Thursday, July 16, 2009

கண்கள் இரண்டால் .............

கண்களால் திருடும் ராட்சசி

கடலின் ஆழமோ உன்பசி?

காகிதத்தில் பட்டதும்

கசிந்துருகும் பேனா

மை போலஉன்

கண்களில் பட்டதும்

மெல்ல மெல்ல

உருகுது என் உயிர்

கவிதையாய் …..

காதலாய் ……..


அப்படி பாக்காதே

உன் பார்வையை விட

கொடிய ஆயுதம் இதுவரை

கண்டுபிடிக்கபடவில்லை

கொலையுண்டவனே விரும்பும்

ஆயுதம் அது !!




கண்கள் இரண்டிலும்

கத்தியை வைத்துக்கொண்டு

கரப்பான் பூச்சிக்கு பயப்படுவேன்

என்று நீ சொல்வதை

எப்படி நம்புவது ?!





எந்த கடையிலும்
கிடைக்காத காதல் - உன்
கடைக்கண்ணில் கிடைத்தது





பிரியமுடன் பிரபு ...




மறக்காம ஓட்டு போடுங்க


33 comments:

  1. //மையை போல//

    மை போல

    ReplyDelete
  2. தூக்கலா இருக்குதுங்க இராசா...சபாசு!

    ReplyDelete
  3. ///
    பழமைபேசி said...

    //மையை போல//

    மை போல
    ///


    மாற்றியாச்சு
    நன்றி

    ReplyDelete
  4. ///
    பழமைபேசி said...

    தூக்கலா இருக்குதுங்க இராசா...சபாசு!
    ///

    நன்றி

    ReplyDelete
  5. உன் கண்களில் பட்டதும் மெல்ல மெல்ல உருகுது என் உயிர் கவிதையாய் ….. காதலாய் …….. ]]


    அருமை துவக்கம்.

    ReplyDelete
  6. எந்த கடையிலும்
    கிடைக்காத காதல் - உன்
    கடைக்கண்ணில் கிடைத்தது]]


    மிகவும் இரசித்தது ...

    ReplyDelete
  7. ///
    நட்புடன் ஜமால் said...

    உன் கண்களில் பட்டதும் மெல்ல மெல்ல உருகுது என் உயிர் கவிதையாய் ….. காதலாய் …….. ]]


    அருமை துவக்கம்.
    ////

    நன்றி
    ( அய்யா சாமி
    எங்கய்யா இருக்க , நான் போட்ட பதிவ நானே படிக்கும் முன்பு பின்னுட்டம் வருதே??!??!!?)

    ReplyDelete
  8. ///
    நட்புடன் ஜமால் said...

    எந்த கடையிலும்
    கிடைக்காத காதல் - உன்
    கடைக்கண்ணில் கிடைத்தது]]


    மிகவும் இரசித்தது ...
    ///
    நன்றி ஜமால்

    ReplyDelete
  9. மூன்றாவது கண்கள் நன்று

    ReplyDelete
  10. ஓட்டுக்கள் போட்டாச்சு

    ReplyDelete
  11. அன்பின் பிரபு

    கவிதைகள் அருமை - அழகு சொட்டுகிறது படங்களிலும் கவிதைகளிலும்

    சிந்தனை சிறப்பாய் இருக்கிறது

    நன்று நன்று நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  12. கவிதை....கவிதை....
    சூப்பர் அண்ணா...

    //கொலையுண்டவனே விரும்பும் ஆயுதம் அது !! //

    காதல் அழகு...

    ReplyDelete
  13. நான்காவது கண்கள் அசத்தல் யாரு அது பிரபு?

    ReplyDelete
  14. ///
    SUREஷ் (பழனியிலிருந்து) said...

    மூன்றாவது கண்கள் நன்று
    ////

    நன்றி சுரேஷ்

    ReplyDelete
  15. ///
    cheena (சீனா) said...

    அன்பின் பிரபு

    கவிதைகள் அருமை - அழகு சொட்டுகிறது படங்களிலும் கவிதைகளிலும்

    சிந்தனை சிறப்பாய் இருக்கிறது

    நன்று நன்று நல்வாழ்த்துகள்
    ///


    நன்றி அய்யா

    ReplyDelete
  16. ///
    மலர்விழி said...

    கவிதை....கவிதை....
    சூப்பர் அண்ணா...

    //கொலையுண்டவனே விரும்பும் ஆயுதம் அது !! //

    காதல் அழகு...
    ///
    நன்றி

    என்ன தங்கச்சி ரொம்ப நாளா ஆளையே காணோம்??

    ReplyDelete
  17. ///
    பிரியமுடன்.........வசந்த் said...

    நான்காவது கண்கள் அசத்தல் யாரு அது பிரபு?
    ////

    வாங்க வசந்த்

    அந்த கண்களும் நடிகை ஜெனிலாவுடையது(பாய்ஸ் ஹரினி)

    ReplyDelete
  18. //மெல்ல மெல்ல

    உருகுது என் உயிர்

    கவிதையாய் …..//

    ஆமாமா., மாசத்துக்கு ஒரு தடவை இல்லீன்னா ரெண்டு தடவை மட்டும் தான் உருகுது(இடுகையாக)

    ReplyDelete
  19. கண்கள் கவிபாட கேட்டதுண்டு இப்போது கண்களுக்காகவும் பாடப்பட்டுள்ளது.. நல்லாயிருக்கு எல்லா வரிகளும்....

    ReplyDelete
  20. கவிதைகள் அருமை கலக்குங்கள் பிரபு

    ReplyDelete
  21. //எந்த கடையிலும்
    கிடைக்காத காதல் - உன்
    கடைக்கண்ணில் கிடைத்தது //

    இதென்ன காதல் கடைகளிலும் விற்பனைக்கு உண்டா பிரபு ?

    கவிதைகள் காதலோடு கரைந்துருகுகின்றன.

    சாந்தி

    ReplyDelete
  22. ///
    தமிழரசி said...

    கண்கள் கவிபாட கேட்டதுண்டு இப்போது கண்களுக்காகவும் பாடப்பட்டுள்ளது.. நல்லாயிருக்கு எல்லா வரிகளும்....
    ////

    நன்றி

    ReplyDelete
  23. ////
    Suresh Kumar said...

    கவிதைகள் அருமை கலக்குங்கள் பிரபு
    ///

    நன்றி

    ReplyDelete
  24. ////
    முல்லைமண் said...

    //எந்த கடையிலும்
    கிடைக்காத காதல் - உன்
    கடைக்கண்ணில் கிடைத்தது //

    இதென்ன காதல் கடைகளிலும் விற்பனைக்கு உண்டா பிரபு ?

    கவிதைகள் காதலோடு கரைந்துருகுகின்றன.

    சாந்தி
    ////


    நன்றி

    ReplyDelete
  25. கவிதைகள் அருமை வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  26. கலக்குறீங்களே!

    ReplyDelete
  27. ////\
    ஆமாமா., மாசத்துக்கு ஒரு தடவை இல்லீன்னா ரெண்டு தடவை மட்டும் தான் உருகுது(இடுகையாக)
    ////
    எல்லாம் சோம்பேறிதனம் அவ்வளவுதான்

    ReplyDelete
  28. ///
    சந்ரு said...

    கவிதைகள் அருமை வாழ்த்துக்கள்..
    ///

    நன்றி

    ReplyDelete
  29. ///
    ஊர்சுற்றி said...

    கலக்குறீங்களே!///

    நன்றிங்க

    ReplyDelete
  30. //கண்கள் இரண்டிலும் கத்தியை வைத்துக்கொண்டு “கரப்பான் பூச்சிக்கு பயப்படுவேன்” என்று நீ சொல்வதை எப்படி நம்புவது ?!

    ஏன் தம்பி நீங்க வேற....

    //எந்த கடையிலும்
    கிடைக்காத காதல் - உன்
    கடைக்கண்ணில் கிடைத்தது

    அடடா....

    கவிதை எல்லாம் அட்டகாசமா இருக்கு. இப்படி அடிக்கடி உருகுங்க...

    ReplyDelete
  31. வாங்க குந்தவை அக்கா !!!
    எப்ப வந்தீங்க




    //கண்கள் இரண்டிலும் கத்தியை வைத்துக்கொண்டு “கரப்பான் பூச்சிக்கு பயப்படுவேன்” என்று நீ சொல்வதை எப்படி நம்புவது ?!

    ஏன் தம்பி நீங்க வேற....
    /////

    ஏ ஏதாவது தப்பா சொல்லிட்டேனோ??!?!?





    //எந்த கடையிலும்
    கிடைக்காத காதல் - உன்
    கடைக்கண்ணில் கிடைத்தது

    அடடா....

    கவிதை எல்லாம் அட்டகாசமா இருக்கு. இப்படி அடிக்கடி உருகுங்க...
    ////

    நன்றிங்க

    ReplyDelete
  32. //ஏதாவது தப்பா சொல்லிட்டேனோ??!?!?

    கடைசில நம்ம கண்ணு பியூஸ் போன பல்பானதுதான் மிச்சம்.

    ReplyDelete
  33. ///
    kunthavai said...

    //ஏதாவது தப்பா சொல்லிட்டேனோ??!?!?

    கடைசில நம்ம கண்ணு பியூஸ் போன பல்பானதுதான் மிச்சம்.///

    என்ன் இப்படி சொல்லிபுட்ட்டீங்க?

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...