Thursday, May 06, 2021

யார் குரு ? / கார்ப்ரேட் குருக்கள் / நம்பிக்கை / வாங்க பேசலாம்

 

யார் குரு ? / கார்ப்ரேட் குருக்கள் / நம்பிக்கை / வாங்க பேசலாம்

https://www.youtube.com/watch?v=xSEQScZF3GU



குரு என்று சொன்னதும் முதலில் ஞாபகத்திற்கு வருவது கார்ப்பரேட் சாமியார்களின் முகங்கள்தான் . மீடியா வெளிச்சம் பட்ட சாமியார்களின் எண்ணிக்கையே ரொம்ப பெருசா இருக்கும் . அதை தவிர்த்து ஊருக்கு 4 பேர் இருக்கவும் செய்யுறாங்க . எந்தப் பொருளுக்கு டிமாண்ட் அதிகமோ அந்த பொருள் விற்கின்ற இடங்களும் அதிகமாகிறது . யாருக்குத் தான் பிரச்சனை இல்லை ? இந்த நவீன யுகத்தில் வேகமான வாழ்க்கை முறை மனிதனுக்கு நிறைய பிரச்சனைகளையும் மன அழுத்தத்தையும் கொடுத்து கிட்டே தான் இருக்கு , இதிலெல்லாம் இருந்து யாராவது நம்மள காப்பாற்றி வெளியே கொண்டுவந்து மாட்டாங்களா ! அப்படின்னு ஏங்குகிற மனம்தான் இது போன்ற கார்ப்ரேட் சாமியார்களின் அல்லது குருக்களின் போதனைகளை கேட்கவும் , யோகா பயிற்சி, தியானம் பயிற்சி மூச்சுப் பயிற்சி பேச்சுப் பயிற்சி வகுப்புகள் செல்வது ,சாதகம் பார்ப்பது ,கிளி ஜோதிடம் இப்படி ஏதாவது ஒன்றை நம்பி அந்த இடங்களுக்கு படை எடுத்துக்கிட்டு இருக்காங்க இந்த பிரச்சனையை தீர்க்க அளவுக்கு இவங்க கிட்ட எல்லாம் ஏதாவது மந்திர சக்தி இருக்கா ? அப்படின்னு கேட்டா கண்டிப்பா இல்லை என்று சொல்லலாம் . அப்போ எங்க தான் இருக்கு இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு ? எங்க பிரச்சனை இருக்கோ அங்குதான் தீர்வும் இருக்கு ஒரு உதாரணம் பார்க்கலாம் , நம்மில் பலருக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டு இருக்கும் , நெருங்கிய நண்பனோ அல்லது உறவினரோ வந்து "நேரமே சரியில்லை டா தொட்டதெல்லாம் கெட்டுப் போகுது " என்று negative மனநிலையோடு புலம்பி தள்ளி இருப்பார்கள். வியாபாரத்தில் தொடர்ந்து தோல்வி , குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சினை , உடல்நலத்தில் தொடர்ந்து உபாதைகள் இப்படி ஏதோ ஒரு தொடர் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு மனச் சோர்வு இருக்கும் இவர்களுக்கு என்ன தேவை ? காசு பணமா ? கண்டிப்பா இல்ல இந்த மன நிலையில இருக்கிற யாருக்கும் காசு பணம் கொடுத்தாலும் தொடர்ந்து தோற்றுத்தான் வரப்போறாங்க . வேற என்ன தேவை ? அவர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வை அவர்களே கண்டுபிடிக்க கூடிய மன நிலையை உருவாக்குவதுதான் அதை இரண்டு வகையில் செய்யலாம் ஒன்று உன்னால் முடியும் என்ற நம்பிக்கையை விதையை அவர்களின் மனதுக்குள் விதைப்பது அல்லது தற்காலிகமா அந்த பிரச்சனையிலிருந்து அவர்களின் கவனத்தை திசைதிருப்பி அமைதியாக்கி அதன்மூலம் அவர்களின் பிரச்சினைக்கான தீர்வை தேட வைப்பது. இப்போ பாதிக்கப்பட்ட அந்த நபர் ஒரு ஜோதிடர் கிட்ட போறார் னு வச்சுக்குவோம் , அவருக்கு என்ன பதில் கிடைக்கும் நினைக்கிறீங்க ? இப்போ கட்டம் சரியில்லை இன்னும் ஆறு மாசம் தான் உங்க கெட்ட நேரம் பின்னர் எல்லாம் சரியாயிடும் , ஆடி போய் ஆவணி வந்தா டாப்ல வருவீங்க என்பதுதான் ஜோதிடரின் பதிலா இருக்கும் அந்த ஜோதிட நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் முதலில் 6 மாதத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை அவர் மனதில் வரும் அந்த நம்பிக்கை ஒரு தெளிவை கொடுக்கும் ஆறு மாதத்துக்கு பெருசா வேற எதுவும் செய்ய வேண்டாம் அப்படிங்கிற எண்ணம் மனதுக்கு ஒரு அமைதியை கொடுக்கும் , இந்த அமைதியும் தெளிவும் இதுவரை நடந்த பிரச்சினைக்கான தீர்வை எளிதில் கண்டுபிடிக்க வைக்கும்.

No comments:

Post a Comment

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...