
அழகிய ரோஜாவை
அனுப்ப ஆசைப்பட்டேன்
அது உன் முகத்தழகைக்
கண்டவுடன் வாடிவிடும்
ஆதலால் அனுப்பவில்லை
“கவிதையை மட்டும்
ஏன் அனுப்பினாய்”
என்று நீ கேட்பாய் !
உன் வாயால் ஒருமுறை
இதை வாசித்துக்காட்டு
இந்த கவிதைகள் மோட்சம்
பெற்றுவிட்டுப் போகட்டும்..

எனக்கும் ஆசைதான்
பூ அரும்புவதை போல நீ
புன்னகைப்பதை காண.....
மெல்லிய வீணையதிர்வாய் நீ
சிரிப்பதை பார்க்க......
என் கோபங்களையெல்லாம்
நீரிலிட்ட உப்பாய்
கறைக்குமுன் கண்களை காண
ஆனாலும் காத்திருக்கிறேன் !
தூரத்து சூரியனின் ஒளிகொண்டு
பூமி விடிவதைபோல
தூரத்தில் இருக்கும் உங்கள்
நினைவில் வாழ்கிறேன்

நீ அழுதால் நானும் அழுவேன்
நீ சிரித்தால் நானும் சிரிப்பேன்
சிரித்துகொண்டே இரு
என்னை சிரிக்க வைப்பதற்காகவேணும்
என்றும் பிரியமுடன் பிரபு ...
..