இல்லறம் , இனிய சமுகம் ,இனிய வாழ்வு
.
.கவிதை தொடர் சங்கிலி பதிவுக்கு அழைத்த நான் தகுதியானவனா?- க்கு நன்றியை தெரிவிக்கும் வேளையில், சங்கிலி கோர்த்தவர்கள் பட்டியலும், .
மூன்றாம் வளையம் கோர்த்தவர் - Mahesh அடுத்து கவின் - யை அழைக்கிறேன் ।
।
।