முதலில் எதிர்ப்பு வந்தபோது இது வழக்கம்தானே என்றே எல்லோரும் நினைத்திருப்பார்கள்,ஆனால் படவெளியீட்டுக்கு முதல் நாள் அரசே தடைவிதித்ததும் பலருக்கும் குழப்பமாக இருந்தது ,அப்படி மோசமான கருத்தோடு படம் செய்யக்கூடியவரா கமல் ?! என்று , சினிமாவில் இருந்து வந்தவர் ஆட்சி செய்யும் மாநிலத்தில் இப்படி ?!
மத உணர்வுகளை புண்படுத்துவதாய் சொல்லி மத அமைப்புகள் தடை கேட்க அரசு தடை செய்தது , தடையினாலேயே ஆதரவு அதிகமானதுதான் நிஜம் ,குறிப்பாய் மத அமைப்பின் தலைவர் பொது மேடையில் "அப்பா-மகள் உறவை "அசிங்கமாக பேச எல்லோருக்கும் வெறுப்பே மிஞ்சியது. எந்த படம் ஒரு மதத்தை கேவலப் படுத்தும் என்று சொன்னார்களோ அந்த படம் சில இடங்களில் வெளிதாகி நல்லா ஓடத்துவங்கியது ,ஆனால் அந்த பேச்சுத்தான் மதத்தை கேவலப்படுத்தும் படி ஆனது..:(
முதலில் இது மதம் சார்பான பிரச்சனை என்று தோன்றினாலும் பின்னர் அதன் வீரியம் அதிகமான போது இதற்க்கு வேறு முகம் இருக்குமோ என்ற சந்தேகம் பலருக்கும் வந்தது.,ஜெயா டீவி-திரைப்பட உரிமை என்று பேச்சு அடிபட இதில் மதம் அல்ல பிரச்சனை அரசியல் என்று எல்லோருக்கும் புரிந்திருக்கும்.
தமிழக அரசு இந்த அளவிற்குக் கடுமையாக இந்தத் திரைப்படத்திற்கு தடை விதிப்பதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. ஆனால் ஒரு சாரார், இந்தத் திரைப்படத்தை அ.தி.மு.க.விற்கு மிகவும் வேண்டிய ஒரு தொலைக்காட்சி நிறுவனம் அடிமாட்டு விலைக்கு வாங்க முயன்றதாகவும், ஆனால் படத்தைத் தயாரித்தவர்கள் தாங்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து இந்தத் திரைப்படத்தைத் தயாரித்துள்ள நிலையில் குறைந்த விலைக்கு விற்க மறுத்து விட்டு, அதிக விலைக்கு வேறொரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விற்று விட்டதுதான் காரணம் என்றும் சொல்கிறார்கள். அதைப் போலவே, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தைப் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் கமல் பேசும்போது, "வேட்டிக் கட்டிய ஒரு தமிழன், பிரதமராக வரவேண்டும்" என்று ப.சிதம்பரத்தைக் குறிப்பிட்டுப் பேசியதும் கோபத்திற்கு ஒரு காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்தக் கருத்துக்கள் எல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்று நமக்குத் தெரியவில்லை.-கருணாநிதி
Read more at: http://tamil.oneindia.in/news/2013/01/30/tamilnadu-karunanidhi-raises-questions-on-viswaroopam-ban-168890.html
மதம் மிக எளிதில் பற்றிக்கொள்ளக்கூடியது ,மதம் அயோக்கியர்களின் கடைசி ஆயுதம் என்பார்கள் அப்படி வலுவான அஸ்திரம் துவக்கத்திலேயே கமல் மேல் வீசப்பட்டது .
அரசியல் சதுரங்கத்தில் மிக சாமர்த்தியமான நகர்த்தல்களில் மிக சிக்கலான இடத்தில் கமலுக்கு செக் வைக்கப்பட்டது.. தாங்கள் பகடைக்காய்கள் என்று தெரிந்தோ/தெரியாமலோ மத அமைப்புகள் ஆட , நன்றாகவே பற்றிக்கொண்டது.. வழக்கு நீதிமன்றம் போய் அரசு தரப்பு வாதம் வருகையில் இதில் இருந்த அரசியல் பல் இளித்தது.. தடை நீக்கபட்டதும் மீண்டும் மேல் முறையீட்டுக்கு அரசு காட்டிய அவசரம் நம்பமுடியாதது.. தடை நீங்கியும் படம் வெளியிட முடியவில்லை..:(
ஒரு படத்தின் பொருளாதார ரீதியான வெற்றி பற்றி ரசிகன் கவலைப்பட வேண்டாம்,அது தயாரிப்பாளரின் கவலை -என்பதே என் கருத்து ஆனாலும் விஸ்வரூவம் திரைக்கு வருவதே சிக்கலானதும்/தாமதமாவது கமலுக்கு பெரும் இழப்பை கொடுக்கும் .95 கோடி போடுவிட்டான் கொஞ்சம் மிரட்டினால் காலில் விழுந்துவிடுவான் என்றெ எண்ணியிருப்பார்கள்..ஆனால் இதுவரை அடிபணியவில்லை ,இப்பிரச்சனைகளுக்கு இடையேயும் தான் தரும் பேட்டிகளில் கொஞ்சம் கூட நிதானம் தவறாமல் பேசும் கமல் அவர்களை பாராட்டலாம் .
தாமதப்படுத்தப்பட்ட நீதியும், தடுக்கப்பட்ட நீதியும் ஒன்றே என்று ஆங்கிலத்தில் பழமொழி உள்ளது. எனக்கு தாமதமான நீதியே கிடைத்துள்ளது. இருப்பினும் நீதியின் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. இன்று எனக்கு சாதகமாக தீர்ப்பு வராமல் போனால் இப்போது நான் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் இந்த வீடு எனக்கு இல்லை. இதை நான் விற்க வேண்டும். இங்கு எத்தனையோ பிரஸ் மீட் வைத்துள்ளேன், நடனமாடியுள்ளேன், ஓடியாடியுள்ளேன். ஆனால் இதை இழக்கவும் இப்போது தயாராகி விட்டேன். அதனால்தான் கடைசி முறையாக இந்த வீட்டில் ஒருபிரஸ் மீட் வைக்க விரும்பி உங்களை அழைத்தேன். என்னடா சிரித்துக் கொண்டே சொல்கிறானே என்று பார்ககிறீர்களா.. என் வீடே அப்படித்தான், குடும்பமே அப்படித்தான். பணம் பெரிதல்ல. நீதிபதி சொன்னது போல தனி நபரின் சொத்து முக்கியமா, நாடு முக்கியமா என்று.நான் அதை ஏற்கிறேன். நாட்டுக்கா, எனது அத்தனை சொத்துக்களையும் இழக்க நான் தயார். தமிழகம் என்னைப் புறக்கணிக்கிறது. தனி மனிதனை வீழ்த்திப பார்க்கலாம் என்று தமிழகம் நினைத்து விடக் கூடாது. நான் விழுந்தாலும் மீண்டும் விதையாக எழுவேன். மீண்டும் மீண்டும் எழுவேன். சுதந்திரப் பறவைகள் வந்தமரும் மரமாக உயர்வேன். இது சோலையாகும், காடாகும். ஆனால் விதை நான் போட்டது. எனது பட வசனமே எனக்கு உதவிக்கு வருகிறது. மதச்சார்பற்ற மாநிலமாக எனது தமிழகம் இருக்கமுடியாத பட்சத்தில், மதச்சார்பற்ற இன்னொரு மாநிலத்தை இந்தியாவில் நான் தேடி அங்கு போய் குடியேறுவேன். ஒருவேளை இந்தியாவில் எங்குமே இடம் இல்லை என்றால் ஏதாவது ஒரு நாட்டுக்குப் போய் குடியேறுவேன். எனது படத்தில் இந்திய இஸ்லாமியர்களை இழிவுபடுத்தவில்லை. அவர்களைக் கேலி செய்யும் படமே இல்லை.எனது படத்தின் களம் ஆப்கானிஸ்தானும், அமெரிக்காவும்தான்.இதில் எப்படி இந்திய முஸ்லீம்களை இழிவுபடுத்த முடியும். எனது ரசிகர்கள் அமைதியானவர்கள். அவர்களில் பலர் இஸ்லாமியர்கள். அவர்கள் அனைவரும் தொடர்ந்து அமைதியாகவே இருப்பார்கள். கேரளாவில் மலபாரிர், ஹைதராபாத்தில் படம் அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது. இந்தப்படத்திற்காக எனது அத்தனை சொத்துக்களையும் இழந்திருக்கிறேன். இன்னும் எனக்கு நஷ்டம் ஏற்படுமானால் மீதமுள்ள சொத்துக்களையும் நான் இழக்க நேரிடும். எனக்கு மதம் இல்லை, குலம் இல்லை, மனிதம் மட்டுமே எனக்கு முக்கியம். நாட்டின் முக்கியம் எனக்கு முக்கியம். இதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இன்று படம் பார்க்கச் சென்ற எனது ரசிகர்களை தியேட்டர்களை விட்டு வெளியேற்றியுள்ளனர். அது ஏன் என்று விளங்கவில்லை. என்னிடம் இப்போது எதுவும் இல்லை. இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை என்றார் கமல்ஹாசன்.
Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/i-will-go-some-other-state-or-abroad-168861.html
இப்போது நடந்து வருவது அரசியல் விளையாட்டு. இந்த அரசியல் விளையாட்டை நடத்துவது யார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த அரசியல் விளையாட்டில் எனது இஸ்லாமிய சகோதரர்களை பகடைக்காய் ஆக்கிவிட்டனர். யாருக்கும் நான் கடன் வைக்கவும் இல்லை, வரி ஏய்ப்பும் செய்யவில்லை, வரி பாக்கியும் இல்லை. கடன்காரர்களை நான் தவிக்க விட மாட்டேன். இந்த எனது வீட்டை அடமானம் வைத்துள்ளேன். வட்டிக்கடைக்காரர் 2 மாதமாக அமைதியாக உள்ளார். சென்னையில் உள்ள எல்லா சொத்துக்களையும் அடமானம் வைத்துள்ளேன். படம் வெளியாகாவிட்டால் எல்லா சொத்துக்கும் என்னை விட்டு போய்விடும் நான் இடதுசாரியும் அல்ல, வலதுசாரியும் அல்ல-நடுநிலையானவன். எனது எல்லா சொத்துக்களையும் வைத்து படம் எடுத்தேன். படம் வெளியாகாவிட்டால் வீடு உள்பட எல்லா சொத்துக்களையும் இழக்கும் நிலை வரும். எனது விஸ்வரூபத்துக்கு எதற்கு தடை என்றே தெரியவில்லை என்றார் கமல்ஹாசன்.
Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/kamal-sees-political-plot-against-his-movie-168863.html
50 ஆண்டுக்கு மேலாக சினிமாவில் இருக்கும் கலைஞனை...
சரியோ தப்போ தன்னால முடிந்தவரை புதிய முயற்ச்சிகளை செய்து மாற்றுச் சினிமாவை தந்துகொண்டிருந்த கலைஞனை...
சினிமா தந்த பணத்தையெல்லாம் சினிமாவிலேயே போட்ட கலைஞனை...
இப்பிரச்சனை காலத்திலும் தான் வரி பாக்கி இல்லாதவன்..முறையாய் வரிகட்டுபவன் என்று சொல்லும் அளவிற்க்கு நேர்மையாய் இருந்த கலைஞனை....
இப்பிரச்சனை காலத்திலும் தன் ரசிகர் கூட்டத்தை தவறாய் வழிநடத்தாத / பயன்படுத்தாத கலைஞனை...
இந்த தமிழக அரசு இப்படி அவமானப்படுத்தியிருக்க வேண்டாம் ....:(
பிரியமுடன் பிரபு...
திரைமறைவு
ReplyDeleteவேலைகள் வெளிவரும்போது தான் தெரியும் அன்பரே நானும் கமலை ஆதரிக்கிறேன்