அமைதியான இரவு
ஆழ்ந்த உறக்கம் கலைந்தப்பின்
உறங்க மனமின்றி
மொட்டைமாடிக்குச் சென்றேன்
வறுமையில் வாடியவன்
வயிறு போல – வானம்
வெறுமையாய் இருந்தது
கடையடைப்பு செய்யப்பட்ட
கடைவீதி போல – வானம்
கலகலப்பின்றி இருந்தது
தெருமுனையில் ஏதோ
சப்தம் கேட்க
தேடிப்போனேன்
என்ன ஆச்சர்யம்!!!
வானில் காணாததை
வழியில் கண்டேன்!
நிலவதன் தலைமையில்
நட்சத்திரங்கள் பேரணியாய்
வந்தன......
எங்கே செல்கின்றன???
தொலைந்த நட்சத்திரங்களை
மீட்ககோரி - மனுகொடுக்க
மாவட்ட அலுவலகம் செல்கிறதோ??
ஓசோன்படல ஓட்டையை
அடைக்கக்கோரி - மனுகொடுக்க
தலைமைச் செயலகம் செல்கிறதோ??
எங்குதான் செல்கின்றன??
பின்தொடர்ந்தேன்
ஒரு வீட்டினருகில்
பேரணி நிறுத்தப்பட்டது!
கதவு தட்டப்பட்டது!!
நீ வந்து கதவு திறந்தாய்!!!
நிலவும் நட்சத்திரங்களும்
ஒருசேர பாடின
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
..................................................................
அழகான கவிதை. அற்புதமான கற்பனை.
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நன்றி குந்தவி
ReplyDeleteஇது என் உறவினர் ஒருவரின் பிறந்த நாளுக்காக எழுதியது..
நான் பிறந்தது நவம்பர்30
sirappu prabu....sorry for not in tamil...miss ur poems a lot...happy belated birthday...take care dear :)
ReplyDeleteநன்றி மலர்
ReplyDeleteதமிழோ ஆங்கிலமோ தங்களின் வருகையே மகிழ்ச்சி
thanks to Valaipookkal Team
ReplyDeleteநல்லாயிருக்கு
ReplyDeleteபிறந்த நாள்
வாழ்த்துகள் சொன்ன
விதம்
நன்றி மாதங்கி
ReplyDelete