Tuesday, December 22, 2009

இது மரணம் சம்பவித்த வீடு ...







இது மரணம் சம்பவித்த வீடு
சுற்றமும் சூழமும்
சோகத்தோடு நிற்க
அழுதுகொண்டிருக்கிறார்கள் - என்
அன்பு மனைவியும் மகளும்
கலங்கி நிற்கிறான் மகன்
அள்ளி அணைத்து
ஆறுதல் மொழி சொன்னேன்
வாழநாளெல்லாம் காட்டாத அன்பை
காட்ட முயன்றேன் - ஆனால்
என் மொழி புரியவில்லை அவர்கட்கு
வேறு என்ன செய்ய முடியும்
கண்ணாடி பெட்டிக்குள் கிடக்கும் என்னால் ?!?!?




(என்னவோ எழுதியிருக்கேன் , மீதிய நீங்களே சொல்லுங்க)
என்றென்றும் பிரியமுடன் பிரபு ..

http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=6927


 http://www.tamilauthors.com/03/116.html

..

46 comments:

  1. கவிதை டெரராக இருக்கு !

    ReplyDelete
  2. கவிதை நல்லா இருக்கு வசந்த்.

    // இது மரணம் சம்பவித்த வீடு ..." //

    இதை நீங்கள் சொல்லாமலே இருந்திருக்கலாமே..படிக்கிறவங்க கொஞ்சமாவது யோசிக்கட்டுமே !!!

    ReplyDelete
  3. ////
    கோவி.கண்ணன் said...

    கவிதை டெரராக இருக்கு !
    ////

    நன்றி

    என்னைய வச்சு காமெடி கிமெடி பன்னலையே?!?!!?

    ReplyDelete
  4. அ.மு.செய்யது said...

    கவிதை நல்லா இருக்கு வசந்த்.

    // இது மரணம் சம்பவித்த வீடு ..." //

    இதை நீங்கள் சொல்லாமலே இருந்திருக்கலாமே..படிக்கிறவங்க கொஞ்சமாவது யோசிக்கட்டுமே !!!

    ////

    அண்ணே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    அனாலும் நான் பிரியமுடன் வசந்த் இல்ல நான் பிரியமுடன் பிரபு

    ReplyDelete
  5. செய்யது சொல்லிட்டானே ... ச்சே முந்திகிட்டான்ப்பா

    (ஹா ஹா ஹா ”பிரிய” பேர பார்த்தவுடன் வசந்த் ...)

    -----------------

    பிரபு இதே போன்று கட்டுரை வடிவில் நான் துவங்கியது ட்ராஃப்ட்டிலேயே பழைய ப்லாக்கோடு சேர்ந்து போயிடிச்சி.

    ReplyDelete
  6. //வேறு என்ன செய்ய முடியும்
    கண்ணாடி பெட்டிக்குள் கிடக்கும் என்னால் ?!?!?//

    என்ன பாஸ்....கவிதை என்னவோ நல்லாதான் இருக்கு..ஆனா ஏன் இந்த பீலிங்க்ஸ் :)

    ReplyDelete
  7. மரணம் சம்பவித்த வீடு ஒரு மரண நிகழ்வின் அதுவும் மரணமானவரின் உணர்வகளின் வெளிப்பாடென எழுதியுள்ளீர்கள். சிந்தனை புதிதாயுள்ளது.
    பாராட்டுக்கள் பிரபு.

    சாந்தி

    ReplyDelete
  8. நல்லத்தான் இருக்கு....
    வேர என்ன சொல்ல.....

    ReplyDelete
  9. நன்றாகச் சொல்லி யுள்ளீர்கள்

    //இதை நீங்கள் சொல்லாமலே இருந்திருக்கலாமே..படிக்கிறவங்க கொஞ்சமாவது யோசிக்கட்டுமே !!!//

    உண்மை தான்

    ReplyDelete
  10. அருமை பிரபு.

    ReplyDelete
  11. ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  12. ...
    நட்புடன் ஜமால் said...

    செய்யது சொல்லிட்டானே ... ச்சே முந்திகிட்டான்ப்பா

    (ஹா ஹா ஹா ”பிரிய” பேர பார்த்தவுடன் வசந்த் ...)

    /////////

    நன்றி நண்பா




    -----------------
    ///
    பிரபு இதே போன்று கட்டுரை வடிவில் நான் துவங்கியது ட்ராஃப்ட்டிலேயே பழைய ப்லாக்கோடு சேர்ந்து போயிடிச்சி.
    ////

    அடடே
    திரும்பவும் முயர்சிக்கலாமே?!?

    ReplyDelete
  13. பூங்குன்றன்.வே said...

    //வேறு என்ன செய்ய முடியும்
    கண்ணாடி பெட்டிக்குள் கிடக்கும் என்னால் ?!?!?//

    என்ன பாஸ்....கவிதை என்னவோ நல்லாதான் இருக்கு..ஆனா ஏன் இந்த பீலிங்க்ஸ் :)
    ////


    கற்பனைதான்

    ReplyDelete
  14. ////
    தமிழ்குறிஞ்சி said...

    தங்களது கவிதையை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கவிதைகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    அன்புடன்,
    ஆசிரியர்,
    தமிழ்குறிஞ்சி
    ////

    நன்றி

    ReplyDelete
  15. ///
    சாந்தி ரமேஷ் வவுனியன் said...

    மரணம் சம்பவித்த வீடு ஒரு மரண நிகழ்வின் அதுவும் மரணமானவரின் உணர்வகளின் வெளிப்பாடென எழுதியுள்ளீர்கள். சிந்தனை புதிதாயுள்ளது.
    பாராட்டுக்கள் பிரபு.

    சாந்தி
    ////

    வாங்க சகோதரி நன்றி

    ReplyDelete
  16. negamam said...

    நல்லத்தான் இருக்கு....
    வேர என்ன சொல்ல.....
    ////


    நன்றி பாலா

    ReplyDelete
  17. ////
    திகழ் said...

    நன்றாகச் சொல்லி யுள்ளீர்கள்

    //இதை நீங்கள் சொல்லாமலே இருந்திருக்கலாமே..படிக்கிறவங்க கொஞ்சமாவது யோசிக்கட்டுமே !!!//

    உண்மை தான்
    ////

    நன்றி திகழ்

    ReplyDelete
  18. யாநிலாவின் தந்தை said...

    நன்றாக இருக்கிறது...
    ////

    நன்றி

    ReplyDelete
  19. வானம்பாடிகள் said...

    அருமை பிரபு.
    .////

    நன்றிங்க

    ReplyDelete
  20. kamalesh said...

    ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்..
    ...


    நன்றிங்க

    ReplyDelete
  21. நெஞ்சுருக்கும் கவிதை. தலைப்பை இறுதி வரியாக வைத்திருந்தாள் இன்னும் மெருகேறி இருக்கும்.

    ReplyDelete
  22. Chitra said...

    நெஞ்சுருக்கும் கவிதை. தலைப்பை இறுதி வரியாக வைத்திருந்தாள் இன்னும் மெருகேறி இருக்கும்.
    ////

    முதல் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  23. கவிதை மிக அருமைங்க.... பிரபு.

    ReplyDelete
  24. கவிதை நன்றாக இருக்கின்றது.
    நான் இதே மாதிரி ஒரு கதை படித்தேன்.

    இருக்கும் போது நல்ல சந்தோஷமா , அன்பா பழகினா நாம் எதையும் இழக்கமாட்டோம். ஆனா சின்னதா ஒரு சிரிப்பு சிரிக்கிறதுக்கு அவ்ளோ வருத்தம் நமக்கு.

    ReplyDelete
  25. ///
    kunthavai said...

    கவிதை நன்றாக இருக்கின்றது.
    நான் இதே மாதிரி ஒரு கதை படித்தேன்.

    இருக்கும் போது நல்ல சந்தோஷமா , அன்பா பழகினா நாம் எதையும் இழக்கமாட்டோம். ஆனா சின்னதா ஒரு சிரிப்பு சிரிக்கிறதுக்கு அவ்ளோ வருத்தம் நமக்கு.
    ///

    வழ்க்கை ஒரு முறைதான் அன்பு செலுத்தி அன்போடு வாழ்வோம்

    ReplyDelete
  26. கவிதை நல்லா இருக்கு!

    ReplyDelete
  27. கவிதை நல்லா இருக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  28. வித்தியாசமான சிந்தனையின் வெளிப்பாடு இந்த கவிதை

    இது மாதிரி நிறைய ட்ரை பண்ணுங்க‌

    ReplyDelete
  29. சி. கருணாகரசு said...

    கவிதை மிக அருமைங்க.... பிரபு.
    ////

    நன்றிங்க சி. கருணாகரசு

    ReplyDelete
  30. அத்திரி said...

    super

    ///


    நன்றி

    ReplyDelete
  31. RAMYA said...

    கவிதை நல்லா இருக்கு வாழ்த்துக்கள்!!
    ///
    வாங்க ரம்யா

    ReplyDelete
  32. ஒரு கருவெடுத்துச் சொல்லிய விதம் அருமை பிரபு.

    ReplyDelete
  33. சிங்கக்குட்டி said...

    புதுவருட வாழ்த்துகளுடன் உங்களுக்கு என் சிறிய பரிசு :-)

    http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_25.html

    ////

    நன்றிங்க

    ReplyDelete
  34. வசந்த்! எங்கேயோ போய்விட்டீர்!!!

    ReplyDelete
  35. தேவன் மாயம் said...

    வசந்த்! எங்கேயோ போய்விட்டீர்!!!

    ./////

    அய்யா நீங்களுமாஅ???

    நான் வசந்த் இல்ல பிரபு
    (இதுக்கே தனி பதிவு போடனும் போல)

    என் பதிவை படித்துவிட்டு வசந்தை பாராட்டினால் எப்படி???


    சரி பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete
  36. ஹேமா said...

    ஒரு கருவெடுத்துச் சொல்லிய விதம் அருமை பிரபு.
    ////

    நன்றி ஹேமா

    ReplyDelete
  37. கவிதை பிடிச்சிருக்கு வசந்த்!அடச்சே..பிரபு!

    செய்யதுக்கு ஏற்பட்ட பெயர் குழப்படி எனக்கும் உண்டு.எல்லாம் இந்த பிரியம் பண்ணுகிற குழப்பம்தான்.

    பிரியமுடன் ராஜாராம்! :-)

    ReplyDelete
  38. நன்றி ராஜாராம்

    ReplyDelete
  39. இளம் வயதில் ஏன் இந்த சோகம்....
    கவிதை அருமை...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  40. வேலன். said...

    இளம் வயதில் ஏன் இந்த சோகம்....
    கவிதை அருமை...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    27 December 2009 9:12 AM
    ///////

    சோகம் இல்லை

    பாசத்தை காட்டவேண்டிய நேரத்தில் காட்டாமல் பின் வருந்தி பயன் இல்லை என்பதை சொல்லவே இந்த கற்பனை

    ReplyDelete
  41. கவிதை ரொம்ப சோகம் கூட்டுது பிரபு சொல்லப்படாத பாசம் அப்படித்தான்


    புத்தாண்டு வாழ்த்துக்கள் பிரபு

    ReplyDelete
  42. thenammailakshmanan said...

    கவிதை ரொம்ப சோகம் கூட்டுது பிரபு சொல்லப்படாத பாசம் அப்படித்தான்


    புத்தாண்டு வாழ்த்துக்கள் பிரபு
    //////////

    நன்றி

    ReplyDelete
  43. sornavalli said...

    sema feelings pa
    ///////

    ம்ம்ம் ஆமாங்க

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...