Sunday, February 01, 2009

சேலையே ! சேலையே !. ---- 02/02/2009.... 1.04 am

.....



சேலையே ! சேலையே !
என் தங்கத் தாமரையை
தழுவி நிற்க்கும் சேலையே !

என்னவளை
பத்திரமா பாத்துக்கோ....
வேர்வைத்துளி வெளிவந்தாலும்
வீணாகாம சேத்துக்கோ....

புடவைகட்டிய பூங்குயில் - இவள்
பூந்தோட்டம் போனால்...
பூக்களெல்லாம் பொறாமையில் பொங்கும்
இவளுக்கு
புடவையாக மாட்டோமா ? - என்று
புலம்பி ஏங்கும்........
முந்தானை நுனியை
முள்ளால் குத்தி - தன்
ஏக்கத்தைத்  தனிக்கும்
சேலையே ! சேலையே !
என் தங்கத் தாமரையை
தழுவி நிற்க்கும் சேலையே !

மூடாத இடம் பார்த்தே
மூச்சு முட்டி - நா(ன்) நின்னேன்
முழுசா கட்டிக்கொண்ட
மச்சமுள்ள சேலையே

அவ மேனி ரகசியத்த
யாருக்கும் சொல்லாதே
காத்தே கேட்டாளும்
கடுகளவும் காட்டாதே....!
...................

http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=1020

..............
படிச்சாச்சா.......
பிரியாமணி-யை பார்த்து ஜொள்ளு விட்டாச்சா....
சரி மரியாதையா ஓட்டு போடுங்க
..............

18 comments:

  1. //வேர்வைத்துளி வெளிவந்தாளும்
    வீணாகாம சேத்துக்கோ....//

    எது.... புடவையையா?

    //முந்தானை நுனியை
    முள்ளால் குத்தி - தன்
    ஏக்கத்தை தனிக்கும்//

    முட்கள் இல்லாத பூச்செடி என்ன செய்யுமா?


    //அவ மேனி ரகசியத்த
    யாருக்கும் சொல்லாதே
    காத்தே கேட்டாளும்
    கடுகளவும் காட்டாதே....!//

    காத்துக்கே அல்வாவா? பின்றீங்க

    ReplyDelete
  2. ம்... தலையில் மாட்டுகிற கிளிப், வளையல், சேலை செருப்புன்னு ஒண்ணையும் விட்டுவைக்கிற ஐடியா இல்லையா?
    அப்புறம் கல்யாணம் ஆனப் பிறகு எல்லாத்தையும் பிடிச்சு திட்ட வேண்டியது.

    கவிதை நல்லாயிருக்கு. ரோஜா செடிக்கு எதுக்கு சேலையை கண்டால் ஆகாதுன்னு ஒரு விளக்கம் கொடுத்தீங்க பாருங்க, ச்சு...... எங்கேயோ போயிட்டீங்க தம்பி.

    ReplyDelete
  3. A N A N T H E N சொன்னது…

    //முந்தானை நுனியை
    முள்ளால் குத்தி - தன்
    ஏக்கத்தை தனிக்கும்//

    முட்கள் இல்லாத பூச்செடி என்ன செய்யுமா?
    //////////////


    வாடி வதங்கி போயிடும்

    ReplyDelete
  4. //
    ம்... தலையில் மாட்டுகிற கிளிப், வளையல், சேலை செருப்புன்னு ஒண்ணையும் விட்டுவைக்கிற ஐடியா இல்லையா?
    //

    போங்கக்க


    /////
    அப்புறம் கல்யாணம் ஆனப் பிறகு எல்லாத்தையும் பிடிச்சு திட்ட வேண்டியது.
    ////

    நான் அப்படியெல்லம் கிடையாது
    ஆமா நம்புங்க.........

    ReplyDelete
  5. எஸ் ...சேலை கட்டும் பெண்ணுக் கொரு வாசம் உண்டு .. :D
    படிச்சோம்..ஆனால் ப்ரியா மணியை பார்த்து ஜொள்ளு எல்லாம் விடலை.. அதனால ஒட்டு போடலை;) ..

    ReplyDelete
  6. ////
    எஸ் ...சேலை கட்டும் பெண்ணுக் கொரு வாசம் உண்டு .. :D
    படிச்சோம்..ஆனால் ப்ரியா மணியை பார்த்து ஜொள்ளு எல்லாம் விடலை.. அதனால ஒட்டு போடலை;) ..
    ////

    இது அநியாயமுங்க
    உங்களுக்காக சேலையை பற்றீ எழுதியிட்டு அஜித்,ஆர்யா போட்டோவையா போட முடியும்???????

    ReplyDelete
  7. சூர்யாவை இருட்டடிப்பு செய்யும் உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.. ஹிஹி

    ReplyDelete
  8. /////
    thiraikadal கூறியது...
    சூர்யாவை இருட்டடிப்பு செய்யும் உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்..
    /////

    அச்சிச்சோ
    சூர்யாத்தான் எனக்கு பிடிச்ச நடிகர்
    ஆ(ஜித்)ஆ(ரியா) என்று ஒரு ரைமீங்காக சொன்னேன்
    (ஆத்தி கொஞ்சம் ஜாக்கிர்ரதையாத்தான் எழுதனூம் போல)

    ReplyDelete
  9. அன்பு நண்பரே!
    வலைச்சரத்தில்
    உங்களைப்பற்றி
    எழுத உள்ளேன்.
    வலைச்சரம் வந்து
    கருத்து தருக..
    தேவா.

    ReplyDelete
  10. /thevanmayam கூறியது...
    அன்பு நண்பரே!
    வலைச்சரத்தில்
    உங்களைப்பற்றி
    எழுத உள்ளேன்.
    வலைச்சரம் வந்து
    கருத்து தருக..
    தேவா.

    ////




    அப்படியே ஆகட்டும்

    ReplyDelete
  11. சேலைக்குக் கவிதையா.... நீங்க குசும்புக் கவிராயரய்யா...

    இதுக்கு அப்படியே ஒரு மெட்டு போட்டா,, அழகான பாட்டா வந்து நிக்கும்.... கேக்கறவங்க மனசை சொக்கும்.....

    ReplyDelete
  12. ///முந்தானை நுனியை
    முள்ளால் குத்தி - தன்
    ஏக்கத்தை தனிக்கும் ///

    நல்ல கற்பனை....

    ReplyDelete
  13. ///
    ஆதவா சொன்னது…


    நல்ல கற்பனை....
    ///

    நன்றி ஆதவா

    ReplyDelete
  14. \\மூடாத இடம் பார்த்தே
    மூச்சு முட்டி - நா(ன்) நின்னேன்
    முழுசா கட்டிக்கொண்ட
    மச்சமுள்ள சேலையே\\

    அவ மேனி ரகசியத்த
    யாருக்கும் சொல்லாதே
    காத்தே கேட்டாளும்
    கடுகளவும் காட்டாதே....!\\

    அண்ணே நல்லா ஜொள்ளியிருக்கிய

    ReplyDelete
  15. ////
    அண்ணே நல்லா ஜொள்ளியிருக்கிய
    ////

    ஹி ஹி ஹி

    ReplyDelete
  16. ponniyinselvi_kartik (signed in using yahoo)
    intha vote eppadi poduvathu enbathu theriyaathathaale palarukkum vote poda mudiyalai.
    Reply · Like · Unfollow Post · 2 seconds ago

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...