Friday, May 03, 2013

ஜா"தீ" அரசியல்



1.பா.ம.க வை எதிர்ப்பது/விமர்சிப்பது வன்னியர்களை எதிர்ப்பது/விமர்சிப்பது ஆகாது , பல இடங்களில் வன்னியர்களே பாமக வை விரும்பவில்லை 

 2.ஜாதியை / மதத்தை சொல்லி கூட்டம் கூட்டுபவர்கள் அதை தங்களின் பதவி/அதிகார சுகத்துக்கே பயன்படுத்தி வருகிறார்கள்..கடலூரை சேர்ந்த என் நண்பர் ஒருமுறை சொன்னார் "இவனுகளால் எந்த பயனும் இல்லை மாறாக கட்டப்பஞ்சாயத்து -அடிதடி -குடி இதெல்லாம் அதிகமாயிருக்கு" என்று- அது 100% உண்மை .

 3.கூடும் கூட்டத்தை உசிப்பி விட்டு கலவரமோ ச்ண்டையோ நடக்கவைத்து அந்த தீயில் ஓட்டுவேட்டை நடத்துவதையே எல்லா ஜாதி/மத கட்சிகளும் செய்கிறது..ஜாதி/மதம் இரண்டும் மிக எளிதில் பற்றிக்கொள்(ல்)ளக்கூடியது அதில் பலியாவது என்னமோ அப்பாவிகள்தான்..

4.உயிர் இழப்பு எந்த பக்கமோ அந்த பக்கம் ஆதரவாய் பேசவேண்டாமா என்று கேட்பதை ஏற்க முடியாது ,ஏன் உயிர் இழப்பு நடந்துச்சு ? இப்ப இந்த பக்கம் இழப்புன்னு இவிகளுக்கு ஆதரவா பேசினா நாளை அங்கே இழப்பு நடக்கும் அவனுக்கும் ஆதரவா பேசனும் அப்போ எப்படி அய்யா இழப்பை தடுப்பது ? ஒவ்வொரு சாதிக்காரனும் இப்படி பூஜை-மாநாடு -ஒன்றுகூடல்ன்னு நடத்தி நாட்டை சுடுகாடாக்கனுமா?




இந்த சாதி வெறி அரசியல் கூட்டங்கள் பின்னால் ஆட்டு மந்தையாய் கூடுவதை நிறுத்தும் போதுதான் இழப்பு தடுக்கப்படும் அதுவரை எதாவது ஒரு பக்கம் இழப்பு நடந்துகிட்டே இருக்கு அது மட்டும் உறுதி..இன்னைக்கு இவன் நாளைக்கு அதே  அல்லது அதன் எதிர் கூட்டத்தில் ஒருவன். .

5.கடந்த ஆட்சியிலும்(இப்பவும்) கலைஞரை எவ்வளவு விமர்சித்து இருப்போம் ? "இந்த கிழம் எப்போ சாகும் " ன்னு இதே இணையத்தில் சிலர் எழுதியிருக்காங்களே அப்போ எல்லாம் என்ன செய்தோம்? இவருக்கு இதுவும் வேண்டும் என்று நினைத்து அமைதியா இருந்தது ஏன் ? அவர் செய்தது எல்லாம் அப்படி..  பாரபட்சம்/பரிவு எல்லாம் அங்கே வராது..  அதேதான் இங்கே ...  இழப்புக்கு பெரிதுதான்.. அந்த குடும்பம் பாவம்.. கொஞ்சநாள் இந்த ஜாதி கூட்டம் கொடிபிடிக்கும் அவரை வீரன் என்று சொல்லும் அப்புறம் குடிக்க போய்விடும் அந்த குடும்பம் மட்டுமே கடைசி வரை அந்த வலியை அனுபவிக்கும்...ஜாதி / மத வெறி ஆட்களின் பின்னால் கூடும் கூட்டத்தில் இந்த இழப்புகள் நடக்கும் என்பது அந்த கூட்டத்தில் தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும் மேலும் அவர்களுக்கு அதுதான் வேண்டும்..  இவர்களை புரிந்துகொண்டு நடப்பது மட்டுமே இந்த இழப்புகளை தடுக்குமே ஒழிய "என் ஜாதிக்காரன் செத்துட்டானே எவனாச்சும் ஏன்னு கேட்டியா?" என்று குதிப்பதால் என்ன நடக்கும் ? இருக்கும் தீ இன்னும் பற்றி எறியும் இன்னும் சில பேர் சாவான்...


நாய்களைக் கண்டால் பயம் எங்களுக்கு


சாதியும் சாமியும் ..



அவமானம், 7 டிசம்பர் 1992 -தஸ்லீமா நஸ்ரின் ,மதம்,கத்தி,




 

  

No comments:

Post a Comment

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...