Wednesday, December 24, 2008

அடியே கண்ணம்மா.................24/12/2008

.



அடியே கண்ணம்மா
தூக்கத்த விட்டுப்புட்டு
துள்ளி எழுந்து படிபுள்ள..........


“ஆ(ண்)ம்புள்ளை பெத்திருந்தா
அரவணைச்சு பாத்துக்குவா(ன்)
பொட்டைய பெத்துட்டியே......
போதாத காலம்தான் இனி உனக்கு” - என்று
பேசிய வாய்க்கெல்லம்
டார்ச் அடிச்சு பாக்கவேணும்
டாக்டராகி நீயும் வா!

பெத்தவ(ன்) போயிட்டான்
சாமியின்னு ஆயிட்டான்
ஒத்தையில் நாநின்னு
ஒருவேல சோறுதின்னு

ஒவ்வொண்னா சேத்துவச்சே(ன்)
மெத்த வீடுவேண்டாம்
மேணிகொழுக்கதீணி வேண்டாம்-இந்த
கட்ட வேகுமுன்னே-நீ
டாக்டராகி காட்டிபுடு.....
பக்கத்துவீட்டு பார்வதியின்
சொத்த பல்லுக்கும்
மூலவீட்டு மாலதியின்
மாலகண்ணூக்கும்
நீதான்டீ காவலு
கண்விழிச்சு எழுந்துவா.......

கான்மெண்டே பாக்காத
காட்டுபய ஊருக்குள்ளே
காலேஜு போறபுள்ள
மாட்ட மேய்க்கிற மனுசனுக்கும்
மனுசன எய்க்கிற மாட்டுக்கும்
மருத்துவச்சி நீதான்டீ
மணியாச்சு எழுந்துவா.............


...................................................................
படிச்சீங்களா...........
அப்படியே ஓட்டுபோட்டுட்டு போங்க
...................................................................


http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=1531



29 comments:

  1. பிரபு, ரெம்ப அழகா எழுதியிருக்கீங்க.

    இந்த வார்த்தைக்கு அர்த்தம் புரியவில்லை.
    //கால்மெண்டு

    ஆனாலும் பெண் பிள்ளைகளை பாரமாக நினைத்த காலமெல்லாம் மலையேறி போச்சு என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. /////////////
    இந்த வார்த்தைக்கு அர்த்தம் புரியவில்லை.
    //கால்மெண்டு
    //////////////////

    கால்மெண்டு என்று நான் எழுதியது
    ஆங்கிலப்பள்ளி என்ற அர்த்தத்தில்
    சரிதான் என்று நினைக்கிறேன்


    /////////
    ஆனாலும் பெண் பிள்ளைகளை பாரமாக நினைத்த காலமெல்லாம் மலையேறி போச்சு என்று நினைக்கிறேன்.
    //////

    ஆமாம்
    மேலும் இதை நான் எழுதி பலவருடங்கள் ஆகிவிட்டன இப்போதுதான் பதிவில் இட்டுள்ளேன்

    ReplyDelete
  3. //கால்மெண்டு என்று நான் எழுதியது
    ஆங்கிலப்பள்ளி என்ற அர்த்தத்தில்
    சரிதான் என்று நினைக்கிறேன்

    convent = கால்மெண்டு ?
    I don't know.

    //இதை நான் எழுதி பலவருடங்கள் ஆகிவிட்டன

    Ahhhh....grandpa!

    ReplyDelete
  4. குந்தவை

    ///
    convent = கால்மெண்டு ?
    I don't know.
    ////

    சரிதான்
    பேச்சு வழக்கில் கால்மெண்டு என்று சொல்வதுண்டு

    சரி கான்வெண்ட் என மாற்றி விடுகிறேன்

    உங்களுக்கு நன்றி

    ReplyDelete
  5. மிக்க நன்றி நாடோடி இலக்கியன்

    (நல்ல பெயர்)

    ReplyDelete
  6. நல்ல கவிதை பிரபு!! வாழ்த்துக்கள்!

    //ஆ(ண்)ம்புள்ளை பெத்திருந்தா
    அரவணைச்சு பாத்துக்குவா(ன்)பொட்டைய பெத்துட்டியே......போதாத காலம்தான் இனி உனக்கு” -
    என்றுபேசிய வாய்க்கெல்லம்டார்ச் அடிச்சு பாக்கவேணும்டாக்டராகி நீயும் வா!//

    ஆரம்பமே அமர்க்களம்!

    ReplyDelete
  7. //
    நல்ல கவிதை பிரபு!! வாழ்த்துக்கள்!
    //

    நன்றி புவனேஸ்

    ReplyDelete
  8. உங்கள் கவிதை அருமை பிரபு. நீங்கள் எழுதி இருந்த விதமும் அருமை.

    ReplyDelete
  9. ///
    உங்கள் கவிதை அருமை பிரபு. நீங்கள் எழுதி இருந்த விதமும் அருமை.
    ///

    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்
    நன்றி

    ReplyDelete
  10. கிராமிய நடையில அழகான கவிதை பிரபு. வாழ்த்துகள்

    ReplyDelete
  11. கிராமிய நடையில அழகான கவிதை பிரபு. வாழ்த்துகள்

    ReplyDelete
  12. நன்றி பிரேம்குமார்

    ReplyDelete
  13. அன்பிற்கினிய அன்பர் பிரபு அவர்களே வாழ்த்துக்கள் என்பதும் சரியே வாழ்த்துகள் என்பதும் சரியே. இருப்பினும் உங்கள் கருத்துரைக்கு நன்றி..

    ReplyDelete
  14. நன்றி தாய்மொழி

    ReplyDelete
  15. அடடே...மண் வாசனை! அருமை பிரபு... வைரமுத்துவின் கருவாச்சி காவியம் படித்த உணர்வு ஏற்படுகிறது! :)

    நிறைய நீங்க எழுதனும்..
    நாங்க அத படிக்கனும் :))

    ReplyDelete
  16. அழகான கவிதைகளும் எழுதியாயிற்று

    விருதகள் வாங்கியாச்சு ...


    அமைதியா இருந்தா எப்படி ...

    இன்னும் எழுதுங்கள் ...

    ReplyDelete
  17. எனக்கு தெரிந்து முதல் முறையாக பெண்ணின் படத்தை திருப்பு போட்டு இருக்கீங்க.. அதுக்காகவே பின்னூட்டம்.. கவிதை ரொம்ப நல்லா இயல்பாக இருக்கு..

    இப்படிப்பட்ட கவிதைகள் நிறைய எழுதலாமே...

    ReplyDelete
  18. என்னுடம் பட்டாம்பூச்சி விருதை நீங்களும் பகிர்ந்துக்க வாங்களேன்.
    http://tharanipriyacbe.blogspot.com/2009/01/blog-post_09.html

    ReplyDelete
  19. அருமை பிரபு, வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  20. ...
    அடடே...மண் வாசனை! அருமை பிரபு... வைரமுத்துவின் கருவாச்சி காவியம் படித்த உணர்வு ஏற்படுகிறது! :)
    ,........

    நன்றி மலர்விழி
    எங்க ரொம்ப நாளா காணோமே?????



    ...
    நிறைய நீங்க எழுதனும்..
    நாங்க அத படிக்கனும் :))
    .....

    உங்க தலையெழுத்த மாத்த யாரால முடியும்......???????????!!!!!!!!!!1

    ReplyDelete
  21. ///
    ..
    அழகான கவிதைகளும் எழுதியாயிற்று

    விருதகள் வாங்கியாச்சு ...


    அமைதியா இருந்தா எப்படி ...

    இன்னும் எழுதுங்கள் ...
    //////

    உங்களை போன்றவர்கள் தொடர் ஆதரவு இருகும்வரை எல்லாம் நலமே

    இந்த வார இறுதியில் எழ்ழுதுகிறேன்

    ReplyDelete
  22. ///
    எனக்கு தெரிந்து முதல் முறையாக பெண்ணின் படத்தை திருப்பு போட்டு இருக்கீங்க.. அதுக்காகவே பின்னூட்டம்.. கவிதை ரொம்ப நல்லா இயல்பாக இருக்கு..
    ////


    நன்றி கவிதா..
    படத்தை திருப்பிபோட்டதில்
    உள்நோக்கம் எதும் இல்லை
    பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete
  23. /////
    என்னுடம் பட்டாம்பூச்சி விருதை நீங்களும் பகிர்ந்துக்க வாங்களேன்.
    http://tharanipriyacbe.blogspot.com/2009/01/blog-post_09.html

    /////

    நன்றி
    கரும்புதின்ன கூலியா.....
    வர்ரேன்

    ReplyDelete
  24. //
    அருமை பிரபு, வாழ்த்துக்கள்!!
    ///
    நன்றி திவ்யா

    ReplyDelete
  25. மிக அழகான கவிதை... என்ன ஒரு கருத்து? ம்ம்ம்... கிராமத்து வழக்கு சொற்கள் பயன்படுத்தி... அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. //ஆ(ண்)ம்புள்ளை பெத்திருந்தா
    அரவணைச்சு பாத்துக்குவா(ன்)பொட்டைய பெத்துட்டியே......போதாத காலம்தான் இனி உனக்கு” -
    என்றுபேசிய வாய்க்கெல்லம்டார்ச் அடிச்சு பாக்கவேணும்டாக்டராகி நீயும் வா!//

    அருமை அருமை

    ReplyDelete
  27. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரீனா

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...