மத்தியானம் வேள ஒரு மோரு சாதம் போல ஏ(ன்) மனசிலிறங்கும் கண்ணம்மா.. இந்த மாமன(னை) கட்டிக்க சம்மதமா ?!?.....(இந்த...)
காத்திலாடும் சேல - என் மனசுக்கனுப்பும் ஓல இது வேலையத்த வேல-ஆனா காதலுங்குது மூள..... (இது..)
சின்னதா நீ சிரிச்ச - அடி சீக்கிரம் மனச பறிச்ச இத காதலுன்னு சொல்லி என்ன கானா பாட வச்ச..... (இத..)
சத்தம் போடுதுந்தன் கொலுசு -அதில் ஏறுதுந்தன் மவுசு இந்த மாமா பாட்டு புதுசு இன்னும் ஏன்டி இந்த ரவுசு
கால் கொலுசு பாட்டு பாடும் காதில் கம்மல் ஆட்டம் ஆடும் என் மனசு உன்ன தேடும் நீ இல்லாங்காட்டி வாடும் ..... (நீ இல்லாங்காட்டி வா........டும்)
(சில ஆண்டுகளுக்கு முன் இரவு நேர பணியில் இருந்த போது உடன் வேலை செய்த நண்பர் ஒருவர் ஒரு கானா பாட்டுபோல பாட சொன்னார் , அப்போது அதற்காக முயற்சி செய்து ஒரு 20 நிமிடத்தில் இப்படி எழுதினேன் ,.... எப்படி இருக்கு???)