Monday, November 01, 2010

சினிமா மெட்டுக்கு என் பாட்டு..


(ஒரு மீள் பதிவு) 
("காக்க காக்க" படத்தில் இருந்து "ஒன்றா இரண்டா ஆசைகள்" என்ற பாடலின் வரிகளூக்கு பதிலாக


குறிப்பு: சூர்யா,ஒரு மழை நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் ஜோதிகாவை பார்த்ததை(சரணம்1) திருமணம் முடிந்தபிறகு ஒருநாள் மழையில் நனைந்து வீட்டுக்கு வரும்போது நினைத்துப்பார்த்தல்(சரணம்2)

பல்லவி:

கனவா? நினைவா? என்றுதான்
எண்ணம் தோன்றுதே......
ஏனோ தெரியல..
அன்பே.. உன்னை கண்ட பின்
உலகம் மறந்ததே
எதுவும் புரியல.......

என்னருகில் ...............
நீயிருந்தால் ...................
நரகம்தான் சொர்க்கமாகுமே............

நீயின்றி ........
நான்வாழ்ந்தால் .........
சொர்க்கம்தான் நரகmமாகுமே..........
                                                               (கனவா...?)

சரணம் 1:

மேகங்கள் ஒன்று கூடியே
மழைப் பூவைத்தூவியே வாழ்த்திட
பனிக்கால பூக்களைப் போலவே
உன் தேக அங்கங்கள் நனைந்திட

மழை நீராய் நான் மாற
வரம் கேட்டு மனுபோட்டேன்
மழைத்துளியாய் நான்தங்க-உன்
மார்புக்கூட்டில் இடம்கேட்டேன்

மரக்கிளையில் தங்கிய ஒருதுளி - அது
தரையில் விழுந்து சிரிக்குதே
மழை நின்றதும்.....
நீயும் சென்றதும்....
தனிமை கொன்..றதும்....
                                                 (கனவா......)

சரணம் 2:

உன் ஈரக்கூந்தலை நீ துடைத்திட
என் மனமும் மழையினில் நனையுதே..
நீ ஓரப் பார்வைகள் பார்த்திட
ஒரு கோடி மின்னலும் மின்னுதே......

வசந்தத்தின் பூப்போல
வழியெங்கும் உன்வாசம் - நீ..
வாய் பேசா தருணாங்களில்
உன்வளையல்கள் அதுபேசும்

ஒருநாள் கண்ட வானவில்லை
மறுநாள் தேடி காத்திருந்தேன்
வழியில் வந்ததும்......
வணக்கம் சொன்னதும்.....
வயதை தின்றதும்......(கனவா?......)

************************************

மேலும் சில
**பார்த்த முதல் நாளே- சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள் - 2


***சுட்டும் விழிச்சுடரே- சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்- 3

****கண்டேன் கண்டேன்- சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்- 4


*********
பிரியமுடன் பிரபு ...

24 comments:

 1. good try dude... looks like you have a place in Tamil cini industry... :)

  ReplyDelete
 2. sஅருமை.... சூப்பர்..............
  நல்ல எதிர்காலம் உண்டு........
  நண்பரே...........

  ReplyDelete
 3. "ஸஸரிரி" கிரி said...

  good try dude... looks like you have a place in Tamil cini industry... :)
  ////

  நன்றிங்க

  ReplyDelete
 4. Dhayanithi Sriram ( Astro ) said...

  sஅருமை.... சூப்பர்..............
  நல்ல எதிர்காலம் உண்டு........
  நண்பரே...........
  ////

  நன்றிங்க

  ReplyDelete
 5. வித்தியாசமான முயற்சி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. உங்களுக்குள் இருக்கும் கவிஞரை அடிக்கடி உலா வர விடுங்கள்...

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. உங்களுக்குள் இருக்கும் கவிஞரை அடிக்கடி உலா வர விடுங்கள்...

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. நண்பா... வெகு அருமையான வரிகள்,,, நெஞ்சில் உள்ள ஈர நேசம் அழகாய் வர்ணித்து இருக்கிறீர்கள்...

  ReplyDelete
 9. நல்லாருக்குங்க பிரபு

  ReplyDelete
 10. அன்பின் பிரபு - நல்லாவே இருக்கு - யாரையாவது தொடர்பு கொள்ள வேண்டியது தானே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 11. அன்பரசன் said...

  வித்தியாசமான முயற்சி.
  வாழ்த்துக்கள்.
  //


  நன்றிங்க

  ReplyDelete
 12. Chitra said...

  உங்களுக்குள் இருக்கும் கவிஞரை அடிக்கடி உலா வர விடுங்கள்...

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
  ////

  நன்றிங்க
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. Lovable Soul said...

  நண்பா... வெகு அருமையான வரிகள்,,, நெஞ்சில் உள்ள ஈர நேசம் அழகாய் வர்ணித்து இருக்கிறீர்கள்...
  ////////

  நன்றிங்க

  ReplyDelete
 14. ஈரோடு கதிர் said...

  நல்லாருக்குங்க பிரபு
  ///

  நன்றிங்க அண்ணே

  ReplyDelete
 15. cheena (சீனா) said...

  அன்பின் பிரபு - நல்லாவே இருக்கு - யாரையாவது தொடர்பு கொள்ள வேண்டியது தானே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
  ////

  வாழ்த்துக்கு நன்றிங்க அய்யா

  ReplyDelete
 16. சிங்கையில மழைபெய்யுதுல்ல அதான் பயபுள்ள இப்புடி எழுத ஆரம்பிச்சிடுச்சு... :-)

  சீக்கிரம் கல்யாணம் பண்ணி வையுங்கப்பா... :-)))

  ReplyDelete
 17. ரோஸ்விக் said...

  சிங்கையில மழைபெய்யுதுல்ல அதான் பயபுள்ள இப்புடி எழுத ஆரம்பிச்சிடுச்சு... :-)
  /////
  மழை மட்டும் தானே ...

  ///
  சீக்கிரம் கல்யாணம் பண்ணி வையுங்கப்பா... :-)))
  ///

  குழந்தை திருமணம் செல்லாதுங்க ஓய்......

  ReplyDelete
 18. ரோஸ்விக் said...

  சிங்கையில மழைபெய்யுதுல்ல அதான் பயபுள்ள இப்புடி எழுத ஆரம்பிச்சிடுச்சு... :-)
  /////
  மழை மட்டும் தானே ...

  ///
  சீக்கிரம் கல்யாணம் பண்ணி வையுங்கப்பா... :-)))
  ///

  குழந்தை திருமணம் செல்லாதுங்க ஓய்......

  ReplyDelete
 19. Hi priyamudanprabu,

  Congrats!

  Your story titled 'சினிமா மெட்டுக்கு என் பாட்டு..' made popular by Indli users at indli.com and the story promoted to the home page on 2nd November 2010 10:21:03 AM GMT  Here is the link to the story: http://ta.indli.com/story/362753

  Thanks for using Indli

  Regards,
  -Indli
  //////////////


  ஓட்டுபோட்ட அனைவருக்கும் நன்றி

  ReplyDelete
 20. தமிழர்களின் சிந்தனை களம் said...
  nice

  http://usetamil.forumotion.com


  ////

  நன்றிங்க

  ReplyDelete
 21. நல்ல கவிதைத்தனமா இருக்கு... பாராட்டுக்கள்.
  உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. சி. கருணாகரசு said...

  நல்ல கவிதைத்தனமா இருக்கு... பாராட்டுக்கள்.
  உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

  ////

  நன்றிங்க

  ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...