1) தன் பதிவுகளைத் தொகுத்து ஒரு நூலாகக் கொடுத்துள்ளார் சாரு.. பாராட்டுக்கள்..ஆனால் நூலை அச்சிட்ட பயபுள்ள அதன் அட்டையில் நாவல் என்று தவறுதலாய் அச்சிட்டு விட்டது..சரி விடுங்க அச்சுப்பிழைகள் வருவது சகஜம்தானே..
2).எழுதிய ஆசிரியரையும் , அச்சிட்டு வெளியிட்டவரையும் விட நான் பார்த்து வியந்தது அதை படித்த சில வாசகர்களைத்தான் ,ஆமாங்க இணையத்தில் தேடியபோது கிட்டியது
-"ஒரே வாரத்தில் மூன்று முறை படித்துவிட்டு இரண்டு வாரங்கள் பேயறைந்தவன் போல இருந்தேன். என் வாழ்நாளிலும் சரி வாசிப்பு அனுபவத்திலும் சரி இப்படிப்பட்ட எழுத்தைப் படித்ததே இல்லை. முற்றிலும் எனக்கு புது அனுபவம்" -
எப்படி ஒரு பரவச அனுபவம் பாருங்கள்..ஆனால் எனக்குத்தான் அப்படி ஏதும் கிடைக்கவில்லை..நீ இன்னும் வளரனும்டா பிரபு..
3) மிஸ்கின் (!) : இந்த நூலை "சரோஜா தேவி " வகையறாவோடு ஒப்பிட்டுப் பேசியதாக சில இடங்களில் படித்தேன் ..என்ன ஒரு மோசமான ஒப்பீடு ? ..:( . நான் அறந்தாங்கியில் தங்கியிருந்த பொது எங்கள் அறையில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த நண்பர் ஒருவர் இருந்தார் ,அவர் பெயர் மறந்துவிட்டது ,அவர் "சரோஜா தேவி " வகை புத்தகங்களை சத்தமாக ஏற்ற இறக்கங்களோடு அவ்வளவு அழகாக வாசித்துக்காட்டுவார் .அந்த நண்பருக்கு மட்டும் மிஸ்கின் இன் இந்த ஒப்பிடு தெரிந்தால் அவ்வளவுதான் .. தர்மா வகை டார்ச்சர்தான் மிஸ்கினுக்கு ..
. பிரியமுடன் பிரபு...
நான் அறந்தாங்கியில் தங்கியிருந்த பொது எங்கள் அறையில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த நண்பர் ஒருவர் இருந்தார்
ReplyDeleteகல்லூரி படிப்பு அங்கேயா?