எங்க அம்மா செத்து போச்சு..(சிறுகதை)
(photo:google)
செருப்பைப் போட்டுக்கொண்டு வாசல் தாண்டி தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். நாம் எதிர்பார்ப்பதை விட காலம் வெகு வேகமாகத்தான் சென்றுவிடுகிறது, 2 வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு வந்திருப்பதால், ஊருக்குள் நிறைய மாற்றங்கள் தெரிகிறது. பாவாடை சட்டையோடு வீட்டு வெளித்திண்ணையில் பல்லாங்குழி விளையாடிய பெண்கள் தாவணி பாவாடையோடு ஓரக்கண்ணில் பார்ப்பது போல இருந்தது எங்க ஊர் எனக்கு.
காமாட்சி அம்மன் கோவில் தெரு தாண்டி பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் நுழைந்ததுமே "வா மாப்ள எப்ப வந்த..?" என்ற குரல் சற்றே துரத்தில் இருந்து வந்தது . குரல் வைத்தே அது கதிர் மாமாதான் என என்னால் யூகிக்க முடிந்தது, துரத்தில் இருந்து என்னை அடையாளம் கண்டு கூப்பிடுகிறார் .
கதிர் மாமா என்றதும் அவரின் சிரித்த முகமே எல்லோருக்கும் நினைவில் வரும், நான் கூட நினைப்பதுண்டு "எப்படித்தான் எந்த நேரமும் சிரித்த முகமாக இருக்க முடிகிறது" என்று, அதற்கு என் அம்மா சொல்வார் "அது சாமி கொடுத்த வரம்டா..." என்று
அவரை அருகில் சென்று பார்த்ததும் எனக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான், அவர் சிரித்தபடி இருந்தாலும் முகத்தில் அந்த இயல்பான சிரிப்பு இல்லை.
"என்ன மாமா ,உடம்பு சரியில்லையா ..முகமெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு?.."
"அட அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா , வயசாகிடுச்சுல்ல.." என்று சொல்லி சிரித்தவர்
"காலைலதான் வந்தியா .. அப்பா சொன்னாரு.." -என்று பேசிக்கொண்டே சட்டைப்பையில் இருந்த சாவியை எடுத்து வீட்டுக்கதவை திறந்து உள்ளே அழைத்தார்.
சிறிய ஓட்டில்வீடுதான்.தன் சாப்பாட்டு தூக்குபோணியை கழுவும் இடத்தில் வைத்துவிட்டு வந்தவர்
"காப்பி சாப்பிடுறியா மாப்ள .." என்றார்
"இல்ல மாமா வேணாம்"
" அட நான் நல்லத்தான் காப்பி போடுவேன் பயப்படாத" என்று சொல்லிவிட்டு சமையல்கட்டு பக்கம் சென்றார்.
ரொம்ப நாள் ஆச்சு இந்த வீட்டுக்
பெரியவன் "ஐ மாமா.." என்றபடி என்னை வந்து கட்டிக்கொண்டான்..சின்னவள் சோர்வாக தூக்க கலக்கத்தில் இருந்தாள்.எல்லோருக்கும் காப்பி கொண்டுவந்து கொடுத்தார் மாமா.
"சிக்கிரம் ட்ரஸ் மாத்தி
மாமா வந்ததும் அவர்களிடம் விடைபெற்றுkகொண்டு என் வீட்டுக்கு வந்தேன். முன்வாசலில் காய்கறி வெட்டிக்கொண்டிருந்த அம்மா என்னை பார்த்ததும்
"காப்பி போடட்டுமாப்பா.. " - என்றார் .
"இல்லம்மா இப்பத்தான் கதிர்மாமா வீட்டுல சாப்பிட்டேன் "
"ஓ அங்க போயிருந்தியாப்பா.. அவன பாத்தியா.." என்று கேட்டவர் என் பதிலுக்கு காத்திருக்காமல் தொடர்ந்தார் "ம்ம்ம் என்னமோ அவன் வாழ்க்கை இப்படி ஆச்சு ..அவனா ஆச பட்டுத்தான் அவள கட்டிகிட்டான் ,நல்லாத்தானே இருந்தா ..இப்படி பண்ணுவான்னு யாரு கண்டா !ரெண்டு புள்ளைய பெத்தவ, கூட வேல செய்யுற மேஸ்திரிய கூட்டிகிட்டு ஓடிட்டா ,என்ன திமிரு அவளுக்கு, அந்த ****பயலுக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு புள்ள இருக்கு, ரெண்டுக்கும் புத்தி போயிருக்கு பாரு..ம்ம்ம் உன்கிட்ட சொல்ல வேணாமுன்னு உங்க அப்பா சொன்னாரு அதனாலத்தான் போன்ல எதுவும் சொல்லல." என்று சொல்லிக்கொண்டே சமையலறைக்குள் சென்றார். எனக்கு ஏனோ அந்த பையனின் கண்ணும் "எங்க அம்மா செத்துப் போச்சு.." என்ற வார்த்தையும் எனக்கு மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தது..
என்றென்றும்
பிரியமுடன் பிரபு ..
.
அன்பிப்ன் பிரபு - நாட்டில் இயல்பாக நடக்கும் செயல்களைக் கருவாகக் கொண்டு புனையப்பட்ட கதை. ம்ம்ம்ம் - என்ன சொல்வது ....... இரு குழந்தைகளும், கதிரும் படும் பாடு ...... கதை நன்று பிரபு- நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteகதை நன்றாக இருக்கிறது... வாழ்த்துகள்..
ReplyDeleteஉங்கள் பிளாக் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்.
cheena (சீனா)Mar 12, 2012 06:04 PM
ReplyDeleteஅன்பிப்ன் பிரபு - நாட்டில் இயல்பாக நடக்கும் செயல்களைக் கருவாகக் கொண்டு புனையப்பட்ட கதை. ம்ம்ம்ம் - என்ன சொல்வது ....... இரு குழந்தைகளும், கதிரும் படும் பாடு ...... கதை நன்று பிரபு- நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
//
thank you