Monday, April 25, 2011

போதிமரம்


**
மனிதனையெல்லாம்
புத்தனாக்க எண்ணிய  கடவுள்
வழிநெடுக போதிமரங்களை
நட்டு வைத்தான்

மரங்களையெல்லாம்
வெட்டி வெட்டி - ஒரு கைதேர்ந்த
மரம்வெட்டியானான் மனிதன்

***

     அனுபவம்தான் சிறந்த ஆசான்.அது கற்றுத்தரும் பாடத்தை வேறு எந்த பள்ளியும் கற்றுத்தராது

மகளே.. என் செல்வ மகளே..!  என்ற பதிவின் கடைசி வரிகள் இங்கே  

"ஒரு கணவனாய் விளங்க வைக்க முடியாத விசயங்களை காலம் ஒரு பெண்ணின் தகப்பனாய் குறைவில்லாமல் போதித்துக் கொடுக்கிறது என்பது முக்காலமும் உண்மை."

     தினமும் நம்மைச் சுற்றி எத்தனையோ விசயங்கள் நடக்கின்றன,ஆனால் அவற்றை எல்லாம் உற்று கவனித்து அதில் இருந்து பாடம் கற்றுக்கொள்கிறோமா ? என்றால் இல்லை என்பதே பதிலாய் வரும் பல நேரங்களில்

(பெயர் மாற்றப்பட்டுள்ளது)
   
     என் உறவினரின் மகள் ஹேமாவுக்கு திருமணமாகி சிலவருடங்கள் மகிழ்ச்சியாகவே கடந்தது. பின்னர் அவள் கணவன் அடிக்கடி குடித்துவிட்டு வருவதும்,வீட்டில் இருக்கும் நகை ,பணம்  இவற்றை தெரியாமல் எடுத்து சென்று விடுவதும் என மாறினார்.ஒரு கட்டத்தில் குடித்துவிட்டு வந்து அடிஉதை என நிலமை மோசமானபோதுதான் எங்கள் உறவினருக்கே விசயம் வந்தது. எனக்கு அக்கா என்றாலும் ஒரு நண்பர்கள் போல பழகியாதால் தனி பாசம். என்னிடம் ஏன் இதையெல்லாம் முன்பே சொல்லவில்லை என நான் கேட்டபோது "கேட்டால் உன் மனசு வருத்தபடுமுன்னு சொல்லவில்லை" என்று சொன்னாr.

     பல கனவுகளோடு வரும் பெண்ணை பெரிதாக மகிழ்விக்க தெரியாவிட்டாலும் அவளை சக மனுசியகவாவது மதிக்கலாமே.. திருமணமான சில வருடங்களிலே வாழ்வையே வெறுக்கும்  அளவுக்கு நடந்துகொள்ளாமல் இருக்கலாமே ..அவருக்கும் ஒரு சகோதரி உண்டு ,திருமணமாகிய  அவரின் சகோதரியிடம்  அவள் கணவன் இப்படி நடந்துகொண்டால் இவன் என்ன செய்வான்? கோவம் வருமா?  இதேபோல தன மனைவிக்கும் அவளை நேசிக்கும் அண்ணனோ தம்பியோ அப்பவோ அம்மாவோ இருப்பாங்கனு யோசிப்பானா ?
இதையெல்லாம் சிந்திக்கும் திறன் இருந்திருந்தால் நல்லபடியாக  வாழ்ந்திருப்பனே .. இதுபோன்ற ஜென்மங்கள் என் திருமணம் செய்கிறது? பொம்பளை உடம்புதான் வேணுமுன்னா விபசரிகிட்ட போங்கடா... அதுக்கு எதுக்கு திருமணம் ??..
ஒரு பெண்ணிடம் எப்படி நடந்துகொள்ள கூடதுனு இங்க கற்றுகொண்டேன்

******
    
பதின்ம  வயது :

இந்த வயதுகளில்  சிறு சிறு பிரச்சனைகள் கண்டிப்பாக வரும், ஆனாலும் பெரியதாக பாதிப்பில்லாமல் அதை கடந்து வருவதே பெரிய விஷயம்.

என்னாங்கடா உங்க காதல்..-1 (18-)

 இந்த பதிவில் தீபா தனக்கு திருமணம் ஆனதை முகம் முழுக்க மிக மகிழ்சியுடன் சொல்வாள் . 18  வருடம் தன பெற்றோர் காட்டிய அன்பை விட சில வருடங்கள் கல்லூரியில் உடன் படித்தவனின் காதல் பெரிது என முடிவு செய்து போனவள் இன்று மோசமான  நிலைமையில் உள்ளார்.அன்று அந்த வயதில் தான் எடுத்த முடிவை இன்று நினைத்து தன்னை தானே திட்டிகொள்வார்.

     "சாப்பட்டைகீழ போடாதே, பின்னாளில் அது இல்லாமல் கஷ்டப்படுவாய்" என்று எங்கள் வீட்டில் சொல்வார்கள், அப்படித்தான் அன்பும். ஒரு தோழன் போல பழகியவர்கள் அறிவுரை சொன்னால் கூட கோவம் வருகிறது அவர்களுக்கு. (என் வயது 27  தான்) இத்தனை வருடம் தன்னை நேசித்தவர்கள் ஒரு விசயத்தில் நம்மை கண்டித்தால் அதுவும் மிக முக்கியமான முடிவுகளில் கண்டித்தால் அதில் எதோ பிரச்சனை என ஏன் சிந்திப்பதில்லை?.

     அந்த வயதுவுடைய,நான் நேசித்த ஒருவருக்கு அப்படி காதல் என்று பிரச்சனை வந்த பொது ஒரு தோழனாய் அதில் உள்ள நல்லது/ கெட்டதுகளை சொன்னபோது அது அவர்களுக்கு பிடிக்கவில்லை, என்னுடைய அந்த வயதில் எனக்கு கிடைக்காதது எல்லாம் அவனுக்கு/ அவளுக்கு கிடைக்கணும் என்று எண்ணியவன் நான், இப்படி அவர்களின் மீது அதீத அன்பு கொண்டிருந்த நான் அவர்களுக்கு கெடுதல் செய்வேன் அல்லது தவறான அறிவுரை சொல்வேன் என்று எப்படி நினைகிறார்கள்? என் அன்பை அல்லவா சந்தேகிக்கிறார்கள் ... எனக்கே அவமானமாக இருக்கிறது ...

"யார் மீதும் அதீத அன்பு வைக்க கூடாது, அது ஒரு பாவச்செயல், ஆனாலும் தொடர்ந்து அதையே செய்து நம்மை நாமே வேதனை படுத்திகொள்கிறோம்"

****

1 comment:

  1. வாழ்க்கையில் நல்லதை விட்டு விட்டு அல்லதைப் பிடித்துக் கொள்ளக் கற்று விட்டோம்!அதுவே பிரச்சினை!
    நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்,பிரபு!

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...