Monday, February 20, 2012

முதிர்கண்ணன் ...(100 வது பதிவு...)

முதிர்கண்ணன் ...



தங்கைக்கு மணமான பின்னே - எனக்குத்
தாரம் பார்க்கத் தயாரானோம்
ராகுவோ கேதுவோ எழரையோ
எதுவும்  பொருத்தமாகிப் போகல
செவ்வாயை வேறு சேர்த்துகிட்டு நிக்கிது....


முப்பதைத் தாண்டி வயசு
முழுமூச்சாய்  ஓடுது
முதிர்கன்னியா இருந்திருந்தா - சிலர்
கவிதைக்காவது கருவாகியிருப்பேன் - கிரகம்
ஆம்பிள்ளையா பிறந்திட்டேன்
அந்த தகுதியையும் இழந்திட்டேன்




****
முதிர்கன்னிகளுக்காக நிறைய கவிதைகள் இருக்கு..ஏனோ சரியான வயதில் மணம் ஆகாத ஆண்களுக்கு என்று கவிதை அதிகம் எழுதப்படுவதில்லை.. சாதகம் உள்ளிட்ட பல காரணங்களால்  திருமணம்  தள்ளிப்போனாலும் பெரும்பான்மை ஆண்களுக்கு திருமணம் தள்ளிபோக குடும்ப பொருளாதார நிலையே முக்கிய காரணமாக இருக்கு. அந்த நண்பர்களுக்காக இந்த கவிதை..
****
சச்சின் அடிப்பாருன்னு பார்த்தேன் அடிக்கல..:(
இது என்னுடைய 100 வது பதிவு.. :)



ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி..


****
பிரியமுடன் பிரபு......

****

 

24 comments:

  1. |\முதிர்கன்னியா இருந்திருந்தா - சிலர்
    கவிதைக்காவது கருவாகியிருப்பேன்||


    :-)))))

    100க்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. 100க்கு வாழ்த்துகள்!

    ஒரு ஆம்பளையோட மனசு இன்னொரு ஆம்பளைக்குத்தான் புரியும்னு நிரூபிச்சிட்டீங்க!

    ReplyDelete
  3. ஒரு ஆம்பளையோட மனசு இன்னொரு ஆம்பளைக்குத்தான் புரியும்னு நிரூபிச்சிட்டீங்க.

    சீக்கிரம் உங்க நண்பரும் மணநாள் காணட்டும்!

    ReplyDelete
  4. அண்ணனுக்கு திருமணம் ஆகவில்லைன்னு சிங்கைப் பதிவர் ஒருவர் காத்திருந்து 40 வயதை வெற்றிகரமாகக் கடந்தார்.

    அண்ணன்காரனுங்க கூட வில்லனாக இருக்கானுங்க

    ReplyDelete
  5. முரளிகண்ணன்Feb 19, 2012 07:59 PM
    |\முதிர்கன்னியா இருந்திருந்தா - சிலர்
    கவிதைக்காவது கருவாகியிருப்பேன்||


    :-)))))

    100க்கு வாழ்த்துக்கள்
    ////


    நன்றி

    ReplyDelete
  6. அருணையடிFeb 19, 2012 08:23 PM
    100க்கு வாழ்த்துகள்!

    ஒரு ஆம்பளையோட மனசு இன்னொரு ஆம்பளைக்குத்தான் புரியும்னு நிரூபிச்சிட்டீங்க!
    ///



    நன்றி...:)

    ReplyDelete
  7. அருணையடிFeb 19, 2012 08:29 PM
    ஒரு ஆம்பளையோட மனசு இன்னொரு ஆம்பளைக்குத்தான் புரியும்னு நிரூபிச்சிட்டீங்க.

    சீக்கிரம் உங்க நண்பரும் மணநாள் காணட்டும்!
    /////

    தனியாக யாருக்கும் இல்லை..எல்லோருக்குமாக...

    ReplyDelete
  8. கோவி.கண்ணன்Feb 19, 2012 09:21 PM
    அண்ணனுக்கு திருமணம் ஆகவில்லைன்னு சிங்கைப் பதிவர் ஒருவர் காத்திருந்து 40 வயதை வெற்றிகரமாகக் கடந்தார்.

    அண்ணன்காரனுங்க கூட வில்லனாக இருக்கானுங்க
    ///


    :)

    நான் வில்லனாக இல்லை...:)

    ReplyDelete
  9. நூறுக்கும் இனி வரப்போகும் ஆயிரத்துக்கும் என் அன்பான பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    கண்ணனின் கண்ணி விரைவில் கிடைக்க என் ஆசிகள்.

    ReplyDelete
  10. இந்த நூறுக்கும் இனி வரப்போகும் ஆயிரத்துக்கும் என் இனிய பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

    கண்ணனின் கண்ணி விரைவில் கண்ணில்பட என் ஆசிகள்.

    ReplyDelete
  11. அடடா இப்படி கூட பீலிங்கா

    நூறுக்கு வாழ்த்துகள் அண்ணே.

    ReplyDelete
  12. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார் !

    ReplyDelete
  13. எடுத்துக்கொண்ட கரு .. உண்மையிலே ஆச்சர்யமாக உள்ளது ..
    கவிதை உணர்த்தும் வலி வெளியே தெரியாத எத்தனை பேருக்கு இருந்திருக்கும் ..

    வாழ்த்துக்கள் படைப்புக்கும் , நூறுக்கும் ...

    ReplyDelete
  14. பிரபு, 100வது பதிப்புக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் பிரபு...

    ReplyDelete
  16. 100 வது பதிவுக்கு வாழ்த்துகள்!

    விரைவில் மண நாள் காண பிரார்த்தனைகள்...

    ReplyDelete
  17. தங்களது 100 க்கு எனது வாழ்த்துக்களும் சகோ

    ReplyDelete
  18. துளசி கோபால்Feb 19, 2012 10:06 PM
    நூறுக்கும் இனி வரப்போகும் ஆயிரத்துக்கும் என் அன்பான பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    கண்ணனின் கண்ணி விரைவில் கிடைக்க என் ஆசிகள்.
    ////

    நன்றிங்க அம்மா...

    ReplyDelete
  19. Prabu KrishnaFeb 19, 2012 10:19 PM
    அடடா இப்படி கூட பீலிங்கா

    நூறுக்கு வாழ்த்துகள் அண்ணே./// நன்றி..

    ReplyDelete
  20. பிரபு உங்களுக்கு தான் எவ்வளோ நல்ல மனசு :-)

    நல்லவேளை சச்சின் 100 போட்டா தான் 100 வது பதிவு எழுதுவேன்னு அடம் பிடிக்காம எழுதினீங்களே! ;-)

    ReplyDelete
  21. nice prabhu, not many has taken this subject.

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...