இது மயிலடும் நேரம்..
கருப்பு மேகமெல்லாம்
கால்நடையாய் நடந்து
வானத்துச் சாலையில்
வட்டமிடும் நேரம்.....
மழையெனும் மகள்
மண்ணுக்கு
முத்தமிடும் கோலம்
மழையிட்ட முத்தத்தில்
மண்ணெல்லாம் சிரிக்க.....
முத்தமிடும் கோலத்தை
முதன்முதல் காணும்
மலர்களும் நாணி
மோகம் கொண்டு ஆட.....
தாகம் கொண்ட
செடிகள் எல்லாம்
தண்ணீர் தாகம் தீர.....
வானம் பார்த்த பூமியை
நம்பி வாழும்
பொக்கைவாய் கிழவரும்
வேகம் கொண்டு ஆட
மொத்தத்தில் இது
பொண்ணான நேரம்
போகதே மழையே
எங்களைவிட்டு தூரம்
http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=1536
கவிதை அழகு
ReplyDeleteகாலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..
நன்றி தேவா
ReplyDelete//மொத்தத்தில் இது
ReplyDeleteபொண்ணான நேரம்
போகதே மழையே
எங்களைவிட்டு தூரம்//
பிரபு கவிதை நல்லாருக்கு... சந்தம் வரும்படி இயற்றி இருக்கிங்க
பூமத்திய ரேகையில் இருக்கும் வரை மழையை வேண்டி கெஞ்ச வேண்டியதில்லை...
எல்லாமே மழையைப் பாரட்டித்தான் எழுதுறீங்க... யாராவது திட்டி எழுதுங்களேன், என் பதிவுல இணைச்சிக்கிறேன்...
//
ReplyDeleteபிரபு கவிதை நல்லாருக்கு... சந்தம் வரும்படி இயற்றி இருக்கிங்க
//
நன்றி அனந்தன்
//\எல்லாமே மழையைப் பாரட்டித்தான் எழுதுறீங்க... யாராவது திட்டி எழுதுங்களேன், என் பதிவுல இணைச்சிக்கிறேன்...
//\
ஏன் இந்த கொலைவெறி
//ஏன் இந்த கொலைவெறி//
ReplyDeleteகொலைவெறில்லாம் இல்ல... உங்களுக்குத் தெரியாது.... மழைக்கும் எனக்கு அடிக்கடி சண்டை வரும்!
(தோற்பது ஏனோ நான்தான்)
///\
ReplyDeleteமழைக்கும் எனக்கு அடிக்கடி சண்டை வரும்!
(தோற்பது ஏனோ நான்தான்)
////\
பின்னே
இயற்க்கையுடன் மோதினா எப்பவுமே தோல்வி நமக்குத்தான்
//மழையிட்ட முத்தத்தில்
ReplyDeleteமண்ணெல்லாம் சிரிக்க.....
முத்தமிடும் கோலத்தை
முதன்முதல் காணும்
மலர்களும் நாணி
மோகம் கொண்டு ஆட.....
அடாடா...என்ன அழகு...
உங்கள் கவிதை மழையில் நனைந்து எங்களுக்கும் புல்லரிக்குது.
//எல்லாமே மழையைப் பாரட்டித்தான் எழுதுறீங்க... யாராவது திட்டி எழுதுங்களேன், என் பதிவுல இணைச்சிக்கிறேன்...
ReplyDeleteஆங்..என்னங்க இது கொடுமையாயிருக்கு?
உங்களை எல்லாம் சகாரா பாலைவனத்துல பிடிச்சு தள்ளணும்.
மழையின் அழகு எக்காலத்திலும் இனிமைதான். மழைக்ககிதைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
ReplyDeleteசாந்தி
மழையின் அழகு எக்காலத்திலும் இனிமைதான். மழைக்ககிதைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
ReplyDeleteசாந்தி
Superb!!!!!!!!!!
ReplyDeleteபேசாம நீங்க.....சினிமாக்கு பாட்டு எழுத போய்டலாம், அவ்ளோ அழகா எடுதுறீங்க:))
ReplyDeleteவாழ்த்துக்கள் பிரபு!!
///
ReplyDeleteஅடாடா...என்ன அழகு...
உங்கள் கவிதை மழையில் நனைந்து எங்களுக்கும் புல்லரிக்குது.
///
அப்புடியா?
நல்லது,நன்றி
உடம்ப பாத்துக்குங்க
//
ReplyDeleteஆங்..என்னங்க இது கொடுமையாயிருக்கு?
உங்களை எல்லாம் சகாரா பாலைவனத்துல பிடிச்சு தள்ளணும்.
//
விடுங்க அக்கா....
அவருக்கு என்ன பிரச்சனையோ
(ஆனலும் உங்களுக்கு பொசுக்குனு கோவம் வருது... பாவம் உங்க வீட்டுகாரர்)
//
ReplyDeleteமழையின் அழகு எக்காலத்திலும் இனிமைதான். மழைக்ககிதைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
//
நன்றி சகோதரி சாந்தி
//\Superb!!!!!!!!!!//
ReplyDeleteநன்றி திவ்யா
//
பேசாம நீங்க.....சினிமாக்கு பாட்டு எழுத போய்டலாம், அவ்ளோ அழகா எடுதுறீங்க:))
//
அப்புடியா?
நன்றி
பிரபு....
ReplyDeleteஇன்னும் நிறைய எழுதுங்க...நான் எப்போதும் படித்துக்கொண்டே இருக்கணும்...
இன்று எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி
ஒரு பக்கம் காலை மழை
மறுபுறம் உங்கள் கவிதை
மலர்விழி சொன்னது…
ReplyDeleteபிரபு....
இன்னும் நிறைய எழுதுங்க...நான் எப்போதும் படித்துக்கொண்டே இருக்கணும்...
////////
நன்றி மலர்
//ஆங்..என்னங்க இது கொடுமையாயிருக்கு?//
ReplyDeleteநான் பட்ட கொடுமைய விடவா?
//உங்களை எல்லாம் சகாரா பாலைவனத்துல பிடிச்சு தள்ளணும். //
உடனே செய்யுங்க... உங்க தயவுல ஒட்டகப் பால் குடிச்சது நடக்கட்டும்... எப்படி வான்சீட்டு உங்க செலவுதானே?
உடனே செய்யுங்க... உங்க தயவுல ஒட்டகப் பால் குடிச்சது நடக்கட்டும்... எப்படி வான்சீட்டு உங்க செலவுதானே?
ReplyDelete///////
அனந்தன்....
சைக்கிள் கேப்புல விமானம் ஓட்டுரீங்களே!!!!!!!
//அனந்தன்....
ReplyDeleteசைக்கிள் கேப்புல விமானம் ஓட்டுரீங்களே!!!!!!!//
அது இல்ல பிரபு... "ஓசியில வந்தா யோசிக்காம அனுபவி"ன்னு முக்கால முக்காப் பலா சித்தர் சொல்லி இருக்கார்
"""முக்கால முக்காப் பலா சித்தர் """
ReplyDeleteசித்தரோட நிஜப்பெயரென்ன அனந்தனா????
எப்படியோ ஒரு முடிவோட கிளம்பீட்டீங்க
ம்ம்ம்ம்ம்ம் நீங்களாச்சு குந்தவை அக்காவாச்சு
//சித்தரோட நிஜப்பெயரென்ன அனந்தனா????//
ReplyDeleteவாய்ப்பே இல்லை... அவர் எங்க நான் எங்க...
அவர் முக்காலத்தில் முக்கால் பாக பலா பலத்த்துக்காக தவம் இருந்து சித்தி அடைந்தவர்...
//ம்ம்ம்ம்ம்ம் நீங்களாச்சு குந்தவை அக்காவாச்சு//
இப்படி சொல்லிட்டா எப்படி பாஸ்... நீங்க சொல்லித்தானே அப்படி சொன்னேன்.. இப்போ கழட்டி விடுரீங்களே.. என்ன கொடுமை என்ன கொடுமை
///
ReplyDeleteஅவர் முக்காலத்தில் முக்கால் பாக பலா பலத்த்துக்காக தவம் இருந்து சித்தி அடைந்தவர்...
//
அய்யோ அய்யோ.......
//
இப்படி சொல்லிட்டா எப்படி பாஸ்... நீங்க சொல்லித்தானே அப்படி சொன்னேன்..
//
யார பாஸூனு சொலுரீக
உங்க முகத்த முழுசாகூட பாக்கலயே
இதுவேரயா??
கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்க..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//(ஆனலும் உங்களுக்கு பொசுக்குனு கோவம் வருது... பாவம் உங்க வீட்டுகாரர்)
ReplyDeleteஎன் கோபத்தை பார்த்து பயப்படும் என் கணவரை ஒரு நிமிடம் கற்பனை செய்து பார்த்தேன், ஆகா.... இதுவும் நல்லாத்தான் இருக்கு.
//உடனே செய்யுங்க... உங்க தயவுல ஒட்டகப் பால் குடிச்சது நடக்கட்டும்...
ReplyDeleteஆகா இப்படி வேற ஒரு கற்பனையை வளர்த்து வச்சிருக்கீங்களா?
//எப்படி வான்சீட்டு உங்க செலவுதானே?
பாவம் என்ன பேசுகிறோம் என்று அறியாமல் பேசுகிறீர்கள், மன்னித்துவிடுகிறேன்.
நரகத்துக்கு டிக்கெட் கேட்கும் முதல் ஆள் நீங்களாகத்தான் இருக்கவேண்டும்.
//"ஓசியில வந்தா யோசிக்காம அனுபவி"ன்னு முக்கால முக்காப் பலா சித்தர் சொல்லி இருக்கார்
ReplyDeleteஅப்படியா! உருட்டு கட்டையால ரெண்டு ஓசியில் தந்தாலும் யோசிக்காம அனுபவிப்பீங்களா? நீங்க ரெம்ப நல்லவரா இருக்கீங்க தம்பி.
என் கோபத்தை பார்த்து பயப்படும் என் கணவரை ஒரு நிமிடம் கற்பனை செய்து பார்த்தேன், ஆகா.... இதுவும் நல்லாத்தான் இருக்கு.
ReplyDelete///////
இப்படியும் ஒரு சந்தோசமா??
அப்படியா! உருட்டு கட்டையால ரெண்டு ஓசியில் தந்தாலும் யோசிக்காம அனுபவிப்பீங்களா?
ReplyDelete///////
டெரரா இருக்கீங்களே...........!!!!!!!!!!!!!
நரகத்துக்கு டிக்கெட் கேட்கும் முதல் ஆள் நீங்களாகத்தான் இருக்கவேண்டும்.
ReplyDelete///////
பாவம் அனந்தன்
ம்ம்ம்ம்
Dear Baby Brother, no hard feelings. Just for fun Ok.
ReplyDelete//
ReplyDeleteDear Baby Brother, no hard feelings. Just for fun Ok.
///
இது தெரிந்த விசயம்தானே
கருப்பு மேகமெல்லாம்
ReplyDeleteகால்நடையாய் நடந்து
வானத்துச் சாலையில்
வட்டமிடும் நேரம்.....
///
இந்த வரிகள்
நல்லா இருக்கு!!
நன்றி தேவா
ReplyDelete