Showing posts with label காதல் கவிதை. Show all posts
Showing posts with label காதல் கவிதை. Show all posts

Thursday, November 17, 2011

காதல் மனைவியும் காலண்டர் முருகரும்(ஒரு மீள் பதிவு )

.
காய்கறி வெட்டும் போது
கையில் காயம் பட்டதால்
கத்தியின் மீது கோபம் அவளுக்கு

வேண்டாம் பெண்ணே
"வெண்டைக்காய்க்கும் உன்
விரலுக்கும்
வித்தியாசம் தெரியாததால்
நடந்த விபத்து இது" என்றேன்

"காயம்பட்டு கஸ்டப்படுறேன்
கவிதையா உமக்கு?
நீயே சமையல் செய்யும்"-என்று சொன்னாள்
என் அழகிய ராட்சசி

அட கடவுளே?!!
பேச்சுலராய் இருந்தபோது
கற்ற வித்தை
பெண்டாட்டி வந்த பின்னும்
தொடருதே முருகா?

பெண்பார்க்கும் படலத்தில்
"பிடிச்சிருக்கா?" - என்ற கேள்விக்கு
பெண்டுலம் போல் தலையாட்டியபோதே
அவசரமாய் சொல்லியிருக்கவேண்டும்
"அலார்ட்டாய் இரு" என்று....
நிச்சயதார்த்த தினத்தில்
நீலநிற புடவையில் பார்த்து
நிலைமறந்து போனபோதே
நிருத்தி சொல்லியிருக்க வேண்டும்
"நிதானமாய் இரு"- என்று

திருமண நாளில்
தலைகுனிந்த தரிசனம் கண்டு(தாலிகட்டும் போது)
தடு
க்கி விழுந்தபோதே
தட்டி எழுப்பி சொல்லியிருக்கவேண்டும்
"தயாராய் இரு" - என்று

முதல்நாள் இரவில்
முக்கால் இருட்டில்
முகம் பார்த்து மூர்ச்சையானபோதாவது
முணுமுணுத்து சொல்லியிருக்கவேண்டும்
"முழிச்சுக்கோ" - என்று

அப்போதெல்லாம் விட்டுவிட்டு
காய்கறி வெட்டும்போது
காலண்டரில் தொங்கியபடி
"நானிருக்க பயமேன்"என்று சொல்லி
என்ன பயன் முருகா????
:::::

இது ஒரு மீள் பதிவு
இதுக்கும்  படத்துக்கும் தொடர்புகள் கிடையாது..

என்றும்
பிரியமுடன் பிரபு......
.

Monday, August 22, 2011

கன்னம் சிவந்த கிளி



"வீட்டில் கிளி வளர்க்கலாம் என்றால்
வேண்டாம் என்கிறார் அப்பா" -என்று  
வருத்தப்பட்ட  அவளிடம்..

"ஒரு வீட்டில் இரண்டு கிளிகள் எதற்கு
என எண்ணியிருப்பார் அவர் "- என்றேன் நான்..
கிளிக்கு கன்னங்கள்  சிவந்தது
வெட்கத்தில்...



******************************
பிரியமுடன் பிரபு......

Monday, July 04, 2011

காதல் பரிதவிப்பு




பச்சமண்ண பாதகத்தி
பத்தவச்சுட்டு போயிட்ட ..

உச்சிசாம வேளையில
உசிரு பத்தி எரியுதடி ..

ஊரும் தூங்குதடி..
உறவும் தூங்குதடி..
காக்கா குருவி கூட
கூடடஞ்சு போனதடி...
*கவர்மெண்டு* கரண்டு கூட
கட்டாகி போனதடி ...

இந்த
பாவிபய மனசுமட்டும்
பரிதவிச்சு நிக்குதடி..



(* - தமிழகத்தில் இருந்தபோது எழுதியது ..)

-
பிரியமுடன் பிரபு...
-



.

Thursday, August 26, 2010

மாமனை கட்டிக்க சம்மதமா?!?




மத்தியானம் வேள
ஒரு மோரு சாதம் போல
ஏ(ன்) மனசிலிறங்கும் கண்ணம்மா..
இந்த மாமன(னை)  கட்டிக்க சம்மதமா ?!?.....(இந்த...)

காத்திலாடும் சேல - என்
மனசுக்கனுப்பும் ஓல
இது வேலையத்த வேல-ஆனா 
காதலுங்குது மூள..... (இது..)

சின்னதா நீ சிரிச்ச - அடி
சீக்கிரம் மனச பறிச்ச
இத காதலுன்னு சொல்லி
என்ன கானா பாட வச்ச..... (இத..)

சத்தம் போடுதுந்தன் கொலுசு -அதில்
ஏறுதுந்தன் மவுசு
இந்த மாமா பாட்டு புதுசு
இன்னும் ஏன்டி இந்த ரவுசு


கால் கொலுசு பாட்டு பாடும்
காதில் கம்மல் ஆட்டம் ஆடும்
என் மனசு உன்ன தேடும்
நீ இல்லாங்காட்டி வாடும் .....
(நீ இல்லாங்காட்டி வா........டும்)




(சில ஆண்டுகளுக்கு முன் இரவு நேர பணியில் இருந்த போது உடன் வேலை செய்த நண்பர் ஒருவர் ஒரு கானா பாட்டுபோல பாட சொன்னார் , அப்போது அதற்காக முயற்சி செய்து ஒரு 20 நிமிடத்தில் இப்படி எழுதினேன் ,.... எப்படி இருக்கு???)


பிரியமுடன் பிரபு ...

Sunday, June 27, 2010

காவல்காரனாய் நிலா !!




பொங்கலுக்கு முந்தைய இரவு
தெருவெல்லாம் கோலம் போட்டார்கள்
விடிய விடிய

நீயும் கோலம் போட வந்தாய்
ஊரே அதிசயமாய் பார்த்தார்கள்!!!!
தேரொன்று தெருவில் வந்து
குனிந்து நிமிர்ந்து
கோலம் போட்டால் அதிசயம்தானே!!!

பத்தடி அகலத்தெரு முழுவதும்
பரந்து விரிந்ததுன் கோலம்

புள்ளிகளெல்லாம் தேவதைகளாகிக்
கோடுகளை வளைத்து எடுத்து
இடுப்பில் மாட்டி ஆட்டம் போட்டன
வீட்டுச் சாளரத்தின் வழியே
பார்த்துக்கொண்டே இருக்கிறேன் நான்
வெகுநேரமாகியும்

"நல்ல வேளை யாரும் பார்கல"-என்று 
நான் எண்ணிய நேரம்
நிலா என்னை கவனிப்பதை உணர்ந்தேன்
சிரித்த படியே உறங்கச் சென்றேன்

யாரும் இல்லாத இரவில்
உன் கோலத்துக்குக் காவல் நிற்கிறது நிலா!!





என்றும்
பிரியமுடன் பிரபு..


.

Sunday, May 16, 2010

காதலினால் ..............


பூவை கிள்ளிப் பறித்தேன்
அழாமல் சிரித்தது
பூ உன் கூந்தலுக்கு !!

    



என் கவிதைக்கான
பரிசு பணம் - முகவரி மாறி
சரியாக உன் வீட்டில்
      


என்னவளே நீ பவணி வரும்
எல்லாத் தெருவுமே
தேரடித் தெருதான் !
       

Friday, April 02, 2010

வெற்றி உனக்கே!




பெண்ணே
நாம் பிரிந்தபோதே
காதல் இறந்துவிட்டது
என்றிருந்தேன்-ஆனால்......

ஆண்டு பலகழிந்து - இன்று
ரேசன் க்யூவில் பார்த்த போது
மூளையின் உச்சியில்
புதிதாய் ஒரு பூ பூத்தது!
அப்போது-உணர்ந்தேன்
நம் காதலுக்கு உயிருண்டு..........
 
ஆயிரம் வாட்ஸ்
அனல் மின்சாரமாய்
தாக்கும் - கண்ணழகு
மாறிவிட்டது........

தினமும் புதிதுபுதியதாய்
பூ பூக்கும்
உன் புன்னகை
மாறிவிட்டது........

கன்னத்தில் குழிமாறி
குழியில் கன்னம் -
என்றாகிவிட்டது........

பட்டு மேனியது - இன்று
பட்டு போய்விட்டது......

எல்லாம் மாறிவிட்டது
ஒன்றை தவிர ! 

உனக்கு நினைவிருக்கா ?
ஒருமுறை இருவரும்
ஓட்ட பந்தயத்தில் ஓடினோம்
எனக்குமுன் ஓடி
வென்றாய் நீ..........

தொலைந்த கொலுசை
தேடினோம் -
எனக்குமுன் எடுத்து
வென்றாய் நீ..........

கல்யாணம் என்ற
பந்தயத்திலும் -
எனக்குமுன் செய்து
வென்றாய் நீ..........

ஆயிரம் மாற்றங்கள்
வந்தபிறகும் - இன்று
இந்த ரேஹன் க்யூவிலும்
எனக்குமுன்
வெற்றி உனக்கே..........

(வயதானவர்களுக்கு)


.பிரியமுடன் பிரபு...
.
.


Saturday, March 06, 2010

யாருக்காச்சும் தெரியுமா??

 


அதிகாலை எழுந்து
குளித்து  முடித்து
கூட்டிப் பெருக்கிக்
கோலம் போட்டு..

கன்னிப்  பெண்னையும் 
அம்மான்னு கூப்பிடும்
கறவ மாட்டுக்குத்  தீனி போட்டு...
அப்பனுக்கும் ஆத்தாளுக்கும்
அனுசரனையா இருந்து.....

ம்ம்ம் இப்படி 
அழகாத்தானே இருந்துச்சு எ(ன்) வாழ்க்கை!?!?

இப்ப என்னாச்சு ?!?
யாருக்காச்சும் தெரியுமா??!?

பத்து குட(ம்)முன்னாலும்
பதறாம தூக்குவே(ன்) - இப்ப
ஒத்த காலிகுடம்
கனக்குதய்யா எனக்கு!!

நா(ன்)  புள்ளி வச்சு கோலம் போட்டா..
வழியில போறவுகயெல்லாம்
வாய் பிளந்து பா(ர்)ப்பாக - ஆனா இப்ப
கோலம் ஒருபக்கம் இருக்க
புள்ளி மட்டும் நிக்குதய்யா  ஒத்தையில
என்ன போல

கலியாணம் கட்டி 
அஞ்சு நாளுதானே ஆச்சு ?!?!
வேல பாக்குற ஊருக்கு போக
கட்டின என்னையும் 
கைபிடிச்சு கூப்புட்டீக..

"புது குடிதனத்துக்கு இது
ஆகாத மாசமடா -
அம்பது நாள் போனபின்னே
அழைச்சுகிட்டுப்  போகலாம் " - என உன்

ஆத்தாகாரி  சொல்ல கேட்டு

பிடிச்ச கையை விட்டுப் புட்டு
வண்டியேறி போனிகளே!!

வண்டி சக்கரத்துல மாட்டின
கோழி குஞ்சா -என் மனசு
நசுங்கி போன சேதி
யாருக்காச்சும் தெரியுமா??

இன்னும் அம்பது நாள் இருக்கே?!?!?

வாரம் ஒருக்கா
வண்டி புடிச்சு வருவீக - ஆனாலும்
ஆச ராசாவின் அழகு முகத்த
ஆச தீர பார்க்கும் முன்னே
அடுத்த நாள் வந்திடுதே !!?
இந்த கட்டைல போற 
கடிகாரத்த நிறுத்திவைக்க 
யாருக்காச்சும் தெரியுமா??!?!

**************************************************
நேற்று ஒரு சகோதரியிடம் தொலைபேசியில் பேசினேன் . சென்ற 19ஆம் தேதிதான் திருமணம் ஆச்சு. கணவர் கோவையில் வேலை செய்கிறார். திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் அவர் மட்டும் கோவை சென்று விட்டார். இந்த மாதத்தில் புது குடித்தனம் வேண்டாம் என கணவர் வீட்டார் சொல்லிவிட்டதால் இன்னும் 2 மாதம் பிறகே சகோதரியும் கோவை செல்ல முடியும். அதுவரை வாரா வாரம் அவர் கோவையில் இருந்து ஞாயிறு ஒருநாள் மட்டும் வந்து செல்வார் . இந்த காலத்திலும் நல்ல மாதம் கெட்ட மாதம் என பார்த்து புது தம்பதியரை இப்படி பிரித்து வைக்கனுமா?? 

நேற்று பேசி முடித்த உடன் எழுதியது இந்த கவிதை(?) , பிழைகள் இருந்தா பின்னூட்டதில் சொல்லவும்
தலைப்பு வேற வைக்கலாமா?? இதைவிட சிறப்பான தலைப்பு "யாருக்காச்சும் தெரியுமா??"


பிரியமுடன் பிரபு....


.

Wednesday, February 17, 2010

காதல் மழை.......காதல் கதை

 


 " சீ சீ இந்த மழை விடாது போல் இருக்கே "


 " மழை ஒரு லட்சியவாதி , அதன் லட்சியம் நிறைவேறும் வரை பொழிந்து கொண்டேதான் இருக்கும் "


" ம்ம்... அப்படியென்ன லட்சியம் ? "


" உன்னை தொட்டு பார்ப்பதுதான்...!! "


" ம்ம்.. ஏற்க்கனவே ரொம்ப குளிரா இருக்கு , இதுல இந்த ஐஸ் வேறயா ? " - சிரிக்கிறாள்

" நிஜம்தான் உன்னை தொட்டுபார்க்கும் ஆசையிலத்தான் வானத்துல இருந்து பூமிய நோக்கி நெடும் பயணம் செய்யுது இந்த மழை.ஆனா அதை புரிஞ்சுக்காமா நீதான் கருப்பு குடை புடிக்கிற ,அதனால துக்கம் தாங்காம தொடர்ந்து அழுகிறது ஆனாலும் தரையில விழுந்ததும் சிரிக்கிறது ஏன் தெரியுமா?? , உன் பாதத்தையாவது தொட்டு விட்ட சந்தோசத்துலத்தான். "

" அதுக்காக என்னை மழையில நனைய சொல்லுறியா?? ஜலதோசம் பிடுச்சுக்காதா? "


" நீ நனைந்தால் உனக்கு மட்டும்தான் ஜலதோசம் பிடிக்கும் நனையாவிட்டால் ஜலத்துக்கெல்லாம் தோசம் பிடிச்சுக்காதா?? "


" ஆகா !!! ஆரம்பிச்சுட்டியா ?? இதுக்கு இந்த மழையே தேவல " - என்று கூறி குடையை தூக்கியெறிந்து விட்டு நடக்கிறாய் , குஷியில் கொட்டித்தீர்த்தது மழை


..
இது ஏற்கனவே பதிவிட்டதுதான்
இப்போ காதலர்தினத்துக்காக மீண்டும்

மேலும் சில 

இதே நாள், இதே மண்டபம்

கண்கள் இரண்டால் 

காதல் மனைவியும் காலண்டர் முருகரும்

ஆனாலும் காதலிக்கிறோம்!

என் காதலியே என் காதலியே

..........

பிரியமுடன் பிரபு ..

Sunday, January 03, 2010

வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!?



கனவில் வந்த கம்பன்
காதல் கவிதை
ஒன்றுதா
பரிசு தருகிறேன் என்றான்


கட்டுக்கட்டாய் தாள்கள் அடுக்கியும்

கம்பனை கவரவில்லை எதுவும்


கடைசி வாய்பாய்
கையில் ஒர் வெள்ளைத்தாள்

கற்பனை செய்தவாறே
கண்ணயற்ந்துபோனேன் நான்

கண்விழித்துp பார்க்கையில்
என் முன் பரிசு இருந்தது

சுற்றும் முற்றும் பார்த்தேன்

காணாமல் போயிருந்தது வெள்ளைத்தாள்


............................
............................

சில
வருடங்களுக்கு முன்பு நான் அனுப்பிய வாழ்த்துமடலில் கவிதைகள் இல்லை என் வருத்த பட்ட சிநேகிதிக்கு அடுத்த வருட வாழ்த்துமடலில் நான் எழுதியது கீழேபோன வருட வாழ்த்தில் கவிதைகள் இல்லையென்று வருத்தப்பட்டாய், ஆகவே இந்த வருடம்...

வாழ்த்துக்
கவியெழுத
பேனா
எடுத்தேன்அது
எழுத
மறுத்துவிட்டது
கவிதையை
போற்றி கவிதையா? – என்று

தங்கத்
தமிழை
தட்டி
யழைத்தேன்அது
தடுமாறி
சொல்லியது
தன்னிடம்
வார்த்தைகள் ஏதுமில்லை! – என்று

உண்மை
மனமிருந்தால்
வாழ்த்து
சொல்ல
ஏட்டில்
எழுத்தெதற்க்கு
வெள்ளை
தாள் சொல்லாதோ ஆயிரம் கவி..........!

.......



.......


என்றென்றும்
பிரியமுடன் பிரபு ..


சும்மா போனா எப்பூடி?!?? ஓட்டு போடுங்க..........


.

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...