Monday, December 15, 2008

சுட்டும் விழிச்சுடரே- பாட்டு மெட்டுக்கு என் வரிகள்---- 14/12/2008

..............................

கஜினி படப்பாடலான "சுட்டும் விழிச்சுடரே" பாடலின் மெட்டுக்கு என் வரிகள்
.............................


பல்லவி :


சிட்டு சிட்டு குருவி
நெஞ்சில் கொட்டும் அருவி
காணாவிட்டால் அவன் துறவி
இவளை
காணாவிட்டால் அவன் துறவி
உண் கண்ட நேரம்
கல்லுக்குள்ளும் ஈரம்
எந்தன் நெஞ்சில்
மழைவந்ததே - உன்னாலே
பாதையெங்கும்
பூவும் பூத்ததே........ (உன்னாலே ......)


(சிட்டு..............)






சரணம் 1 :

வெண்ணிலா ஓடக்கண்டேன்
என் விழி தேடக்கண்டேன்
இதுபோல
இன்பம் எங்குகொண்டேன்........

இருவிழி இமைக்கக் கண்டேன்
இருதயம் வெடிக்கக் கண்டேன்
இமையின்றி
வாழக் கற்றுக்கொண்டேன்........

தேர்போகும் தெருவோரம்
பக்தனைப் போல் காத்திருந்தேன்
பாவை பார்வைப் பட
பூத்திருந்தேன்......... (பாவை.......)

(சிட்டு சிட்டு குருவி..)



சரணம் 2 :

கடற்க்கரை ஈரக்காற்றே
கதைபேசும் தென்னங்கீற்றே
முதல்முறை
உன்னிடத்தில் தோற்றேன்......

பூப்போல் தேகம் கண்டேன்
புயல் போல வேகம் கொண்டேன்
பூகம்பத்தில்
நானும்மாட்டிக் கொண்டேன்........

அணைமீறும் நீரைபோல
என் மனமும் என்னை மீறுதே
கேட்க
யாருமின்றிசுற்றி திரியுதே!! ( கேட்க.......)
(சிட்டு சிட்டு...)
........................................................










17 comments:

  1. இருவிழி இமைக்கக் கண்டேன்
    இருதயம் வெடிக்கக் கண்டேன்
    இமையின்றி
    வாழக் கற்றுக்கொண்டேன்........

    Indha lines romba nalla iruku prabhu

    ReplyDelete
  2. Your lyrics almost exactly got
    super-imposed on the lines of "suttum vizhi sudare" song.

    By the way, how did u get the thought of writing a new lyric..??

    Pretty interesting and good try.

    Just a small correction..it should have been

    "கதைபேசும் தென்னங்கீற்றே"
    rather than..
    "கதைபேசும் தேன்னங்கீற்றே"

    ---Senthil

    ReplyDelete
  3. நல்ல முயற்சி!:)

    ReplyDelete
  4. /////////
    இருவிழி இமைக்கக் கண்டேன்
    இருதயம் வெடிக்கக் கண்டேன்
    இமையின்றி
    வாழக் கற்றுக்கொண்டேன்........

    Indha lines romba nalla iruku prabhu
    //////////////

    தங்களின் வருகைக்கும் பாராட்டும்
    நன்றி ஸ்ரீ

    ReplyDelete
  5. ///////
    "கதைபேசும் தென்னங்கீற்றே"
    rather than..
    "கதைபேசும் தேன்னங்கீற்றே"
    ////////

    நன்றி
    செந்தில்
    நானும் "கதைபேசும் தென்னங்கீற்றே"--என்றுதான் எழுத வந்து தட்டச்சுசெய்ததில் தவறாக செய்துவிட்டேன்
    உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete
  6. //////
    நல்ல முயற்சி!:)
    //////

    நன்றி தமிழ்மாங்கனி

    ReplyDelete
  7. ம்ம்ம் ...

    நல்லாயிருக்கு.

    ReplyDelete
  8. நன்றி அதிரை ஜமால்

    ReplyDelete
  9. நல்ல இருந்தது பிரபு
    நிறைய எழுதுங்க
    எழுத்து நடை நல்ல இருக்கு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. ////
    நல்ல இருந்தது பிரபு
    நிறைய எழுதுங்க
    எழுத்து நடை நல்ல இருக்கு
    வாழ்த்துக்கள்
    ////

    நன்றி ரம்யா .உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    ReplyDelete
  11. நல்லா இருக்கு...
    இன்னும் எழுதுங்கள்

    ReplyDelete
  12. நன்றி ஞானசேகரன்

    ReplyDelete
  13. நல்லா இருக்கு :)

    ReplyDelete
  14. ///
    நல்லா இருக்கு :)
    ///

    நன்றி பூர்னிமாசரண்

    ReplyDelete
  15. படிக்கும் போது என் விழிகள் இமைக்க மறந்தன..மிக நன்று! தொடருங்கள்:)

    ReplyDelete
  16. நன்றி மலர்விழி

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...