Tuesday, September 21, 2010

சாதியும் சாமியும் ..

உச்சி முதல் பாதம் வரை
ஊரு மெச்சும் அலங்காரம்

தங்கத்தால மேனியெல்லாம்
தகதகனு மின்னுதய்யா
தள்ளி நின்னு பார்க்கையிலே
மனச ஏதோ பண்ணுதய்யா

வான ஒசரம் தேருகட்டி
வகையாய் அம்மனை அதுல வச்சு
வடம் பிடிச்சு இழுக்கையில
வந்ததையா வாய்ப்பேச்சு

வடக்கு வழி போனா ஒரு சாதி
கிழக்கு வழி போனா ஒரு சாதி
எந்த வழி போறதுனு ரெண்டும் மோதி

சாமிய மறந்து புட்டான்
சாக்கடையில சாச்சு புட்டான்
தேரேரி வந்த அம்மன்
தெருவோரம் கிடக்குதய்யா

காவல்காக்குற அம்மனுக்கு
காக்கி சட்டை
காவலுக்கு நிக்குதய்யா

 பிரியமுடன் பிரபு ...

25 comments:

  1. அன்பின் பிரபு

    ஆதங்கம் புரிகிறது - அம்மன் மனது வைத்து நம்மைத் திருத்த வேண்டும் . வேறு என்ன செய்வது.......

    நல்ல காலம் பிறக்க நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  2. அன்பின் பிரபு

    ஆதங்கம் புரிகிறது - அம்மன் மனது வைத்து நம்மைத் திருத்த வேண்டும் . வேறு என்ன செய்வது.......

    நல்ல காலம் பிறக்க நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா
    ///

    அம்மன் இருந்து இருந்த மனுசம் எப்பவோ திருந்தி இருப்பான் ,இல்லாட்டி தப்பு செய்யவாவது பயப்படுவான் , அதுதான் இல்லையே
    .
    எங்க ஊரில் முழுசா திருவிழா எடுத்து 16 வருஷம் ஆகுது , அதை நினைத்து எழுதினேன்

    ReplyDelete
  3. தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் said...
    ம் நல்ல கருத்து

    //
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  4. நல்லா இருக்குங்க வேலு.

    ReplyDelete
  5. கடைசி இரண்டு பத்தி நச்ச்ச்ச்ச்ச்ச்

    ReplyDelete
  6. நல்லாருக்கு பிரபு. தமிழ்மணம் ஓட்டு போட்டா ஏதோ விண்டோ வேற வருது. ஸ்க்ரிப்ட் பாருங்க. இல்லைன்னா புது ஸ்க்ரிப்ட் ஒட்டுங்க.

    ReplyDelete
  7. SOLUTION HERE:
    AVOID CASTE OR AVOID GOD OR AVOID BOTH....
    RAVI

    ReplyDelete
  8. “காவல்காக்குற அம்மனுக்கு

    காக்கி சட்டை காவலுக்கு நிக்குதய்யா”

    எதுகை சரி. மோனை சரியில்லைப்போல தோன்றுகிறது. முதல் வரி மூன்று சொற்கள்; இரண்டாதில் நான்கு சொற்கள் எனவே.

    கவிதை கொத்தமங்கலம் சுப்பு பாணியில். அவர் கவிதைகளை பிரபு படிக்கலாம்.

    இப்பாணியின் சிறப்பு கருத்தை மனவேதனையுடன் பிறரிடம் பகிர்வதால், கருத்து பிறருக்கு ஆழமாகப்போய் சேர்கிறது. உண்மையில் அதுதானே கவிதையின் பணி.

    பிரபு, கீப் இட் அப். Adopt the same style and write more on social themes.

    கருத்தைப்பற்றி:

    அவாஅவாள் அவாஅவாளுக்கு ஒரு அம்மனை எடுத்து தேரிழுக்கவேண்டியதுதானே? ஒரே ஒரு அம்மனுக்கு எல்லாரும் ஏன் அடிச்சிக்கிறா? - என்று ஐயர் கேட்கிறார்.

    என்ன பதிலோ?

    He has a strong point: Hindu religion does not forbid any number of goddesses. Each caste can choose their own; and worship it. Why do you interefere with the worship of others? Why do you all want one goddess and fight?

    ReplyDelete
  9. //சாமிய மறந்துட்டான்
    சாக்கடையில சாச்சு புட்டான்

    In almost all religion this is happening....

    கவிதை ரெம்ப அருமையா இருக்கு பிரபு. என்னைக்கு மனசாட்சியோட மற்றவர்களையும் ஏற்ற தாழ்வு பார்க்காமல் மனிதர்களாக நடத்துகிறோமோ.. அன்று தான் சாதி மதச் சண்டையும் ஓய்யும்.

    ReplyDelete
  10. அன்பரசன் said...
    நல்லா இருக்குங்க வேலு.
    ///

    நன்றிங்க
    சரி யாரு அந்த வேலு??

    ReplyDelete
  11. அப்துல்மாலிக் said...
    கடைசி இரண்டு பத்தி நச்ச்ச்ச்ச்ச்ச்
    //
    நன்றிங்க

    ReplyDelete
  12. Jo Amalan Rayen Fernando said...
    “காவல்காக்குற அம்மனுக்கு

    காக்கி சட்டை காவலுக்கு நிக்குதய்யா”

    எதுகை சரி. மோனை சரியில்லைப்போல தோன்றுகிறது. முதல் வரி மூன்று சொற்கள்; இரண்டாதில் நான்கு சொற்கள் எனவே.
    ////
    “காவகாக்குற அம்மனுக்கு
    காக்கி சட்டை
    காவலுக்கு நிக்குதய்யா”
    இது சரியா?
    எனக்கு சரியா இலக்கணமெல்லாம் தெரியாது
    கவிதை விரும்பி படிப்பேன்
    அதன் பாதிப்பில் எழுதுகிறேன் , அக இது எல்லாம் ஒரு ரசிகனின் படைப்பு , படைப்பாளியுடையது அல்ல ,
    இதுபோல சுட்டிக்காட்டுங்கள் இன்னும் நான் தெரிந்துகொள்ள உதவுங்கள்
    நன்றி

    ////

    கவிதை கொத்தமங்கலம் சுப்பு பாணியில். அவர் கவிதைகளை பிரபு படிக்கலாம்.

    இப்பாணியின் சிறப்பு கருத்தை மனவேதனையுடன் பிறரிடம் பகிர்வதால், கருத்து பிறருக்கு ஆழமாகப்போய் சேர்கிறது. உண்மையில் அதுதானே கவிதையின் பணி.

    பிரபு, கீப் இட் அப். Adopt the same style and write more on social themes.
    ////

    கொத்தமங்கலம் சுப்பு
    முன்பு "மாமனை கட்டிக்க சம்மதமா"
    http://priyamudan-prabu.blogspot.com/2010/08/blog-post_26.html என்ற கவிதையை படித்த நண்பரும் இதேபோல கொத்தமங்கலம் சுப்பு பாணி என சொன்னார் , இப்போது நிங்களும் அதையே சொல்வது எனக்கே ஆச்சர்யம் , ஏன் என்றால் எனக்கு கொத்தமங்கலம் சுப்பு பற்றி சுத்தமாக தெரியாது , இன்றுதான் கூகுளில் தேடி அவரை பற்றி படித்தேன்,அவரை பற்றி கூறியமைக்கு நன்றி

    ////
    கருத்தைப்பற்றி:

    அவாஅவாள் அவாஅவாளுக்கு ஒரு அம்மனை எடுத்து தேரிழுக்கவேண்டியதுதானே? ஒரே ஒரு அம்மனுக்கு எல்லாரும் ஏன் அடிச்சிக்கிறா? - என்று ஐயர் கேட்கிறார்.

    என்ன பதிலோ?

    He has a strong point: Hindu religion does not forbid any number of goddesses. Each caste can choose their own; and worship it. Why do you interefere with the worship of others? Why do you all want one goddess and fight?
    ///

    வருகைக்கும் கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  13. Jo Amalan Rayen Fernando said...

  14. Jo Amalan Rayen Fernando said...

  15. kunthavai said...
    //சாமிய மறந்துட்டான்
    சாக்கடையில சாச்சு புட்டான்

    In almost all religion this is happening....

    கவிதை ரெம்ப அருமையா இருக்கு பிரபு. என்னைக்கு மனசாட்சியோட மற்றவர்களையும் ஏற்ற தாழ்வு பார்க்காமல் மனிதர்களாக நடத்துகிறோமோ.. அன்று தான் சாதி மதச் சண்டையும் ஓய்யும்.

    ///

    ஆமாம்

    ReplyDelete
  16. வானம்பாடிகள் said...
    நல்லாருக்கு பிரபு. தமிழ்மணம் ஓட்டு போட்டா ஏதோ விண்டோ வேற வருது. ஸ்க்ரிப்ட் பாருங்க. இல்லைன்னா புது ஸ்க்ரிப்ட் ஒட்டுங்க.

    ///

    அப்படியா , சரி பார்க்கிறேன்

    ReplyDelete
  17. V said...
    SOLUTION HERE:
    AVOID CASTE OR AVOID GOD OR AVOID BOTH....
    RAVI
    ////

    அமாங்க , எனக்கு நிறைய ரவி தெரியும் ,அதுல நீங்க யாருங்க?

    ReplyDelete
  18. வெற்றி-[க்]-கதிரவன் said...
    -:)

    /////

    வெற்றி
    ஒன்னு திட்டு இல்ல பாராட்டு
    இதுக்கு என்ன அர்த்தம் ??!?

    ReplyDelete
  19. //அன்பரசன் said...
    நல்லா இருக்குங்க வேலு.
    ///

    நன்றிங்க
    சரி யாரு அந்த வேலு??//

    அச்சமயம் என் நண்பர் வேலுகிட்ட போன்ல பேசிட்டு இருந்தேன்.
    அதான். ஹி ஹி

    ReplyDelete
  20. //சாமிய மறந்துட்டான்
    சாக்கடையில சாச்சு புட்டான்
    தேரேரி வந்த அம்மன்
    தெருவோரம் கிடக்குதய்யா///

    ரொம்ப அருமையா..உங்க ஆதங்கத்த சொல்லிட்டீங்க..
    உண்மை தான் நீங்க சொல்றது..
    மாற்றம் வந்தால் நல்ல இருக்கும்.

    ReplyDelete
  21. //காவல்காக்குற அம்மனுக்கு
    காக்கி சட்டை
    காவலுக்கு நிக்குதய்யா//

    நல்லாயிருக்குங்க பிரபு

    ReplyDelete
  22. Ananthi said...
    //சாமிய மறந்துட்டான்
    சாக்கடையில சாச்சு புட்டான்
    தேரேரி வந்த அம்மன்
    தெருவோரம் கிடக்குதய்யா///

    ரொம்ப அருமையா..உங்க ஆதங்கத்த சொல்லிட்டீங்க..
    உண்மை தான் நீங்க சொல்றது..
    மாற்றம் வந்தால் நல்ல இருக்கும்.

    ////////

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  23. ஆ.ஞானசேகரன் said...
    //காவல்காக்குற அம்மனுக்கு
    காக்கி சட்டை
    காவலுக்கு நிக்குதய்யா//

    நல்லாயிருக்குங்க பிரபு

    /////
    வருகைக்கு நன்றி

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...